Tuesday, July 13, 2010

Grammer pattern 28

ஆங்கில பாடப் பயிற்சி 28 (Present Perfect Continuous)


நாம் ஆங்கில பாடப் பயிற்சி 26 இல் "Present Perfect" இன் பயன்பாடுகளை பார்த்தோம். இன்றையப் பாடத்தில் Present perfect Continuous இன் பயன்பாட்டை விரிவாகப் பார்ப்போம். இதனை Present Perfect Progressive என்றும் அழைப்பர். இதன் தமிழ் பொருள் “நிகழ்கால வினைமுற்றுத் தொடர்” எனப்படும். இந்த “நிகழ்கால வினைமுற்றுத் தொடர்” வாக்கியம் Grammar Patterns 01 இல் 64 ஆம் வாக்கியமாக இருக்கின்றது. தேவையெனில் ஒரு முறை பார்த்துக்கொள்ளுங்கள்.



64. I have been doing a job.

நான் கிட்டடியிலிருந்து/சிலகாலமாக செய்துக் கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை.



நிகழ்கால வினைமுற்று தொடர் வாக்கியங்களில் கேள்வி, நேர்மறை, எதிர்மறை போன்ற வாக்கியங்கள் எவ்வாறு அமைகின்றன என்பதை ஒருமுறை பார்த்துக்கொள்வோம்.



வாக்கிய அமைவுகள்

-------------------------------------------------------------------------------------

Positive (Affirmative)

Subject + Auxiliary verb + Auxiliary verb + Main verb with ing

1. I /You/ We/ They + have + been + doing a job

2. He/ She/ It + has + been + doing a job.

இவ்வாக்கிய அமைப்புகளில் எப்பொழுதும் பிரதான வினைச்சொல்லுடன் "ing" யும் இணைந்தே பயன்படும்.



Negative

Subject + Auxiliary verb + not + Auxiliary verb + verb with ing

1. I /You/ We/ They + have + not + been + doing a job

2. He/ She/ It + has + not + been + doing a job.



Question (Interrogative)

Auxiliary verb + Subject + Auxiliary verb + Main verb with ing

1. Have + I /you/ we/ they + been + doing a job?

2. Has + he/ she/ It + been + doing a job? இவற்றில் துணை வினை (Auxiliary verbs) இரண்டு இடங்களில் பயன்படுவதை அவதானியுங்கள்.



மேலும் சில வாக்கியங்களை கேள்வி பதிலாக அமைத்து பார்ப்போம்.



கேள்வி பதில் வாக்கியங்கள்

-------------------------------------------------------------------------------------

Have you been doing a job?

நீ கிட்டடியிலிருந்து/சிலகாலமாக செய்துக்கொண்டிருக்கின்றயா ஒரு வேலை?

Yes, I have been doing a job. (I’ve)

ஆம், நான் கிட்டடியிலிருந்து/சிலகாலமாக செய்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை.

No, I have not been doing a job. (I’ve not, I haven’t been)

இல்லை, நான் கிட்டடியிலிருந்து/சிலகாலமாக செய்துக்கொண்டிருக்கவில்லை ஒரு வேலை.



கவனிக்கவும்:



மேலுள்ள வாக்கியங்களை சற்று கவனியுங்கள். இவற்றின் தமிழ் விளக்கம் நிகழ்கால தொடர்வினை வாக்கியங்கள் போலவே அமைந்துள்ளன. ஆனால் வேறுப்பாடு உண்டு. என்ன வேறுபாடு? "கிட்டடியிலிருந்து/சிலகாலமாக” என்று வாக்கியங்களின் இடையே குறிப்பிடப்பட்டுள்ளது தான் வேறுப்பாடாகும். ஏன் வாக்கியங்களின் இடையில் "கிட்டடியிலிருந்து/ சிலகாலமாக" என்று குறிப்பிடப்பட்டுள்ளன? அதற்கான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



02. I am doing a job.

நான் செய்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை.



இவ்வாக்கியத்தில் "இப்பொழுது இந்த வினாடி நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் ஒரு நிகழ்வையே “நிகழ்கால தொடர்வினை” விவரிக்கின்றது.



