Monday, August 30, 2010

தி.மு.க. அரசை குறைகூறுவது நியாயம்தானா

தி.மு.க. அரசை குறைகூறுவது நியாயம்தானா?-சத்துணவு ஊழியர்களுக்கு ஏராளமான சலுகை வழங்கியுள்ளோம்; கருணாநிதி அறிக்கை
சென்னை, ஆக.31-
 
முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
திராவிட இயக்கம், திராவிடர் கழகமாக போராட்டங்களில் ஈடுபட்ட போதும் சரி - திராவிட முன்னேற்றக் கழகம் என்ற நிலையில் போராட்டங்களில் ஈடுபட்ட போதும் சரி - ஒவ்வொரு நேரத்திலும் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளவோ, வேண்டுமென்றே அரசுக்குச் சிக்கலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவோ - "போர் முனைக்கு வாருங்கள்'' என்று பொதுமக்களைத் திரட்டியதும் இல்லை - தனது கட்சித் தோழர்களை அவ்வாறு கூறி அழைத்ததும் இல்லை. எந்தப் பிரச்சினைக்கான கோரிக்கை முழக்கமிட்ட காலத்திலும், அதற்கான கிளர்ச்சிகளை அமைதியான முறையில், அறவழியில் நடத்திப் பழக்கப்பட்டவைகள் தான். அதனால்தான் அந்தப் போராட்டங்கள் "அறப்போராட்டம்'' என்ற பெயரிட்டே அழைக்கப்பட்டது.
 
தமிழ் மொழிக்குப் பேராபத்து சூழுமோ என்ற நிலையில் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்த போதுகூட, 1938-ஆம் ஆண்டு வாக்கில் சென்னை தொண்டை மண்டல உயர்நிலைப் பள்ளி வாசலில் அறப்போர் வீரர்கள் அணி வகுத்து நின்று - முதல் அணியிலே அவர்கள் யார் யார் என்று பெயர் குறிப்பிடப்பட்டு - குறிப்பிட்ட நாளில் - குறிப்பிட்ட பள்ளியின் வாசலில் - குறிப்பிட்ட தோழர்கள் மாத்திரம் அமைதியான முறையில் மறியல் செய்து கைதாகியிருக்கிறார்களே தவிர - மொழிப் போராட்ட வீரர்கள், பள்ளியை முற்றுகையிடுவார்கள் என்றோ அல்லது இந்தியைக் கட்டாயப்படுத்திய அன்றைய ஆட்சியாளர்களுடைய கோட்டையை முற்றுகையிடுவார்கள் என்றோ கட்சித் தலைமையினால் அறிவிக்கப்படவும் இல்லை; அப்படியொரு போராட்டத்தில் ஈடுபடவும் இல்லை. ஆனால் பொது மக்கள் - ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள மக்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுமென்பதற்காக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.
 
நம்முடைய கம்யூனிஸ்ட்கள் இருக்கிறார்களே, அவர்கள் நடத்துகின்ற கிளர்ச்சி எதுவாயினும், அதற்கு ஒரு போர்க்கள முத்திரையைக் குத்தாமல் இருக்க மாட்டார்கள். முதலில் ஊர்வலம் என்பார்கள், அடுத்து, கண்டன ஆர்ப்பாட்டம் என்பார்கள், அதற்கடுத்து, மறியல் என்பார்கள், அதைத் தொடர்ந்து தலைமைச்செயலகம் (கோட்டை) முற்றுகை என்பார்கள். ஓர் அரசு இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அவர்கள் அணி வகுத்து வரும் படைக்கு முரசு கொட்டி வர வேண்டும் என்றும் - முற்றுகைப் போராட்டத் தளபதிகளுக்கு முகமன் கூறி வரவேற்பு வழங்க வேண்டுமென்றும் எதிர்பார்ப்பார்கள். இப்படித் தான் கம்ïனிஸ்ட்களுடைய கிளர்ச்சிகள் கோரிக்கைப் பேரணிகளாக மாறி "கோட்டை முற்றுகை'' என்ற அளவிற்கு வளர்ந்திருக்கின்றன.
 
அவர்கள் வைத்த கொள்ளிதான் இந்தியாவில் சில மாநிலங்களில் "மாவோயிஸ்ட்'' தாக்குதல், அராஜகம், உயிர் பலிகள் என்ற அளவுக்கு கொழுந்து விட்டு எரிகிற காட்சியைக் காணுகிறோம். தமிழகத்திலும் அத்தகைய அராஜகங்களை வன்முறைச் சேட்டைகளை கொலை வெறித் தாக்குதல்களை கட்டவிழ்த்து விட வேண்டுமென்று திட்டமிட்டு, திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு ஒரு சிறு களங்கமாவது ஏற்படுத்தினால்தான் அதை வைத்துக் கொண்டு தேர்தலில் தாங்கள் நிற்கவோ அல்லது தங்கள் கூட்டணித் தலைவி, "சிறுதாவூர் சீமாட்டி'', வெற்றி வாகை சூடி மீண்டும் கோலோச்சவோ முடியும் என்ற எதிர்பார்ப்போடு - திட்டங்களைத் தீட்டுகின்றனர், தீர்மானங்களை நிறைவேற்றுகின்றனர்.
 
இதோ பாருங்கள்! அவர்கள் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையின் சாராம்சமாக என்ன குறிப்பிட்டிருக்கிறார்கள்? "சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயற்குழு முடிவின்படி 30-8-2010 திங்கள் அன்று சென்னையில் கோட்டை முற்றுகைப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், அரசு அதனை தடுத்து நிறுத்திவிட்டது'' - இது அவர்களின் துண்டறிக்கையில் காணப்படும் இந்த அரசைப் பற்றிய குற்றச்சாட்டு.
 
