Monday, November 29, 2010

இந்தியா பற்றி மூவாயிரம் ஆவணங்கள் வெளியீடு: "விக்கி லீக்ஸ்' பரபரப்புவாஷிங்டன் : உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள், வாஷிங்டனில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அனுப்பிய இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களைக் கைப்பற்றி, "விக்கி லீக்ஸ்' இணையதளம் நேற்று முன்தினம் வெளியிட்டது. அவற்றில் இந்தியா பற்றிய மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களும் உண்டு.

ஈரானின் அணு உலைகளை அழிக்கும்படி சவுதிஅரேபிய மன்னர், அமெரிக்காவை வற்புறுத்தியது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு, "ஆல்பா டாக்' என பட்டப்பெயர் இட்டது போன்ற பல்வேறு பரபரப்புத் தகவல்கள் அவற்றில் அடங்கியுள்ளன. "விக்கி லீக்சின்' இந்தச் செயலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பரபரப்பான செய்திகளை வெளியிடுவதற்குப் பெயர் பெற்ற "விக்கி லீக்ஸ்' இணையதளம், ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் போர் அட்டூழியத்தை 90 ஆயிரம் ரகசிய ஆவணங்கள் மூலமும், ஈராக்கில் நடந்த அமெரிக்க அட்டூழியத்தை நான்கு லட்சம் ரகசிய ஆவணங்கள் மூலமும் வெளிப்படுத்தியது. இதனால் எரிச்சல் அடைந்த அமெரிக்கா, "விக்கி லீக்ஸ்' இணையதள நிறுவனர் ஜூலியன் அசேஞ்ச் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரை துரத்த ஆரம்பித்தது. சமீபத்தில் அவரைக் கைது செய்வதற்கு சுவிட்சர்லாந்து கோர்ட் ஒன்று உத்தரவிட்டது.

இந்நிலையில், அமெரிக்கா பல்வேறு நாடுகளிடம் கொண்டுள்ள வெளியுறவுக் கொள்கைகள் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிடப் போவதாக ஜூலியன் சமீபத்தில் தெரிவித்தார். அவற்றை வெளியிடக் கூடாது எனக் கூறிய அமெரிக்கா, அவற்றைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என மிரட்டலும் விடுத்தது. தன் கூட்டணி நாடுகளான இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு முன்னெச்சரிக்கையும் விடுத்தது. ஆனாலும் சொன்னபடியே, ஜூலியன், பிரிட்டனில் இருந்து வெளியாகும், "தி கார்டியன்', நியூயார்க்கின் "தி நியூயார்க் டைம்ஸ்', ஜெர்மனியின் "டெர் ஸ்பைஜெல்', பிரான்சின், "லீ மாண்டே', ஸ்பெயினின் "எல் பைஸ்' ஆகிய ஐந்து பத்திரிகைகள் மூலம், இரண்டு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களை நேற்று முன்தினம் இந்திய நேரப்படி நள்ளிரவில் வெளியிட்டார். இந்த ஆவணங்கள் மூலம் உலக நாடுகளை அமெரிக்க கண் ணோட்டம், அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் ஒற்றர்களாக வேலை பார்த்தது, சின்னச் சின்ன தீவுகளில் இருந்து தனது அமைச்சரவையில் உள்ள ஹிலாரி கிளின்டன் வரை அனைவரையும் அமெரிக்கா உளவு பார்த்தது என, அமெரிக்காவின் அனைத்து நடவடிக்கைகளும் இப்போது வெளியுலகுக்குத் தெரியவந்துள்ளன.

ஆவணங்கள் கிடைத்தது எப்படி? ஈரான் தலைநகர் பாக்தாத் நகரின் வெளிப்புறப் பகுதியில் இருந்த அமெரிக்கப் படைத்தளத்தில் பிரேட்லி மேன்னிங் (22) என்ற வீரர், அமெரிக்க தூதரகங்களின் இணையதளங்களில் இருந்து மிக ரகசியமாக இந்த விவரங்களை "சிடி' யில் பதிவு செய்தார். இதற்காக ஒரு நாளில் 14 மணிநேரம் செலவிட்டுள்ளார். இப்படி எட்டு மாதங்களுக்கும் மேல் செலவிட்டு இவ்விவரங்களைப் பதிவு செய்துள்ளார். மொத்தம் 1.6 கிகாபைட்ஸ் கொண்ட அனைத்தையும் ஒரு "தம்ப் டிரைவ்' -ல் பதிவு செய்து, "விக்கி லீக்ஸ்' இணையதளத்திற்கு அளித்துள்ளார். ஏழு மாதங்களுக்கு முன் அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள இவர், 2011ல் கோர்ட் விசாரணைக்கு உட்படுத்தப்பட இருக்கிறார்.

இந்தியா பற்றிய ரகசிய ஆவணங்கள்: "விக்கி லீக்ஸ்' வெளியிட்டுள்ள ரகசிய ஆவணங்களில் டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து அனுப்பப்பட்டவற்றில் இருந்து எடுக்கப்பட்ட மூவாயிரத்து 38 ரகசிய ஆவணங்களும் உள்ளன. "விக்கி லீக்ஸ்' இணையதளம் நேற்று முன்தினம் இவற்றை வெளியிட்ட போது, உலகம் முழுவதும் அந்த இணையதளத்தை லட்சக்கணக்கானோர் பார்த்ததால், தொழில்நுட்ப ரீதியில் கோளாறு ஏற்பட்டது. இதனால் இந்தியா பற்றி என்னென்ன விவரங்கள் அவற்றில் கூறப்பட்டுள்ளன என்பது தெரியவரவில்லை. எனினும், பாக்., பிரச்னை குறித்து ஆப்கனில் இந்தாண்டு துவக்கத்தில் நடந்த கூட்டத்தில் இந்தியா விலக்கி வைக்கப்பட வேண்டும் என துருக்கி விரும்பியதால், இந்தியா அழைக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. அதேநேரம், நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து இரண்டாயிரத்து 278 ஆவணங்களும், இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து மூவாயிரத்து 325 ஆவணங்களும், பாக்., தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து இரண்டாயிரத்து 220 ஆவணங்களும் வெளியாகியுள்ளன. இவற்றில் அந்தந்த நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களின் தினசரி நடவடிக்கைகள், கூட்டங்கள் பற்றிய தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

பாக்.,ன் யுரேனியத்தைக் கைப்பற்ற அமெரிக்கா முயற்சி: அணுகுண்டு தயாரிக்க உதவும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை பாகிஸ்தானின் அணு உலையில் இருந்து எப்படியாவது அகற்றி விட வேண்டும் என்று அமெரிக்கா பல ஆண்டுகளாக முயன்றதையும், அம்முயற்சி தோல்வியில் முடிந்ததையும் "விக்கி லீக்ஸ்' ரகசிய ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன. அந்த ஆயுதங்கள் தலிபான்களின் கைகளில் சிக்கிவிடக் கூடும் என அமெரிக்கா பயப்பட்டது. ஆனால், நேற்று பாக்., வெளியிட்ட அறிக்கையில் அணு ஆயுதங்கள் பத்திரமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா கடும் கண்டனம்: "விக்கி லீக்ஸ்' ரகசிய ஆவணங்களை வெளியிட்டதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகை ஊடகச் செயலர் ராபர்ட் கிப்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தனிநபர்கள், உலக நாடுகளின் அரசுகள், எதிர்க்கட்சித் தலைவர்கள் என, அனைவரது உரையாடல்களையும் வெளியிட்டுள்ள "விக்கி லீக்சின்' இச்செயல், சட்டவிரோத மானது. இதனால் அமெரிக்க வெளியுறவு நலன்கள் மட்டுமல்லாது, அமெரிக்க கூட்டணி மற்றும் நட்பு நாடுகளின் நலன்களும் பாதிக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானை தாக்க சவுதி வற்புறுத்தல்

* அணு ஆயுதங்களைத் தயாரிப்பதில் முனைந்துள்ள ஈரான் மீது போர் தொடுத்து, அதை அழிக்க வேண்டும் என சவுதி அரேபிய மன்னர் அப்துல்லா, பஹ்ரைன் மன்னர் ஹமாத், அபுதாபி மன்னர் ஷேக் முகமது ஆகியோர் தொடர்ந்து அமெரிக்காவை வற்புறுத்தியுள்ளனர்.  சவுதி மன்னர், "அந்தப் பாம்பின் தலையை வெட்டி விடுங்கள்' என ஈரான் குறித்து கூறியுள்ளதாக ஆவணங்கள் கூறுகின்றன.

* ஐ.நா.,வில் பணியாற்றும் முக்கிய உயரதிகாரிகளின் டி.என்.ஏ.,சாம்பிள், கைவிரல் ரேகைகள் பற்றிய விவரங்கள், அவர்களின் இ-மெயில்கள், "பாஸ்வேர்டு'களும் அமெரிக்காவால் சேகரிக்கப்பட்டன. அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர்.

* சீனாவில் இயங்கிய "கூகுள்' இணையதளச் சேவைகளில் சில இன்டெர்நெட் திருடர்கள் ஊடுருவி ஆவணங்களைத் திருடியதன் பின்னணியில் சீன அரசு இருப்பதாக அமெரிக்கா சந்தேகப்பட்டது. அமெரிக்க அரசு, தொழிலதிபர்கள் மற்றும் தலாய் லாமா ஆகியோரின் கம்ப்யூட்டர்களில் சீன அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட நெட் திருடர்கள் புகுந்து தகவல்களைத் திருடியுள்ளனர்.

* வடகொரியா அழிக்கப்பட்ட பின் ஒன்றிணைந்த கொரிய தீபகற்பத்தை உருவாக்குவது குறித்து, அமெரிக்காவும் தென்கொரியாவும் ஆலோசித்துள்ளன. இதற்காக சீனாவுக்கு சில வர்த்தக சலுகைகளை தென்கொரியா ஏற்படுத்தித் தர வேண்டும் என, அமெரிக்க தூதர் தென்கொரியாவுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.

* இரட்டைக் கோபுர தகர்ப்புக்கு இரண்டாண்டுகள் முன்பு, பாகிஸ்தானில் இருந்த அமெரிக்க உயரதிகாரிகள், ஒசாமா பின்லாடனுக்கு எதிராகப் போர் தொடுப்பது பற்றி அமெரிக்கா தீவிரப் பிரசாரம் செய்ய வேண்டும் என விரும்பினர்.

* ஆப்கன் துணை அதிபர் கடந்தாண்டு, ஐக்கிய அரபு எமிரேட்சுக்குச் சென்ற போது அவரை 240 கோடி ரூபாயோடு, அந்நாட்டு அதிகாரிகள் பிடித்தனர். அப்போது அமெரிக்கா தலையிட்டு அவரை விடுவித்தது.

* வடகொரியாவில் இருந்து ஈரானுக்கு அனுப்பப்பட்ட ஏவுகணைகள் அடங்கிய கப்பலை உடனடியாகத் தடுத்து நிறுத்தும்படி சீனாவை அமெரிக்கா வற்புறுத்தியது. அந்த ஏவுகணைகள் மூலம் ஈரான், இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகளைத் தாக்கக் கூடும் என அமெரிக்கா நம்பியது.

* ஏமன் அதிபர், அமெரிக்காவின் ஆசியப் படைகளுக்கான தளபதி ஜெனரல் டேவிட் பெட்ரசிடம், ஏமனில் உள்ள அல் - குவைதா பயங்கரவாதிகளைஅழிப்பது குறித்துப் பேசிவிட்டு,"வெடிகுண்டுகள் எங்களுடையவை, அமெரிக்காவினது அல்ல என்று தொடர்ந்து நாங்கள் கூறுவோம்' என்கிறார்.

