Wednesday, April 27, 2011

TIRUPATHI PERUMAL IMAGE


TESTING

https://mail.google.com/mail/h/1qg6s3cgr2lx5/?view=att&th=12eb284f0c77457a&attid=0.6&disp=emb&realattid=661ae33e3f298434_0.9&zw

Monday, April 25, 2011

சாய்பாபாவின் சரித்திரம்

பொது செய்தி »இந்தியா
 சாய்பாபாவின் சரித்திரம்  
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2011,21:52 IST
மாற்றம் செய்த நாள் : ஏப்ரல் 24,2011,23:04 IST
பகவான் சத்ய சாய்பாபா, 1926ம் ஆண்டு நவ.23ம் தேதி ஆந்திராவின் புட்டபர்த்தியில் பிறந்தார். இவரது இயற்பெயர் சத்யநாராயண ராஜூ. இவரது பெற்றோர் ராஜூ ரத்னகரம், ஈஸ்வரம்மா ஆகியோர். ஒரு நாள் பாபாவின் தாயார் ஈஸ்வரம்மா கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருக்கும் போது, வானில் இருந்து வந்த சக்தி வாய்ந்த ஒளி அவரது வயிற்றில் புகுந்ததாகவும், அதன் பின் கருவுற்றதாகவும் கூறப்படுகிறது. இது ஒரு அதிசய நிகழ்வு என்று ஈஸ்வரம்மா தெரிவித்தார்.

குழந்தை பருவத்திலேயே நாடகம், இசை, நடனம், கதை எழுதுதல், பாடல் இசை அமைப்பு என பல துறைகளில் சாய்பாபா திறமையாக விளங்கினார். 1940 மார்ச் 8ம் தேதி தனது சகோதரருடன் இருக்கும் போது, தேள் ஒன்று சாய்பாபாவை கொட்டியது. இதையடுத்து சில மணி நேரங்கள் தன்நிலை மறந்தவராக இருந்தார். தொடர்ந்து சிரிப்பது, அழுவது, மவுனமாக இருப்பது போன்று இருந்தார். டாக்டர்கள் அவர் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் பட்டுள்ளார் என தெரிவித்தனர். மதகுருக்கள் உள்ளிட்டவர்கள் புட்டபர்த்தியில் இருந்த சாய்பா பாவின் உடலை பரிசோதித்தனர். 1940, மே 23ல் வீட்டில் இருந்த வர்களை அழைத்த சாய்பாபா, கைகளில் இருந்து கற்கண்டு வரவழைத்து காண்பித்தார். அவரது தந்தை, ""என்ன இது மாய மந்திரம்'' என கோபத்துடன் கேட்டார். அதற்கு சாய்பாபா, ""நான் யார் தெரியுமா? நான் தான் சாய்பாபா. ஷீரடி சாய்பாபாவின் மறுஜென்மம் நானே'' என்றும் கூறினார். (ஷீரடி சாய்பாபா 19வது நூற்றாண்டின் இறுதி முதல் 20ம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை மகாராஷ்டிராவில் வாழ்ந்தவர்.

இவர் சாய்பாபா பிறப்பதற்கு 8 ஆண்டுகளுக்கு முன் இறந்தார்). சாய்பாபாவை தேடி பக்தர்கள் வர ஆரம்பித்தனர். சாய்பாபாவும் சென்னை உள்ளிட்ட தென் இந்தி யாவின் பல்வேறு இடங்களுக்குச் சென்று பக்தர்களுக்கு அருள் வழங்கினார். 1944ல் பக்தர்கள் அவருக்கு கோவில் கட்டினர். இந்த இடம் 100 ஏக்கர் பரப் பளவில் அமைந்துள்ளது. தற்போது பிரசாந்தி நிலையமாக விளங்குகிறது. இந்த ஆசிரமம் 1948ல் கட்டப் பட்டு 1950ல் நிறை வடைந்தது. 1954ல் சாய்பாபா, அங்கு சிறு மருத்து வமனையை நிறுவி, அப்பகுதி மக்களுக்கு இலவச மருத்துவ வசதி அளித்தார். 1957ல் வட இந்தியாவின் பல பகுதிகளின் கோவில்களுக்கு சாய்பாபா பயணம் செய்து அருளாசி வழங்கினார். வெளிநாடுகளில் உள்ளவர்களும் இவரது சக்தியை நம்பி பக்தர் களாக தொடர்ந்தனர்.

சாய்பாபா அதிசயம்: பக்தர்களால் "அவதாரம், கடவுள்' என அழைக்கப்பட்டவர் சாய்பாபா. லிங்கம், விபூதி, மோதிரம், வாட்ச் போன்றவற்றை வரவழைத்து மக்களை ஆச்சர்ய படுத்தினார். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் மூலம் சமூக தொண்டு செய்தார். இவரது கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு கல்வியையும், ஒழுக்கத்தையும் போதிக்கிறது. இந்தியாவில் ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை, தனது அருளுரையால் ஈர்த்தார். 137 நாடுகளில் சாய்பாபாவுக்கு பக்தர்கள் உள்ளனர்.

இந்தியாவில் முக்கிய அரசியல் தலைவர்களான வாஜ்பாய், சங்கர்தயாள் சர்மா, நரசிம்மராவ், வெங்கடராமன், பி.டி. ஜாட்டி, எஸ்.பிரித்திவிராஜ் சவான், சந்திரசேகர், அர்ஜுன் சிங், ராஜேஷ்பைலட், சங்கரானந்த், பங்காரப்பா, வீரப்ப மொய்லி, சந்திரபாபு நாயுடு ஆகியோரும் இவரது பக்தர்கள். ரவிசங்கர், எம்.எஸ். சுப்புலட்சுமி, நானி பல்கி வாலா, டி.என். சேஷன், சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட பல்துறை அறிஞர்களும் இவரது பக்தர்களாக உள்ளனர்.1993 ஜூன் 6ல் சாய்பா பாவை கொல்ல நடந்த ¬முயற்சி சர்வதேச செய்தியானது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து சில சர்ச்சைகளும் எழுந்தன. ஆனால் சாய்பாபாவின் பொதுத் தொண்டுகள் அவரது மதிப்பை மக்கள் மனதில் மேலும் உயர்த்தின. ஒவ்வொரு நாளும் 30 நிமிடம் இவர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இவரது தரிசனத்தை பெறுகின்றனர்.

சமூகத் தொண்டு:ஆந்திராவில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் நிலவிய கடுமையான குடிநீர் பஞ்சம், பாபாவின் ரூ.200 கோடி திட்டத்தால் முடிவுக்கு வந்தது. அம்மாவட்டத்திலுள்ள 50 லட்சம் மக்கள் இன்றும் பயனடை கின்றனர். இத்திட்டம் 9 மாதங்களில் முடிக்கப்பட்டது. 2 ஆயிரத்து 500 கி.மீ. தூர குழாய்கள், 268 தண்ணீர் தொட்டிகள், 124 நீர்த்தேக்கங்கள், 200 நீரேற்று நிலையங்கள் ஆகியன 700 கிராமங் களுக்கும் 11 நகரங்களுக்கும் பயனளிக்கின்றன. இத்திட்டத்துக்கு ரூ.30 கோடி நிதியளிக்க மத்திய அரசு முன்வந்தபோதும் பாபா மறுத்துவிட்டார். அவரது 70வது பிறந்த நாளில் இத்திட்டம் செயலுக்கு வந்தது. சத்ய சாய் அமைப்பு ஏராளமான இலவச கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங் களின் மூலம் சேவை செய்கிறது. உலகளவில் 114 நாடுகளில் 1,200 சத்ய சாய்பாபா மையங்கள் இயங்குகின்றன. தமிழகத்தின் தலைநகரான சென்னையின் குடிநீர் தாகத்தை போக்கும் வகையில் கிருஷ்ணா நதி நீரை தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் கொண்டுவர நிதியுதவி வழங்கினார்."அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய், எல்லோருக்கும் உதவு,எவரையும் வெறுக்காதே' இதுவே பகவான் சத்யபாபாவின் தாரக மந்திரம்.