இவர்கள் கோட்டையை நோக்கி வருவார்களாம்! முற்றுகைப் போராட்டம் நடத்துவார்களாம்! அதை அரசும் இந்த அரசின் காவல் துறையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு அவர்களுக்கெல்லாம் விருந்து வைத்து மகிழவேண்டுமாம். என்ன இவர்களுடைய கோரிக்கை?
 
அவர்களே வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல 27 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தின் கீழ் பணியாற்றும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களுடைய கோரிக்கை.
 
எத்தனை ஆண்டு கோரிக்கை இது? அவர்களே கூறுகிறார்கள் - 27 ஆண்டு கோரிக்கை என்று! இந்த 27 ஆண்டுகளில் சத்துணவு ஊழியர்கள் என்று இல்லாவிட்டாலும் - தொகுப்பூதிய ஊழியர்கள் என்று ஆயிரக் கணக்கானவர்கள் இந்த அரசில் பணியாற்றினார்களா? இல்லையா? அவர்களுக்கெல்லாம் எந்த ஆட்சியிலாவது பணி நிரந்தரம் செய்யப்பட்டதா?
 
தொகுப்பூதியத்தில் இருப்பவர்களை, பகுதி நேர ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக ஆக்குவதற்கு எந்த அரசாவது ஏன் மேற்கு வங்க அரசோ, கேரள அரசோ போன்ற கம்யூனிஸ்ட் அரசுகளாவது முன் வந்தது உண்டா? ஆனால் "ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி'' என்ற கதையாக தமிழ் நாட்டில் மாத்திரம் பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்துவோம் என்றும், அதற்கு கோட்டையையே முற்றுகையிடுவோம் என்றும், அதைக் காவலர்கள் தடுத்தால், அங்கே ஏற்படுகிற தகராறைப் பெரிதுபடுத்தி, "தமிழக அரசின் உச்ச கட்ட அராஜகம்'' என்று ஊருக்கு ஊர் சொல்லுவோம் என்று பேசுவதும், எழுதுவதும் எந்த வகை ஜனநாயகம் என்று எனக்குத் தெரியவில்லை.
 
போகட்டும், இந்த கோரிக்கையைக்கூட இந்த அரசு கவனிக்காமல் இருந்ததா? கவனித்த காரணத்தால் தான் அவர்களை முழு நேர அரசு ஊழியர்களாக ஆக்க இயலா விட்டாலும், கடந்த காலத்தில் அ.தி.மு.க. அரசு அளிக்காத சலுகைகளையெல்லாம் இந்த ஆட்சியிலே அளித்திருக்கிறோம். உதாரணமாகச் சிலவற்றைச் சொல்ல வேண்டுமென்றால் சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் ஒருமுறை கூட ஊதிய விகிதம் உயர்த்தி வழங்கப்படவில்லை. ஆனால் கழக ஆட்சியில் அவர்களுக்கு மூன்று முறை ஊதிய விகிதம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
 
அங்கன்வாடி, மற்றும் சத்துணவு மையங்களில் பணி புரியும் சமையலர், சமையல் உதவியாளர், மற்றும் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு தொகுப்பூதியத்திற்குப் பதிலாக "சிறப்பு கால முறை ஊதியம்'' வழங்க இந்த ஆட்சிக் காலத்தில்தான் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்களுக்கும் கழக ஆட்சியிலே தான் முதல் முறையாக வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி, மருத்துவப்படி, பண்டிகைக் கால முன்பணம் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.
 
கழக ஆட்சியிலேதான் இவர்களுக்கு மாதந்தோறும் முதல் முறையாக ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. கழக ஆட்சியில்தான் இவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.
 
கழக ஆட்சியிலேதான் இவர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம், சிறப்பு சேமநல நிதித் திட்டம், குடும்ப நலத் திட்டம், புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மகப்பேறு காலத்தில் விடுப்பு, கோடை விடுமுறை காலத்தில் ஊதியம், பயணப்படி ஆகிய அனைத்தும் வழங்கப்படுகின்றன.
 
சத்துணவு அமைப்பாளர்கள், மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் ஆகியோர் தமிழகத்தில் தற்போது பெற்று வரும் ஊதியத்தின் அளவு, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தை விடவும் அதிகம்.
 
இந்த அளவிற்கு கழக அரசின் சார்பில் அவர்களுக்கு சலுகைகள் அளித்து வரும் நிலையில் அவர்கள் இந்த அரசினை எதிர்த்து, கோட்டை முன் முற்றுகைப் போராட்டம் என்று சொல்வது நியாயம்தானா? தற்போதைய சத்துணவுப் பணியாளர்கள் பிரச்சினையில் கோட்டையை முற்றுகையிட வேண்டிய அளவிற்கு என்ன நடந்து விட்டது?
 
அ.தி.மு.க. ஆட்சியில் "எஸ்மா, டெஸ்மா'' சட்டங்கள் கொண்டு வரப்பட்டதைப் போல தற்போது கொண்டு வரப்பட்டுள்ளதா? அல்லது அந்த ஆட்சியில் இரவோடு இரவாக அரசு அலுவலர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் எங்கே அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்றே தெரியாத அளவிற்கு நிலைமை இருந்ததே அது போல இப்போது ஏதாவது நிலைமையா? அல்லது ஒரே நாளில் லட்சக்கணக்கான அரசு அலுவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டதே அது போன்று ஏதாவது தற்போது நடைபெற்று விட்டதா? எதற்காக முற்றுகை போராட்டம்? சத்துணவு பணியாளர்களுக்கு என்று இந்த ஒரு சங்கம் தான் உள்ளதா?
 