சர்ச்சை ஜூலியன்: ஊபல்வேறு அரசுகளின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பும் இணையதளம்தான் "விக்கிலீக்ஸ்'. ஊஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவரும், இணையதளங்களில் இருந்து தகவல்களைத் திருடுவதில் கைதேர்ந்தவருமான ஜூலியன் அசேஞ்ச் என்பவர்தான் இதன் நிறுவனர். ஊஆப்கானிஸ்தானில் அமெரிக்க அட்டூழியம் குறித்த 90 ஆயிரம் ஆவணங்கள், ஈராக்கில் அமெரிக்க அட்டூழியம் குறித்த நான்கு லட்சம் ஆவணங்கள் இதுவரை இந்த இணையதளத்தால் வெளியிடப்பட்டுள்ளன. ஊஈராக் தலைநகர் பாக்தாத்தில், அமெரிக்க ஹெலிகாப்டர் ஒன்று பொதுமக்களைச் சுட்டுக் கொன்ற வீடியோவையும் வெளியிட்டுள்ளது. ஊஅமெரிக்க அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட சாரா பாலின் என்பவரின் இ-மெயிலில் இருந்து சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

விளாடிமிர் புடினுக்கு நாயின் பெயர்

* பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஆன்ட்ரூ என்பவரின் தவறான நடத்தை, மற்றும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் பற்றிய விமர்சனமும் இந்த ஆவணங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

* ஐரோப்பிய தலைவர்களில் வலிமையற்றவர், முட்டாள், திறமையற்றவர் என, இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியை ரோமில் உள்ள அமெரிக்க தூதர் குறிப்பிடுகிறார்.

* லிபியா தலைநகர் டிரிபோலியில் உள்ள அமெரிக்க தூதரகம், லிபியா அதிபர் கடாபி, தனது உக்ரேனிய நாட்டு நர்ஸ் பெண் ஒருவருடன் எப்போதும் திரிவதாகவும், மிக உயரமான கட்டடங்களில் தங்குவதற்கு அவர் பயப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

* ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரகம், ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடினை "ஆல்பா டாக்' என்று குறிப்பிடுகிறது. மேலும், இத்தாலி அதிபருக்கும் அவருக்கும் இடையில் உள்ள நெருக்கத்தைப் பற்றியும் விமர்சிக்கிறது.

* வடகொரிய அதிபர் கிம் ஜாங் இல், "வயதான பேர்வழி' என்றும், ஈரான் அதிபர் அகமதி நிஜாத், "ஹிட்லர்' என்றும் விமர்சிக்கப்படுகின்றனர்.

* தென்னாப்ரிக்காவின் வெளியுறவு அமைச்சர், ஜிம்பாப்வே அதிபருடன் ஒப்பிடப்பட்டு "பித்துப்பிடித்த வயதானவர்' என்று கூறப்படுகிறார்.

வரப்போகும் வெற்றிக்கு வெள்ளோட்டம்: முதல்வர் அறிக்கை

சென்னை : "வரும் சட்டசபை தேர்தலுக்கான வெள்ளோட்டமே, தற்போது நடைபெற்று முடிந்துள்ள போக்குவரத்து தொழிலாளர்கள் தேர்தலில் தி.மு.க., பெற்றுள்ள வெற்றி' என, முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: கடந்த 15 நாட்களாக தமிழகம் முழுவதிலும் ஏதோ பொதுத்தேர்தல் நடைபெறுவதைப் போல மிகுந்த பரப்பரப்பு காட்டப்பட்ட பஸ் தொழிலாளர்கள் சங்கத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்கான சங்கத்தைத் தேர்வு செய்வதற்கான தேர்தல், கடந்த 25ம் தேதி நடந்தது. தி.மு.க., தொழிற்சங்கமான தொ.மு.ச., - அ.தி.மு.க., தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்க பேரவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளனம், காங்கிரஸ் கட்சியின் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம், தே.மு.தி.க., - பா.ம.க., - விடுதலை சிறுத்தைகள் ஆதரவு பெற்ற சங்கங்கள் என மொத்தம் 13 தொழிற் சங்கங்கள் இந்தத் தேர்தலில் போட்டியிட்டன.

தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு தே.மு.தி.க., ஆதரவளித்த சங்கம், ஓட்டுகள் சிதறாமல் இருக்கவும், தி.மு.க., ஆதரவான தொ.மு.ச.,வை தோற்கடிக்க வேண்டுமென்பதற்காகவும் அ.தி.மு.க., - தே.மு.தி.க., - ம.தி.மு.க., ஆகிய கட்சிகள் கூட்டணியாக போட்டியிடப் போவதாக அறிவித்தன. அது, 2011ம் ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தலுக்கான முன்னணி என்பதைப் போல அந்தக் கட்சியின் தலைவர்களின் மிகப்பெரிய கட்-அவுட், புகைப்படங்களை எல்லாம் வெளியிட்டு விளம்பரம் செய்தார்கள். ஜெயலலிதாவோ கோடநாட்டில் இருந்தவாறே பஸ் தொழிலாளர்கள் சங்கத் தேர்தலில் அ.தி.மு.க., தலைமையிலான சங்கத்திற்கு ஆதரவாக ஓட்டளிக்க வேண்டுமென அறிக்கைகளை வெளியிட்டார். தமிழகம் முழுவதும் பணியாற்றும் மொத்தம் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 580 ஊழியர்களில், ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 377 பேர். அதாவது 96 சதவீதத்தினர் இந்தத் தேர்தலில் ஓட்டளித்தனர்.

ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதலே தொ.மு.ச., தான் முன்னிலையில் இருந்து, வெற்றி பெற்றது. தே.மு.தி.க., - ம.தி.மு.க., உட்பட எட்டு சங்கங்களின் ஆதரவுடன் போட்டியிட்ட அ.தி.மு.க., தொழிற்சங்கம் இரண்டாவது இடத்திற்குக் கூட வர முடியாமல், மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது. தொ.மு.ச., 73 ஆயிரத்து 450 ஓட்டுகளை அதாவது 57.31 சதவீத ஓட்டுகளைப் பெற்று முதல் இடத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு சங்கமான சி.ஐ.டி.யு., 19 ஆயிரத்து 2 ஓட்டுகளைப் பெற்று 2வது இடத்திலும், அ.தி.மு.க., - தே.மு.தி.க., - ம.தி.மு.க., ஆதரவு பெற்ற சங்கங்கள் 15 ஆயிரத்து 765 ஓட்டுகளைப் பெற்று 3வது இடத்திலும், காங்கிரஸ் ஆதரவு பெற்ற ஐ.என்.டி.சி., சங்கம், 4,824 ஓட்டுகளைப் பெற்று 4வது இடத்திற்கு வந்துள்ளன. பா.ம.க., ஆதரவு தொழிற்சங்கம் 2,857 ஓட்டுகளைப் பெற்று 6வது இடத்திலும், விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு தொழிற்சங்கம் 2,307 ஓட்டுகளைப் பெற்று 7வது இடத்திலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு பெற்ற ஏ.ஐ.டி.யு.சி., சங்கம் 1,912 ஓட்டுகளையும் பெற்றுள்ளன.

போக்குவரத்துத் துறையிலே பணியாற்றும் தொழிலாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் தி.மு.க., ஆட்சியிலே செய்யப்பட்ட நன்மைகளும், அ.தி.மு.க., ஆட்சியிலே செய்யப்பட்ட தீமைகளும் தான் போக்குவரத்து தொழிலாளர் சங்கத் தேர்தலில் நாம் பெற்ற மாபெரும் வெற்றிக்கு முக்கியமான காரணம். போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, தி.மு.க., இதுபோலவே சமுதாயத்திலே உள்ள அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்படக் கூடிய தேவைகளை உணர்ந்து அவைகளை நிறைவேற்றும் பணியிலே தன்னை முன்னிறுத்திக் கொண்டு பணியாற்றுகிறது. எந்த ஒரு முற்போக்குப் பணிக்கும் வெள்ளோட்டம் விடுவது என்பது எப்போதும் பழக்கமான ஒன்று. அந்த வகையில், 2011ல் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான வெள்ளோட்டமே தற்போது நடைபெற்று முடிந்துள்ள போக்குவரத்துக் தொழிலாளர்கள் தேர்தலில் தி.மு.க., பெற்றுள்ள வெற்றி. இந்த வெற்றி மேலும், மேலும் தொடரட்டும். இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

WIkiLEaks

Hai

This is a us 

WikiLeaks exposes US with 2.5 lakh secret docs

http://ibnlive.in.com/news/wikileaks-embarrasses-us-25-lakh-info-exposed/136038-2.html?from=trending

this is forward ibnlive.com thanks byibnlive.com

Wednesday, November 24, 2010

R.GNANAKUMARAN,MCA,MISTE.,: பிப்ரவரி மாதம் தமிழக மேல்சபை தேர்தல்

R.GNANAKUMARAN,MCA,MISTE.,: பிப்ரவரி மாதம் தமிழக மேல்சபை தேர்தல்

பிப்ரவரி மாதம் தமிழக மேல்சபை தேர்தல்

டிசம்பர் 29-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல்: பிப்ரவரி மாதம் தமிழக மேல்சபை தேர்தல்; ஆயத்த பணிகள் மும்முரம் Chennai புதன்கிழமை, நவம்பர் 24, 3:36 PM IST முந்தைய பதிவுகள் 3


இமெயில் பிரதி திரைப்படம் சென்னை, நவ. 24-தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு மேமாதம் நடக்கிறது. அதற்கு முன்னதாக தமிழக மேல்சபை தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.78 உறுப்பினர்களை கொண்ட மேல்சபையில் பட்டதாரி தொகுதிகளில் இருந்து 7 உறுப்பினர்களும், ஆசிரியர்கள் தொகுதியில் இருந்து 7 உறுப்பினர்களும், தேர்ந்தெடுக்கப்பட வேண் டும். இதற்காக பட்டதாரி தொகுதிகள் மற்றும் ஆசிரியர் தொகுதிகள் வரையறை செய்யப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.தில் திருத்தங்கள் செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் டிசம்பர் 29-ந்தேதி வெளியிடப்படுகிறது. இதை தேர்தல் கமிஷன் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.வருகிற பிப்ரவரி மாதத் தில் மேல்சபை தேர்தலை நடத்துவது என்று தலைமை தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.பட்டதாரி மற்றும் ஆசிரியர் தொகுதிகளில் இருந்து 14 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக் கப்படுவதுடன் உள்ளாட்சி மன்ற தொகுதிகளில் இருந்து 26 உறுப்பினர்களும், சட்டசபை தொகுதியில் இருந்து 26 உறுப்பினர்களும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படு வர். 12 உறுப்பினர்களை நியமன முறையில் மேல்சபை உறுப்பினர்களாக கவர்னர் நியமிப்பார்.சட்டசபை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட இருப்பவர்களை எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்து தேர்வு செய்ய வேண்டும். 26 உறுப்பினர்கள் சட்டசபை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்பதால் 9 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தால் மேல்சபைக்கு ஒருவரை தேர்ந்தெடுக்க முடியும்.உள்ளாட்சி தொகுதிகளை பொறுத்த வரை மாவட்ட ஊராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள், ஒன்றிய தலைவர்கள், ஒன்றிய உறுப்பினர்கள், மாநகராட்சி, நகராட்சி உறுப்பினர்கள், பேரூராட்சி மன்றத்தலைவர்கள் வாக்களிக்க தகுதி படைத்தவர்கள்.பிப்ரவரி மாதம் தமிழக மேல்சபை தேர்தலை நடத்து வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து வருகிறது. புதிதாக கட்டப்பட்டுள்ள தலைமைச் செயலக வளாகத்தில் மேலவை கூடம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Sunday, November 21, 2010