சாய்பாபாவின் சேவைகள் : * சத்ய சாய் தனது பக்தர்களுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட சமூக சேவை நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள 136 நாடுகளில் இவை இயங்கி வருகின்றன.
* சமூகம், கல்வி, மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட பல துறைகளில் இவரது பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
* பெங்களூருவில் உள்ள பாபாவின் ஆசிரமத்திற்கு அருகில் 2 கிலோ மீட்டர் தொலைவில் முதியோருக்காக "விருத்தாஸ்ரமம்' என்ற ஒன்று கட்டப்பட்டுள்ளது. இங்கு முதியவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
* பாபா குறித்த நூல்கள், "சிடி'க்கள் என அனைத்தும் ஆஸ்ரம வளாகத்திலேயே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
* பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக சத்யசாய் கோகுல ஆசிரமத்தில் 240 அறைகள் உள்ளன. இங்கு கட்டணமாக நாள் ஒன்றுக்கு ரூபாய் 150 மட்டும் வசூலிக்கப்படுகிறது.
* ஆந்திராவில் உள்ள அனந்தபூர், வடக்கு கோதாவரி மற்றும் கிழக்கு கோதாவரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒரே ஆண்டில் அம்மாவட்டங்களில் உள்ள பகுதிகளுக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்தார்.
* உலக அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி பாபா அவர்கள் புட்டபர்த்தி மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தார்.
* ஒயிட்பீல்டு ஆசிரமம் அருகே சத்யசாய் மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு சிகிச்øகாக வரும் நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* இதே போன்று, சத்யசாய் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையின் உதவியுடன் இதயம் மற்றும் நரம்பு தொடர்பான கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மொத்தம் 52 ஏக்கரில் இம்மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 333 படுக்கைகள், 12 அறுவை சிகிச்சை கூடங்கள், ரத்தவங்கிகள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.
* சென்னை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த தெலுங்கு கங்கை திட்டத்தை சரி செய்து தீர்வு வழங்கியது சாய் பாபாவின் சாயி மத்திய அறக்கட்டளை.
* நாட்டில் இயற்கை பேரழிவு ஏற்படும் சமயங்களில் அப்பகுதியில் உள்ள சாயி அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் உதவிகள் செய்கின்றனர்.

""எனக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விடு'' : 1976ல் நடந்த நிகழ்ச்சி இது. சாய்பாபா பிருந்தாவனத்தில்(சாய்பாபாவின் இருப்பிடம்) இருந்தார். இன்ஜினியர்கள் சில கட்டடத் திட்டங்களை வைத்துக் கொண்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தனர். சாய்பாபா அங்கிருந்த மாணவர்களைப் பார்த்து, ""டியர் பா#ஸ், உங்களுக்காக ஒரு ஹாஸ்டலை கட்ட ஏற்பாடு செய்திருக்கிறேன். அது வசதியான அறைகள் கொண்டதாக இருக்கும்,'' என்றார்.

ஒரு மாணவர் பாபாவை நோக்கி, ""சுவாமி! நாங்கள் இங்கு சுகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம். புதிய ஹாஸ்டல் எங்களுக்குத் தேவையில்லை. இந்த பிருந்தாவனமே எங்களது இல்லம்'' என்றார். ""அன்புள்ள குழந்தைகளே! பிருந்தாவன் உங்களது என்று சொல்வது சரியே. அதே சமயத்தில் சிறுவர்களாகிய நீங்கள் இடம் போதாமல் முடங்கிக் கிடப்பதைப் பார்த்து என் மனம் பொறுக்கவில்லை. உங்களுக்கு வசதி செய்து தருவது தான் என் கடமை. வரும் வியாழன் அன்று புதிய ஹாஸ்டலுக்கான அடித்தளம் போடப்படும்'' என்று சொல்லிவிட்டு தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களுக்கு ஆசி அளிக்க கிளம்பினார்.
அடுத்த இரண்டுநாட்களுக்குள் அடித்தளமிடும் பூமிபூஜை நடக்க இருந்தது. இன்ஜினியர்கள் சுறுசுறுப்பாக வேலை செய்தார்கள். மாணவர்களுக்கு இச்செயல் பிடிக்கவில்லை. அடுத்தநாள் ஹாஸ்டலுக்கு பாபா வந்தபோது, வயதில் சிறிய மாணவன் ஒருவன், பாபாவின் கையில் ஒரு கடிதத்தைத் தந்தான். அவர் அதைப் படித்து விட்டு சிரித்து விட்டார். வார்டனை வரச் சொல்லி அதை உரக்கப் படிக்குமாறு கூறினார். அதில் கீழ்க்கண்டவாறு இருந்தது.

""அன்பு மிக்க சாயி அம்மா! தங்களின் மலர்ப்பாதங்களுக்கு எங்கள் பணிவான வணக்கம். தங்களுக்கு எங்களிடம் வருத்தமா? தங்களின் அமைதியை நாங்கள் கெடுக்கிறோமா? ஒழுக்கவிதிகளை மீறி கட்டுப்பாடின்றி நடக்கிறோமா? அவ்வாறு இல்லாவிட்டால் பிருந்தாவனத்தின் எல்லையை விட்டு எங்களை ஏன் அனுப்ப முயற்சி செய்ய வேண்டும்? மிகவும் ரம்மியமான இந்த பிருந்தாவனத்தில் தான் நாங்கள் இனிமையையும், அன்பையும், பாதுகாப்பையும் நெருக்கமாக நாங்கள் உணர்கிறோம். வானுலக தேவர்கள் கூட இந்த அன்பை, ஆனந்தத்தை அனுபவிக்க ஆசைப்படுவார்கள்.''
இதயம் நிறைந்த பாசத்துடன் தங்கள் குழந்தை

பின்குறிப்பு: பிருந்தாவனத்தில் இருந்து வெகு தூரத்தில் புதிய ஹாஸ்டல் கட்டவேண்டும் என்று தாங்கள் உறுதியாக இருந்தால், தயவு செய்து தங்களுக்கும் ஒரு புதிய இல்லம் அமைத்துக் கொண்டு எங்களுக்கு மிக அருகிலேயே இருக்க வேண்டுகிறோம். வார்டன் இக்கடிதத்தைப் படித்து முடித்ததும், கண்ணீர் விடாத மாணவர்கள் யாருமே இல்லை. ஒரே குரலில் அனைவரும், ""சுவாமி! தயவு செய்து எங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளுங்கள்'' என்று கெஞ்சினர். இதைக் கண்டு பாபாவின் உள்ளம் உருகியது. அவர் உடனே தலைமை இன்ஜினியரை அழைத்து, வரைபடங்களை வேறு மாதிரி வரையும்படி கேட்டுக் கொண்டார்.
பிருந்தாவன பகுதிக்குள்ளேயே புதிய ஹாஸ்டலைக் கட்டுவதற்கான வரைபடங்கள் தயாரிக்கப்பட்டன. இந்த பரபரப்பான செய்தியைக் கேட்டதும் மாணவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். பூமிபூஜை நாளன்று ஆரத்திக்கான விளக்கை ஏற்றும்போது மாணவன் ஒருவன், ""சுவாமி! நீங்கள் எங்களுக்காக எவ்வளவோ செய்கிறீர்கள். தங்களுக்குக் கொடுக்க எங்களிடம் ஒன்றும் இல்லையே!'' என்ற சொல்லி கண்ணீர் விட்டான். அதற்கு பாபா""ஆனந்தக் கண்ணீர், உன் மிருதுவான கன்னத்தில் வழிகிறதே! அது போதாதா? எனக்கு வேண்டியது அதுவே! எனக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்து! நான் மிகவும் விரும்புவது உன் மகிழ்ச்சி மட்டுமே!'' என்றார். பிருந்தாவன் அமைப்பில் உள்ள உயர்ந்த கட்டிடம் பாபா மாணவர்கள் மீது கொண்டுள்ள அளவற்ற அன்புக்கு ஒரு இனிய நினைவுச் சின்னம்.

பிறப்பும் இறப்பும் எனக்கில்லை : ஒருமுறை பிறந்த நாள் விழாவில் சத்யசாய்பாபா சார்பில் ஒரு செய்தியை சாய்பக்தர் ஒருவர் வாசித்தார். அதில், ""இந்த உடலுக்கு பிறப்போ இறப்போ கிடையாது. ஆனால், நீங்கள் எனக்கு அன்பின் காரணமாக விழா எடுக்கிறீர்கள். ஆம்...அன்பே உலகில் மிக உயர்ந்த சக்தி. இங்கே அனைவரும் ஒன்று கூடி சகோதர, சகோதரிகளாக அமர்ந்துள்ளீர்கள். உலகத்தில் சாந்தி ஏற்பட நாம் முயற்சிக்க வேண்டும். குறுகிய உணர்வைக் கொன்றுவிட்டு ஒற்றுமையையும், கூட்டுறவையும் வளரச் செய்தால் அதுவே உண்மையான மனிதத்தன்மையாகும்,'' என்று கூறப்பட்டிருந்தது.

