Friday, April 1, 2011

தஞ்சாவூர்

தொகுதி விவரம்: தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் இருந்தன. தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு திருவோனம். வலங்கைமான் ஆகிய தொகுதிகள் நீக்கப்பட்டு விட்டன. ஆனால் புதிதாக வேறு எந்த தொகுதிகளும் சேர்க்கப்படவில்லை. தற்போது தஞ்சை. ஒரத்தநாடு. பட்டுக்கோட்டை. பேராவூரணி. பாபநாசம். திருவையாறு. கும்பகோணம். திருவிடைமருதூர் ஆகிய 8 தொகுதிகள் உள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் தஞ்சை தொகுதியன் முடிவுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. குறிப்பாக 1962 தேர்தல் முடிவை சொல்லலாம். 19570&ல் தேர்தல் முதல் முறையாக குளித்தலையில் நின்று வெற்றி பெற்ற கருணாநிதி 62&ம் ஆண்டு தேர்தலில் தஞ்சை தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பரிசுத்த நாடார் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவர் ஏற்கனவே தஞ்சை தொகுதியில் 1957&ல் வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து காமராஜர் பிரசாரம் செய்தார். கருணாநிதியை ஆதரித்து எம்.ஜி.ஆர். பிரசாரம் செய்தார். இதில் கருணாநிதி வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் பரிசுத்த நாடார் 1.928 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அதன் பின்னர் 67&ல் நடந்த தேர்தலில் பரிசுத்தநாடார் வெற்றி பெற்றார். அதன் பிறகு பல தேர்தல்களில் தஞ்சை தொகுதியில் தி.மு.க.வே வெற்றி பெற்று வருகிறது. பெரும்பாலும் நகர பகுதிகளை உள்ளடக்கிய இந்த தொகதி 52&ல் இரட்டை தொகதியாக இருந்தது. ஏதாவது ஒரு பொது உறுப்பினரும். ஒரு தாழ்த்ப்பட்ட உறுப்பினரும் தேர்ந்து எடுக்கப்பட்டனர். பின்பு அடுத்த தேர்தலில் பொது தொகுதியாக மாற்றப்பட்டது. தற்போது தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவோணம் தொகுதி நீக்கப்பட்டு. அந்த பகுதிகளில் கந்தர்வக்கோட்டை தொகுதியில் சேர்க்கப்பட்டது. பல்வேறு கிராம பகுதிகளில் தஞ்சை தொகுதியுடன் இணைக்கப்பட்டு உள்ளது. தொகுதி சீரமைப்புக்கு பிறகு தஞ்சை தொகுதிகளின் வரிசையில் 174&வது இடத்தை பிடித்துள்ளது. இந்த தொகுதி பெரும்பாலும் விவசாயம் சார்ந்தது. தஞ்சை தொகுதியில் தற்போது தஞ்சாவூர் நகரம் மற்றும் தாலுகா. புதுப்பட்டினம். ராவுசாகிதோட்டம். கடகடப்பை. மேலசித்தர்காடு. புன்னைநல்லூர். புளியந்தோப்பு. பிள்ளையார்பட்டி. நீலகிரி. நாஞ்சிக்கோட்டை. வல்லம் ஆகிய ஊர்கள் தஞ்சாவூர் தொகுதியில் அடங்கி உள்ள பகுதிகளாகும். தஞ்சை சட்டமன்ற தொகுதியில் மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 140 வாக்களார்களில் 95 ஆயரத்து 127 ஆண்கள். 98 ஆயிரத்து 13 பேர் பெண்கள். 82 இடங்களில் 228 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதியில் 2 ஆயிரத்து 886 பெண்கள் வாக்காளர்கள் இங்கு ஆண் வாக்காளர்களை விட அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தல் காங்கிரசின் கோட்டையாக திகழ்ந்த தஞ்சை தொகுதி பின்னர் தி.மு.க.வின் கோட்டையாக திகழ ஆரம்பித்தது. 8 முறை இங்கு தி.மு.க. வெற்றி பெற்று உள்ளது. கடந்த 3 தேர்தல்களில் தொடர்ச்சியாக தி.மு.க. இங்கு பெற்று வந்துள்ளது. அ.தி.மு.க. 1 முறை பெற்று உள்ளது. இந்த தொகுதியில் கள்ளர்கள். மகமுடையார். முக்குலத்தோர். தாழ்த்தப்பட்டோர். முஸ்லிம்கள். கிறிஸ்தவர்கள். செட்டியார்கள். அய்யர். என அனைத்து சாதியனரும் வசித்து வருகிறார்கள். தஞ்சை தொகுதி 1995&ம் ஆண்டு நடந்த உலகத்தமிழ் மாநாட்டின் போது பல்வேறு வளர்ச்சிபணிகளை கண்டது. குறிப்பாக புதிய பஸ் நிலையம். மேம்பாலம் போன்ற பணிகள் நடைபெற்றது. அப்போது அறிவிக்கப்பட்ட ரிங் ரோடு இன்னும் பாதியிலேயே நிற்கிறது. அதன் பின்னர் பெரியகோவில் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவையட்டி ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டு சாலைபணிகள் உள்பட பல்பேறு மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டன. இந்த நிலையில் சாந்தப்பிள்ளை கேட் பகுதியில் மேலும் ஒரு கீழ் பாலம் அமைப்பதாக அறிவிக்கப்பட்டும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. பழைய பஸ் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்பதும் தஞ்சை தொகுதி இன்னும் வளர்ச்சிப்பாதையை எதிர்நோக்கி காத்திருக்கிறது. தஞ்சை தொகுதியில் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். என்றாலும் தொகுதியை பொறுத்தவரை இதுவரை வெற்றி. தோல்விகளை ஜாதி ஓட்டுக்கள் நிர்ணயித்தது கிடையாது.
மாவட்டம்
:
தஞ்சாவூர்
மொத்த வாக்காளர்கள்
:
193140
ஆண் வாக்காளர்கள்
:
95127
பெண் வாக்காளர்கள்
:
98013
திருநங்கை வாக்காளர்கள்
:
0

No comments:

Post a Comment