Astronauts shed new light on earth


AP
Share  ·   print  ·   T+  
This image provided by NASA and posted to Twitpic by astronaut Douglas Wheelock on October 31, 2010 shows a night view of the Nile River winding up through the Egyptian desert toward the Mediterranean as seen from the International Space Station.
AP This image provided by NASA and posted to Twitpic by astronaut Douglas Wheelock on October 31, 2010 shows a night view of the Nile River winding up through the Egyptian desert toward the Mediterranean as seen from the International Space Station.
Earthlings are seeing their planet in a whole new light, thanks to NASA and its astronauts aboard the Internet-wired space station.
They’re beaming down dazzling images and guess-this-mystery-location photos via Twitter and have even launched a game. Landlubbers the world over are eating it up. From schoolchildren to grown-up business entrepreneurs and artists, the public is captivated and can’t seem to get enough.
It’s clear from the photos why orbiting astronauts rate Earth-gazing as their favourite pastime.
“The Earth never disappoints,” the commander of the International Space Station, Douglas Wheelock, said in a broadcast interview Thursday.
Known to his nearly 68,000 Twitter followers as Astro-Wheels, Wheelock has been posting impressive photos of the Earth and some of his thoughts ever since he moved into the space station in June, five months after it got Internet access.
“It’s been a real thrill to be able to do that,” said Wheelock.
Wheelock’s photos this week included Mount Fuji in Japan as well as the aurora borealis, or northern lights, with a glittering space station solar wing in the foreground.
“Aurora Borealis as I will forever paint it in my dreams. Almost time to return home,” wrote Wheelock, whose mission ends next week.
Jason Major, a Dallas-based graphic designer for a sunglass company, responded with a “beautiful” via Twitter.
“Just to get a perspective like that from 225 miles (360 kilometres) up is really incredible,” Major told The Associated Press on Friday. “As I sit here at my desk and go about my day, to see what they’re doing and their perspective of the world is really amazing.”
Major has a website www.lightsinthedark.com to showcase snapshots of “our cosmic backyard.” He provides links to some of the astronauts’ photos.
“When they’re looking down, we’re looking up at the same time,” said Major. “It’s not just these quote-unquote dusty, old NASA archive photos that you’re looking at. You’re looking at something as it’s happening right now.”
The space station’s newest American resident, Scott Kelly, has gotten into the act and already has nearly 10,000 followers on Twitter from around the world. Just this week, he kicked off a geography trivia game, posting an image of twinkling lights at night and what looks to be the outline of a boot.
“This country’s contributions to science include the barometer, electric battery, nitroglycerin and wireless telegraphy to boot. Name it!” Kelly wrote in his Twitter account Monday.
Most guessed Italy, including MrsQclasstweets.
Mrs. Q is actually Heather Quasny, a third grade math and science teacher at Ralph Parr Elementary School in League City, Texas, just several miles from NASA’s Johnson Space Center. She said her students enjoy trying to identify a place on Earth from an actual photo rather than an atlas or map. It’s a way to excite a new generation of learners, she said.
“It’s really cool to see them so engaged,” she said.
For Quasny, the photos provide an opportunity to discuss space station life with her students.
“One of the things we talk about are, what are they actually doing up there? What is the point? They don’t go up there for a good time,” said Quasny, who happens to be married to a space station flight controller.
Eileen Hughes, who runs an online fabric shop with her daughter in New Jersey, looks forward to getting the astronauts’ pictures. She was fascinated with this week’s “mystery island” shot by Wheelock, which turned out to be Juan de Nova Island near Madagascar. “It’s awesome,” she said.
As for Kelly’s game, which will continue throughout his six-month mission, he announced a winner Friday afternoon. It was the first person to answer correctly, via a tweet.
“Now play,” he urged.

The Hindu : Sci-Tech / Internet : Tracing history with the Net

The Hindu : Sci-Tech / Internet : Tracing history with the Net

The Hindu : Sci-Tech / Internet : Tracing history with the Net

The Hindu : Sci-Tech / Internet : Tracing history with the Net

The Hindu : Sci-Tech / Internet : Tracing history with the Net

The Hindu : Sci-Tech / Internet : Tracing history with the Net

The Hindu : Sci-Tech / Internet : Tracing history with the Net

The Hindu : Sci-Tech / Internet : Tracing history with the Net

MAHA DEEPAM IN THIRUPURAKUNDRAM

திருவண்ணாமலையில் மகா தீபம் : 20 லட்சம் பக்தர்கள் திரண்டனர்

 திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், திருக்கார்த்திகை தீப திருவிழாவையொட்டி,  2, 668 அடி உயரமுள்ள மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. அதை 20 லட்சம் பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.  மகாதீபத்தை நேரில் காண முடியாத பக்தர்கள் ஏக்கத்தை போக்கும் வகையில் தினமலர் இணையதளம் நேரடி ஒளிபரப்பு ( வெப் டெலிகாஸ்ட்) செய்தது. இதன் மூலம் நமது வாசகர்கள் பலர் பார்த்து பயன் அடைந்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 12ம் தேதி துவங்கியது. மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று  மாலை நடந்தது. விழாவையொட்டி இன்று அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விநாயகர், முருகன், அண்ணாமலையார், உண்ணாமலையம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது.
ஏகன் அனேகன் என்பதை விளக்கும் வகையில் கருவறையில் கற்பூர தீபமேற்றி, சிவாச்சாரியார்கள் வேதபாராயணம் ஓத, கற்பூர தீபத்திலிருந்து ஒரு மடக்கில் நெய்த்திரியிட்ட விளக்கு ஏற்றப்பட்டது. பின், பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் கருவறை எதிரில் ஐந்து மடக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு  பரணி தீபம் ஏற்றப்பட்டது. அந்த தீபத்தை மூர்த்தி குருக்கள் கையிலேந்தி முதல் பிரகாரத்தில் வலம் வந்தார். அப்போது, பக்தர்கள், "அண்ணாமலையாருக்கு அரோகரா' என கோஷம் எழுப்பி வழிப்பட்டனர். தொடர்ந்து சிவ-சக்தி மூர்த்தங்களிலிருந்து விரிவானதே எல்லா மூர்த்திகளும் என்பதை காட்டுவதற்காக, அம்மன் கருவறையில் ஐந்து அகல் விளக்குகளும், விநாயகர் சன்னதி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் தீபங்கள் ஏற்றப்பட்டது.

மாலை 6 மணிக்கு அனேகன் ஏகன் என்ற தத்துவத்தை விளக்கும் வகையில்  மகாதீபம் ஏற்றப்பட்டது. பஞ்ச மூர்த்திகளான விநாயகர்,  வள்ளி தெய்வாணை சமேதராக  முருகன்,  அண்ணாமலையார் சமேதராக  உண்ணாமலையம்மன், பராதி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் தங்கக் கொடி மரத்தின் முன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பஞ்சமூர்த்திகள் தீப தரிசன மண்டபத்தில் ஒன்றாக அமர்ந்தனர். மாலை 5.59 மணி அளவில் அர்த்தநாரீஸ்வரர் தங்கக் கொடி மரம் முன் எழுந்தருளி காட்சியளித்தார். அப்போது, காலையில் சுவாமி சன்னதியில் ஏற்றப்பட்ட ஐந்து அகல் விளக்குகளையும் கொண்டு வந்து கொடி மரத்தின் முன் உள்ள அகண்டத்தில் ஒன்று சேர்க்கப்பட்டது. பஞ்ச பூதங்களை குறிக்கும் விதத்தில் 5 தீப்பந்தகள் ஏற்றப்பட்டு, அவற்றை கொண்டு 2 ஆயிரத்து 668 அடி மலை உயரத்தில் உள்ள மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் ஏற்றும் காட்சியை 20 லட்சம் பக்தர்கள்  தரிசனம் செய்தனர். அர்த்தநாரீஸ்வரர் ஆண்டில் ஒரு முறை மஹாதீபத்தன்று மட்டுமே கோவில் கொடி மரத்தின் பலி பீடம் அருகே வந்து அருள்பாலிப்பார். மகா தீபதிருவிழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளாலும், கோவில் முதல் பிரகாரம், தங்க கொடிமரம், தீப தரிசன மண்டபம் ஆகியவை வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மகா தீபத்திருவிழாவையொட்டி பலத்த பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டிஜி.பி., லத்திகாசரண் தலைமையில் 10 ஆயிரத்திற்கும் மேலான போலீசார் மற்றும் சிறப்பு கமாண்டோ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கண்காணிப்பு காமிரா மூலம் அனைத்து நிகழ்ச்சிகளும் கண்காணிக்கப்பட்டன.

Saturday, November 20, 2010

Maha Deepam Festival

சிவில் சர்வீசஸ் தேர்வுமுறையும், புதிய மாறுதலும் - 20-11-2010


நமது அரசியலமைப்பின் நான்கு தூண்களில் ஒன்றான நிர்வாக அமைப்பில் தலையாய பங்கு வகிப்பவர்கள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள்.
அவர்களே நாட்டின் நிர்வாகத்தை முன்னின்று நடத்துகிறார்கள் எனலாம். அவர்கள் நாட்டின் கொள்கை வகுப்பாளர்களாகவும் இருக்கிறார்கள். எனவே அத்தகைய உயர்ந்த அதிகார நிலையை அடைய பல இளைஞர்கள் இயல்பாகவே ஆர்வம்கொண்டு, அதற்கான தேர்வுகளுக்கு தம்மை தயார் செய்கிறார்கள்.

பலரது வாழ்க்கையின் பெரிய லட்சியமாக இருக்கும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி பதவிக்கான தேர்வில் தற்போது ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த மாற்றம் என்ன? மற்றும் அதன் விளைவுகள் எப்படி இருக்கும்? அந்த மாற்றத்தால் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் எந்த வகையில் கஷ்டத்தை எதிகொள்ள போகிறார்கள்? என்பதைப் பற்றிய விவாதங்கள், நிர்வாகப் பணிகளின் ஆர்வலர்கள் மத்தியில் சமீப நாட்களாக மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நாட்டில் பலவகை பணிகளுக்கு நடத்தப்படும் தகுதித் தேர்வுகள் அனைத்திலும், முதன்மையான மற்றும் கடினமான தேர்வு இந்திய ஆட்சிப் பணி தேர்வேயாகும். இந்த தேர்வானது எந்த முறையில் நடத்தப்படுகிறது என்பதைப் பற்றிய விரிவான தகவல் மாணவர்கள் பலருக்கும் தெரிவதில்லை. அதை தெரிந்துகொண்டால்தான் தற்போது செய்யப்பட்டிருக்கும் மாற்றத்தையும் எளிதாக புரிந்துகொண்டு, எதிர்காலத்தில் அதற்கேற்ப தயாராக முடியும்.

பழைய தேர்வு முறை

முதல் நிலைத்தேர்வு (பிரிலிமினரி):

ஐ.ஏ.எஸ் தேர்வின் முதற்கட்டமாக நடத்தப்படும் தேர்வு முதல்நிலை தேர்வு என்று அழைக்கப்படுகிறது. மே அல்லது ஜூன் மாதங்களில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதில் இரண்டு வகையான தேர்வு முறைகள் உள்ளன. அவை,
தாள் 1  - பொது அறிவு பாடங்கள்
தாள் 2  - விருப்பப் பாடம்

பொதுஅறிவு பாடத்தேர்வில் இடம்பெற்ற பாடப்பிரிவுகள்:இந்திய அரசியல் மற்றும் பொருளாதாரம்
இந்திய தேசிய இயக்கத்தை உள்ளடக்கிய இந்திய வரலாறு
இந்திய மற்றும் உலக புவியியல்
தேசிய மற்றும் உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த நடப்பு நிகழ்வுகள்
பொது மற்றும் அன்றாட அறிவியல்
உளவியல் திறன் மற்றும் புள்ளியியல் அடிப்படைகள் முதலானவை.