""துயரத்தைத் தாங்கும் சக்தியைத் தருகிறேன்'' அன்றே சொன்னார் சத்யசாய்பாபா : ராமபிரானைப் பற்றி நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எழுதிய ராமசரண் என்ற பண்டிதர் பாபாவின் பக்தர். அவர் உடல் உபாதைகளால் அவதிப்பட்டார். ராமசரணின் நண்பர்கள் பாபாவிடம் சென்று நிவாரணம் பெற்றுவரும்படி வற்புறுத்தினார்கள். ஆனால், "வினைப்பயனை அனுபவித்துக் கழிப்பதே நல்லது' என்றார் ராமசரண். ராமசரண் படும் இந்த துன்பம் குறித்து பாபா ஒருமுறை குறிப்பிட்டார். ""கடவுள் எப்போதும் காப்பாற்ற மாட்டார் மற்றும் தண்டனையும் அளிக்கமாட்டார். நீங்கள் அனுபவிக்கும் அனுபவங்கள் ஒவ்வொன்றும் நான் உங்களுக்கு அளித்த பரிசுகள். அவைகள் என்னால் உண்டாக்கப்பட்டவையல்ல. அவைகளை உருவாக்குபவர்கள் நீங்களே,'' என்றார். ""அப்படியானால் துன்பங்களை நீக்க கடவுளின் பங்குதான் என்ன? என்றார் ஒரு பக்தர்.அதற்கு பதிலளித்த பாபா ""நான் உங்களுக்கு துயரத்தைத் தாங்கிக் கொள்ளும் வலிமை அளிக்கிறேன். தூக்கமுடியாமல் சில்லரைக் காசு மூடையைச் சுமந்து வருபவனிடம் ரூபாய் தாளாக மாற்றித் தந்தால் சுமை எப்படி குறையுமோ, அதுபோல துயரங்களைச் சுமந்து வருபவனின் சுமையை குறைத்து லேசாக்கிவிடுகிறேன். அப்போது துயரச்சுமை உன்னை அழுத்துவதில்லை'' என்றார்.

Wednesday, April 20, 2011

தி.மு.கழகம் வேகமாக வளர்ந்தது
புதிதாக அமைக்கப்பட்ட தி.மு.கழகம் வளருமா என்று சந்தேகப்பட்டவர்கள், பலர். குறிப்பாக காங்கிரஸ்காரர்கள், எதிர்காலத்தில் தி.மு.கழகம் பலம் மிக்க ஒரு எதிர்ப்பு சக்தியாக விஸ்வரூபம் எடுக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அண்ணாவின் பேச்சும் எழுத்தும் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தன.குறிப்பாக அண்ணா பேசும் பொதுக்கூட்டங்களுக்கு மக்கள் பல்லாயிரக்கணக்கில் கூடினர். எதுகை மோனையுடன் அவர் நிகழ்த்திய சொற்பொழிவுகள், மக்களை மயக்கின. "தமிழ்நாட்டின் தலைசிறந்த பேச்சாளர்", "மேடைப்பேச்சுக்கு இலக்கணம் வகுத்தவர்" என்று புகழ் பெற்றார்.அண்ணாவின் இயற்பெயர் சி.என்.அண்ணாதுரை. காஞ்சீபுரத்தில் நடராசன் _ பங்காரு அம்மாள் தம்பதிகளின் மகனாக 1909_ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15_ந்தேதி பிறந்தார். நடராஜனும், பங்காரு அம்மாளும் அன்பும், பண்பும், தெய்வ பக்தியும் உடையவர்கள். ஆயினும் ஏழைகள்.எனவே, அண்ணாவை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பை, அவருடைய சிற்றன்னை ராஜாமணி அம்மாள் ஏற்றார். அவரை அண்ணா "தொத்தா" என்று அன்புடன் அழைப்பார். சிறுவயதில் அண்ணாவுக்குப் படிப்பில் அதிக ஆர்வம் இல்லை. விளையாட்டில் அதிக நாட்டம் செலுத்தினார்.அதன் விளைவாக, அண்ணா எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சையில் தேறவில்லை. பிற்காலத்தில் பெரிய மேதையாகத் திகழ்ந்த அண்ணா, எஸ். எஸ்.எல்.சி. பரீட்சையை மூன்று முறை எழுத நேரிட்டது என்றால், நம்பமுடியவில்லை அல்லவா? எஸ்.எஸ்.எல்.சி. தேறியதும், பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்தார்.கல்லூரியில் படிக்கும் போதே, பட்டிமன்றங்களில் பங்கு கொண்டார். அவருடைய பேச்சுத்திறமை அப்போதே வெளிப்பட்டது. பி.ஏ.ஆனர்ஸ் (எம்.ஏ) பரீட்சையில் தேறினார். பட்டம் பெற்ற பிறகும் நூல்கள் படிப்பதை அண்ணா நிறுத்தவில்லை. இலக்கியங்கள், வரலாறுகள், புராணங்கள் அனைத்தையும் படித்தார்.பேரறிஞராக உருவானார். அண்ணாவுக்கு 1930_ம் ஆண்டில் திருமணம் நடந்தது. பெற்றோர் பார்த்த மணமகளான ராணி அம்மாளை அவர் மணந்தார். அண்ணா ஏதாவது வேலைக்குப்போகவேண்டும் என்று அண்ணாவின் பெற்றோரும், தொத்தாவும் நினைத்தனர். அதனால், வேலை தேடி அலைந்தார்.பாரிமுனை அருகில் உள்ள ஒரு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைத்தது. ஆனால், சுதந்திர மனப்பான்மை உடைய அண்ணா, 4 மாதங்களுக்கு மேல் அந்த வேலையில் நீடிக்கவில்லை. இந்த நேரத்தில், அரசியல் பக்கம் அவர் கவனம் திரும்பியது. நீதிக்கட்சிக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார்.நீதிக்கட்சியின் பெரிய தலைவர்களுக்குத் தமிழில் நன்றாக பேசவராது. ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள். அவர்களுடைய பேச்சை தமிழில் மொழி பெயர்ப்பார், அண்ணா. அவருடைய மொழிபெயர்ப்பின் அழகைக்கண்டு, தலைவர்கள் பிரமித்தனர். அண்ணாவின் புகழ் தமிழ்நாடெங்கும் பரவத் தொடங்கியது.திருப்பூரில் நடந்த இளைஞர் மாநாடு ஒன்றுக்கு, அண்ணா சென்றிருந்தார். அந்த மாநாட்டுக்குப் பெரியாரும் வந்திருந்தார். அந்த மாநாட்டில்தான் இருவரும் முதன் முதலாகச் சந்தித்துக் கொண்டனர். அண்ணா, பெரியாரின் சீடரானார். நீதிக்கட்சி சார்பில் நடைபெற்ற "விடுதலை" பத்திரிகையின் துணை ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்.அதில் அண்ணா எழுதிய கட்டுரைகள், அவர் புகழை மேலும் உயர்த்தின. 1944_ல் சேலத்தில் நீதிக்கட்சி மாநாடு நடந்தது. நீதிக்கட்சி தலைவர்கள் ஆங்கிலத்திலேயே பேசுவதையும், ஆங்கிலேயர்களுடனேயே உறவாடி வருவதையும் வெள்ளையர்கள் கொடுத்த "சர்" "ராவ் பகதூர்" போன்ற பட்டங்களைப் பெருமையோடு சுமப்பதையும் கண்டு மனம் நொந்தார்.ஆங்கிலேயர் கொடுத்தப் பட்டங்களைத் துறக்க வேண்டும் என்றார். பெயருக்குப்பின்னால் சாதிப் பெயர் போட்டுக்கொள்வதை நிறுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தினார். "ஜஸ்டிஸ் கட்சி" என்ற பெயரை "திராவிடர் கழகம்" என்று மாற்றக்கோரும் தீர்மானத்தை இந்த மாநாட்டில் அண்ணாதான் கொண்டு வந்தார்.தீர்மானத்தின் மீது 35 மணி நேரம் காரசாரமாக விவாதம் நடந்தது. பிறகு தீர்மானம் நிறை வேறியது. திராவிடக் கழகத்தின் தலைவராக பெரியாரும், தளபதியாக அண்ணாவும் இருந்து கட்சியை வளர்த்தனர். இந்த நேரத்தில் பெரியார் _ மணியம்மை திருமணத்தினால் அண்ணா_பெரியார் உறவு முறிந்தது. தி.மு.கழகத்தை அண்ணா தொடங்கினார்.தி.மு.கழகம் வேகமாக வளர்ந்தது.

Monday, April 18, 2011

புதிய தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி அழகர் ஆற்றில் இறங்கினார்


புதிய தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி அழகர் ஆற்றில் இறங்கினார்; பல லட்சக்கணக்காண பக்தர்கள் குவிந்தனர்
மதுரை, ஏப். 18-
 
மதுரையில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று சித்திரை திருவிழா. இவ்விழா உலக புகழ் பெற்றதாகும். இவ்விழாவை காண பல்வேறு மாவட்ட, மாநிலங்களில் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் திரளாக வருவது உண்டு.  கடந்த 7-ந்தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் கொடி ஏற்றத்துடன் இவ்விழா தொடங்கியது.
 
