Sunday, May 22, 2011

சைவத் திருமணச் சடங்கு




தமிழ் - தமிழர் பழக்கங்கள்


'திரு' என்பது தெய்வத்தன்மை எனவும், 'மணம்' என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு, 'திருமணம்' என்பது மேம்மையான தெய்வீகம் வாய்ந்த இணைதல் எனப்படுகின்றது. அதாவது இரு இதயங்கள் இணைவது எனவும் கூறலாம்.


தமிழர்களின் இந்துத் திருமணம் ஆகம் மரபுச் சடங்குகளுடன் சில சிறப்பு அம்சங்களையும் தழுவி நடைபெறுகின்றன. இச்சடங்குகளை சமய குருக்கள் சமய முறைப்படி நெருப்பு முன்னினையில் இறைவன் ஆசியுடன் நடத்தி வைக்கிறார். திருமண நிகழ்வில் முக்கியமான நிகழ்ச்சி நல்வேளையில் தாலி கட்டுதலாகும். இதனை “மாங்கல்ய தாரணம்” எனக் கூறுவர். தாலி கட்டியதும் அப்பெண் “சுமங்கலி” அதாவது திருமணமானவள் என்ற தகுதி பெறுகின்றாள்.

இரு வீட்டாரும் முதலில் சாதகப் பொருத்தத்தை ஆராய்வார்கள். தமிழ்நாட்டில் பெண்பார்க்கும் படல்போன்று இலங்கையிலும் பெண்ணைப் பொதுவிடங்களில் பார்ப்பது வழக்கமாகவுள்ளது. பின் நிச்சயதார்த்தத்தை உறுதிசெய்யப் பெண்வீட்டார் தாம்பூலம், பலகாரம், பழங்களோடும் உறவினரோடும் மணமகன் வீட்டிற்கு நல்ல நாள் பார்த்துச் செல்வர். இதன்பின் இரு வீட்டாரும் திருமணநாளைச் சோதிடரிடம் கேட்டு நிச்சயிப்பர். அத்தோடு பொன்னுருக்கலிற்கும் ஒரு நாளை நிச்சயிப்பர்.


பொன்னுருக்கல்

திருமண நாளுக்கு முன்பு ஒரு சுப நாளில் மணமகன் இல்லத்தில் அல்லது ஆசாரி வீட்டில் பொன்னுருக்கல் நடைபெறும். இதில் மணப்பெண்ணைத் தவிர பெண்ணின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொள்வர். பெண்வீட்டார் ஓர் இனிப்புப் பண்டம் (கொழுக்கட்டை) கொண்டு செல்லுதல் சம்பிரதாயம்.

மணமகன் வீட்டு வாசலில் முறைப்படி நிறைகுடம், குத்துவிளக்கு, பன்னீர்தட்டு, குங்குமம், சந்தனம் வைத்து பொன்னுருக்கும் இடத்தில் ஒரு நிறைகுடம் குத்துவிளக்குகள் தேங்காய், மாவிலைகள், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், மஞ்சள்கட்டை (துண்டு), தேசிக்காய், அறுகம்புல், பூக்கள், ஒரு சட்டியில் தண்ணீர், தேங்காய் உடைக்கக் கத்தி, விபூதி, குங்குமம், சந்தனம், மஞ்சளில் பிள்ளையார், சாம்பிராணியும் தட்டும், கற்பூரம் முதலிய முக்கியமாகத் தேவைப்படும் பொருட்களாகும்.