64. I have been doing a job.

நான் கிட்டடியிலிருந்து/சிலகாலமாக செய்துக் கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை.



இவ்வாக்கியத்தில் கடந்தக் காலத்தில் தொடங்கப்பட்ட ஒரு செயல் தொடர்ந்து இந்த வினாடி வரை நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது, என்பதை “நிகழ்கால வினைமுற்றுத் தொடர்” விவரிக்கின்றது.



இங்கே கடந்தக் காலம் என்பது சில வினாடிகளுக்கு முன்பிருந்து தொடங்கியதாகவும் இருக்கலாம், சில ஆண்டுகளுக்கு முன்பிருந்து தொடங்கியதாகவும் இருக்கலாம். ஆனால் செயல் தற்பொழுது வரை தொடர்ந்து நடைப்பெற்றுக்கொண்டிருக்க வேண்டும். இதனை விவரிக்கும் முகமாகவே நான் "கிட்டடியிலிருந்து/சற்றுமுன்பிருந்து" என்று குறிப்பிட்டுள்ளேன். (தவிர உங்கள் பேச்சு பயன்பாட்டின் போது "கிட்டடியிலிருந்து/சிலகாலமாக" என்று ஒவ்வொரு வாக்கியங்களிலும் பயன்படுத்த வேண்டியதில்லை.)



அநேகமாக கேள்விகளின் பொழுது “How long” எனும் சொற்பதம் வாக்கியங்களின் முன்னால் அடிக்கடி பயன்படுவதை அவதானிக்கலாம். அதேபோல் நேர்மறையின் போது “for, since” போன்ற சொற்கள் அடிக்கடி பயன்படுகின்றன.



எடுத்துக்காட்டுகள்:



How long have you been doing a job?

எவ்வளவு காலமாக நீ செய்துக்கொண்டிருக்கின்றாய் ஒரு வேலை?

I have been doing a job for 12 months.

நான் செய்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை 12 மாதங்களாக.



How long have you been studying English?

நீ எவ்வளவு காலமாக படித்துக் கொண்டிருக்கின்றாய் ஆங்கிலம்?

I have been studying English since 2002. (I’ve)

நான் படித்துக் கொண்டிருக்கின்றேன் ஆங்கிலம் 2002 இல் இருந்து.



How long have you been staying in Hong Kong?

நீ எவ்வளவு காலமாக இருந்து(வசித்து)க் கொண்டிருக்கின்றாய் ஹொங்கொங்கில்?

I have been staying in Hong Kong for 6 years.

நான் இருந்து(வசித்து)க் கொண்டிருக்கின்றேன் ஹொங் கொங்கில் 6 ஆண்டுகளாக.



பாடப் பயிற்சி

-------------------------------------------------------------------------------------நிகழ்கால வினைமுற்றுத் தொடர் வாக்கியங்கள் கடந்த காலத்தில் தொடங்கி தற்போது வரை (நிகழ்காலம்) நடைப்பெற்றுக் கொண்டிருப்பவற்றை விவரிப்பதனால், ஒரு செயல் அல்லது நிகழ்வு எவ்வளவு காலம் செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றது அல்லது நிகழ்ந்துக்கொண்டிருக்கின்றது என்பதை விவரிக்க (for, since) போன்ற சொற்கள் அடிக்கடி பயன்படுத்தப் படுகின்றன. கீழுள்ள வாக்கியங்கள் ஊடாக மேலும் தெளிவுறலாம்.



1. I have been waiting here for two hours.

நான் காத்துக்கொண்டிருக்கின்றேன் இங்கே இரண்டு மணித்தியாளங்களாக.



2. I have been working at that company for three years.

நான் வேலை செய்துக்கொண்டிருக்கின்றேன் அந்த நிறுவனத்தில் மூன்று ஆண்டுகளாக.



3. I have been doing for the last 30 minutes.

நான் செய்துக்கொண்டிருக்கின்றேன் கடைசி/கடந்த 30 நிமிடங்களாக.