ஒவ்வொரு நாளும் சுவாமி-அம்மனுக்கு பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டது. 14-ந் தேதி மீனாட்சிக்கு பட்டாபிஷேக மும், 15-ந்தேதி திக் விஜயமும், நேற்று முன்தினம் (16-ந்தேதி) மீனாட்சி-சுந்தரேசுவரருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற்றது. இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.   சித்திரை திருவிழாக்களில் முத்திரை பதிக்கும் விழாவாக கருதப்படுவது கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியாகும். இதற்கான விழா அழகர் கோவிலில் கடந்த 14-ந் தேதி தொடங்கியது. அன்று மாலை சுவாமி கோவிலை வலம் வந்து கோவிலுக்குள் சென்றார்.
 
பின்னர் 16-ந்தேதியன்று அதிர்வேட்டு முழங்க, மேளதாளத்துடன் அழகர், கள்ளழகர் திருக்கோலம் பூண்டு தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். அன்று மாலை திருக்கோவில் கல்யாண மண்டபத்தில் இருந்து புறப்பட்டு கொண்டப்பநாயக்கன் மண்டபம், பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி ஆகிய மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.   நேற்று அதிகாலை 2 மணி அளவில் மறவர் மண்டபத்தில் எழுந்தருளினார். அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு கடச்சனேந்தல் வந்தார். அங்கு பக்தர்களுக்கு காட்சி அளித்து விட்டு மூன்று மாவடிக்கு காலை 6.30 மணிக்கு வந்தார். அங்கு கள்ளழகருக்கு எதிர் சேவை நடந்தது.
 
அங்கு பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் திரண்டு அவரை வரவேற்று தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட கள்ளழகர் புதூர், மாரியம்மன் கோவில், ஆயுதப்படை குடியிருப்பு, மாரியம்மன் கோவில், அம்பலக்கார மண்டபம் வந்தடைந்தார்.  அதன்பிறகு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவிலில் கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு இரவு 10.30 மணி முதல் நள்ளிரவு ஒரு மணி வரை பெருமாள் திருமஞ்சனமாகி குதிரை வாகனத்தில் சாத்துப்படி ஆனது.
 
பிறகு ஸ்ரீவில்லிபுத்தூரில் சூடி கொடுத்த நாச்சியார் ஆண்டாளுடைய திருமாலையை அணிந்து கள்ளழகர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.   பின்னர் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் கருப்பணசாமி திருக்கோவிலில் ஆயிரம் பொன் சப்பரத்தில் கள்ளழகர் எழுந்தருளி, ரூ.1 1/2 கோடி செலவில் புதியதாக உருவாக்கப்பட்ட தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றை நோக்கி புறப்பட்டார். காலை சரியாக 6.46 மணிக்கு கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது அங்கு கூடி நின்ற லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து தீபாராதனை காட்டி கோவிந்தா... கோவிந்தா... என கோஷமிட்டனர்.
 
பின்னர் அங்கிருந்து ராம ராயர் மண்டபத்திற்கு புறப்பட்டு சென்றார். அங்கு அங்கபிரதட்சண நிகழ்ச்சி நடந்த பின் இரவு 1 மணிக்கு வண்டியூர் வீரராக பெருமாள் கோவிலில் எழுந்தருளுகிறார்.   நாளை (19-ந்தேதி) காலை 5 மணிக்கு வண்டியூரில் இருந்து சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்திற்கு புறப்படுகிறார். காலை 10 மணிக்கு மண்டூக முனி வருக்கு சாபம் தீர்த்து காட்சி யளிக்கிறார். பிற்பகல் 2 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு அனுமார் கோவிலுக்கு வருகிறார். 3 மணிக்கு அங்கப் பிரதட்சணம் நடக்கிறது. இந்நிகழ்ச்சி முடிந்ததும் ராமராய மண்டபத்திற்கு கள்ளழகர் வருகிறார். அங்கு விடிய விடிய தசாவதார நிகழ்ச்சி நடைபெறுகிறது.
 
20-ந்தேதி காலை 11 மணிக்கு புறப்பட்டு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் ராசாங்க திருக்கோலத்தில் எழுந்தருளுகிறார். மறுநாள் 21-ந் தேதி பூப்பல்லக்கில் புறப்பட்டு மாரியம்மன் கோவில், அம்பலக்காரர் மண்டபம், மூன்று மாவடி மறவர் மண்டபத்தில் எழுந் தருளுகிறார். 22-ந்தேதி அப்பன்திருப்பதி, கள்ளந்திரி வழியாக அழகர்கோவிலுக்கு சென்றடைகிறார். 23-ந்தேதி சுவாமிக்கு உற்சவ சாந்தி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
thanks maalaimalar

Saturday, April 16, 2011

மதுரையில் இன்று மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்: பக்தர்கள் வெள்ளத்தில் கோலகலமாக நடைபெற்றது


மதுரையில் இன்று
 
மீனாட்சி-சுந்தரேசுவரர் 
 
திருக்கல்யாணம்:
 
பக்தர்கள் வெள்ளத்தில் கோலகலமாக நடைபெற்றது
மதுரை, ஏப். 16-
 
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழா உலகப் பிரசித்தி பெற்றதாகும். மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் எதிர்சேவை போன்ற வைபவங்களை காண மதுரை மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் மதுரைக்கு வருவார்கள்.
 
இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடங்கிய நாளில் இருந்தே தினமும் இரவில் பூதம், அன்னம், காமதேனு, தங்கப்பல்லக்கு, குதிரை, ரிஷபம் உள்பட பல்வேறு வாகனங்களில் அம்மன், சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். நான்கு மாசி வீதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
 
14-ந்தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகமும், சிவபெருமானை சந்தித்த மீனாட்சி நாணி தலை குனிந்து தன் மணவாளன் சிவபெருமான் என்பதை உணர்ந்த திக்விஜயம் நிகழ்ச்சி நேற்று மாலையும் சிறப்பாக நடைபெற்றது.
 
விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. இதற்காக ரூ.3 1/2 லட்சம் செலவில் ஊட்டி, பெங்களூரில் இருந்து வரவழைக்கப்பட்ட பல வண்ண மலர்களால் வடக்கு-மேல ஆடி வீதியில் மணமேடை அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
 
முன்னதாக அதிகாலை 4 மணிக்கு மீனாட்சி-சுந்தரேசுவரர் 4 சித்திரை வீதிகளில் சுற்றி வந்து பின் கோவிலில் உள்ள முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாடினர். காலை 6 மணிக்கு திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகப்பெருமானும், பவளக்கனிவாய் பெருமாளும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தனர்.
 
காலை 9.57 மணிக்கு சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் வடக்கு-மேல ஆடிவீதியில் அமைக்கப்பட்டிருந்த மண மேடைக்கு வருகை தந்தார். பின்னர் மீனாட்சி அம்மன், பவளக்கனிவாய் பெருமாள், முருகப்பெருமான் தெய்வானை ஆகியோர் அடுத்தடுத்து மேடைக்கு வந்தனர்.
 
பின்னர் 10.15 மணிக்கு சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓதினர். 10.35 மணிக்கு விநாயகர் பூஜையும், முளைப்பாரி நிகழ்ச்சியும் நடைபெற்றது. 10.40 மணிக்கு மந்திரங்கள் ஓதி மேடையில் யாகம் வளர்க்கப்பட்டது.
 
பின்னர் பல்வேறு பூஜைகளும், திருப்பாலிகை நிகழ்ச்சியும் நடைபெற்றது. சுந்த ரேசுவரர் பிரதிநிதியாக தெய்வசிகாமணி பட்டரும், மீனாட்சி அம்மன் பிரதிநிதியாக அசோக் என்ற மருதநாயக்கர் பட்டரும் இருந்தனர்.
 
சரியாக 10.56 மணிக்கு மங்கல இசை முழங்க சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மனுக்கு மங்களநாண் அணிவித்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் சிவ சிவ என கோஷமிட்டனர். மேடையிலேயே சுவாமி, அம்மன் மீது பூக்கள் தூவப்பட்டது. மேலும் பெண் பக்தர்கள் தங்களது கழுத்தில் புது தாலியை மாற்றிக் கொண்டனர்.
 
திருக்கல்யாண நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம், நீதிபதி ராமநாதன், போலீஸ் கமிஷனர் கண்ணப்பன், மேயர் தேன்மொழி, மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் கருமுத்து கண்ணன், கோவில் நிர்வாக அதிகாரி பத்மநாபன், பாரதீய ஜனதா முன்னாள் தலைவர் இல.கணேசன் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
 
பக்தர்கள் திருக்கல்யாணத்தை பார்ப்பதற்காக கோவிலிலும், கோவில் வெளியேயும் 19 டி.வி.க்கள் வைக்கப்பட்டிருந்தன. பின்னர் 3000-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. மேலும் பக்தர்கள் வரிசையாக நின்று திருமண மொய் பணத்தை செலுத்தினர்.
 