திட்டமிடல், வரவு-செலவு கணக்குகள், மேம்பாட்டு திட்டங்கள், அரசியல் மற்றும் அரசியலமைப்பின் சமீபத்திய சம்பவங்கள், பஞ்சாயத்து ராஜ், வாக்குப்பதிவு சீர்திருத்தங்கள், இயற்கை வளங்கள், கலாச்சாரம், தேசியத்தின் வளர்ச்சி, குழுக்கள், ஆணையகம் போன்றவை சம்பந்தமான கேள்விகளே ஒவ்வொரு வருடமும் கேட்கப்பட்டன. சமீப காலங்களில், இந்த பொது அறிவு தாளில், நடப்பு நிகழ்வுகள் பற்றிய கேள்விகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன. இதற்கான மதிப்பெண் 150

இரண்டாம் தாள் தேர்வான விருப்பப் பாட பிரிவில், விவசாயம், கால்நடை மருத்துவம், தாவரவியல், வேதியியல், கட்டிடப் பொறியியல், வணிகம், பொருளாதாரம், மின் பொறியியல், புவியியல், மண்ணியல், இந்திய வரலாறு, சட்டம், கணிதம், இயந்திரப் பொறியியல், மருத்துவ அறிவியல், தத்துவம், இயற்பியல், அரசியல் அறிவியல், உளவியல், பொது நிர்வாகம், சமூகவியல், விலங்கியல், புள்ளியியல் போன்ற பாடங்களிலிருந்து ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்வுசெய்து கொள்ளலாம். இதற்கான மதிப்பெண் 300

இந்த இரண்டு தாள்களும் ‘ஆப்ஜெக்டிவ்’ முறையிலான கேள்விகளைக் கொண்டதாக இருந்தது. ஒவ்வொரு தேர்வுக்கும் 2 மணி நேரங்கள். இந்த முதல்நிலைத் தேர்வானது, இரண்டாம் நிலைத் தேர்வான முதன்மை தேர்வுக்கு தகுதியானவர்களை தேர்வுசெய்யும் பொருட்டே நடத்தப்படுகிறது.  இத்தேர்வு முடிவுகள் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் வெளியிடப்படுகின்றன.

முதன்மைத் தேர்வு (மெயின்):முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு அந்த ஆண்டே அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் முதன்மைத்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் 9 தாள்கள் உள்ளன. ஒவ்வொரு தாளுக்கும் 3  மணி நேரங்கள்.

தாள் 1 -  அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட 18 இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து எழுதலாம். அந்த மொழியில் உங்களின் புலமை சோதிக்கப்படும். இதற்கு 300  மதிப்பெண்கள்.
தாள் 2   -  ஆங்கில மொழித்திறன் தேர்வு - 300  மதிப்பெண்கள்
தாள் 3  -  பொதுக் கட்டுரை பகுதி  -  200  மதிப்பெண்கள்
தாள் 4  -  2  பொதுஅறிவு பாடங்கள் - ஒவ்வொன்றுக்கும் 300  மதிப்பெண்கள்
தாள் 5  -  2  விருப்பப் பாடங்கள் (ஒவ்வொன்றிலும் 2  தாள்கள் இருக்கும்)  -  ஒவ்வொன்றுக்கும் 300  மதிப்பெண்கள் - மொத்தம் 1200  மதிப்பெண்கள்

விருப்பப் பாடங்களாக, விவசாயம், கால்நடை மருத்துவம், தாவரவியல், வேதியியல், கட்டிடப் பொறியியல், வணிகம் மற்றும் கணக்கியல், பொருளாதாரம், மின் பொறியியல், புவியியல், மண்ணியல், வரலாறு, சட்டம், மேலாண்மை, கணிதம், இயந்திரப் பொறியியல், மருத்துவ அறிவியல், தத்துவம், இயற்பியல், அரசியல் அறிவியல் மற்றும் சர்வதேச உறவுகள், உளவியல், பொது நிர்வாகம், சமூகவியல், விலங்கியல், புள்ளியியல் போன்ற பாடங்களிலிருந்து ஏதேனும் இரண்டை நீங்கள் தேர்வுசெய்து கொள்ளலாம்.

மேலும் கீழ்கண்ட மொழி இலக்கிய பாடங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வுசெய்து கொள்ளலாம். அவை,

அராபிக், அசாமி, பெங்காலி, சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கனி, மராத்தி, மலையாளம், மணிப்பூரி, நேபாளம், ஒரியா, பாலி, பாரசீகம், பஞ்சாபி, ரஷ்யன், சமஸ்கிருதம், சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது.

விருப்பப் பாடங்களில் கீழ்கண்ட பாடப் பொருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. அவை,
அரசியல் அறிவியல் மற்றும் சர்வதேச உறவுகள் மற்றும் பொது நிர்வாகம்
வணிகவியல் மற்றும் மேலாண்மை
மானுடவியல் வரலாறு மற்றும் சமூகவியல்
கணிதம் மற்றும் புள்ளியியல்
விவசாயம் மற்றும் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை மருத்துவம்
மேலாண்மை மற்றும் பொது நிர்வாகம்
கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை மருத்துவம் மற்றும் மருத்துவ அறிவியல்
பொறியியல் படிப்பில் ஏதேனும் 2  துறைகள்
பட்டியலிலுள்ள மொழி இலக்கிய பாடங்களில் 2 பொருத்தமான பாடங்கள்

இந்த தேர்வை ஆங்கிலம், தமிழ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் ஏதேனும் ஒன்றில் எழுதலாம். இப்பகுதியில் மொத்தம் 2600௦௦ மதிப்பெண்கள். ஆனால் முதல் இரண்டு பகுதிகளான பிராந்திய மொழி தேர்வு மற்றும் ஆங்கில மொழித் தேர்வுகளின் மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்பட மாட்டாது.

மற்ற பகுதிகளின் மதிப்பெண்கள் சேர்க்கப்பட்டு மொத்தம் 2000 மதிப்பெண்கள். முதல் இரண்டு பகுதிகளின் மதிப்பெண்கள் கணக்கில் கிடையாது என்றாலும், அந்த தேர்வுகளில் கட்டாயம் தகுதிபெற வேண்டும். முக்கிய தேர்வானது கட்டுரை வடிவில் எழுதப்பட வேண்டும். இந்த தேர்வில் உங்களின் முழு அறிவுத்திறன் மற்றும் புரிந்துணர்வு திறன் போன்றவை சோதிக்கப்படும்.

நேர்முகத்தேர்வு:

முதன்மை தேர்வில் தேறியவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். எத்தனை இடங்கள் காலியோ, அதைவிட இருமடங்கு நபர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இத்தேர்வுக்கான அழைப்புகள் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் அனுப்பப்படும் மற்றும் ஏப்ரல்-மே மாதங்களில் தேர்வு நடைபெறும். இத்தேர்வுக்கு மொத்தம் 300 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தேர்வாளர்கள் உங்களின் ஆளுமைத்தன்மை, சமூகப் புரிந்துணர்வு திறன், தலைமைப் பண்பு போன்றவற்றை சோதிப்பார்கள். உங்களின் செயல்பாடு தேர்வாளர்களை கவர்ந்துவிட்டால் நீங்கள் இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்வு செய்யப்படுவீர்கள். முக்கியத் தேர்வின் மதிப்பெண்கள் 2000 மற்றும் நேர்முகத்தேர்வின் 300 மதிப்பெண்கள் சேர்க்கப்பட்டு, மொத்த மதிப்பெண்களாக வைக்கப்பட்டு, அதில் நீங்கள் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் வரிசைப்படுத்தப்படுவீர்கள்.

சிவில் சர்வீசஸ் தேர்வில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றம்

மேற்கண்ட முறையில்தான் பல வருடங்களாக தேர்வு நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது முதல்நிலைத் தேர்வின் இரண்டாம் பகுதியில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நெகடிவ் மதிப்பெண்கள் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பிறகு, இந்த மாற்றம்தான் அடுத்த பெரிய மாற்றமாக நிகழ்ந்துள்ளது.

மத்திய பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் இந்த மாற்றம் பற்றிய அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இதன்மூலம் வரும் 2011 முதல் ஐ.ஏ.எஸ் -க்கான முதல்நிலை தேர்வானது புதியமுறையில் நடைபெறும். அதைப்பற்றி தற்போது விரிவாக காண்போம்.

முதல்நிலைத் தேர்வில், பொதுஅறிவு பாடம் மற்றும் விருப்பப்பாடம் ஆகிய இரண்டு தாள்களை எழுதினோம். ஆனால் தற்போது அந்த விருப்பப்பாட முறை நீக்கப்பட்டு திறனாய்வு (ஆப்டிடியூட்) முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இனி இரண்டு பகுதிகளுக்கும் சமமாக 2 மணிநேரங்கள் ஒதுக்கப்பட்டு, ஒவ்வொன்றுக்கும் 200  மதிப்பெண்கள் அளிக்கப்படும்.

திறனாய்வுப் பகுதியின் பாடத்திட்டம்:அறிந்துகொள்ளும் திறன்
இணைந்து பழகும் திறன்கள், தகவல் தொடர்பு திறன்கள்
காரணமறிதல்  மற்றும் பகுத்தாய்வு திறன்கள்
முடிவெடுக்கும் திறன் மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் திறன்
புத்திக்கூர்மைத் திறன்
பொது எண் கணிதம் - எண்கள் மற்றும் அதன் தொடர்புகள், தரவு கருத்துருவாக்கம் (10ம் வகுப்பு நிலை)
ஆங்கில மொழியை அறிந்துகொள்ளும் திறன் (10ம் வகுப்பு நிலை)

மாற்றத்திற்கான காரணங்கள்:

இரண்டாம் நிர்வாக சீர்திருத்த கமிஷன் உள்ளிட்ட பல கமிட்டிகள், மாணவர்களின் பாட அறிவை சோதிப்பதை விட, அவர்களின் திறனாய்வு தன்மையை சோதிப்பதே முக்கியம் என்று கடந்த காலங்களில் தொடர்ந்து பரிந்துரைத்து வந்தன. நல்ல பாட அறிவை பெற்றிருப்பவர், நல்ல அதிகாரியாக இருப்பார் என்று உத்திரவாதம் தரமுடியாது என்பது இவைகளின் வாதம்.

மேலும் விருப்பப் பாடங்கள் ஒவ்வொன்றும் ஒரு தன்மையில் இருப்பதால், அவற்றை மதிப்பிட்டு அதன்மூலம் தேர்வெழுதுபவர்களின் திறன்களை சமமாக மதிப்பிடுவது இயலாத காரியம். இதன் மதிப்பெண்களும் வெளியிடப்படுவதில்லை. மேலும் பலர் தாங்கள் கல்லூரியில் படித்த பாடங்களையே விருப்பப் பாடங்களாக எடுத்து, அதன்மூலம் எளிதில் முதல்நிலையை கடந்து விடுகிறார்கள். எனவேதான் இந்த முரண்பாட்டை தடுக்க இத்தகைய மாற்றம் செய்யப்பட்டது. இதன்மூலம் சிவில் சர்விஸ் முதல்நிலைத் தேர்வு என்பது சிவில் சர்விஸ் திறனாய்வு (ஆப்டிடியுட்) தேர்வு என்று அழைக்கப்படும்.

மாற்றத்தின் நன்மைகள்:தேர்வுமுறை அனைவருக்கும் ஒன்றாக மாறிவிடுவதால், அனைவரும் ஒரேமுறையிலேயே தயாராக வேண்டும். மதிப்பிடும் தன்மையில் வெளிப்படைத்தன்மை இருக்கும். ஒரேமாதிரியான சவால் அனைவருக்கும் நிர்ணயிக்கப்படுகிறது. முதல்நிலைத் தேர்வின் இரண்டு பிரிவுகளுக்குமே சமமான மதிப்பெண்களும், முக்கியத்துவமும் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் எந்த ஒரு தனிப்பட்ட பாடத்தின் பாதிப்புகளோ, அதன் தன்மைகளோ இருக்காது.

பாதகங்கள்:இத்தகைய மாற்றத்தால் முதல்நிலை தேர்வானது,  ஒரு கடினமான பகுதியாக மாறிவிடுகிறது மற்றும் கிராமப்புற சூழலிலிருந்து ஐ.ஏ.எஸ் எழுதவரும் மாணவர்களுக்கு சிரமமாக இருக்கும் போன்ற குரல்கள் எழுகின்றன. இதில் நிறைய உண்மை இருக்கிறது. ஆனால் நாட்டின் தலைஎழுத்தை நிர்ணயிக்கப்போகும் ஒரு பணிக்கான தேர்வில் இத்தகைய மாற்றங்கள் அவசியமானவை. அதேசமயம் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.