கடந்த ஆண்டு 21-11-2009 அன்று சத்துணவு பணியாளர்களின் பல்வேறு சங்கங்களின் சார்பில் எம். பழனிநாதன் போன்றவர்கள், வரதராசன் போன்றவர்கள் எல்லாம் வள்ளுவர் கோட்டத்திலே பல்லாயிரக் கணக்கான சத்துணவு பணியாளர்கள் திரண்டிருந்து எனக்கு நன்றி அறிவிப்பு பாராட்டு விழா நடத்தினார்களே, அந்த அலுவலர்கள் எல்லாம் உண்மையை அறிய மாட்டார்களா? அவர்கள் மத்தியில் நான் அடுக்கடுக்காக ஒன்றன் பின் ஒன்றாக பதினைந்து சலுகைகளை அறிவித்த போது அந்த மண்டபமே எதிரொலிக்கின்ற அளவுக்கு அவர்கள் கையொலி செய்யவில்லையா?
 
அந்த விழாவிலே பேசியது மாத்திரமல்லாமல், அந்தச் சலுகைகளுக்காக நன்றி தெரிவித்து, பழனிநாதனும், சூரியமூர்த்தியும் அறிக்கைகள் விட்டது இன்றளவும் ஏடுகளிலே உள்ளதே? ஏன், சத்துணவு பணியாளர்களுக்காக 2006ஆம் ஆண்டு தி.மு.க. அரசு பொறுப்பேற்ற ஒரு சில மாதங்களில் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்ட போது சட்டப் பேரவையிலேயே இரண்டு கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களும், காங்கிரஸ், பா.ம.க. கட்சியினரும் பாராட்டும் நன்றியும் தெரிவித்துப் பேசியது 1-9-2006 தேதிய அவை நடவடிக்கை குறிப்பிலேயே இடம் பெற்றுள்ளதே!
 
உண்மையிலே சொல்லப் போனால், சத்துணவுப் பணியாளர்களுக்கு இந்த அரசின் மீது எந்தவிதமான குறையும் இல்லை. அவர்கள் அனைவரும் நல்ல மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். ஆனால் அவர்களை வைத்துக் கொண்டு ஒரு சில சங்கத்தினர் மட்டும், அவர்களை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்வதாகவும், ஒரு சில கோவில்களைப் பார்த்து வரலாம் என்று கூறி ஏமாற்றி சென்னைக்கு அழைத்து வர முற்படுகிறார்களே தவிர வேறல்ல. மற்ற அலுவலர்களின் சங்கத்தினர் எல்லாம் இது போன்ற கோரிக்கைகளுக்குத் தீர்வு வர வேண்டுமென்று நினைப்பவர்கள் என்னையோ அமைச்சர்களையோ அணுகி தங்கள் கோரிக்கைகளைத் தெரிவித்து சலுகைகளைப் பெறுகிறார்கள், ஆனால் வேண்டுமென்றே இந்த அரசுக்கு எப்படியாவது கெட்டப் பெயரை ஏற்படுத்த வேண்டுமென்ற நினைப்போடு இருப்பவர்கள் தான் இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடுகிறார்கள்.
 
அவர்களின் உண்மை உருவத்தை இந்தச் சங்கங்களில் உறுப்பினர் களாக இடம் பெற்றிருப்பவர்கள், வேறு எந்த ஆட்சிக் காலத்திலாவது அல்லது வேறு எந்த மாநிலத்திலாவது இதுபோன்ற சலுகைகள் கிடைத்துள்ளதா என்பதையெல்லாம் எண்ணிப் பார்த்து செயல்பட வேண்டாமா? "குடிதழீஇக் கோலோச்சும்'' குறள் நெறி நடக்கும் இந்த அரசைக் குறை கூறுவது நியாயம்தானா? நீங்களே சொல்லுங்கள்!
 
இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

Monday, August 23, 2010

வரி கட்டாமல் கருப்புப் பணமாக சம்பளம் வாங்கும் விஜயகாந்த்-கருணாநிதி தாக்கு

வரி கட்டாமல் கருப்புப் பணமாக சம்பளம் வாங்கும் விஜயகாந்த்-கருணாநிதி தாக்கு

செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 24, 2010, 9:10[IST]
Vote this article
Up (1054)
Down (19)


சென்னை: ஊழல் கட்சிகளான திமுக, அதிமுகவோடு கூட்டணி சேர மாட்டேன் என்று கூறுகிற அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் ஒரு படத்திலே கதாநாயகனாக நடிக்க லட்சக்கணக்கில் வாங்குகிற பணத்தில் பெரும் பகுதி வருமான வரி கட்டாமல் கறுப்புப் பணமாக வாங்கப்படுவதாகக் கூறப்படுகிறதே என்று கேட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி.

இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் பாணி அறிக்கை:

கேள்வி: தி.மு.க., அ.தி.மு.க., இரண்டுமே ஊழல் கட்சிகள்- அவர்களோடு கூட்டணி கிடையாது என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சொல்லியிருக்கிறாரே?

பதில்: அவருடைய அந்த அறிவிப்பை எல்லா ஏடுகளும் வெளியிட்டிருக்கின்றன. நான் படித்துப் பார்த்தேன். ஒரேயொரு ஒப்பீட்டு உதாரணத்தை மாத்திரம் இதுபற்றிச் சொன்னால் "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்'' என்பதைப் போல பொதுமக்களுக்கு உண்மை விளக்கம் கிடைக்குமென்று நம்புகிறேன்.