திருக்கல்யாணத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அனுமதி சீட்டு உள்ளவர்களுக்கு மட்டுமே கோவிலில் அனுமதிக்கப்பட்டனர்.
 
இன்று மாலை பூப்பல்லக்கும், நாளை காலை முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டமும் நடைபெறுகிறது.

Friday, April 15, 2011

இன்று மீனாட்சி திருக்கல்யாணம்

ஏப்ரல் 15,2011


Stay connected to temple.dinamalar.com
 
 
 
சித்திரை திருவிழாவின் பத்தாம் நாளான இன்று மதுரை மீனாட்சிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. திக்விஜயம் செய்து, உலகையெல்லாம் வென்று, இறைவனின் மனதையும் வென்ற அன்னை மீனாட்சிக்கு சுந்தரேஸ்வரருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அனைத்து உலகங்களுக்கும் மணவோலை அனுப்பப்பட்டது. தெய்வத் தம்பதியர் திருமணம் பூவுலகில் நடப்பதைக் காண விண்ணுலகமே மண்ணுலகிற்கு வந்தது. மணமகன் சுந்தரேஸ்வரரை வரவேற்க பிரம்மாவும்,திருமாலும் மதுரைக்கு முன்கூட்டியே வந்து விட்டனர். சுமங்கலிப்பெண்கள் பூரண பொற்கலசம் ஏந்தி மங்கலதீபத்தோடு அணிவகுத்து நின்றனர். பெண்ணின் தந்தை மலையத்துவஜ பாண்டிய மன்னனும், தாய் காஞ்சனமாலையும் மாப்பிள்ளைக்கு பன்னீர் தெளித்து சந்தனம் கொடுத்து, ""எம் மகள் மீனாட்சியை மணந்து பாண்டிய நாட்டை அரசாள வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். அகத்தியர், நாரதர் போன்ற ரிஷிகள் பக்தி வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்தனர். பிரம்மா முன்னிருந்து யாகவேள்வியை நடத்தினர். கலைமகளும், அலைமகளும், மலைமகளாகிய மீனாட்சியை அலங்காரம் செய்து மணவறைக்கு அழைத்து வந்தனர். கொட்டியது மேளம், குவிந்தது கோடி மலர், கட்டினார் மாங்கல்யம். மீன்போன்ற கண்களையுடைய அங்கயற்கண்ணியையும், அழகே வடிவான சுந்தரேஸ்வரரையும் கண்ட அனைவரும், "கண் பெற்ற பயனை இன்று கண்டோம் என்று மகிழ்ந்து வாழ்த்தினர். பொங்கும் மங்கலம் எங்கும் நிறைந்தது. இந்த இனிய காட்சியை நாளை நாம் காணலாம். இரவில் கல்யாண கோலத்தில் சுந்தரேஸ்வரர் யானையிலும், மீனாட்சி பூப்பல்லக்கிலும் மாசிவீதியை வலம் வருவர். இக்காட்சியைத் தரிசித்தால் உங்கள் இல்லத்தில் விரைவில் மேளச்சத்தம் ஒலிக்கும்.

புதிய தங்க குதிரையில் ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்

ஏப்ரல் 15,2011
அழகர்கோவில்: மதுரை வரும் கள்ளழகர், ஒரு கோடியே 50 லட்ச ரூபாய் மதிப்பில், புதிதாக செய்யப்பட்ட தங்கக் குதிரையில், வைகை ஆற்றில் இறங்குகிறார். அழகர்கோவிலில் இருந்து மதுரை வரும் கள்ளழகர், சித்ரா பவுர்ணமி அன்று காலை, குதிரை வாகனத்தில், வைகை ஆற்றில் இறங்குகிறார். இந்த தங்கக் குதிரை, 300 ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்டது. அன்று முதல், அவ்வப்போது திருவிழாவின் போது சுத்தம் செய்து, புதுப்பித்தனர். முலாம் பூசவோ, மராமத்து செய்யவோ இல்லை. திருவிழாவின் போது, சுவாமியை மண்டகப் படிகளில் வைத்து தூக்குவதால், குதிரை வாகனத்தில் இருந்த இணைப்புகள், பலமிழந்து விட்டன. தீர்த்தவாரியின் போது பக்தர்கள் பீய்ச்சும் மஞ்சள் நீரால், தங்க முலாமும் ஆங்காங்கே காணாமல் போய்விட்டது. குதிரை வாகனத்திற்கு தங்க முலாம் பூச வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்தது. தற்போது, அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம், துணை கமிஷனர் கல்யாணி, அறங்காவலர்கள் செல்லையா, கோபால், திலகராமு, ஜவஹர் ஆகியோர் ஏற்பாட்டில், புதிய தங்கக் குதிரை செய்யும் பணி துவங்கப்பட்டது.

முதல் கட்டமாக, 13 கன அடி தேக்கு மரத்தில், குதிரை வாகனம் செய்யப்பட்டது. பின், தாமிரத் தகடுகள் பதிக்கும் பணி நடந்தது. கோவிலில், ஐந்து கிலோ 520 கிராம் 24 காரட் தங்கம் கையிருப்பில் இருந்தது. இது தவிர, குதிரை வாகனத்திற்காக திருக்கோஷ்டியூர் எம்பெருமான் சாரிட்டிஸ் சார்பில், 400 கிராமும், பக்தர்களிடம் இருந்தும், தங்கம் பெறப்பட்டது. இதைக் கொண்டு, புதிய தங்கக் குதிரைக்கு முலாம் பூசும் பணிகள் நேற்று முடிந்தன. இதன் மொத்த மதிப்பு ஒரு கோடியே 50 லட்ச ரூபாய். இன்று காலை ஆறு மணிக்கு, குதிரைக்கு கண் அலங்காரம் செய்யப்படுகிறது. பின், ஒன்பது மணிக்கு யாகசாலை பூஜையும், பிரதிஷ்டையும் நடக்கிறது.பகல் 12 மணிக்கு சுந்தரராஜ பெருமாள் புதிய தங்கக் குதிரையில் எழுந்தருளி கோவிலை வலம் வருகிறார். பின் இக்குதிரை வாகனம், தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஏப்.,18ல் புதிய தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகையில் இறங்குகிறார்.