தற்போது முதல்நிலைத் தேர்வில் மட்டுமே மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் அடுத்தடுத்த நிலைகளிலும் மாற்றம் வருமா என்பது பின்னாளில் தெரியும். மத்திய அரசு பணிகளுக்கான சிவில் சர்விசஸ் தேர்வுகளில், திறனாய்வு என்ற அம்சத்திற்கு அதிக முக்கியத்துவம் இந்த தேர்வின் மூலம் இப்போதுதான் கொடுக்கப்படுகிறது.

Thursday, November 18, 2010

11 hot skills for 2011

11 hot skills for 2011

ALWAYSகாங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி: கருணாநிதி, பிரணாப் திட்டவட்டம்

மதுரை : ""கூட்டணி தலைவர்கள் முன், நமது ஒற்றுமையை, கூட்டணி பிணைப்பை நிலைநாட்டி உள்ளீர்கள்,'' என மதுரையில் நேற்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி - அனுஷா திருமணத்தில், முதல்வர் கருணாநிதி பேசினார். இதே கருத்தை, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் வலியுறுத்தினார். திருமணத்திற்கு தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகன் தலைமை வகித்தார். துணை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார்.

மணமக்களை வாழ்த்தி திருநாவுக் கரசர் (காங்.,) பேசும்போது, ""கருணாநிதி, கடவுளை நம்புகிறாரோ இல்லையோ, கருணாநிதியை கடவுள் நம்புகிறார்'' என்றார்.

இல.கணேசன் - பா.ஜ: இப்போதெல்லாம் திருமண வாழ்த்து என்றால் தட்டச்சு செய்து அனுப்புகின்றனர். ஆனால் நான், வாழ்த்து அனுப்பும்போது கைப்படத் தான் எழுதி அனுப்புவேன். அதே போல, பேரன் திருமணத்திற்கு, கருணாநிதி கையால் எழுதியதை அழைப் பிதழாக அனுப்பி உள்ளனர். இப்படி செய்வதில் ஒரு ஈடுபாடு கிடைக்கிறது.

மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி: பிரதமர் மன்மோகன் சிங் அனுப்பிய வாழ்த்துச் செய்தியை வாசித்த இவர், பேசும்போது, ""நாட்டின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக, கடந்த 2004ம் ஆண்டு முதல் இக்கூட்டணி செயல்படுகிறது. இது போல, மீதி இருக்கும் மூன்றரை ஆண்டுகளுக்கும் இணைந்து செயல்படும் என் பதில் சந்தேகம் இல்லை,'' என்றார்.

நன்றி தெரிவித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது: நாம் பெற்ற பெருமையை நிலை நிறுத்த, நமது கூட்டணி எப்படி பயன்படுகிறதோ அது போல் மணமக்கள் இடையே விரிவான, வாழ்க்கை கூட்டணி நிலை பெற்று தொடரும் என நம்புகிறேன். அழகிரியை அஞ்சாநெஞ்சன் என்கின்றனர். நான் அவரை, ஒரு கரும்பாக நினைக்கிறேன். கரும்பு, அடியில் இனிக்கும்; நுனியில் துவர்க்கும். அது போல அழகிரியை ஒரு கரும்பாக கருதி, தேவையான அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதை விடுத்து, நுனிக் கரும்பு போல் கடித்தால் சுவைக்காது, நாக்கை கிழிக்கும். மூத்த மகன் மு.க.முத்துவுக்கு, என் தந்தை நினைவாக பெயர் வைத்தேன். பட்டுக்கோட்டை அழகிரி, எங்கள் இயக்க தலைவராக இருந்ததால், அவரது பெயரை அழகிரிக்கு வைத்தேன். ரஷ்யாவில் பொதுவுடைமை கொள்கையை வளர்த்த ஸ்டாலின் இறந்தபோது, பிறந்ததால், "ஸ்டாலின்' என்ற பெயரை அடுத்த மகனுக்கு சூட்டினேன். மற்றவர்களுக்கு தமிழின் மீது இருந்த பற்றால் பெயர் வைத்தேன். பேரப் பிள்ளைகள், கொள்கைக்கு விரோதமாக செயல்பட்டால், லட்சியம் பட்டுப்போனதாக ஆகிவிடும். கூட்டணி தலைவர்கள் இங்கு வந்துள்ளனர். அவர்கள் முன், நமது ஒற்றுமையை கூட்டணி பிணைப்பை நிலைநாட்டும் வகையில், இங்கு வந்துள்ளீர்கள். இவ்வாறு கருணாநிதி பேசினார்.

மத்திய அமைச்சர் சிதம்பரம், இந்திய முஸ்லிம் லீக் தமிழக தலைவர் மைதீன்கான், சபாநாயகர் ஆவுடையப்பன், பொன்னம்பல அடிகளார், காங்., மாநில தலைவர் தங்கபாலு ஆகியோர் வாழ்த்தி பேசினர். டி.ஆர்.பாலு எம்.பி., கனிமொழி எம்.பி., மாநில அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், தமிழரசி, தொழிலதிபர் விஜய் மல்லையா, கலெக்டர் காமராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அட்சதையை வாயில் போட்ட பிரணாப்: திருமணத்திற்கு முன், மணமக்கள் மீது தூவுவதற்காக அட்சதை தரப்பட்டது. அதை எடுத்த பிரணாப் முகர்ஜி, அது எதற்கு தரப்பட்டது என தெரியாமல், வாயில் போட்டுக்கொண்டார். மேடையில் பேசிய பலரும், "ஆறாவது முறையும் கருணாநிதி முதல்வர் ஆவார்' என்றனர். திருமணத்திற்கு பிறகு நிருபர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, ""இந்த திருமணத்தால் மட்டில்லா மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. காங்., - தி.மு.க., கூட்டணி உறுதிபடுத்தப்பட்டுள்ளது. திருமணத்திற்கு வந்த மத்திய, மாநில அமைச்சர்களுக்கு எனது நன்றி,'' என்றார்.

ஆண்களுக்கு என்ன பிரச்னை? இன்று சர்வதேச ஆண்கள் தினம்

ஆண்கள்...20 -30-40: இருபது வயதில் - சிலிர்ப்பிக்கொண்டு நிற்கும் தலைமுடி... அதை அடிக்கடி கையால் "ஸ்டைலாக' கோதிக்கொண்டு, ரோட்டில் போகும் பெண்களை ஒரு "லுக்'... அடிக்கடி கண்ணாடி முன் நின்று, குடம், குடமாக பவுடரை கையில் கொட்டி, முகத்தில் அப்பி, அழகு பார்க்கும் பொறுமை...

முப்பது வயதில் - பெயருக்கு தலையை சீவிக்கொண்டு, போனால் போகிறது என்று "தம்மாத்தூண்டு' பவுடரை முகத்தில் தடவிக்கொண்டு, அரைகுறையாய் கண்ணாடி பார்க்கும் அலுப்பு...

நாற்பது வயதில் - "கீழே விழுந்து விடுவேன்' என மிரட்டும் முடியை, கஷ்டப்பட்டு இழுத்துப் பிடித்து, குவித்து வைத்து சீவி... பவுடர் டப்பாவை பார்த்தாலே கடுப்புடன் தூக்கி வீசி... கண்ணாடி என ஒன்று இருப்பதையே கண்டுகொள்ளாமல், வேலைக்கு செல்லும் அவசரம்...

இவை தான் பெரும்பாலும், ஆண்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்ளும் விதம். திருமணத்தின் போதும் மட்டும் ஆண்கள், தங்களை பெண்கள் கவர வேண்டும் என்பதற்காக அழகுபடுத்திக் கொள்வதில் மெனக்கெடுகின்றனர். திருமணத்திற்கு பின், தங்களுக்குள் சுய கட்டுப்பாடு விதித்துக்கொண்டு, குடும்ப பாரத்தை சுமக்க வருவாயை பெருக்குவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். சிலர் மன உளைச்சலில் சிக்கி மது, போதை, புகைப் பழக்கங்களுக்கு அடிமையாகின்றனர். இதனால் உடல் ஆரோக்கியம் பாதித்து, விரைவில் முகப் பொலிவை இழக்கின்றனர்.

வியர்வை சிந்தி உழைத்து சம்பாதித்த பணத்தை இப்படி வீணாக்குவதை தவிர்த்து, அழகுபடுத்தி, கம்பீரத்தை பொலிவாக்கினால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். செயல், எண்ணங்களில் மாறுதல் ஏற்பட்டு, வெற்றி கிட்டும். ஆண்களில் விதிவிலக்காக சிலர் மட்டும் சிகை அலங்காரத்தை மட்டும் ஆண்கள் பியூட்டி பார்லரில் செய்து கொள்கின்றனர். பெண்களுக்கு தனியாக பியூட்டி பார்லர்கள் அதிகளவில் உள்ளதைப்போல், ஆண்களுக்கு என தனியாக விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே உள்ளன.

மதுரை கே.கே.நகர் "ராயல் டச்' ஆண்கள் பியூட்டி பார்லர் உரிமையாளர் ராஜன் கூறுகிறார்: ஆண்களின் கம்பீரத்திற்கு பொலிவு தேவை. தற்போது கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி, 60 வயதிலும் அழகுபடுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர். மாதம் ஒருமுறை பியூட்டி பார்லருக்கு சென்று அழகுபடுத்தினால் புத்துணர்ச்சி உறுதி. முடிகொட்டுவதை தடுக்க பக்கவிளைவுகள் இல்லாத சித்தா, ஆயுர்வேத டானிக், "பேசியல்' செய்ய பழம், வேர்கள் கலந்த மூலிகைகளை பயன்படுத்துவது நல்லது என்றார்.

என் சோகக் கதையை கேளு தாய்குலமே! பறப்பன, ஊர்வன, நடப்பன என எல்லா உயிர்களுக்கும்(?) ஒவ்வொரு தினம் கொண்டாடப்படும் காலம் இது. அந்த வரிசையில் இன்று ஆண்கள் தினம். எல்லா விஷயத்திலும் ஆண்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்று கருத்து நிலவும் இக்காலக்கட்டத்தில், போலீசில் அதிகம் சிக்குபவர்களும் "பாவப்பட்ட' ஆண்கள்தான். மதுரை நகரின் மூன்று மகளிர் ஸ்டேஷன்களில் மாதம் 150 புகார்கள் ஆண்கள் மீது கொடுக்கப்படுகின்றன. விசாரணைக்குபின் 15 புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. பொதுவாக, பெண்கள் சிந்தும் கண்ணீரை நம்பி, சரியாக விசாரிக்காமல் ஆண்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்கிறது.

"இது உண்மைதானா' என மதுரை வரதட்சணை ஒழிப்பு பிரிவு பெண் உதவி கமிஷனர் ராஜாமணி கூறியதாவது : இருதரப்பையும் அழைத்து, எங்கள் முன் பேச செய்வோம். அப்போது ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் சொல்லும்போது, யார் மீது தவறு என்பது தெளிவாகிவிடும். குடும்ப பிரச்னையை தீர்க்கவே எங்களை தேடி வருவதால், முடிந்தளவிற்கு "கவுன்சிலிங்' செய்து சமரசம் செய்து அனுப்பி வைக்கிறோம். ஆண்மை குறைவு, கள்ளத்தொடர்பு, வரதட்சணை போன்ற பிரச்னைகளில் சமரசம் ஆகமாட்டார்கள். இதை தொடர்ந்தே ஆண்கள் மீது வழக்குப்பதிவு செய்கிறோம். பெரும்பாலும் ஆண்கள் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக தான் புகார்கள் வருகின்றன. வரதட்சணை கேட்டு மிரட்டும் புகார்கள் குறைவு என்றார்.