தி.மு. கழகத் தலைவனாக இருக்கின்ற நான் திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதுவதில் வருகின்ற ஊதியம் முழுவதையும் வருமான வரி கட்டியது போக மிச்சத்தை பொது நலன்களுக்கான நிதியாக வழங்கிவிடுகிறேன். சில நேரங்களில் அரசின் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலும் அந்தத் தொகையைச் சேர்த்து வழங்கச் செய்திருக்கிறேன்.

உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமேயானால், 2004-2005-ம் ஆண்டில் "மண்ணின் மைந்தன்'' திரைப்படத்திற்கு நான் திரைக்கதை வசனம் எழுதியதன் மூலம் கிடைத்த ஊதியம் 11 லட்சம் ரூபாய் - "கண்ணம்மா'' படத்தின் மூலம் கிடைத்த ஊதியம் 10 லட்சம் ரூபாய் ஆக 21 லட்சம் ரூபாயை சுனாமி நிவாரணத்திற்காக அன்றைய முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடமே, தம்பி மு.க. ஸ்டாலினை நேரில் சென்று வழங்கும்படி செய்தேன்.

அது போலவே 9-7-2008 அன்று "உளியின் ஓசை'' படத்தின் மூலம் கிடைத்த ஊதியம் ரூபாய் 25 லட்சத்தில் வருமான வரி போக மீதி 18 லட்சம் ரூபாயை திரைத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றும் மூத்தக் கலைஞர்களுக்கு நானே நேரடியாக வழங்கினேன்.

2005 நவம்பர் முதல் 2010 ஆகஸ்ட் மாதம் வரை மாதந்தோறும் ஏழையெளியோருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் என்றும் ஐயாயிரம் ரூபாய் என்றும் ஒவ்வொரு மாதமும் என் பெயரால் உள்ள "கலைஞர் கருணாநிதி அறக் கட்டளை'' நிதியிலிருந்து வழங்கி வருவதன் மூலமாக இதுவரை 2049 பேருக்கு ஒரு கோடியே 72 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

அதுபோலவே ஆண்டு தோறும் நல்ல புத்தகங்களை, சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகள் தாங்கிய புத்தகங்களை எதிர்கால இளைஞர்களுக்கு ஆக்க பூர்வமாக வழிகாட்டுகின்ற அறிவார்ந்த புத்தகங்களை எழுதும் சிறந்த எழுத்தாளர்கள் ஐந்து பேரை தேர்வு செய்து அவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் பொற்கிழியாக வழங்கிட, ஒரு கோடி ரூபாயை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்திற்கு வழங்கினேன்.

இந்த நிதியைக் கொண்டு, "கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி அறக்கட்டளை'' என்ற பெயரில் அறக்கட்டளையை நிறுவி, இதுவரை 17 அறிஞர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வீதம் பொற்கிழிகள் வழங்கச் செய்திருக்கிறேன்.

மேலும் ஒரு கோடி ரூபாயை தமிழ்ச் செம்மொழி நிறுவனத்திற்கு வழங்கி, அதன் மூலம் அறக் கட்டளை ஒன்றை உருவாக்கி கல்வெட்டியல், தொன்மையியல், நாணயவியல் ஆகிய பிரிவுகளில் ஆராய்ச்சி செய்யும் சான்றோர்களுக்கு விருதுகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளேன்.

அண்மையில் கோவை மாநகரில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் "பின்லாந்து'' நாட்டைச் சேர்ந்த உலகத் தமிழ் அறிஞர் அஸ்கோ பர்போலா அவர்களுக்கு முதன் முறையாக பத்து லட்சம் ரூபாய்க்கான இந்த விருது வழங்கப்பட்டது.

"பெண் சிங்கம்'' திரைப்படத்திற்காக எனக்குக் கிடைத்த 50 லட்சம் ரூபாயை தமிழக அரசின் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் சேர்த்திருக்கிறேன். அந்தத் தொகையினை அருந்ததியர் நல வாரியத்தின் மூலமாக அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும் சேர்ந்து படிக்க வழங்கப்படும் என்று அறிவித்து, அப்படி வழங்க முற்பட்ட போது, அந்த 50 லட்சம் ரூபாய் போதாமல், மேலும் பதினோறு லட்ச ரூபாய் தேவைப்படும் என்று தெரிவித்த போது, அந்தத் தொகையையும் வங்கியில் இருந்த என்னுடைய நிதியிலிருந்து முதல் அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளித்து, மாணவர்களுக்கு அதை வழங்கச் செய்தேன்.

அது போலவே "இளைஞன்'' திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதியமைக்காக எனக்கு அளிக்கப்பட்ட 50 லட்சம் ரூபாயில், வருமான வரித் தொகை போக எஞ்சிய 45 லட்சம் ரூபாயை முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலே சேர்த்து, மாற்றுத் திறனாளிகளின் நலன்களுக்காக அந்தத் தொகையை வழங்கச் செய்தேன்.

என்னுடைய பிறந்த நாளன்று மாலைக்குப் பதிலாகவும், பொன்னாடைக்குப் பதிலாகவும் கழகத் தோழர்கள் அளித்த நிதியையும், பொற்காசுகளையும் கூட அப்படியே முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலே சேர்த்தேன்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக 14-4-2010 அன்று மறைமலைநகரில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் எனக்கு அளித்த "அம்பேத்கர் சுடர்'' விருதுடன் தரப்பட்ட 50 ஆயிரம் ரூபாய் பொற்கிழியினையும் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் சேர்த்துள்ளேன்.