Monday, April 11, 2011

தரணியாள வந்த தர்மத்தின் தலைவன்: இன்று ராமநவமி

மனதில் மகிழ்ச்சி முகத்தில் மலர்ச்சி : "ராமன்' என்பதற்கு ஆனந்தமாக இருப்பவன், ஆனந்தம் தருபவன் என்று இருவிதமான பொருள்கள் உண்டு. மனதில் மகிழ்ச்சி இருக்கும்போது, புறச்சூழ்நிலைகள் ஒருவனை பாதிப்பதில்லை. கைகேயி பெற்ற வரத்தால் பட்டு உடுத்தி பட்டாபிஷேகத்திற்கு தயாரான ராமன், மரவுரி கட்டி காட்டுக்கு கிளம்பிச் சென்றார். முகத்தில் எந்த வருத்தமும் இல்லை. மலர்ந்த தாமரை மலரைப் போல புன்னகையுடன் கிளம்பினார். கவிச்சக்கரவர்த்தி கம்பர் இதனை "சித்திரத்தில் மலர்ந்த செந்தாமரை முகத்தினன்' என்று குறிப்பிடுகிறார். கடவுளாகிய மகாவிஷ்ணு, தர்மத்தை மனிதனால் கடைபிடிக்க முடியும் என்று வாழ்ந்து காட்டுவதற்காக ராமனாக அவதரித்தார். எந்த இடத்திலும் ராமன் "இது என் அபிப்ராயம்' என்று சொன்னதே இல்லை. "தர்மம் இப்படி சொல்கிறது' "மகான்கள் இவ்விதம் சொல்கிறார்கள்' என்று தான் சொல்வார். தந்தை தசரதர் கைகேயிக்கு கொடுத்த வாக்கைக் காப்பதற்காக ராமன் காட்டுக்குச் சென்று தர்மத்தை நிலைநாட்டினார். எந்தநிலையிலும் அவர் மனதில் மகிழ்ச்சியையும், முகத்தில் மலர்ச்சியையும் இழந்ததே இல்லை.
மகிழ்ச்சி தந்த ராமாயணம் : மூதறிஞர் ராஜாஜி "சக்கரவர்த்தி திருமகன்' என்ற பெயரில் ராமாயணத்தை எழுதினார். அவர் ராமாயணத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, ""சீதை, ராமன், அனுமன், பரதன் இவர்களை விட்டால் நமக்கு வேறு செல்வமோ நிம்மதியோ இல்லை. இந்தப் பழஞ்செல்வத்தை எடுத்து வாசகத் தமிழில் எழுதும் சந்தர்ப்பம் எனக்கு ஏற்பட்டது. கங்கையும், காவிரியும் ஓடும்வரையில் சீதாராம சரிதம் பாரத நாட்டில் இருந்து அனைவரையும் தாய் போல் பக்கத்தில் இருந்து காக்கும். நாட்டுக்கு நான் பல பணிகள் செய்ததாக நண்பர்கள் போற்றுவதுண்டு. அவற்றைவிட "சக்கரவர்த்தி திருமகன்' எழுதி முடித்தது தான் மேலானபணி என்பது என் கருத்து. அதுவே என் உள்ளத்திற்கு மகிழ்ச்சியையும், அமைதியையும் தந்தது. சீதாபிராட்டியைத் தியானிப்போமாக. நம்முடைய பிழைகள் அதிகம். அவளுடைய கருணையன்றி நமக்கு கதியில்லை. "குற்றம் செய்யாதார் எவர் தாம்' என்று கேட்ட அவள் நம்மையும் காப்பாள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.யார் இந்த சீதை :கம்பர் பாடிய கம்பராமாயணம் புகழ்பெற்றது. அவர் தன் நூலில், சீதையை இலங்கைக்கு ராவணன் தூக்கிச் சென்ற நிகழ்ச்சியை விவரிக்கும்போது, வால்மீகியிடம் இருந்து வேறுபடுகிறார். ராவணன் சீதையைக் கையால் தீண்டாமல், பர்ணசாலையோடு (சீதை தங்கியிருந்த இடம்) பெயர்த்துக் கொண்டு போனதாக குறிப்பிடுகிறார். ஒரு கொடியவன் ஒரு பெண்ணிடம் அதர்மமாக நடந்து கொண்டான் என்று சொல்லக்கூட, கம்பரின் அன்பு நெஞ்சம் இடம் தரவில்லை. துளசிதாசர் தன்னுடைய இந்தி ராமாயணத்தில் ராவணன் தூக்கிச் சென்றது உண்மையான சீதை அல்ல என்று கூறுகிறார். ராவணன் வந்த போது பிராட்டியார், மாயா சீதையை உருவாக்கி விட்டு மறைந்து விட்டதாகவும், ராமன் அக்னி பரீட்சை நடத்தும்போது உண்மையான சீதை தீயில் இருந்து வந்தததாகவும் குறிப்பிடுகிறார். இந்த ராமாயணம் வடநாட்டு மக்களிடம் பெரிதும் பரவியுள்ளது.காட்டுக்குச்சென்ற கட்டுச்சோறு : ராமபிரான் காட்டுக்குச் செல்லும்போது கட்டுச்சோறு கொண்டு சென்ற விபரம் உங்களுக்கு தெரியுமா? கோசலையின் மணிவயிறு, ஸ்ரீமன் நாராயணனின் அவதாரமான ராமனைப் பெற்றெடுக்கும் பேறு பெற்றது. அவள் தன் பிள்ளையைக் கண்ணின் மணிபோல காத்து வந்தாள். எந்தப் பிள்ளை வெளியூருக்குக் கிளம்பினால் அப்பா தன் பங்குக்கு பணமும், அம்மா பசிக்கு கட்டுச்சோறும் கொடுத்து அனுப்புவது அக்கால வழக்கம். ராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டுக்குச் செல்ல வேண்டி வந்தது. அப்போது தசரதர் பிள்ளைக்கு "சத்தியம்' என்னும் பணத்தை தந்தார். கோசலை ஒரு விசேஷமான கட்டுச்சோறு செய்து கொடுத்தாள். "ஒருநாள் இருநாள் அல்ல. எத்தனை ஆண்டுகள் ஆனாலும், கெட்டுப்போகாதது இது' என்று ராமனிடம் சொன்னாள். ""என் கண்ணே! ராகவா! நீ எந்த தர்மத்தை பக்தியோடு அனுசரித்து வந்தாயோ அந்த தர்மத்தையே கட்டுச்சோறாக தருகிறேன். அதை என்றென்றும் பின்பற்று. அது உன் உடனிருந்து காக்கும்,'' என்று ஆசியளித்தாள்.ராமராஜ்ய மன்னர்கள் : ராவணவதம் முடிந்து ராமர்,சீதை, லட்சுமணர் அயோத்தி திரும்பினர். ராமருக்கு பட்டாபிஷேகம் நடந்தேறியது. மங்களஇசை முழங்கியது. அந்தணர்கள் வேதம் ஓதினர். சங்குகள் முழங்கின. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். தவஞானிகள் மந்திரம் சொல்லி புனிதநீரால் ராமனுக்கு அபிஷேகம் செய்தனர். தம்பியர் சூழ்ந்து நின்று வெண்சாமரம் வீசினர். அங்கதன் உடைவாள் ஏந்தினான். அனுமன் ராமபிரானின் திருவடிகளைத் தாங்கி நின்றார். அப்போது குலகுரு வசிஷ்டர் கிரீடத்தை ராமனின் தலையில் சூட்டி மகிழ்ந்தார். அக்காட்சியைக் கண்ட அனைவரும் தங்களையே மன்னர் போல உணர்ந்து மகிழ்ந்தனர். தங்கள் தலையிலேயே கிரீடம் வைத்தது போல எண்ணினர். ஏனென்றால், ராமராஜ்யத்தில் ஏற்றத்தாழ்வு என்பதே கிடையாது. அனைவரும் சமமாக மதிக்கப்பட்டனர். கடைநிலையில் உள்ள பிரஜையாக இருந்தாலும், ராமபிரான் அவருடைய எண்ணத்திற்கும் மதிப்பளித்து அரசாட்சி நடத்தினார்.பத்துதலை ராணனை ஒற்றைத்தலை ராமன் வென்றான் : தர்மத்தை ஒருவன் பின்பற்ற வேண்டுமானால் விருப்பு வெறுப்பற்ற மனநிலை வேண்டும். தர்மவாதிகளை உலகம் பரிகாசம் செய்தாலும், விடாமல் பின்பற்றும் தைரியம் வேண்டும். ராமபிரான் வாழ்வில் எத்தனையோ துன்பத்தைச் சந்தித்தாலும் தர்மத்தைக் கைவிடவில்லை. எவன் ஒருவன் தர்மத்தைக் காக்கிறானோ அவனைத் தர்மம் காக்கும். ராமபிரானும், ராவணனும் தர்மத்தைப் பின்பற்றும் விஷயத்தில் எதிர் துருவங்கள். ராமனுக்கு ஒரு தலை. ராவணனுக்கு பத்துத்தலை. ஒருதலையிடம் பணிவும், தர்மமும் இருந்தது. பத்துதலையிடம் ஆணவமும், அதர்மமும் இருந்தது. அதர்மம் ஆயிரம் வழிகளில் தர்மத்தைச் சுற்றி வளைத்தாலும், தர்மமே இறுதியில் வெற்றி பெறும் என்பதை ராமகாவியம் வலியுறுத்துகிறது. இதையே "தர்மம் தலை காக்கும்' என்று இன்றும் போற்றுகின்றனர்.அருள் கொடு அயோத்தி ராமா! ராமநவமி பிரார்த்தனை : ராமநவமியன்று மட்டுமல்ல! யாரொருவர் தினமும் காலையில் இந்தபாராயணத்தைப் பக்தியுடன் படிக்கிறாரோ, அவர் பக்தர்களில் சிறந்த ரத்தினமாவார். ரகுகுல திலகமான ராமச்சந்திரமூர்த்தியின் திருவருளால் அனைத்து வளமும் பெற்று நல்வாழ்வு அடைவார்.* புன்சிரிப்பும், இனிய பேச்சும்

கொண்டவரே! செந்தாமரைக்

கண்களால் அருள்பவரே! அகன்ற நெற்றியை உடையவரே! நீண்ட

குண்டலங்களை அணிந்தவரே!

ரகுவம்ச திலகமே! ராமபிரானே! உமது மலர்முகத்தைத்

தியானிக்கிறோம்.

* பகைவர்களுக்கு பயத்தைக்

கொடுப்பவரே! வேண்டியவர்

விரும்பும் வரங்களைத்

தருபவரே! சிவதனுசை முறித்து

சீதாதேவியை திருமணம்

செய்தவரே!, ராமபிரானே! உமது மலர்முகத்தை வணங்குகிறோம்.