ஆண்களுக்கு சிறை: பெண்களின் தந்திரம்: ஆண்களுக்கு எதிராக வரதட்சணை தடுப்புச் சட்டத்தின்கீழ்தான் அதிகளவில் பொய்யாக வழக்குகள் புனையப்படுகின்றன. உண்மையில் பாதிக்கப்படுவோர் ஒருபுறமிருக்க, கணவன், மனைவிக்கிடையே உள்ள சிறிய பிரச்னைக்கும் இச்சட்டத்தை சில பெண்கள் பயன்படுத்துகின்றனர். இது குறித்து மதுரை ஐகோர்ட் கிளை வக்கீல் பி.தனசேகரன் கூறியது: சில வீடுகளில் மாமியார், மருமகள் பிரச்னையில் கணவன் மீதும், உறவினர் மீதும் வரதட்சணை வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இது விவாகரத்து வரை சென்றுவிடுகிறது. இதனால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இது ஒரு சமுதாயப் பிரச்னைக்கு வழிஏற்படுத்துகிறது. தாங்கள் நினைத்தால் கணவரை சிறைவைக்க முடியும் என கருதும் வலிமையான பின்னணியுள்ள பெண்கள் இதுபோன்று செயல்படுவதால், ஆண்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் வரதட்சணை வழக்குகளில் உறவினர்களை தேவையின்றி சேர்க்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விபரம் தற்போது அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.

அக்கறை இல்லையா ஆண்களுக்கு? பல்வேறு அம்சங்களுக்காக தேசிய, சர்வதேச தினங்கள் கடைபிடிக்கும் நிலையில் ஆண்களுக்காக தினம் கொண்டாட அவசியம் ஏன்? ஆண்களுக்கு என்ன பிரச்னை? தற்போது ஆண்கள் தங்களது உரிமை பற்றி பேசுவதற்கு தயக்கம் உள்ளது. ஆண்கள் உரிமைக்காக அகில இந்திய ஆண்கள் நல சங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 10 ஆயிரம் பேர் உறுப்பினரில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆயிரத்து 200 பேர்.

இந்த அமைப்பை சேர்ந்த சுரேஷ்ராம் கூறியதாவது: ஆண்டுக்கு 80 லட்சம் ஆண்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக கைதாகின்றனர். இதில் 85 சதவீத கைதுகள் தேவையில்லாதவை என தேசிய போலீஸ் கமிஷன் கருத்து தெரிவிக்கிறது. கைதாகும் நபர்களில் 20 சதவீதம் பேர் மட்டும் தண்டனைக்குள்ளாகின்றனர். பெண்களுக்காக பல்வேறு மருத்துவ திட்டங்களை அறிவிக்கும் அரசுகள், ஆண்கள் விஷயத்தில் அக்கறை செலுத்துவது இல்லை. வரிசெலுத்துவோரில் 82 சதவீதம் பேர் ஆண்கள். அரசு வருமானத்தில் பெரும்பகுதி மதுவிற்பனையால் கிடைக்கிறது. குடிபழக்கத்தால் ஆண்கள் இறப்பு அதிகம். ஆண்கள் குடிப்பழக்கத்தை நிறுத்தினால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். மது விற்பதை அரசு நிறுத்துமா? விலங்குகளுக்கு கூட தனி வாரியம் அமைக்கும் அரசு, ஆண்களுக்கு நல வாரியம் அமைத்து, அவர்களது பிரச்னைகள் குறித்து ஆராய வேண்டும், என்றார்.

அய்யோ...ஆண்கள்! தேசிய ஆண்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பின் கணக்கெடுப்பின் படி,

* கடந்த 12 ஆண்டுகளில் வீட்டில் நடந்த கொடுமைகளால் 1.7 லட்சம் மணமான ஆண்கள் தற்கொலை செய்துள்ளனர்.

* 2001 - 2005க்கு இடையே 13 லட்சம் ஆண்கள், வேலையை இழந்து உள்ளனர்.

* மணமான மூன்று ஆண்டுகளுக்குள் 98 சதவீத ஆண்கள், சித்திரவதைக்கு ஆளாகின்றனர்.

ஆண்கள் தற்கொலை அதிகம் ஏன்? இந்தியாவில் பெண்களைவிட ஆண்களே அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆண்கள் 57 ஆயிரம் பேரும், பெண்கள் 30 ஆயிரம் பேரும் தங்கள் முடிவை தேடிக் கொள்கின்றனர்.


மதுரை மனநல நிபுணர் டாக்டர் சி.ராமசுப்ரமணியம் இதுப்பற்றி கூறியதாவது: ஆண்களே வெளியில் அதிகம் பிரச்னைகளை சந்திக்கின்றனர்.இதனால் மனச்சோர்வுக்கு ஆளாகி, தற்கொலை செய்கின்றனர். சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளும் ஆண்களிடமே அதிகம். எதிர்பார்ப்புகள் நிறைவேறாத, நிறைவேற்ற இயலாதபோது தற்கொலை நிகழும் வாய்ப்பு அதிகம். எத்தனை தான் ஆண், பெண் சமம் என்று கூறி வந்தாலும், அது இன்னமும் வரவில்லை. அது வரும்வரை இந்நிலை இருக்கவே செய்யும். பெண்களைப் போல ஆண்கள் தங்கள் உடல் நலம், ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. மது, போதை பழக்கங்களுக்கு ஆட்படுவதால், அதுவே பிரச்னைகளையும் ஏற்படுத்தி விடுகிறது. தவறான பழக்கங்களுக்கு அடிமையாகிவிடுவதும் தற்கொலைக்கு முக்கிய காரணம். இவ்வாறு கூறினார்.

Wednesday, November 17, 2010

Dinamalar E-malar : Varamalar | Siruvar malar | Computer malar | aanmeega malar | Weekly Magazines | Online tamil magazine

Dinamalar E-malar : Varamalar | Siruvar malar | Computer malar | aanmeega malar | Weekly Magazines | Online tamil magazine

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் பணி வாய்ப்பு

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் பணி வாய்ப்பு  - 17-11-2010

இந்தியாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. முழு நேர நிரந்தரப் பணி அடிப்படையில் இந்த இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
என்னென்ன பிரிவுகள் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முது நிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆங்கிலம், இந்தி, இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், காமர்ஸ், கணிதம், உயிரியல், வரலாறு, புவியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோடெக்னாலஜி ஆகிய பிரிவுகளில் நிரப்பப்பட உள்ளன.

என்ன தகுதி
ஆங்கிலம், இந்தி, இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், காமர்ஸ், கணிதம், உயிரியல், வரலாறு, புவியியல் ஆகிய பிரிவுகளில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முது நிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது ஆர்.இ.சி.,யின் மூலமாக தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முது நிலைப் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்க இத்துறையில் எம்.எஸ்.சி., எம்.சி.ஏ., பி.இ., பி.டெக்., போன்ற ஏதாவது ஒரு படிப்பைக் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களைப் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயோடெக்னாலஜி பிரிவில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முது நிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்க பயோடெக்னாலஜியில் எம்.எஸ்.சி., அல்லது எம்.டெக்., படிப்பு அல்லது எம்.எஸ்.சி.,யில் ஜெனிடிக்ஸ், மைக்ரோபயாலஜி, உயிரியல் அல்லது பயோகெமிஸ்ட்ரி படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்தப் பதவியிலிருந்து உயர்வு பெற பி.எட்., பட்டம் பெறுவது தேவைப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முது நிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.750/ஐ எலக்ட்ரானிக் டிரான்ஸ்பர் முறையில் இந்தியன் வங்கியின் 405046333 என்ற மெஹ்ரோலி இன்ஸ்டிடியூஷனல் ஏரியா, புது டில்லி (கிளை எண் 943) அக்கவுண்ட் எண்ணில் செலுத்த வேண்டும். இதன் பின்னர் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். இதன் பின் கிடைக்கும் விண்ணப்பப்படிவத்தின் பிரிண்ட் அவுட்டுடன் இதர ஆவணங்களையும், ரூ.60/க்கு ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட சுய விலாசமிட்ட போஸ்ட் கார்டையும் இணைத்துப் பின்வரும் முகவரிக்கு 7.12.2010க்குள் கிடைக்குமாறு சாதாரணத் தபாலில் அனுப்ப வேண்டும்.

முக்கிய தேதிகள்: ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் : 30.11.2010
விண்ணப்பப் படிவம் சென்றடைய இறுதி நாள் : 7.12.2010

முகவரி
P.O Box No.4624,
Hauz Khas Post Office,
New Delhi &110016.

Monday, November 15, 2010

ஜெ.,வின் கூட்டணி அஸ்திரம் எடுபடாது: சொல்கிறார் கருணாநிதி

சென்னை : "கூட்டணிக்காக அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா எந்த அஸ்திரத்தை வீசினாலும் எடுபடாது' என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அவரது, "கேள்வி - பதில்' அறிக்கை: மத்திய அரசுக்கு ஆதரவு அளிப்போம் என, ஜெயலலிதா கூறியது மக்கள் நலனைப் பாதுகாக்க உதவாது என, மார்க்சிஸ்ட் கட்சி கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது, எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். ஆனாலும், அம்மையாரின் மனம் நோகக் கூடாது என்பதைப் போல, அந்தத் தீர்மானத்தில் மத்திய அரசையும், அதற்கு ஆதரவாக உள்ள தி.மு.க., அரசையும் பலவிதங்களிலும் தேவையில்லாமல் குறை கூறியிருக்கின்றனர். காங்கிரஸ் கட்சியோடு அணி சேர வேண்டும் என்பதற்காக அம்மையார் எப்படியெல்லாம் தானாக முன்வந்து அறிக்கை விடுகிறார் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளாமல், ஏதோ, அதைக் கண்டிக்கிறோம் என்ற அளவுக்காவது அறிக்கை விட முன்வந்த மார்க்சிஸ்ட்களின் தீர்மானம் ஓரளவு ஆறுதலாகவே உள்ளது.

பார்லிமென்ட்  ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டுமென்ற பொறுப்புணர்வோடு மத்திய அமைச்சர் ராஜாவை பதவி விலகுமாறு செய்த பிறகும், அவரை கைது செய்ய வேண்டும்; வழக்கு தொடர வேண்டும் என்றெல்லாம் ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். ஒரு விரலை எதிரி முன்னால் காட்டும்போது, மற்ற விரல்கள் அவர்களை நோக்கித்தான் இருக்கின்றன என்பதை மறந்துவிடக் கூடாது.அ.தி.மு.க., தலைவி மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் கோர்ட்டால் நிரூபிக்கப்பட்டு தீர்ப்பு கூறப்பட்ட பின்னரும், நான்கு இடங்களில் தேர்தலில் போட்டியிட்டு, அவை செல்லாது என கூறப்பட்ட பின்னரும், கவர்னரை வலியுறுத்தி பதவிப் பிரமாணம் செய்து, அதுவும் கோர்ட்டால் ரத்து செய்யப்பட்ட வரலாற்றை எல்லாம் மக்கள் மறந்திருப்பர் என எண்ணுகிறார் போலும்.

கட்சிக் கட்டுப்பாட்டை ஏற்று பதவி விலகிய ராஜா, தன் மீது எந்தத் தவறும் இல்லை என்றும், எல்லாமே சட்டப்படி தான் நடந்துள்ளது என்பதை உரிய முறையில் நிரூபிப்பேன் என்றும் கூறியிருப்பதையும் மறந்துவிடக் கூடாது.ஸ்பெக்ட்ரம் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் இருப்பதால், வேறு யாரும் இறுதி முடிவெடுத்துவிட முடியாது. மத்திய கணக்குத் தணிக்கைத் தலைமை அதிகாரியின் அறிக்கையை பொது கணக்குக் குழு பரிசீலனை செய்ய உள்ளது. அதன் பிறகு அந்தக் குழு தனது அறிக்கையை பார்லிமென்ட்டில் தாக்கல் செய்து, அதன் மீது விரிவான விவாதம் நடைபெறலாம்.