இதற்கெல்லாம் மேலாக சென்னை கோபாலபுரத்தில் நான் தற்போது வாழ்ந்து வரும் என்னுடைய வீட்டைக் கூட ஏழையெளியோர்க்குப் பயன்படும் வகையில் ஒரு மருத்துவமனையாக மாற்றிட நன்கொடையாக அளிப்பேன் என்றும் அறிவித்து, அதற்கான பத்திரப் பதிவுகளும் செய்யப்பட்டு விட்டன.

அப்படிப்பட்ட என்னையும் ஊழல் கட்சி என்கிறார்- மற்றொரு கட்சியையும் ஊழல் கட்சி என்கிறார். இந்த இரண்டு கட்சிகளோடும் கூட்டணி சேர மாட்டேன் என்று கூறுகிற அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் ஒரு படத்திலே கதாநாயகனாக நடிக்க லட்சக்கணக்கில் வாங்குகிற பணத்தில் பெரும் பகுதி வருமான வரி கட்டாமல் கறுப்புப் பணமாக வாங்கப்படுவதாகக் கூறப்படுகிறதே,

அவர் ஊழலைப் பற்றி இப்படிப் பேசியிருப்பது-உலகத்தினர் வாய் விட்டு சிரிப்பதற்குரிய கேலியாக அல்லவா இருக்கிறது! பிறர் முகத்தில் குறை காண்பதற்கு முன் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டாமா?

கேபிதான் விளக்க வேண்டும்:

கேள்வி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர் கே.மகேந்திரன் விடுத்துள்ள மறுப்பு அறிக்கையைப் பார்த்தீர்களா?

பதில்: அவரது மறுப்பு அறிக்கையைப் பார்த்தேன். ஆனால் அவர் தனது அறிக்கையிலே குறிப்பிட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர் குமரன் பத்மநாபன் அளித்த பேட்டியினையும் நாளேடுகளில் படித்தேன். அதாவது-விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவரான குமரன் பத்மநாபன் அளித்த பேட்டியில், "இலங்கையில் போர் நிறுத்தம் வராமல் தடுத்தது வைகோ தான்'' என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

மேலும் அவர் தனது பேட்டியில், "கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன் இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே உச்சக் கட்ட போர் தீவிரம் அடைந்திருந்தது. இலங்கை ராணுவத்திற்கு இந்திய ராணுவம் மறைமுகமாக உதவி செய்கிறது என்ற குற்றச்சாட்டை தேர்தல் பிரச்சாரத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சித் தலைவர்கள் எழுப்பினர்.

விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முன் வர வேண்டும் என மத்திய அமைச்சர் சிதம்பரம் வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டு கோளை ஏற்று, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விடுதலைப் புலிகளும் விரும்பினர்.

இந்த முடிவை விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுச் செயலர் நடேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ., மகேந்திரனிடம் தெரிவித்தார். அதை அவர், ம.தி.மு.க. பொதுச் செயலர், வைகோவிடம் கூறினார்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டால், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு நல்ல பெயர் கிடைத்து விடும் என்பதால், விடுதலைப் புலிகளின் முடிவை வைகோ மாற்றினார். தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமையும்போது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு நிலையை எடுக்க முடியும் என வைகோ கூறினார்'' என்று குமரன் பத்மநாபன் தெரிவித்திருக்கிறார்.

அந்தப் பேட்டி உண்மையல்ல என்று மகேந்திரன், எம்.எல்.,ஏ., மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதிலே என்ன உண்மை என்பதை விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய தலைவரான குமரன் பத்மநாபன் தான் தெரிவிக்கவேண்டும்.

கிரீன் பீல்டு' விமான நிலையம்:

கேள்வி: திருப்பெரும்புதூர் "கிரீன் பீல்டு'' விமான நிலையம் பற்றி தெளிவான ஒரு விளக்கத்தைத் தாங்கள் எழுதியிருந்தீர்கள். தமிழகத்திற்கு வரக் கூடிய நல்ல திட்டங்களையெல்லாம் அரசியல் உள் நோக்கத் தோடு ஒருசில கட்சிகள் எதிர்ப்பதால் நாட்டிற்கும், மக்களுக்கும் தானே இழப்பு?

பதில்: இந்தப் பிரச்சினை பற்றி இன்றைய தினம் ஒரு நாளிதழில் திருப்பெரும்புதூரைச் சேர்ந்த ச.கணபதி என்பவர் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் அவர் சில குறைபாடுகளைத் தெரிவித்திருந்த போதிலும் சில உண்மைகளையும் தெரிவித்திருக்கிறார்.

அதாவது- "கிரீன் பீல்டு விமான நிலைய விவகாரத்தில் முதல்வரின் அறிக்கை உண்மையானதே. மற்ற மாநிலங்களில் எல்லாம், கிரீன் பீல்டு விமான நிலையம் செயல்பாட்டுக்கு வந்து விட்டது; தமிழகம் மட்டுமே பின்தங்கியுள்ளது. ஆரம்பத்திலேயே இதற்கும் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர், எதிர்க்கட்சியினர்.

கிரீன்பீல்டு விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து, கடந்த நான்கு ஆண்டு காலமாக பேசப்பட்டு வரும் நிலையில், ஐந்தாண்டுகள் உறக்கத்தில் இருந்த ஜெயலலிதாவும், ராமதாசும், தேர்தல் நெருங்கும் நேரத்தில், குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயற்சிக்கின்றனர். தேர்தல் ஆதாயத்திற்காக மட்டுமே ஆர்ப்பாட்டம் நடத்துவது, தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு உகந்ததல்ல. இத்திட்டத்தால் விளைநிலங்கள் பாதிக்கப்படுகின்றன என்ற எதிர்க்கட்சிகளின் வாதம் சரியல்ல.