* பத்மம், அங்குச ரேகைகளைக் கொண்ட கைகளால்

பக்தர்களுக்கு மங்களத்தை

அருள்பவரே! ஞானியர்களின் மனம் என்னும் வண்டால்

சேவிக்கப்படுபவரே! கவுதம

மகரிஷியின் மனைவியான

அகல்யாவின் சாபத்தைப்

போக்கியவரே! ராமபிரானே! உமது மலர்முகத்தைப் போற்றுகிறோம்.

* வேதங்களால் துதிக்கப்படுபவரே! நீலவண்ணம் கொண்டவரே!

ரகுவம்ச நாயகரே! நீலரத்தினம் பதித்த ஆபரணங்களை

அணிந்தவரே! பக்தியில்

சிறந்தவர்களால்

பூஜிக்கப்படுபவரே! முத்துக்கள் இழைத்த சிம்மாசனத்தில்

வீற்றிருப்பவரே! பட்டாபிஷேக

ராமபிரானே! உமது மலர்முகத்தைச் சிந்திக்கிறோம்.

* எல்லாவித பாவங்களையும்

போக்குபவரே! கிரகதோஷத்தை

நீக்குபவரே! பார்வதிதேவியும்,

பரமேஸ்வரனும் பக்தியுடன் பூஜிக்கும் திருநாமத்தைக் கொண்டவரே!

விஷ்ணுசகஸ்ர நாமத்தால்

ஆராதிக்கப்படுபவரே! ராமபிரானே! உமது மலர்முகத்தை எண்ணி

மகிழ்கிறோம்.

thanks by dinamalar.

LEARNFrankly, you must have seen that when we do something good for others, we feel much better. Even when we give some gift to our loved ones we feel very happy and it gives us real pleasure. The real spirit of our life is to give happiness to others, not to live a selfish life.

Now consider a scenario in which you are helping some one, or you are giving gift to your friend, but you are expecting something from them in return, then it will become a selfish act. Also If you really ask me it won’t give you the pleasure too, which you will get by doing something for some one without expecting anything from him or her. Same with giving the gift too, you will get more pleasure when you won’t expect anything in return from him or her.

The same applies to our professional life too, while working in a office many people does not want to share his or her knowledge with colleagues, they think that by doing so other person will become more knowledgeable than him, while it is not true. I personally hate these types of people, but during five years of my professional life I met with around twenty person of the same nature.

Gifts, knowledge, and help become useless once some condition attached with it. So friends if you won’t expect some thing in return from your loved ones and when they will give you some thing you will become surprised and your life will fill up with lots of happiness. Every one wants a life of happiness and pleasure, while living a selfish life will never give you the prosperity and happiness. So friends always live a happy life, and learn to give happiness to others.

Friday, April 1, 2011

tamilnadu map


தி.மு.க கூட்டணி அறிக்கை

தி.மு.க கூட்டணி அறிக்கை
பரம ஏழைகளுக்கு கிலோ ரூ. 1 விலையில் மாதந்தோறும் வழங்கப்படும் 35 கிலோ அரிசி, இனி மேல் இலவசமாகவே வழங்கப்படும்
60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு உள்ளூர் அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய பாஸ் வழங்கப்படும்
இலவசமாக கிரைண்டர் அல்லது மிக்சி
குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை
அரசு கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்கப்படும்
முதியோர், ஆதரவற்ற பெண்களுக்கான உதவித்தொகை ரூ. 750 ஆக உயர்த்தப்படும்
வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் வழங்கப் படும் தொகை ரூ. 75 ஆயி ரத்தில் இருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தப்படும்
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடனு தவி, ரூ. 4 லட்சமாக உயர்த் தப்படும்
சென்னை அருகே குறைந்த வாடகை கொண்ட வீடுகள் கட்டித் தரப்படும்
குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை
ரேஷன் கடைகளில் கிலோ அரிசி 1 ரூபாய் திட்டம், மானிய விலையில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, மளிகை, கோதுமை மாவு வழங்கும் திட்டம்
உழவர் சந்தை போன்று, நகர்ப்புறங்களில் நுகர்வோர் சந்தைகள் அமைக்கப்படும்
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண, சென்னை அருகே புதிய துணை நகரம் அமைக்கப்படும்
திருநங்கைகளுக்கும் சுய உதவிக் குழுக்கள் அமைக்க நடவடிக்கை
ஈழத்தமிழர்கள் அமைதியாக வாழ இலங்கை அரசை வற்புறுத்துவோம்
தடையின்றி மின்சாரம் கிடைக்க மின்உற்பத்தி திட்டங்கள் அதிகரிக்கப்படும்
விவசாய நிலங்கள், வீட்டு மனைகளாக மாற்றுவது தடுக்கப்படும்
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் 3 இலவச சீருடைகள் வழங்கப்படும்
கல்வியை மாநில அரசு பட்டியலில் கொண்டு வர வலியுறுத்தப்படும். தரமான இலவச கல்வி அளிக்க அரசு பள்ளிகளின் தரம் உயர்த் தப்படும்
தனியார் மருத்துவமனைகளில் கட்டணங்களை ஒழுங்குப் படுத்த அரசு சார்பில் மருத்துவ கட்டண ஒழுங்கு முறை ஆணையம் அமைக் கப்படும்

தஞ்சாவூர்

தொகுதி விவரம்: தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் இருந்தன. தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு திருவோனம். வலங்கைமான் ஆகிய தொகுதிகள் நீக்கப்பட்டு விட்டன. ஆனால் புதிதாக வேறு எந்த தொகுதிகளும் சேர்க்கப்படவில்லை. தற்போது தஞ்சை. ஒரத்தநாடு. பட்டுக்கோட்டை. பேராவூரணி. பாபநாசம். திருவையாறு. கும்பகோணம். திருவிடைமருதூர் ஆகிய 8 தொகுதிகள் உள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் தஞ்சை தொகுதியன் முடிவுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. குறிப்பாக 1962 தேர்தல் முடிவை சொல்லலாம். 19570&ல் தேர்தல் முதல் முறையாக குளித்தலையில் நின்று வெற்றி பெற்ற கருணாநிதி 62&ம் ஆண்டு தேர்தலில் தஞ்சை தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பரிசுத்த நாடார் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவர் ஏற்கனவே தஞ்சை தொகுதியில் 1957&ல் வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து காமராஜர் பிரசாரம் செய்தார். கருணாநிதியை ஆதரித்து எம்.ஜி.ஆர். பிரசாரம் செய்தார். இதில் கருணாநிதி வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் பரிசுத்த நாடார் 1.928 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அதன் பின்னர் 67&ல் நடந்த தேர்தலில் பரிசுத்தநாடார் வெற்றி பெற்றார். அதன் பிறகு பல தேர்தல்களில் தஞ்சை தொகுதியில் தி.மு.க.வே வெற்றி பெற்று வருகிறது. பெரும்பாலும் நகர பகுதிகளை உள்ளடக்கிய இந்த தொகதி 52&ல் இரட்டை தொகதியாக இருந்தது. ஏதாவது ஒரு பொது உறுப்பினரும். ஒரு தாழ்த்ப்பட்ட உறுப்பினரும் தேர்ந்து எடுக்கப்பட்டனர். பின்பு அடுத்த தேர்தலில் பொது தொகுதியாக மாற்றப்பட்டது. தற்போது தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவோணம் தொகுதி நீக்கப்பட்டு. அந்த பகுதிகளில் கந்தர்வக்கோட்டை தொகுதியில் சேர்க்கப்பட்டது. பல்வேறு கிராம பகுதிகளில் தஞ்சை தொகுதியுடன் இணைக்கப்பட்டு உள்ளது. தொகுதி சீரமைப்புக்கு பிறகு தஞ்சை தொகுதிகளின் வரிசையில் 174&வது இடத்தை பிடித்துள்ளது. இந்த தொகுதி பெரும்பாலும் விவசாயம் சார்ந்தது. தஞ்சை தொகுதியில் தற்போது தஞ்சாவூர் நகரம் மற்றும் தாலுகா. புதுப்பட்டினம். ராவுசாகிதோட்டம். கடகடப்பை. மேலசித்தர்காடு. புன்னைநல்லூர். புளியந்தோப்பு. பிள்ளையார்பட்டி. நீலகிரி. நாஞ்சிக்கோட்டை. வல்லம் ஆகிய ஊர்கள் தஞ்சாவூர் தொகுதியில் அடங்கி உள்ள பகுதிகளாகும். தஞ்சை சட்டமன்ற தொகுதியில் மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 140 வாக்களார்களில் 95 ஆயரத்து 127 ஆண்கள். 98 ஆயிரத்து 13 பேர் பெண்கள். 82 இடங்களில் 228 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதியில் 2 ஆயிரத்து 886 பெண்கள் வாக்காளர்கள் இங்கு ஆண் வாக்காளர்களை விட அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தல் காங்கிரசின் கோட்டையாக திகழ்ந்த தஞ்சை தொகுதி பின்னர் தி.மு.க.வின் கோட்டையாக திகழ ஆரம்பித்தது. 8 முறை இங்கு தி.மு.க. வெற்றி பெற்று உள்ளது. கடந்த 3 தேர்தல்களில் தொடர்ச்சியாக தி.மு.க. இங்கு பெற்று வந்துள்ளது. அ.தி.மு.க. 1 முறை பெற்று உள்ளது. இந்த தொகுதியில் கள்ளர்கள். மகமுடையார். முக்குலத்தோர். தாழ்த்தப்பட்டோர். முஸ்லிம்கள். கிறிஸ்தவர்கள். செட்டியார்கள். அய்யர். என அனைத்து சாதியனரும் வசித்து வருகிறார்கள். தஞ்சை தொகுதி 1995&ம் ஆண்டு நடந்த உலகத்தமிழ் மாநாட்டின் போது பல்வேறு வளர்ச்சிபணிகளை கண்டது. குறிப்பாக புதிய பஸ் நிலையம். மேம்பாலம் போன்ற பணிகள் நடைபெற்றது. அப்போது அறிவிக்கப்பட்ட ரிங் ரோடு இன்னும் பாதியிலேயே நிற்கிறது. அதன் பின்னர் பெரியகோவில் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவையட்டி ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டு சாலைபணிகள் உள்பட பல்பேறு மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டன. இந்த நிலையில் சாந்தப்பிள்ளை கேட் பகுதியில் மேலும் ஒரு கீழ் பாலம் அமைப்பதாக அறிவிக்கப்பட்டும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. பழைய பஸ் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்பதும் தஞ்சை தொகுதி இன்னும் வளர்ச்சிப்பாதையை எதிர்நோக்கி காத்திருக்கிறது. தஞ்சை தொகுதியில் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். என்றாலும் தொகுதியை பொறுத்தவரை இதுவரை வெற்றி. தோல்விகளை ஜாதி ஓட்டுக்கள் நிர்ணயித்தது கிடையாது.
மாவட்டம்
:
தஞ்சாவூர்
மொத்த வாக்காளர்கள்
:
193140
ஆண் வாக்காளர்கள்
:
95127
பெண் வாக்காளர்கள்
:
98013
திருநங்கை வாக்காளர்கள்
:
0