பொது கணக்குக் குழுவின் தலைவராக, தற்போது பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.,வைச் சேர்ந்த முரளி மனோகர் ஜோஷி தான் இருக்கிறார். பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை வேண்டுமென கோருவதன் மூலம், எதிர்க்கட்சியினருக்கு முரளி மனோகர் ஜோஷி மீது நம்பிக்கை இல்லையா? அல்லது பார்லிமென்ட்டை நடத்தவிடக் கூடாது என்பதற்காகவே கையாள்கிற யுக்தியா? வரும் 2011 தேர்தலில் எந்தத் தொகுதியில் போட்டியிடப் போகிறேன் என, பல்வேறு வகையான யூகங்களை பத்திரிகைகள் வெளியிடுகின்றன. அந்த யூகங்கள் அனைத்தும் உள்நோக்கம் கொண்டவை; கற்பனையானவை; எவ்வித அடிப்படையும் இல்லாதவை.

காங்கிரசுக்கு ஆதரவு தருவதாக ஜெயலலிதா வலிய வந்து அறிவித்ததை ஏற்க முடியாதென்றும், கூட்டணியில் இடமில்லை என்றும், அம்மையார் அறிவித்த 24 மணி நேரத்துக்குள் காங்கிரஸ் கட்சி பதிலளித்து, கதவை மூடிவிட்டது. ஜெயலலிதாவின் தற்போதைய அறிவிப்புக்கு பொருளுமில்லை; பொருத்தமுமில்லை. எனினும், அந்த அம்மையாரை தலையில் வைத்து ஆடிக்கொண்டிருப்போர், அது ராஜதந்திர அறிவிப்பென்றும், பிரம்மாஸ்திரம் என்றும் மோகனாஸ்திரத்தால் மயங்கி, ஏமாற்றப் பார்க்கின்றனர்.

கடந்த 1999ம் ஆண்டு லோக்சபா தேர்தல், 2006 சட்டசபை தேர்தல், 2007ம் ஆண்டு தேசிய அளவில் மூன்றாவது அணி முயற்சி என பல்வேறு சாகசங்களை செய்து பார்த்தார். அப்போதெல்லாம் வெற்றி பெறாத அவரது ராஜதந்திரமும், பிரம்மாஸ்திரமும், வலிய வந்து இப்போது அவர் செய்திருக்கும் அறிவிப்பாலா வெற்றி பெறப்போகின்றன?கடல் கொண்ட பூம்புகார் நகரின் எழில் மிகு தோற்றத்தை, புதுவை பாரதியார் பல்கலைக் கூட ஓவிய விரிவுரையாளர் ராஜராஜன் ஓவியமாகத் தீட்டியுள்ளார். நாளேட்டில் வந்த ஓவியத்தை நானும் கண்டேன். மகிழ்ச்சி மிகக் கொண்டேன். ஓவியர் ராஜராஜன் அழகாகத் தீட்டியுள்ளார்.இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தமிழ்மொழியுடன் ஆங்கிலமும், இந்தியும் கற்றுக்கொள்ளுங்கள்

தமிழ்மொழியுடன் ஆங்கிலமும், இந்தியும் கற்றுக்கொள்ளுங்கள்’ - 15-11-2010
செங்கல்பட்டு: தமிழ் மொழியுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என மாணவ மாணவியருக்கு, தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி அறிவுரை வழங்கினார்.
‘தினமலர்’ சார்பில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ மாணவியருக்கான ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி, நேற்று செங்கல்பட்டில் நடந்தது.

நிகழ்ச்சியில் தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது: ‘தினமலர்’ சார்பில் கடந்த 15 ஆண்டுகளாக மாணவ மாணவியருக்காக ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். ஆண்டுதோறும் மாணவ, மாணவியர் அலை அலையாக நிகழ்ச்சிக்கு வருகின்றனர். இதை பார்க்கும்போது ஒருவித அச்சமும் ஏற்படுகிறது. நிகழ்ச்சிக்கு வரும் மாணவ, மாணவியர் ஒழுங்காக வீடு போய் சேர வேண்டும் என்ற அச்சம்தான்.

மாணவ, மாணவியர் இந்நிகழ்ச்சியை சரியாக பயன்படுத்திக் கொண்டால், வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படும். பிளஸ் 2 கல்விதான், வாழ்க்கையின் திருப்புமுனை. ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் கூறும் குறிப்புகளை கவனமாக குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டிற்கு சென்றதும் ஆசிரியர்கள் கூறிய குறிப்புகளை பாடங்களுடன் ஒப்பிட்டு திரும்ப திரும்ப படிக்க வேண்டும். இவ்வாறு படித்தால் 100க்கு 90 மதிப்பெண்கள் எடுக்கலாம்.

கடந்தாண்டுகளில் தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவியரில், ஆயிரக்கணக்கானோர் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பில் சேர்ந்த செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிராமப்புற மாணவர்கள் கல்வி கற்ற பின் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் பணி செய்ய வாய்ப்பு வரும். அப்போது ஆங்கில அறிவு அவசியம். எனவே ஆங்கிலப் பாடங்களை நன்கு படியுங்கள். தெரியாத வார்த்தைகளை எழுதி வைத்து அகராதியில் பொருள் கண்டுபிடித்து படியுங்கள். அப்போது ஆங்கிலம் சுலபமாக வரும். ஆங்கிலம் ஒன்றும் கடினமான பாடம் அல்ல. அதேபோல் தமிழகம் தவிர பிற மாநிலங்களுக்கு செல்லும்போது இந்தி மொழி அவசியம். பள்ளி விடுமுறை நாட்களில் இந்தி கற்றுக் கொள்ளுங்கள். எனது அனுபவத்தில் இதை கூறுகிறேன்.

நான் சிறு வயதில் இந்தி கற்காததை, தற்போதும் குறைவாகக் கருதுகிறேன். கடினமாக உழைத்தால் வாழ்க்கையில் முன்னேறலாம். பள்ளி நேரம் தவிர வீட்டில் தினமும் குறைந்தது 6 மணி நேரம் படித்தால் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற முடியும். நீங்கள் அனைவரும் அதிக மதிப்பெண்கள் பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

எப்படி இருக்க வேண்டும் ‘ரெஸ்யூம்’? -

எப்படி இருக்க வேண்டும் ‘ரெஸ்யூம்’? - 15-11-2010
தனியார் நிறுவனங்கள் அதிகளவில் பெருகியுள்ள இன்றைய சூழலில், வேலை வாய்ப்பை பெற, பட்டதாரிகள் தங்களின் கல்வித் தகுதி மற்றும் திறன்களை நம்பியே களமிறங்குகின்றனர்.
விரும்பிய பணியை நல்ல ஊதியத்தில் பெற நடக்கும் போராட்டத்தில், ஒருவரின் சுயவிவர விண்ணப்பம் (Resume) முக்கிய இடம் வகிக்கிறது. ஒருவர் தனது தகுதி, திறமை, அனுபவம், சாதனை போன்றவற்றை அந்த சுயவிவர விண்ணப்பத்தின் மூலமாகவே வெளிப்படுத்த வேண்டியுள்ளது. ஒருவரின் சுயவிவர விண்ணப்பம் எந்தளவு ஒரு நிறுவன அதிகாரியை கவர்கிறதோ, அதைவைத்தே அவரின் வேலைவாய்ப்பு நிர்ணயிக்கப்படுகிறது எனலாம்.

சிறப்பான வகையில் சுயவிவர விண்ணப்பம் தயாரிப்பது எப்படி என்பதைப் பற்றி இங்கே காண்போம்.

எளிமை:சுயவிவர விண்ணப்ப வடிவமைப்பில் கடினமான மற்றும் சிக்கலான வழிமுறைகளை பயன்படுத்த வேண்டாம். படிப்பவரை குழப்பும் வகையில் அதிக தகவல்களை சேர்க்க வேண்டாம். உங்களின் சுயவிவர விண்ணப்பம் குறைந்த நேரத்திலேயே படிக்கப்படும் அளவிற்கு விஷயங்கள் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். முக்கிய தகுதிகள் மேல்பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

நேர்த்தி:உங்கள் சுயவிவர விண்ணப்பம் ஆர்வமூட்டுவதாகவும், உங்கள் பணி சாதனைகளை சுருக்கமாக மற்றும் அழகாக சொல்வதாகவும் இருக்க வேண்டும். இதன்மூலம் நிறுவன அதிகாரிகள் உங்கள் திறனை எளிதாக தெரிந்துகொண்டு, உங்கள் சுயவிவர விண்ணப்பத்தை அங்கீகரிப்பார்கள். மேலும் நீங்கள் சாதித்த சில அரிதான மற்றும் வித்தியாசமான விஷயங்களை சுருக்கமாக குறிப்பிட்டால் உங்கள் பணி வாய்ப்பை அது மிகவும் அதிகரிக்கும்.

பணி இடைவெளி:நீங்கள் ஏதேனும் ஒரு காலகட்டத்தில் பணியில் இல்லாமல் இருந்திருந்தால், அதை குறிப்பிட தயங்க வேண்டாம். ஏனெனில் இன்றைய பொருளாதார சூழலில் அந்த விஷயத்தை ஒரு நிறுவனம் பெரிதாக எடுத்துக்கொள்ளாது. ஆனால் அந்த காலகட்டத்தில் நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் மற்றும் வேறு ஏதாவது பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு, உங்கள் சுய திறன்களை வளர்ப்பதற்கு மேற்கொண்ட பயிற்சிகள் ஆகியவற்றை குறிப்பிடவும்.

வகைப்படுத்தல்:இன்றைய இன்டர்நெட் யுகத்தில் உங்கள் சுயவிவர விண்ணப்பத்தை இணையத்தில் செலுத்தி, அதன்மூலம் ஏராளமான நிறுவனங்களை எளிதில் அணுகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேசமயம் இந்தமுறையில் சுயவிவர விண்ணப்பம் ஒரே வடிவமைப்பில் இருப்பதை தவிர்க்க வேண்டும். நாம் எந்த மாதிரியான பணிக்காக விண்ணப்பிக்கிறோமோ, அதற்கேற்ற விதத்தில் சுயவிவர விண்ணப்பம் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

விதியை தெரிந்திருத்தல்:நீங்கள் சர்வதேச அளவிலான நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், ஒவ்வொரு நாட்டிலும் சுயவிவர விண்ணப்ப சமர்ப்பிப்பில் எந்தமாதிரியான நடைமுறை பின்பற்றப்படுகிறது என்பதை முன்பே தெரிந்துகொள்வது நல்லது. ஏனெனில் சில நாடுகளில் சுயவிவர விண்ணப்பத்துடன் புகைப்படம் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்படும். ஆனால் சில நாடுகளில் அந்த நடைமுறை ஏற்றுக்கொள்ளப்படாது. எனவே போட்டி நிறைந்த இன்றைய வர்த்தக உலகில் உங்கள் சுயவிவர விண்ணப்பம், தேவையான இடத்தில், தேவைப்படும் விதத்தில் இருப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

மேற்கூறிய விதிமுறைகளை பின்பற்றினால் வேலைக்கான போட்டியில் நீங்கள் முந்தி செல்வதை உறுதி செய்யலாம்.

‘பி.எட்., பட்டதாரிகளுக்கு சிறந்த எதிர்காலம்’ - 15-11-2010

‘பி.எட்., பட்டதாரிகளுக்கு சிறந்த எதிர்காலம்’ - 15-11-2010

கோவை: “ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது,” என்று தமிழ்நாடு கல்வியியல் பல்கலை துணைவேந்தர் பத்மநாபன் கூறினார்.

கோவை பி.பி.ஜி. கல்வியியல் கல்லூரியின் நான்காவது பட்டமளிப்பு விழாவில், துணைவேந்தர் பத்மநாபன் பேசியதாவது: கல்வி என்பது எதிர்காலத்துக்கான முதலீடு. நாம் பெறும் உயர்கல்வி, வறுமையையும், வேலை வாய்ப்பின்மையையும் அகற்ற உதவ வேண்டும். ஆசிரியரை மையமாகக் கொண்ட கல்வி முறையில் இருந்து, மாணவர்களை மையமாகக் கொண்ட கல்வி முறைக்கு மாற வேண்டும். நடைபெறும் நிகழ்வுகள் குறித்து ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருந்தால், நம்பிக்கையுடன் வகுப்பறையை சந்திக்கலாம். வகுப்பறையில் சுதந்திர காற்று வீச வேண்டும். நல்ல நடத்தையுடன் சிறந்த ஆசிரியர் என்ற பெயர் பெற வேண்டும்.

நீங்கள் அளிக்கும் பயிற்சி, மாணவர்களிடம் ஏற்கனவே புதைந்துள்ள தெய்வீக சக்தியை வெளியே கொண்டு வர உதவ வேண்டும். முன்னர் மாணவர்களின் கண்ணை மட்டும் விட்டு வைத்து, அடிக்குமாறு பெற்றோர் கூறினர். இன்று பெற்றோரின் நிலை வேறு. ஆகவே கால மாற்றத்துக்கேற்ப ஆசிரியர்களும் தங்களை மாற்றிக் கொள்வதே புத்திசாலித்தனமானது. ஆசிரியர் பயிற்சி பெற்ற அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் உள்ளது. உங்களிடம் கற்கும் மாணவர் மனதில் நேர்மறையான எண்ணங்களை உருவாக்கி அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் அமைய உதவுங்கள். மத்திய ஆசிரியர் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கை மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின்படி, இந்தியாவுக்கு பி.எட்., பயிற்சி பெற்ற ஒரு கோடி ஆசிரியர்கள் உடனடியாக தேவைப்படுகின்றனர்.

இன்று, பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் 50 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். பல மாநிலங்களில் பயிற்சி பெறாத ஆசிரியர்கள்தான் பணியில் உள்ளனர். தமிழகத்தில் வாய்ப்புகள் கதவை தட்டும் அளவுக்கு உயர்கல்வித் துறை வளர்ச்சி அடைந்துள்ளது. ஆசியாவில் முதல் முறையாக தமிழகத்தில்தான் ஆசிரியர் பயிற்சி மையங்களுக்கென தனி பல்கலை உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பத்மநாபன் பேசினார்.

Sunday, November 14, 2010

நேர்முகத் தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி

நேர்முகத் தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி? - 13-11-2010
சிறப்பாக பணிபுரிவதற்கான திறன் இருந்தும், நேர்முகத்தேர்வு (இண்டர்வியூ) என்றாலே பல இளைஞர்களுக்கு உதறல் எடுக்க ஆரம்பித்துவிடுகிறது.
என்னதான் தகுதி, திறமை மற்றும் அனுபவம் போன்றவை இருந்தாலும், நேர்காணல்களில் பங்கு கொள்ளும்போது தேவையற்ற பயம், பதற்றம், முன்கூட்டியே திட்டமிடாமை போன்ற சிக்கல்களில் சிக்கி பல இளைஞர்கள் தவிக்கிறார்கள்.

இதனால் நேர்முகத் தேர்வாளரின் மனதில், நம்மை பற்றிய ஒரு எதிர்மறை எண்ணம் ஏற்பட்டு, நாம் நமது வாய்ப்பை இழந்து விடுகிறோம். நம்முடைய பெரிய எதிர்பார்ப்பானது, 10-20  நிமிடங்கள் வரை மட்டுமே நீடிக்கும் ஒரு சிறிய நிகழ்வில் நொறுங்கிப்போவது நம்மை நம்பிக்கை இழக்க செய்கிறது.

ஒரு நேர்முகத் தேர்வில் எவ்வாறு பங்குபெற்று அதை வெற்றிகரமானதாக ஆக்கி, நமக்கான பணியை பெறுவது என்பதைப் பற்றிய சில ஆலோசனைகள் இங்கே...

அடிப்படையானவை:
நேர்முகத் தேர்வுக்கு செல்லும்போது அலுவல் ரீதியான உடை அணியவும். குறித்த நேரத்தில் சென்று விடவும். நேர்முகத்தேர்வு அதிகாரி உங்களிடம் நல்ல நட்பு முறையில் பேசினாலும்கூட, அதனால் நீங்கள் அதிக உரிமை எடுத்துக்கொள்ள கூடாது. அவர்களிடம் தனிப்பட்ட கேள்வியோ அல்லது அவர்களை வாழ்த்தியோ எதுவும் பேச வேண்டாம். உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களையும் கவனத்துடன் அதேசமயம் அளவுடன் கூறவும்.

உங்கள் மொபைல் போனை சுவிட்ச் - ஆப் செய்து வைத்து விடவும். உங்கள் முழு கவனத்தையும் நேர்முகத்தேர்வில் செலுத்துவதோடு, அச்சமயத்தில் இங்கும் - அங்கும் பார்ப்பதை தவிர்க்கவும். மேலும் உங்கள் நேர்முகத்தேர்வு அதிகாரி, உங்களிடம் ஏதேனும் பேசிக்கொண்டிருக்கும்போதே நீங்கள் குறுக்கே பேசுவதை தவிர்க்கவும்.

நேர்முகத்தேர்வுக்கு செல்லும்போது உங்களின் சுயவிவர விண்ணப்பத்துடன், உங்களின் சான்றிதழ்கள், நோட்பேட் மற்றும் பேனா போன்றவைகளையும் எடுத்து செல்லவும். உங்கள் சுயவிவர விண்ணப்பத்தில் ஏதேனும் எழுத்துப் பிழை அல்லது இலக்கண பிழை உள்ளதா என்பதை சரிபார்ப்பதோடு, உங்களின் சுயவிவர விண்ணப்பத்தில் என்னென்ன விவரங்கள் உள்ளன என்பது முதலில் உங்களுக்கு தெளிவாக தெரிந்திருக்க வேண்டும்.

தயாராக இருத்தல்:

நீங்கள் விண்ணப்பிக்கும் வேலை, நிறுவனம் போன்றவை பற்றி அதிக விவரங்களை தெரிந்து வைத்திருக்கவும். மேலும், நீங்கள் ஏன் உங்களின் முந்தைய பணியிலிருந்து விலகினீர்கள்? ஏன் இந்த பணிக்கு விண்ணப்பித்தீர்கள்? இந்த வேலையில் உங்களின் எதிர்பார்ப்பு என்ன? போன்ற கேள்விகளுக்கு எவ்வாறு பதில் சொல்வது என்று முன்பே தயாராகி கொள்ளவும். ஏனெனில் இத்தகைய கேள்விகளுக்கு நீங்கள் அளிக்கும் பதில்களின் மூலமாகத்தான் உங்களின் ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வை நேர்முகத் தேர்வாளர்கள் மதிப்பிடுவார்கள்.

நேர்முகத் தேர்வுக்கு முன்பாக உங்களின் சுயவிவர விண்ணப்பத்தை மீண்டும் ஒருமுறை நன்கு படிக்கவும். இதன்மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கு, உங்களின் சுயவிவர விண்ணப்பத்தை ஒட்டிய பொருத்தமான பதில்கள் அளிப்பதை உறுதிசெய்ய முடிவதுடன், நேர்முகத்தேர்வு குழுவையும் திருப்தி செய்ய முடியும்.

விழிப்புணர்வு:
உங்களின் நேர்முகத்தேர்வு செயல்பாட்டில் விழிப்புடன் இருக்கவும். ஏனெனில் உங்களின் முந்தைய பணி மற்றும் அந்த நிறுவனத்துடனான உங்களின் உறவு போன்றவை பற்றி கேள்விகள் கேட்கப்படுகையில், எச்சரிக்கையுடனும், தந்திரமாகவும் பதிலளிக்க வேண்டும். ஒருவேளை உங்களின் பழைய அனுபவம் கசப்பானதாக இருந்தாலும், அவற்றைப் பற்றி சாதகமான பதிலையே கூறவும். பேசும்போது நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதத்தில் பேசவும். பேசியவற்றையே திரும்ப திரும்ப பேசினால் நீங்கள் பதட்டத்தில் இருக்கிறீர்கள் என்று காட்டிக் கொடுத்துவிடும். மேலும் கால்களை ஆட்டிக்கொண்டே இருத்தல் மற்றும் கைகளை இறுக்கமாக பற்றியிருத்தல் போன்ற உங்களின் செயல்கள் நீங்கள் பயத்தில் இருக்கிறீர்கள் என்பதை காட்டிக்கொடுத்து விடும்.

கேள்விகள்:
நேர்முகத்தேர்வாளரிடம், ஆரம்பத்திலேயே விடுமுறை, பிற வசதிகள் போன்றவற்றை பற்றி கேட்ககூடாது. முதலில் நேர்முகத்தேர்வு முழுவதும் முடிய வேண்டும். நீங்கள் தேர்வு செய்யப்பட்டு  விட்டீர்கள் என்று தெரிந்த பின்னர், நிறுவனத்தின் சலுகைகள் மற்றும் வசதிகளைப் பற்றி கேட்கவும். மேலும் இவற்றைவிட, நேர்முகத்தேர்வாளர் சம்பள விவரத்தை பற்றிபேச அவருக்கு முதலில் வாய்ப்பு தர வேண்டும். நேர்முகத்தேர்வின்போது முதல் சில நிமிடங்களில் நீங்கள் வெளிப்படுத்தும் உங்களின் செயல்பாடுதான், உங்களுக்கான வாய்ப்பை தீர்மானிக்கிறது. எனவே பதற்றப்படாமல் நன்கு யோசித்து செயல்படவும்.

நேர்முகத்தேர்வு என்பது ஒரு போர்க்களம் போன்றது அல்ல. எனவே அதை நினைத்து பெரிதாக பயப்பட தேவையில்லை. அதேசமயம் வாழ்க்கை போராட்டத்தில் அது முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே அசட்டையாக இல்லாமல், சற்று விழிப்புடணும் எச்சரிக்கையுடணும் இருந்தாலே வெற்றியை நிச்சயமாக்கி கொள்ளலாம்.

Tuesday, November 9, 2010

முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகம் - 08-11-2010

முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகம் - 08-11-2010

இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் தங்களது கிளைகளை துவங்கி கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, ஏற்கனவே வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சில இந்தியாவில் கிளைகளை துவங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த வரிசையில் தற்போது ஸ்காட்லாந்து நாட்டின் "ஸ்டார்த்சிலைடு பல்கலைக்கழகம்&' டில்லியில் "ஸ்டார்த் சிலைடு பிசினஸ் ஸ்கூல்&' ஒன்றை விரைவில் துவங்க உள்ளது. இது குறித்து இதன் தலைவர் சுசன் ஹார்ட் கூறியதாவது: "இங்கு இளநிலை, முதுகலை, எம்.பி.ஏ., உள்ளிட்ட படிப்புகள் தொடங்கப்படுகின்றன. வரும் 2011ம் ஆண்டு செப்., மாதத்திலிருந்து இப்பல்கலை கிளை செயல்பட ஆரம்பிக்கும். துவக்கத்தில் 1200 மாணவர்கள் சேர்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான தேர்வு அடுத்த மாதம் துவங்க உள்ளது. இதே மாதிரியான "பிசினஸ் ஸ்கூல்&' விரைவில் மும்பை மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் தொடங்கவும் இப்பல்கலை திட்டமிட்டு வருகிறது&' என்றார். இப்பல்கலைக்கழகம் செயல்படத் துவங்கும்போது வெளிநாட்டு பல்கலைக்கழக கிளை ஒன்று இந்தியாவில் செயல்பட துவங்கிய முதல் பல்கலைக்கழகம் என்ற பெருமையை பெற உள்ளது.

Wednesday, November 3, 2010

ADVANCED HAPPY DIWALI

HAPPY DIWALI I WISH YOU EVERY SUCCESS MY FRIEND ALWAYS 

HERE AND THERE MUST ENJOY YOUR SELF 

THANKS BY R.GNANAKUMARAN  A GREAT LECTURER TEAM AND TECHNICAL TEAM

http://techrgk.hpage.com http://gkmtech.hpage.com http://rgkumaran.livejournal.com