இதே போல் தான் தென் மாவட்டங்களில், "டாடா'' நிறுவனத்தின் தொழிற்சாலையை, விவசாயிகள் என்ற போர்வையில் தடுத்து நிறுத்தி, அம்மாவட்ட மக்களின் தொழில் வளர்ச்சியை அரசியல் கட்சிகள் முடக்கின. தற்போது அதே "பார்முலா''வை இங்கேயும் பயன்படுத்தி, தமிழகத்தின் முன்னேற்றத்தை தடுக்க நினைக்கின்றனர்'' என்றெல்லாம் எழுதியிருப்பதோடு, "பொதுமக்களின் ஆதரவோடு இத்திட்டம் நிறைவேறும் என்பதில் ஐயமில்லை'' என்றும் அந்தக் கடிதத்தில் அவர் எழுதியிருக்கிறார்.

இந்த உண்மை பொது மக்களுக்குத் தெரிகிறது. அது மாத்திரமல்ல; ஏதோ உள்நோக்கத்தோடுதான் எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன என்பதும் பொது மக்களுக்குப் புரிந்துள்ளது என்று கூறியுள்ளார்.

சென்னைக்கு பிறந்த தினம்

சென்னைக்கு பிறந்த தினம்
ஆகஸ்ட் 18,2010 @ 18:01
தமிழகத்தின் தலைநகரமாக உள்ள சென்னை, மாநிலத்தில் உள்ள அனைவரையும் கவர்ந்த ஒரு மாநகராக காட்சி அளிக்கிறது. தமிழகத்தின் மிகப்பெரிய நகரும், சர்வதேச அளவில் பிரபலமான நகராகவும் விளங்கி வருகிறது.

371 ஆண்டுகளுக்கு முன்பு, 1639 ஆக. 22ல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த, பிரான்சிஸ் டே மற்றும் அவருடைய மொழி பெயர்ப்பாளரான ஆன்ட்ரூ கோகன் ஆகியோர் விஜய நகர அரசின் கீழ் இருந்த வந்தவாசியை ஆண்ட வெங்கடாத்ரி நாயக்கரிடம் (இவருடைய தந்தைதான் தமர்லா சென்னப்ப நாயக்கர்) பேசி, கடற்கரை அருகே இடத்தை வாங்கி, செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டினர்.

நாயக்கரிடமிருந்து இடம் வாங்கிய ஆவணத்தில் சென்னப்ப நாயக்கர் பட்டினம் என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. இந்நாளை சென்னையின் பிறந்த நாளாகக் கொண்டாட நகர வரலாற்று அறிஞர் எஸ்.முத்தையா, பத்திரிகையாளர்கள் சசி நாயர் மற்றும் வின்சென்ட் டிசூசா ஆகியோர் இணைந்து கடந்த 2004ம் ஆண்டு மெட்ராஸ் டே கொண்டாடத் துவங்கினர். மெட்ராஸ் டே பிரபலமாவதற்கு சுசீலா ரவீந்திரநாத், ரேவதி, வி.ஸ்ரீராம் ஆகியோரும் இம்முயற்சியில் பங்கெடுத்தனர். தற்போது சென்னை முழுவதும் கொண்டாடும் ஒரு வார விழாவாக (ஆக.15-22) உருவாகியுள்ளது.

பிரிட்டிஷார் ஜார்ஜ் கோட்டை கட்டியதால், கோட்டையைச் சுற்றி குடியிருப்புகள் உருவாகத் தொடங்கின. ஆங்காங்கே இருந்த சிறுசிறு மீனவர் குடியிருப்புகள் மற்றும் மயிலாப்பூர், எழும்பூர், திருவல்லிக்கேணி, திருவான்மியூர் உள்ளிட்ட ஊர்களுக்கு இடையிலும் குடியிருப்புகள் அமைந்ததால் ஊர் விரிவாகத் தொடங்கியது.
பிரிட்டிஷாருக்கு முன்பாக, 1552ல் சாந்தோமில் குடியேறிய போர்ச்சுக்கீசியர்கள் வியாபாரம் செய்தனர். ஜவுளி மூலப்பொருட்கள் இப்பகுதியில் கிடைத்தன. இந்த வர்த்தகத்தைப் பங்கிடுவதற்காகத்தான் கிழக்கிந்திய கம்பெனியும் திட்டமிட்டது. அதன்விளைவாகவே பிரான்சிஸ் டே இங்கு வந்தார்.

செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வடக்கே உள்ள பகுதி சென்னபட்டினம் என்றும் தெற்கே உள்ள பகுதி மதராஸ்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது. பிரிட்டிஷார் வருகைக்குப் பின்னர் இரண்டு நகரத்தையும் ஒன்றாக்கி மதராஸ்பட்டினம் என்று அழைத்தார்கள். 1953ல் மதராஸ்பட்டினத்துக்கு கீழ் இருந்த பகுதிகள் மெட்ராஸ் பிரசிடென்சி என்று அழைக்கப்பட்டது. 1746ம் ஆண்டில் சென்னை பிரெஞ்சுக்காரர்களின் கைவசத்துக்குச் சென்றது. 2 மாதங்களிலேயே மீண்டும் ஆங்கிலேயேர் கைப்பற்றினர். அப்போது முதல் 1947ம் ஆண்டு வரை சென்னை பிரிட்டிஷார் கைவசமே இருந்தது.