4. I have been teaching at the university since June.

நான் கற்பித்துக்கொண்டிருக்கின்றேன் பல்கலைக் கழகத்தில் ஜூன் (மாதத்தில்) இருந்து.



5. I have been waiting here for over two hours.

நான் காத்துக்கொண்டிருக்கின்றேன் இங்கே இரண்டு மணித்தியாளங்களுக்கு மேலாக.



6. I have been waiting for you for three hours.

நான் காத்துக்க்கொண்டிருக்கின்றேன் உனக்காக மூன்று மணித்தியாளங்களாக.

(நான் உனக்காக மூன்று மணித்தியாளங்களாக காத்துக் கொண்டிருக்கின்றேன்.)



7. I have been watching too much television lately.

நான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன் தொலைக்காட்சி மிக அதிகமாக சமீப காலத்தில்.



8. I have been exercising lately.

நான் (தேக) பயிற்சி செய்துக்கொண்டிருக்கின்றேன் சமீபகாலமாக.



9. I have been doing the work.

நான் செய்துக்கொண்டிருக்கின்றேன் வேலை.



10. I have been studying English for four years

நான் படித்துக்கொண்டிருக்கின்றேன் ஆங்கிலம் நான்கு ஆண்டுகளாக.



11. I have been living here since 1998.

நான் வசித்துக்கொண்டிருக்கின்றேன் இங்கே 1998 இல் இருந்து.



12. I have been working at BBC for three years

நான் வேலைச்செய்துக்கொண்டிருக்கின்றேன் BBC இல் மூன்று ஆண்டுகளாக.



13. I have been exporting to China since 1999.

நான் ஏற்றுமதி செய்துக்கொண்டிருக்கின்றேன் சீனாவிற்கு 1999 இல் இருந்து.



14. I have been studying for 3 hours.

நான் படித்துக்கொண்டிருக்கின்றேன் மூன்று மணித்தியாளங்களாக.



15. I have been watching TV since 7pm.

நான் பார்த்துக்கொண்டிருக்கின்றேன் TV 7 மணியிலிருந்து.



16. I have been playing football for a long time.

நான் விளையாடிக் கொண்டிருக்கின்றேன் உதைப்பந்தாட்டம் நீண்ட காலமாக.



17. I have been living in Bangkok since I left school.

நான் வசித்துக்கொண்டிருக்கின்றேன் பேங் கொக்கில் நான் பாடசாலையில் வெளியேறியதில் இருந்து.



18. I have been standing here for over half an hour.

நான் நின்றுக்கொண்டிருக்கின்றேன் இங்கே அரை மணித்தியாளத்திற்கு மேலாக.



19. I have been looking for a summer holiday job for two weeks.

நான் (தேடி)பார்த்துக்கொண்டிருக்கின்றேன் கோடை விடுமுறை வேலை இரண்டு வாரங்களாக.



20. I have been writing novels since 1968.

நான் எழுதிக்கொண்டிருக்கின்றேன் நாவல்கள் 1968 இல் இருந்து.



21. I have been getting good results over the last few years.

நான் பெற்றுக் கொண்டிருக்கின்றேன் நல்ல பெறுபேறுகள் கடந்த சில ஆண்டுகளாக.



22. I have been painting my house since last night.

நான் வர்ணம் பூசிக்கொண்டிருக்கின்றேன் எனது வீட்டிற்கு கடந்த/நேற்று இரவில் இருந்து.



23. I have been driving for 14 years

நான் (வாகனம்) ஓட்டிக்கொண்டிருக்கின்றேன் 14 ஆண்டுகளாக.



24 . I have been reading this lesson for the past 10 minutes

நான் வாசித்துக்கொண்டிருக்கின்றேன் இந்த பாடத்தை கடந்த 10 நிமிடங்களாக.



24. I have been blogging since 2007

நான் (ப்ளாக்) எழுதிக்கொண்டிக்கின்றேன் 2007 இல் இருந்து.



25. I have been teaching at Hong Kong University for 6 years.

நான் கற்பித்துக்கொண்டிருக்கின்றேன் ஹொங்கொங் பல்கலைக் கழகத்தில் 6 ஆண்டுகளாக.