இந்தியாவில் மக்கள் தொகை எண்ணிக்கை 121 கோடி: வெளியானது கணக்கெடுப்பு முடிவுகள்

புதுடில்லி: இந்தியாவின் மக்கள்தொகை 121 கோடியாக உயர்ந்துள்ளது. சமீபத்தில் எடுக்கப்பட்ட புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்த எண்ணிக்கை தெரிய வந்துள்ளது. உலக மக்கள்தொகையில் இது 17.5 சதவீதமாகும். கடந்த பத்தாண்டுகளில் மட்டும் 18 கோடி அதிகரித்துள்ளது.

புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, சமீபத்தில் இந்தியா முழுவதும் எடுக்கப்பட்டது. இதில், அனைத்துவிதமான தகவல்கள் சேகரிக்கப்பட்டன. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை, மத்திய உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை முன்னிலையில், இந்திய சென்சஸ் கமிஷனர் சி.சந்திர மவுலி நேற்று வெளியிட்டார்.

இதன் விவரம் வருமாறு: * கடந்த பத்தாண்டுகளில் (2001 - 2011)மட்டும் மக்கள் எண்ணிக்கை 18 கோடி அதிகரித்துள்ளது. கடந்த 2001ம் ஆண்டு மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 21.15 சதவீதமாக இருந்தது. அது, 2011ம் ஆண்டு, 17.64 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 90 ஆண்டுகளைப் பார்க்கும் போது தற்போது மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் முதல் தடவையாக குறைந்திருக்கிறது.

* இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121 கோடி. இது உலக மக்கள்தொகையில் 17.5 சதவீதமாகும். அமெரிக்கா, இந்தோனேசியா, பிரேசில், பாகிஸ்தான், வங்கதேசம், ஆகிய நாடுகளின் மக்கள்தொகை முழுவதையும் கூட்டினால், அதை விட அதிகமாக நமது நாட்டின் மக்கள்தொகை உள்ளது.

* ஆண்களின் எண்ணிக்கை 62 கோடியே 37 லட்சம். பெண்கள் எண்ணிக்கை 58 கோடியே 65 லட்சம்.

* ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக உள்ளது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. குழந்தைகளின் விகிதம் 1,000 ஆண்களுக்கு 914 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளது. இது, இந்தியா சுதந்திரம் அடைந்தபின் ஏற்பட்ட மிகக்குறைவான விகிதமாகும்.

படித்தவர்கள் எண்ணிக்கை உயர்வு: * மக்கள்தொகையில், ஏழு வயதுக்கு மேற்பட்டவர்களில் படித்தவர்கள் எண்ணிக்கை 74 சதவீதம். படிக்காதவர்கள் 26 சதவீதம்.

* 2001ம் ஆண்டில் படித்தவர்களின் எண்ணிக்கை 64.83 சதவீதமாக இருந்தது, 2011ம் ஆண்டில் 74.04 சதவீதமாக உயர்ந்துள்ளது. பத்தாண்டுகளில் மட்டும் படித்தவர்கள் எண்ணிக்கை 9.21 சதவீதம் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

பெண் கல்வி உயர்வு: * 2001ம் ஆண்டில் பெண்களில் 53.67 சதவீதம் பேர் எழுத, படிக்க தெரிந்தவர்களாக இருந்தனர். இது, 2011ம் ஆண்டு 65.46 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2001ம் ஆண்டு எழுத, படிக்க தெரிந்த ஆண்களின் எண்ணிக்கை 75.26 சதவீதமாக இருந்தது. இது, 2011ம் ஆண்டு, 82.14 சதவீதமாக அதிகரித்துள்ளது. பத்தாண்டுகளில் ஆண்களை விட பெண்களின் படிப்பறிவு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

* மாநிலங்களில் அதிகம் எழுத, படிக்க தெரிந்தவர்கள் கேரளாவில் உள்ளனர். இங்கு 93.91 சதவீதம் பேர் எழுத்தறிவு பெற்றுள்ளனர். குறைவான எண்ணிக்கை உள்ள மாநிலம் பீகார். இங்கு 63.82 சதவீதம் பேர் எழுத்தறிவு பெற்றுள்ளனர்.

* மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாக உத்தரபிரதேசம் உள்ளது. இங்கு, 19 கோடியே 90 லட்சம் மக்கள் உள்ளனர்.

* மிகக்குறைவான மக்கள்தொகை லட்சத்தீவில் உள்ளது. இங்கு, 64 ஆயிரத்து 429 பேர் வசிக்கின்றனர்.

* உ.பி., மகாராஷ்டிரா மாநிலங்களின் மக்கள்தொகையை சேர்த்தால், அமெரிக்காவின் மக்கள்தொகையை விட அதிகமாகும்.

* அதிக மக்கள் நெருக்கம் உள்ள பகுதியாக டில்லியின் வடகிழக்கு மாவட்டம் உள்ளது. ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 37 ஆயிரத்து 346 பேர் வசிக்கின்றனர்.

* மக்கள் நெருக்கம் குறைவாக இருப்பது, அருணாச்சல பிரதேசம் திபாங் பள்ளத்தாக்கு பகுதியில். இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு ஒருவர் மட்டுமே வசிக்கிறார்.

* உ.பி.,க்கு அடுத்தபடியாக மக்கள்தொகை அதிகம்கொண்ட மாநிலங்கள்: மகாராஷ்டிரா- 11 கோடியே 23 லட்சம் , பீகார்-10 கோடியே 38 லட்சம், மேற்கு வங்கம் - 9 கோடியே 13 லட்சம், ஆந்திரா- 8 கோடியே 46 லட்சம். உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட சீனா. இதன் எண்ணிக்கை உலக மக்கள்தொகையில் 19.4 சதவீதமாகும்.

27 லட்சம் பேர் பங்கேற்பு: சென்சஸ் 2011, இந்தியாவின் 15வது மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும், இரண்டு கட்டமாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. வீடுகள் வாரியாக கணக்கெடுப்பு கடந்தாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை நடத்தப்பட்டது. பின்னர், மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தாண்டு பிப்., 9ம் தேதி முதல் 28ம் தேதி வரை நாடு முழுவதும் நடத்தப்பட்டது. மொத்தம் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நடத்தப்பட்ட கணக்கெடுப்பிற்கு செலவான தொகை 2,200 கோடி ரூபாய். கணக்கெடுக்கும்பணியில் மொத்தம் 27 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்காக மொத்தம் 8,000 டன் பேப்பர் செலவிடப்பட்டுள்ளது.