சுதந்திரத்துக்குப் பின்னர் ஜவுளி, ஆட்டோமொபைல், சாப்ட்வேர், மருத்துவம், ஹார்ட்வேர் உற்பத்தி, நிதிச் சேவைகள் என்று நகரத்தின் தொழில் பெருகின. வர்த்தகம், போக்குவரத்து மற்றும் தொழில்நுட்பத்திலும் இந்நகரம் சிறந்து விளங்குகிறது. பழமையான பெருமைக்குரிய கட்டடங்களும், நவீன மாற்றத்துக்குரிய கட்டடங்களுடனும் சென்னை மனதைக் கவர்கிறது.
சென்னையின் பெருமையையும் அருமையையும் வெளிப்படுத்தும் வகையில், மெட்ராஸ் டே நாளில், கதை, கவிதை, கட்டுரை போட்டிகள், பாரம்பரிய நடை பயணங்கள், உணவுத் திருவிழா, பந்தயம், போட்டோ கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

Tuesday, August 17, 2010

Navagraha gallery Temples In Tamilnadu only



                                                                                                              

Thanjavur Celebrate arts

Tanjore Arts
Thanjavur is one of the chief political, literary and religious centres of southern India, known for its contribution to Carnatic music, it has produced many classical musicians and Bharathanatyam dancers. It has become the second most important site for the annual Natyanjali dance festival. Tiruvaiyaru, which is close to Thanjavur, is the place where the great musician Saint Tyagaraja lived. Here in Tiruvaiyaru every year in the Tamil month of 'Thai' (second half of January) Thyagaraja Aradhana will be held where musicians from all over the country will participate.Tanjore is well known for bronze sculptures and its unique painting style called Tanjore Painting, a percussion instrument called the Thavil, a divine classical string instrument Veenai and the Bobble head Thanjavur Dolls. The Tanjore paintings are very popular and are known around the world. The artists use a combination of canvas background with glass, metals, etc. to depict and decorate various scenes from Hindu mythology.

இந்தியா இலவச கலர் "டிவி' திட்டம் சரியே: சுப்ரீம் கோர்ட் கருத்து

இலவச கலர் "டிவி' திட்டம் சரியே: சுப்ரீம் கோர்ட் கருத்து
எழுத்தின் அளவு:   A+  A-
print e-mail   Buzz  Share  
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2010,23:25 IST

புதுடில்லி : பொது மக்களுக்கு இலவசமாக கலர் "டிவி' வழங்குவதில் எந்தத் தவறும் இல்லை என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

வெற்றி பெறும் பட்சத்தில், எல்லாருக்கும் இலவசமாக கலர் "டிவி' வழங்கப்படும் என, கடந்த சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு, அவ்வாறே பல கட்டங்களாக "டிவி'க்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில், மக்களின் வரிப்பணத்தில் இருந்து கலர் "டிவி'க்கள் வழங்கப்படுவதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என, தென்காசியைச் சேர்ந்த வக்கீல் சுப்ரமணியம் பாலாஜி என்பவர், மதுரை ஐகோர்ட் கிளையில் சிறப்பு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், மக்களுக்கு இலவசமாக காஸ் அடுப்புகள், வேட்டி, சேலைகள், நோட்டு புத்தகங்கள், பள்ளி சீருடைகள், பஸ் பாஸ், சைக்கிள்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன. இதில் எந்த தவறும் இல்லை; ஆனால், இலவச கலர் "டிவி'யால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது. எனவே, இத்திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். இந்த மனுவை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்துவிட்டது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் சுப்ரமணியம் பாலாஜி மேல்முறையீடு செய்தார். இந்த மனு, நீதிபதிகள் சதாசிவம், சவுகான் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் கூறியதாவது: ஏழை மக்கள் நலனை கருத்தில் கொண்டே இலவசமாக கலர் "டிவி'க்கள் வழங்கப்படுகின்றன. மனுதாரரின் வக்கீல், ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று இதை பார்க்கலாம். ஏழைப் பெண் குழந்தைகளுக்கு இலவசமாக சைக்கிள்கள், சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் எந்த தவறும் இல்லை. இவ்வாறு நீதிபதிகள் கூறினர். இருப்பினும், இந்த வழக்கு தொடர்பான இறுதிக்கட்ட விசாரணை, மற்றொரு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Friday, August 13, 2010

DayVande Mataram

i wish you every success our friends and kith and kin here and there.


Thanks


R.Gnaanakumaran
Thanjavur

Tuesday, August 10, 2010

இளைஞர்மணிதெரியுமா உங்களுக்கு

இளைஞர்மணிதெரியுமா உங்களுக்கு?


First Published : 11 Aug 2010 02:50:51 AM IST

Last Updated :


இந்தியாவில் உள்ள வெளிநாட்டு வங்கிகள்


வெளிநாட்டு வங்கிகளின் வரவு தவிர்க்க முடியாததாகிவிட்டது. முதன்முதலில் இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைத்த வெளிநாட்டு வங்கி ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி. இது 1858-ல் இந்தியாவில் தனது கிளையைத் தொடங்கியது. அதன்பிறகு 1902-ல் சிட்டி வங்கி தனது கிளையை தொடங்கியது.



பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 1953-ல் ஹாங்காங் அண்ட் ஷாங்காய் பாங்கிங் கார்ப்ட்ரேஷன் (ஹெச்எஸ்பிசி) செயல்படத் தொடங்கியது. 1990ல் உலகமயமாக்கலும், பொருளாதாரமயமாக்கலும் அரங்கேறிய சமயத்தில் பல வெளிநாட்டு வங்கிகள் இந்தியாவில் தங்கள் கிளைகளைத் தொடங்க ஆரம்பித்தன. ஏறக்குறைய உலகின் அனைத்து முன்னணி வங்கிகளும் தங்கள் கிளைகளை இந்தியாவில் தொடங்கியுள்ளன.