Homework:

-------------------------------------------------------------------------------------மேலே நாம் பயிற்சி செய்த 25 வாக்கியங்களையும் He, She, It, You, We, They போன்ற சொற்களை பயன்படுத்தி எழுதிப்பாருங்கள். பின் அவற்றை கேள்வி பதில்களாக மாற்றி எழுதி பயிற்சி செய்யுங்கள். பேச்சுப் பயிற்சிக்கு; உங்கள் நண்பர்களிடம் கீழுள்ள கேள்விகளை கேழுங்கள் அல்லது உங்கள் நண்பரை உங்களிடம் கேள்வி கேட்கச்சொல்லி நீங்கள் பதில் அளித்து பயிற்சி பெறுங்கள்.



How long have you been staying in your country?

How long have you been going to school?

How long have you been working here?

How long have you been practicing English?

How long have you been …………………………………….?



சுருக்கப் பயன்பாடுகள் (Short Forms)

-------------------------------------------------------------------------------------

Positive Short forms



I have been = I've been

You have been = You've been

We have been = We've been

They have been = They've been



He has been = He's been

She has been = She's been

It has been = It's been



Negative Short forms



எதிர்மறை வாக்கியங்களின் சுருக்கப் பயன்பாடுகள் இரண்டு வகை உள்ளன.



I have not been = I've not been / I haven't been

You have not been = You've not been / You haven't been

We have not been = We've not been / We haven't been

They have not been = They've not been / They haven't been



He has not been = He's not been / He hasn't been

She has not been = She's not been / She hasn't been

It has not been = It's not been / It hasn't been



"நிகழ்கால வினைமுற்று தொடர்" கேள்விகளுக்கு பதிலளிக்கும் பொழுது, அதற்கான பதில்களை சுருக்கமாகக் கூறும் வழக்கமே ஆங்கிலேயரிடம் அதிகம் காணப்படுகின்றன. நாமும் அவற்றை அறிந்துக்கொள்வோம்.



எடுத்துக்காட்டு:



How long have you been studying English?

எவ்வளவு காலமாக நீ படித்துக்கொண்டிருக்கின்றாய் ஆங்கிலம்?

I've been studying English for four years.

நான் படித்துக்கொண்டிருக்கின்றேன் ஆங்கிலம் நான்கு ஆண்டுகளாக.

For four years. - "நான்கு ஆண்டுகளாக." என சுருக்கமாக பதிலளிக்கலாம்.



How long have you been living in Hong Kong?

எவ்வளவு காலமாக நீ வசித்துக்கொண்டிருக்கின்றாய் ஹொங்கொங்கில்?

I've been living here since 2003.

நான் வசித்துக்கொண்டிருக்கின்றேன் இங்கே 2003 இல் இருந்து.

since 2003. - "2003 இல் இருந்து" என சுருக்கமாக பதிலளிக்கலாம்.



குறிச்சொற்கள் (Signal words)

-------------------------------------------------------------------------------------

since

for

all week

for days

lately

recently

over the last few months



கேள்விகளின் போது:



How long



நிகழ்கால வினைமுற்று தொடர் வரைப்படங்கள்

-------------------------------------------------------------------------------------நிகழ்கால வினைமுற்றுத் தொடர் வாக்கியங்கள் இரண்டு விதமாக பயன்படுகின்றன. வரைப்படத்தில் பார்க்கவும்.



வரைப்படம் - 01



செயல் கடந்தக் காலத்தில் தொடங்கி தற்போதும் தொடர்ந்துக்கொண்டிருப்பவை. (Actions beginning in the past and still continuing)





வரைப்படம் - 02



செயல் கடந்த காலத்தில் தொடங்கி இப்பொழுது அல்லது இந்த வினாடியுடம் முடிவுற்றவை. (Action that has just stopped or recently stopped)





மேலுள்ள விளக்கங்கள் நிகழ்கால வினைமுற்று தொடர் வாக்கியங்களின் பயன்பாட்டை தெளிவாக விளக்கியிருக்கும் என்று நம்புகின்றேன். மேலும் இப்பாடம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது முகப்பில் காணப்படும் எனது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment