Friday, April 1, 2011

tamilnadu map


தி.மு.க கூட்டணி அறிக்கை

தி.மு.க கூட்டணி அறிக்கை
பரம ஏழைகளுக்கு கிலோ ரூ. 1 விலையில் மாதந்தோறும் வழங்கப்படும் 35 கிலோ அரிசி, இனி மேல் இலவசமாகவே வழங்கப்படும்
60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு உள்ளூர் அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய பாஸ் வழங்கப்படும்
இலவசமாக கிரைண்டர் அல்லது மிக்சி
குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை
அரசு கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்கப்படும்
முதியோர், ஆதரவற்ற பெண்களுக்கான உதவித்தொகை ரூ. 750 ஆக உயர்த்தப்படும்
வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் வழங்கப் படும் தொகை ரூ. 75 ஆயி ரத்தில் இருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தப்படும்
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடனு தவி, ரூ. 4 லட்சமாக உயர்த் தப்படும்
சென்னை அருகே குறைந்த வாடகை கொண்ட வீடுகள் கட்டித் தரப்படும்
குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை
ரேஷன் கடைகளில் கிலோ அரிசி 1 ரூபாய் திட்டம், மானிய விலையில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, மளிகை, கோதுமை மாவு வழங்கும் திட்டம்
உழவர் சந்தை போன்று, நகர்ப்புறங்களில் நுகர்வோர் சந்தைகள் அமைக்கப்படும்
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண, சென்னை அருகே புதிய துணை நகரம் அமைக்கப்படும்
திருநங்கைகளுக்கும் சுய உதவிக் குழுக்கள் அமைக்க நடவடிக்கை
ஈழத்தமிழர்கள் அமைதியாக வாழ இலங்கை அரசை வற்புறுத்துவோம்
தடையின்றி மின்சாரம் கிடைக்க மின்உற்பத்தி திட்டங்கள் அதிகரிக்கப்படும்
விவசாய நிலங்கள், வீட்டு மனைகளாக மாற்றுவது தடுக்கப்படும்
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் 3 இலவச சீருடைகள் வழங்கப்படும்
கல்வியை மாநில அரசு பட்டியலில் கொண்டு வர வலியுறுத்தப்படும். தரமான இலவச கல்வி அளிக்க அரசு பள்ளிகளின் தரம் உயர்த் தப்படும்
தனியார் மருத்துவமனைகளில் கட்டணங்களை ஒழுங்குப் படுத்த அரசு சார்பில் மருத்துவ கட்டண ஒழுங்கு முறை ஆணையம் அமைக் கப்படும்

தஞ்சாவூர்

தொகுதி விவரம்: தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் இருந்தன. தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு திருவோனம். வலங்கைமான் ஆகிய தொகுதிகள் நீக்கப்பட்டு விட்டன. ஆனால் புதிதாக வேறு எந்த தொகுதிகளும் சேர்க்கப்படவில்லை. தற்போது தஞ்சை. ஒரத்தநாடு. பட்டுக்கோட்டை. பேராவூரணி. பாபநாசம். திருவையாறு. கும்பகோணம். திருவிடைமருதூர் ஆகிய 8 தொகுதிகள் உள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் தஞ்சை தொகுதியன் முடிவுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. குறிப்பாக 1962 தேர்தல் முடிவை சொல்லலாம். 19570&ல் தேர்தல் முதல் முறையாக குளித்தலையில் நின்று வெற்றி பெற்ற கருணாநிதி 62&ம் ஆண்டு தேர்தலில் தஞ்சை தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பரிசுத்த நாடார் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவர் ஏற்கனவே தஞ்சை தொகுதியில் 1957&ல் வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து காமராஜர் பிரசாரம் செய்தார். கருணாநிதியை ஆதரித்து எம்.ஜி.ஆர். பிரசாரம் செய்தார். இதில் கருணாநிதி வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் பரிசுத்த நாடார் 1.928 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அதன் பின்னர் 67&ல் நடந்த தேர்தலில் பரிசுத்தநாடார் வெற்றி பெற்றார். அதன் பிறகு பல தேர்தல்களில் தஞ்சை தொகுதியில் தி.மு.க.வே வெற்றி பெற்று வருகிறது. பெரும்பாலும் நகர பகுதிகளை உள்ளடக்கிய இந்த தொகதி 52&ல் இரட்டை தொகதியாக இருந்தது. ஏதாவது ஒரு பொது உறுப்பினரும். ஒரு தாழ்த்ப்பட்ட உறுப்பினரும் தேர்ந்து எடுக்கப்பட்டனர். பின்பு அடுத்த தேர்தலில் பொது தொகுதியாக மாற்றப்பட்டது. தற்போது தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவோணம் தொகுதி நீக்கப்பட்டு. அந்த பகுதிகளில் கந்தர்வக்கோட்டை தொகுதியில் சேர்க்கப்பட்டது. பல்வேறு கிராம பகுதிகளில் தஞ்சை தொகுதியுடன் இணைக்கப்பட்டு உள்ளது. தொகுதி சீரமைப்புக்கு பிறகு தஞ்சை தொகுதிகளின் வரிசையில் 174&வது இடத்தை பிடித்துள்ளது. இந்த தொகுதி பெரும்பாலும் விவசாயம் சார்ந்தது. தஞ்சை தொகுதியில் தற்போது தஞ்சாவூர் நகரம் மற்றும் தாலுகா. புதுப்பட்டினம். ராவுசாகிதோட்டம். கடகடப்பை. மேலசித்தர்காடு. புன்னைநல்லூர். புளியந்தோப்பு. பிள்ளையார்பட்டி. நீலகிரி. நாஞ்சிக்கோட்டை. வல்லம் ஆகிய ஊர்கள் தஞ்சாவூர் தொகுதியில் அடங்கி உள்ள பகுதிகளாகும். தஞ்சை சட்டமன்ற தொகுதியில் மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 140 வாக்களார்களில் 95 ஆயரத்து 127 ஆண்கள். 98 ஆயிரத்து 13 பேர் பெண்கள். 82 இடங்களில் 228 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதியில் 2 ஆயிரத்து 886 பெண்கள் வாக்காளர்கள் இங்கு ஆண் வாக்காளர்களை விட அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தல் காங்கிரசின் கோட்டையாக திகழ்ந்த தஞ்சை தொகுதி பின்னர் தி.மு.க.வின் கோட்டையாக திகழ ஆரம்பித்தது. 8 முறை இங்கு தி.மு.க. வெற்றி பெற்று உள்ளது. கடந்த 3 தேர்தல்களில் தொடர்ச்சியாக தி.மு.க. இங்கு பெற்று வந்துள்ளது. அ.தி.மு.க. 1 முறை பெற்று உள்ளது. இந்த தொகுதியில் கள்ளர்கள். மகமுடையார். முக்குலத்தோர். தாழ்த்தப்பட்டோர். முஸ்லிம்கள். கிறிஸ்தவர்கள். செட்டியார்கள். அய்யர். என அனைத்து சாதியனரும் வசித்து வருகிறார்கள். தஞ்சை தொகுதி 1995&ம் ஆண்டு நடந்த உலகத்தமிழ் மாநாட்டின் போது பல்வேறு வளர்ச்சிபணிகளை கண்டது. குறிப்பாக புதிய பஸ் நிலையம். மேம்பாலம் போன்ற பணிகள் நடைபெற்றது. அப்போது அறிவிக்கப்பட்ட ரிங் ரோடு இன்னும் பாதியிலேயே நிற்கிறது. அதன் பின்னர் பெரியகோவில் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவையட்டி ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டு சாலைபணிகள் உள்பட பல்பேறு மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டன. இந்த நிலையில் சாந்தப்பிள்ளை கேட் பகுதியில் மேலும் ஒரு கீழ் பாலம் அமைப்பதாக அறிவிக்கப்பட்டும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. பழைய பஸ் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்பதும் தஞ்சை தொகுதி இன்னும் வளர்ச்சிப்பாதையை எதிர்நோக்கி காத்திருக்கிறது. தஞ்சை தொகுதியில் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். என்றாலும் தொகுதியை பொறுத்தவரை இதுவரை வெற்றி. தோல்விகளை ஜாதி ஓட்டுக்கள் நிர்ணயித்தது கிடையாது.
மாவட்டம்
:
தஞ்சாவூர்
மொத்த வாக்காளர்கள்
:
193140
ஆண் வாக்காளர்கள்
:
95127
பெண் வாக்காளர்கள்
:
98013
திருநங்கை வாக்காளர்கள்
:
0

இந்தியாவில் மக்கள் தொகை எண்ணிக்கை 121 கோடி: வெளியானது கணக்கெடுப்பு முடிவுகள்

புதுடில்லி: இந்தியாவின் மக்கள்தொகை 121 கோடியாக உயர்ந்துள்ளது. சமீபத்தில் எடுக்கப்பட்ட புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்த எண்ணிக்கை தெரிய வந்துள்ளது. உலக மக்கள்தொகையில் இது 17.5 சதவீதமாகும். கடந்த பத்தாண்டுகளில் மட்டும் 18 கோடி அதிகரித்துள்ளது.

புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, சமீபத்தில் இந்தியா முழுவதும் எடுக்கப்பட்டது. இதில், அனைத்துவிதமான தகவல்கள் சேகரிக்கப்பட்டன. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை, மத்திய உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை முன்னிலையில், இந்திய சென்சஸ் கமிஷனர் சி.சந்திர மவுலி நேற்று வெளியிட்டார்.

இதன் விவரம் வருமாறு: * கடந்த பத்தாண்டுகளில் (2001 - 2011)மட்டும் மக்கள் எண்ணிக்கை 18 கோடி அதிகரித்துள்ளது. கடந்த 2001ம் ஆண்டு மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 21.15 சதவீதமாக இருந்தது. அது, 2011ம் ஆண்டு, 17.64 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 90 ஆண்டுகளைப் பார்க்கும் போது தற்போது மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் முதல் தடவையாக குறைந்திருக்கிறது.

* இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121 கோடி. இது உலக மக்கள்தொகையில் 17.5 சதவீதமாகும். அமெரிக்கா, இந்தோனேசியா, பிரேசில், பாகிஸ்தான், வங்கதேசம், ஆகிய நாடுகளின் மக்கள்தொகை முழுவதையும் கூட்டினால், அதை விட அதிகமாக நமது நாட்டின் மக்கள்தொகை உள்ளது.

* ஆண்களின் எண்ணிக்கை 62 கோடியே 37 லட்சம். பெண்கள் எண்ணிக்கை 58 கோடியே 65 லட்சம்.

* ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக உள்ளது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. குழந்தைகளின் விகிதம் 1,000 ஆண்களுக்கு 914 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளது. இது, இந்தியா சுதந்திரம் அடைந்தபின் ஏற்பட்ட மிகக்குறைவான விகிதமாகும்.

படித்தவர்கள் எண்ணிக்கை உயர்வு: * மக்கள்தொகையில், ஏழு வயதுக்கு மேற்பட்டவர்களில் படித்தவர்கள் எண்ணிக்கை 74 சதவீதம். படிக்காதவர்கள் 26 சதவீதம்.

* 2001ம் ஆண்டில் படித்தவர்களின் எண்ணிக்கை 64.83 சதவீதமாக இருந்தது, 2011ம் ஆண்டில் 74.04 சதவீதமாக உயர்ந்துள்ளது. பத்தாண்டுகளில் மட்டும் படித்தவர்கள் எண்ணிக்கை 9.21 சதவீதம் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

பெண் கல்வி உயர்வு: * 2001ம் ஆண்டில் பெண்களில் 53.67 சதவீதம் பேர் எழுத, படிக்க தெரிந்தவர்களாக இருந்தனர். இது, 2011ம் ஆண்டு 65.46 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2001ம் ஆண்டு எழுத, படிக்க தெரிந்த ஆண்களின் எண்ணிக்கை 75.26 சதவீதமாக இருந்தது. இது, 2011ம் ஆண்டு, 82.14 சதவீதமாக அதிகரித்துள்ளது. பத்தாண்டுகளில் ஆண்களை விட பெண்களின் படிப்பறிவு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

* மாநிலங்களில் அதிகம் எழுத, படிக்க தெரிந்தவர்கள் கேரளாவில் உள்ளனர். இங்கு 93.91 சதவீதம் பேர் எழுத்தறிவு பெற்றுள்ளனர். குறைவான எண்ணிக்கை உள்ள மாநிலம் பீகார். இங்கு 63.82 சதவீதம் பேர் எழுத்தறிவு பெற்றுள்ளனர்.

* மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாக உத்தரபிரதேசம் உள்ளது. இங்கு, 19 கோடியே 90 லட்சம் மக்கள் உள்ளனர்.

* மிகக்குறைவான மக்கள்தொகை லட்சத்தீவில் உள்ளது. இங்கு, 64 ஆயிரத்து 429 பேர் வசிக்கின்றனர்.

* உ.பி., மகாராஷ்டிரா மாநிலங்களின் மக்கள்தொகையை சேர்த்தால், அமெரிக்காவின் மக்கள்தொகையை விட அதிகமாகும்.

* அதிக மக்கள் நெருக்கம் உள்ள பகுதியாக டில்லியின் வடகிழக்கு மாவட்டம் உள்ளது. ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 37 ஆயிரத்து 346 பேர் வசிக்கின்றனர்.

* மக்கள் நெருக்கம் குறைவாக இருப்பது, அருணாச்சல பிரதேசம் திபாங் பள்ளத்தாக்கு பகுதியில். இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு ஒருவர் மட்டுமே வசிக்கிறார்.

* உ.பி.,க்கு அடுத்தபடியாக மக்கள்தொகை அதிகம்கொண்ட மாநிலங்கள்: மகாராஷ்டிரா- 11 கோடியே 23 லட்சம் , பீகார்-10 கோடியே 38 லட்சம், மேற்கு வங்கம் - 9 கோடியே 13 லட்சம், ஆந்திரா- 8 கோடியே 46 லட்சம். உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட சீனா. இதன் எண்ணிக்கை உலக மக்கள்தொகையில் 19.4 சதவீதமாகும்.

27 லட்சம் பேர் பங்கேற்பு: சென்சஸ் 2011, இந்தியாவின் 15வது மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும், இரண்டு கட்டமாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. வீடுகள் வாரியாக கணக்கெடுப்பு கடந்தாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை நடத்தப்பட்டது. பின்னர், மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தாண்டு பிப்., 9ம் தேதி முதல் 28ம் தேதி வரை நாடு முழுவதும் நடத்தப்பட்டது. மொத்தம் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நடத்தப்பட்ட கணக்கெடுப்பிற்கு செலவான தொகை 2,200 கோடி ரூபாய். கணக்கெடுக்கும்பணியில் மொத்தம் 27 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்காக மொத்தம் 8,000 டன் பேப்பர் செலவிடப்பட்டுள்ளது.

Tuesday, March 1, 2011

பூமியின் மதிப்பு ரூ.210 ஆயிரம் லட்சம் கோடி; விஞ்ஞானி தகவல்

 செவ்வாய்க்கிழமை, மார்ச் 01, 12:12 PM IST முந்தைய பதிவுகள் 1


இமெயில் பிரதி திரைப்படம் லண்டன், மார்ச். 1-





அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் வானியல் விஞ்ஞானி கிரக் லவ்க்ளின். இவர் பூமியின் மதிப்பை கணக்கிட்டார். தற்போது அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கெப்லர் என்ற சக்தி வாய்ந்த விண்வெளி ஓடத்தை விண்ணில் நிலை நிறுத்தியுள்ளது.



அது விண்வெளியில் உள்ள அனைத்து கிரகங்களையும் படம் பிடித்து அனுப்புகிறது. இதன் மூலம் கிரகங்களின் தன்மைகள் அவை குறித்த அதிசய தகவல்கள் கிடைத்து வருகின்றன.அதன்படி பூமி மீது பறந்து கெப்லர் விண்கலம் சுமார் 2 ஆண்டுகளாக அனுப்பிய தகவல்களின் அடிப்படையில் பூமியின் மதிப்பை அவர் கணக்கிட்டுள்ளார்.



அதன்படி பூமியின் மதிப்பு ரூ. 210 ஆயிரம் லட்சம் கோடி என தெரிவித்துள்ளார். பூமியின் வயது, அதன் அளவு மற்றும் தட்டவெப்ப நிலை உள்ளிட்ட மற்ற தன்மைகளை கொண்டு அவர் கணக்கிட்டுள்ளார். பூமி மிகவும் அதிசயமானது என்றும் வர்ணித்துள்ளார்.



செவ்வாய் கிரகத்தின் மதிப்பு வெறும் ரூ. 7 லட்சம் மட்டுமே என்றும் வெள்ளி கிரகத்தின் மதிப்பு அதைவிட குறைவு என்றும் அவர் கணக்கிட்டுள்ளார். வாண்வெளியில் 1235-க்கும் மேற்பட்ட கிரகங்கள் உள்ளன. அவை வாழ தகுதியற்றவைகளாக உள்ளன. இதனால் அவை மதிப்பற்றவைகளாக உள்ளன என்றும் கூறியுள்ளார். 1 1