இங்குள்ள வெளிநாட்டு வங்கிகளில் புதிய தொழில்நுட்பங்களும் புதிய வங்கிக் கொள்கைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் காரணமாக உள்நாட்டு வங்கிகளும் தங்கள் போக்கை மாற்றிக்கொண்டு வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேறின.



தற்போது இந்தியாவில் மொத்தம் 29 வெளிநாட்டு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் முக்கியமான சில:



வெளிநாட்டு வங்கிகள்



ஏபிஎன் ஆம்ரோ வங்கி



அபு தாபி கமர்ஷியல் வங்கி



பாங்க் ஆப் சிலோன்



பிஎன்பி பரிபாஸ் வங்கி



சிட்டி வங்கி



சைனா டிரஸ்ட் கமர்ஷியல் வங்கி



டாயிஷ் (ஜெர்மனி) வங்கி



ஹெச்எஸ்பிசி வங்கி



ஜேபி மோர்கன் சேஸ் வங்கி



ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி



ஸ்காட்டியா (கனடா) வங்கி



தயிப் (பஹ்ரைன்) வங்கி

தஞ்சைப் பெரிய கோயில் ஆயிரம் ஆண்டு நிறைவு விழா

தமிழகம்செப்டம்பர் 25, 26-ல் தஞ்சைப் பெரிய கோயில் ஆயிரம் ஆண்டு நிறைவு விழா


First Published : 08 Aug 2010 12:00:00 AM IST

Last Updated :


சென்னை, ஆக. 7: தஞ்சைப் பெரிய கோயிலின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழா செப்டம்பர் 25 மற்றும் 26-ம் தேதிகளில் அங்கு நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்டது.



ராஜராஜ சோழனின் தஞ்சைப் பெரிய கோயில் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடுவது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் தலைமைச் செயலகத்தில் உள்ள செம்மொழித் தமிழாய்வு நூலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.



கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:



ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழா, தஞ்சை மாநகரில் செப்டம்பர் 25 மற்றும் 26-ம் தேதிகளில் இரண்டு நாள்கள் சிறப்பாக நடத்தப்படும்.



இந்த விழாவின் முதல் நாள் காலை முதல் நாட்டுப்புறக் கலைஞர்களின் பல்வேறு தெருவோர நிகழ்ச்சிகள் நகரின் பல பகுதிகளிலும் நடத்தப்படும். அதே நாள் மாலையில், தஞ்சைப் பெரிய கோயிலில் அனைத்திந்திய பரத நாட்டிய கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், டாக்டர் பத்மா சுப்பிரமணியம் தலைமையில் ஆயிரம் நடனக் கலைஞர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.



அந்த நடன நிகழ்ச்சிக்கு முன்பாக நாதஸ்வர இசை நிகழ்ச்சியும், நடன நிகழ்ச்சிக்குப் பின்னர் நூறு ஓதுவார்களின் திருமுறை இசை நிகழ்ச்சியும் நடத்தப்படும்.



இரண்டாம் நாள்: இரண்டாம் நாள் காலையில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வரங்கமும், தஞ்சைப் பெரிய கோயிலில் பொது அரங்கமும் நடைபெறும்.



அன்றைய தினம் மாலையில் தஞ்சை திலகர் திடலில் முதல்வர் கருணாநிதி தலைமையில் தஞ்சைப் பெரிய கோயில் ஆயிரம் ஆண்டு நிறைவு நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலை வெளியிடப்படும்.



தஞ்சை மாநகருக்காக அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைத் தொடங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளும் தொடங்கப்படும். அந்த நிகழ்ச்சிக்கு மத்திய அமைச்சர்கள், பல்வேறு சான்றோர்கள், ஆன்றோர்கள், அரசியல் தலைவர்கள் அழைக்கப்படுவர்.



பெரிய கோயிலின் ஆயிரம் ஆண்டு நிறைவை ஒட்டி வரலாற்றுக் கண்காட்சி நடத்தவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.



இந்தக் கூட்டத்தில், நிதியமைச்சர் க.அன்பழகன், கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி.மணி, மத்திய நிதித் துறை இணையமைச்சர் பழனி மாணிக்கம், வணி வரித் துறை அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, நிதித் துறை முதன்மைச் செயலாளர் க.சண்முகம் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள், தஞ்சை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.சண்முகம் உள்பட பலரும் பங்கேற்றனர்.





கட்டப்பட்ட காலம் எப்போது?





தஞ்சைப் பெரிய கோயிலின் கட்டுமானப் பணிகள் 1006-ம் ஆண்டு தொடங்கி 1010-ம் ஆண்டில் முடிக்கப்பட்டதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன.



தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது பிரகதீசுவரர் கோயில் என்று பெரிய கோயில் அழைக்கப்படுகிறது. உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக அது விளங்கி வருகிறது.



10-ம் நூற்றாண்டுக் காலத்தில் சோழப் பேரரசு அதன் உச்ச நிலையில் இருந்த போது, ராஜராஜ சோழ மன்னனால் பெரிய கோயில் கட்டப்பட்டது. தொடக்கத்தில் ராஜராஜேஸ்வரம் எனவும் பின்னர், நாயக்கர்கள் தஞ்சையை ஆண்ட காலத்தில் தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்டது.



17 மற்றும் 18-ம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் தஞ்சை ஆளப்பட்ட போது, பிருகதீசுவரம் ஆனது. இந்தக் கோயில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரியச் சின்னமாக கடந்த 1987-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.