Tuesday, June 15, 2010

அந்தமான் நிலத்தட்டில் விலகல்:

அந்தமான் நிலத்தட்டில் விலகல்: “சுனாமி” பேரழிவு ஆபத்து ஏற்படலாம்; நிபுணர் எச்சரிக்கை
சென்னை, ஜூன். 14-
 
இந்தோனேசியா, கடல் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது. பல தடவை சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு வாபஸ் பெறப்பட்டது.
 
பூமிக்கு அடியில் நிலத்தட்டுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக நில நடுக்கத்தின் விளைவுகள் மிகக் கடுமையாக உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே பேராசிரியர் வில்பட் கெஹல் பண்ணல என்ற நிபுணர் நில நடுக்கம் தொடர்பாக சில புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
 
நிகோபார் தீவுக்கும் அந்தமான் தீவுகளுக்கு இடையே இந்து மகா கடல் பகுதியில் நிலத்தட்டில் விலகல் ஏற்பட்டுள்ளதாக இவர் கூறுகிறார். இந்த விலகல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இதன் காரணமாக இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பூகம்பம் ஏற்படும் என்றும் அவர் கூறுகிறார்.
 
எதிர்வரும் நாட்களில் வர இருக்கும் நில நடுக்கம் 8 முதல் 8.5 ரிக்டர் அளவு கோல் அளவுக்கு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த நில நடுக்கத்தால் நிச்சயம் சுனாமி உருவாக வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.
 
கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்படும் என்பதால் இந்தியா மற்றும் இலங்கையின் கிழக்கு கடற்கரைகளுக்கு சேதம் ஏற்படலாம் என்றும் நிபுணர் வில்பட் கெஹல் பண்ணல கூறியுள்ளார்.

No comments:

Post a Comment