திருமாங்கல்யத்திற்குரிய தங்கநாணயத்தை (பவுணை) ஆலயத்தில் (இறைவனிடத்தில்) வைத்து பூசை செய்து ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ, பழத்துடன் நாணயத்தையும் வைத்துக் கொண்டு வந்து பூஜையறையில் வைக்க வேண்டும். பொன்னுருக்கும் நாளன்று அதை மணமகனின் பெற்றோர் அல்லது பெரியோர் எடுத்து மணமகனிடம் கொடுக்க அவர் அதை ஆச்சாரியாரிடம் கொடுத்து உருக்கவேண்டும். ஆச்சாரியார் கும்பம் வைத்து விளக்கேற்றி தூபதீபம் காட்டி வெற்றிலை, பாக்கு வாழைப்பழம் முதலியவை வைத்து தேங்காய் உடைத்துப் பூசை செய்து பொன்னை உருக்குவார். உருக்கிய பின் தாய்மாமன் தேங்காய் உடைத்துப் பூசை செய்து அந்த இளநீரை உருக்கிய தணலில் ஊற்றி தீயை தணிப்பார். பின் ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு, பழம், பூ, மஞ்சள், குங்குமம், தேசிக்காய் வைத்து வெற்றிலை மேல் உருக்கிய தங்கத்தையும் வைத்து மணமகனிடம் ஆசாரியார் கொடுப்பார். அதை மணமகன் வந்துள்ள சபையோருக்குக் காண்பித்து, அதன் பின் ஆசாரியாரிற்கு அரிசி காய்கறியுடன் தட்சணை அளித்து உருக்கிய தங்கத்தைத் திருமாங்கல்யம் செய்ய ஒப்படைக்க வேண்டும்.

பின்னர் விருந்துபசாரத்தில் அனைவரும் கலந்து கொள்வர். மணமகன் வீட்டில் இருந்து தோழி விருந்தில் ஒரு பகுதியை மணமகளின் வீட்டிற்குச் சென்று மணமகளிடம் கொடுப்பர். இதே நாளில் இரு வீடுகளிலும் திருமணத்திற்குரிய பலகாரங்கள் செய்யத் தொடங்குவார்கள். முதன் முதலாக இனிப்புப் பலகாரங்கள் செய்ய வேண்டும் என்பதால் சீனி அரியதரம் செய்யலாம். அதற்குரிய மாவைக் குழைத்து வைத்தால் கன்னிக்கால் ஊற்றியபின் பலகாரம் சுடலாம். (இந்த நாளில் இருந்து திருமண நாள்வரை மணமக்கள் ஒருவரை ஒருவர் பார்க்கக் கூடாதென்பது பழையகால சம்பிரதாயம்.)

கன்னிக்கால் ஊன்றல்


இதே நாள் பெண் வீட்டிலும் மணமகன் வீட்டிலும் தனித்தனியே அவர்கள் வளவில் ஈசான (வடகிழக்கு) மூலையில் முகூர்த்தக் கால் அல்லது கன்னிக்கால் ஊன்ற வேண்டும். அதற்கு இப்போது கலியாண முள் முருங்கை மரத்தில் ஒரு தடியை வெட்டி அதன்மேல் நுனியில் 5 மாவிலைகளை மஞ்சள் பூசிய கயிறால் கட்டி, இடையில் ஒரு மஞ்சள் பூசிய வெள்ளைத் துணியில் ஒரு செப்புக்காசு முடிந்து கட்டி விட வேண்டும். பெரியவர் ஒருவர் அத்தடியை நிலத்தில் ஊன்றியதும் அதற்கு தேங்காய் உடைத்து சாம்பிராணி கற்பூரம் காட்ட வேண்டும். அதனடியில் நவதானியத்தொடு பவளம் அல்லது நவமணிகள் இட்டு நீர் பால் ஊற்றி (3 சுமங்கலிப் பெண்கள்) மரத்திற்குத் திருநீறு, சந்தனம், குங்குமம் சார்த்தவேண்டும். இது நன்கு வளர வேண்டும் என்று நினைத்து கும்பத் தண்ணீரை ஊற்றலாம்.

மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து வெற்றிலை பாக்கு பழம் வைத்து தேங்காய் உடைத்துத் தீபம் காட்டி பந்தல்கால் ஊன்றுவார்கள். பந்தல் காலைத் தொடர்ந்து பந்தல் அமைக்கும் வேலை தொடரும். மணமகள் வீட்டில் ஊன்றிய பின் மணமகன் வீட்டிற்கும் செய்ய வேண்டும்.

முகூர்த்தக்கால் ஊன்றிய பின் இரு வீட்டாரும் திருமணச் சடங்குகள் முற்றாக முடிவடையும் வரை எந்தவிதமான துக்க நிகழ்ச்சிகளிலும் பங்குபெறுதல் கூடாது. (பந்தக்கால் ஊன்றுபவருக்குத் தட்சணை கொடுக்கவேண்டும்.)


முளைப்பாலிகை போடல்

பெண் வீட்டில் மூன்று அல்லது ஐந்து மண்சட்டிகளில் மண்பரப்பி நீர் ஊற்றவும். பாலில் ஊறவைத்த நவதானியங்களை 3 அல்லது 5 சுமங்கலிப் பெண்கள் அச்சட்டிகளில் தூவி நீரும் பாலும் தெளிக்க வேண்டும். (3 முறை). இவற்றைச் சாமி அறைக்குள் வைத்து திருமணத் தன்று மணவறைக்குக் கொண்டு போக வேண்டும். அநேகமாக பொன்னுருக்கலன்று செய்வார்கள் (இதை 3 நாட்களுக்கு முன்னாவது செய்தால் நவதானியம் வளர்ந்து இருக்கும்.

முளைப்பாலிகை இடுவதன் நோக்கம் திருமணம் செய்து மணமக்களும் அவர்கள் குடும்பமும் முளைவிட்டு பல்கிப் பெருகி வாழ வேண்டும் என்பதே. “விரித்த பாலிகை முளைக்கும் நிரையும்” என்கின்றது சிலப்பதிகாரம். இந்தப் பாலிகையானது திருமணத்திற்குப் பின் நதியிலே சேர்த்து விடலாம்.


நவதானியம் ஆவன:

நெல், கோதுமை, பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, கடலை என்பனவாம்.


பந்தல் அமைத்தல்

முகடுடைய பந்தல் அமைக்கும் பழக்கம் அக்காலத்தில் நடைமுறையில் இருந்து வந்துள்ளது. பந்தலின் உள்பகுதியில் மேலுக்கு துணிகளைக் கட்டுவார்கள். அழகுக்காகவும் திருமணச்சடங்குகள் நடக்கும் பொழுது பந்தலின் மேலிருந்து தூசி அழுக்குப் பொருட்கள், பல்லி போன்றன விழுந்துவிடாமல் இருப்பதற்காகவும் இந்த ஏற்பாடுகள் செய்யப் படுகின்றன. பந்தலை கமுகு, வாழை, தென்னை ஓலைகளால் அலங்கரிப்பர்.


வாழைமரம் ஒருமுறைதான் குலைபோடும் அதுபோல் எமது வாழ்விலும் திருமணம் ஒருமுறைதான் என்பதை உணர்த்துகிறது. பாக்கு கொத்துக் கொத்தாகக் காய்ப்பதால் இது தம்பதிகள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. வாழையும் தென்னையும் கற்பகதரு இவை அழியாப் பயிர்கள் ஆகும். தென்னை நூற்றாண்டு வாழக் கூடியது. “வாழையடி வாழையாக” வளர்வது தேங்காயும் வாழைப்பழமும் இறை வழிபாட்டில் முக்கியமாகின்றது. தம்பதிகள் நிலைத்து நின்று அனைவருக்கும் பயன் படக்கூடியதாக வாழ வேண்டும் என்ற தத்துவத்தையே உணர்த்துகிறது.


திருமணம் வசதிக்கேற்ப பெண்வீட்டிலோ, கோயிலிலோ அல்லது வேறுமண்டபத்திலோ வைக்கலாம். அப்படி வேறு மண்டபத்தில் வைப்பதானால் இருவரது வீட்டு வாசல்களிலும் மண்டபவாயிலில் மாவிலை, தோரணம், வாழைமரங்களால் அலங்கரிக்கப்படவேண்டும்.


வாழைமரம் கட்டுவதன் நோக்கம் வாழையடி வாழையாக வாழைமரம் தழைத்து வருவது போல, நமது சந்ததியும் பெருக வேண்டும் என்பதாகும். மாவிலை தோரணங்கள் மங்கள முறையாகக் கட்ட வேண்டும். வாசலில் நிறைகுடம் வைக்கவேண்டும். வசதிக்கேற்ப வீடுகளையும் மண்டபத்தையும் அலங்கரிக்கலாம். மண்டபத்தில் நன்கு அலங்கரிக்கப்பட்டே மணவறை கிழக்கு நோக்கி அமைக்கப் படவேண்டும். மணவறையின் முன்பு சுவாமி அம்பாள் கும்பங்கள், சந்திரகும்பம், விநாயக பூஜை, பஞ்சகௌவ்விய பூசைகென ஒரு கும்பம், அக்கினி கிரியைக்குரிய பாத்திரம், அம்மி, மஞ்சள் நீர் ஆகியவை வைக்கப்படும்.


அரசாணியைச் சுற்றி 4 விளக்குகள், 4 நிறைகுடங்கள், வைக்கப்படும். சந்திர கும்பத்திற்கு முன்பாக முளைப்பாலிகை சட்டிகள் வைக்கப்படும்.

குருக்கள் தன் முன்பாக புண்ணியதானத்திற்குரியவற்றை வைத்து அதன் பக்கத்தில் மஞ்சள் பிள்ளையாரும், ஒரு கிண்ணத்தில் பஞ்சகவ்வியமும் வைத்திருப்பார். அரசாணி மரமும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அதற்கு ஒரு பக்கம் பாலிகைச் சட்டியும், நடுவில் அம்மியும், அதன் பின் சிவன், பார்வதி கும்பங்களும் மறுபக்கம் நவக்கிரக கும்பங்களும் ஆக முன்பாக அரசாணிப்பானையும் நான்கு கும்பங்களும் வைத்து கல்யாண மண்டபம் மேல் கூறியபடி நிறுவப்பட்டிருக்கும்.

மணமகன் அழைப்பு

திருமணத்தன்று மணமகனை கிழக்குமுகமாக ஓர் பலகையில் இருத்தி அவரின் கைகளில் வெற்றிலையைச் சுருட்டி அதற்குள் சில்லைக் காசுகள் வைத்துக் கொடுக்கவேண்டும். அவருக்கு முன்னால் நிறைகுடம், குத்துவிளக்கு, தாம்பூலம் வைக்கவேண்டும். 3, 5, 7 என்ற எண்ணிக்கையில் ஆண்களும் பெண்களும் அறுகும் காசும் பாலும் கொண்ட கலவையை மணமகனின் தலையில் 3 முறை வைக்க வேண்டும். மணமகனின் தலையில் ஓர் வெள்ளைத் துண்டை விரித்து வைத்து அதன் மேல் பாலையிடலாம். முதல் பால் வைக்கும் போது வடக்கு முகமாயிருந்து தாய் மாமன் தேங்காய் உடைக்கவேண்டும். பால் வைத்ததும் மணமகன் போய் குளித்துவிட்டு வரவேண்டும். பெண் வீட்டாரும் இதில் கலந்துகொள்வார்கள். மணமகன் சாமி அறையில் சாமி கும்பிட்டு கற்பூரம் காட்டித் தாய் தந்தையரை விழுந்து வணங்க வேண்டும். பெண்வீட்டார் மணமகன் வீட்டிற்கு வரும்போது ஒரு தட்டில் வாழைப்பழம், ஒரு தட்டில் பலகாரம், இன்னொரு தட்டில் பூ எல்லாமாக 3 தட்டுகளுடன் வரவேண்டும். எல்லோருக்கும் விருந்தோம்பல் நடைபெறும்.


கடுக்கண் பூணல்

முன்னாளில் கடுக்கண் பூணல் என்ற சடங்கும் நடைபெற்றது இப்போது அது அருகி விட்டது. மணமகனை கிழக்கு முகமாக அலங்கரிக்கப் பட்ட இடத்தில் இருத்தி விநாயகர் வழிபாடு செய்து தேங்காய் உடைத்து மணமகனுக்கு கடுக்கண் பூட்டு வைபவம் செய்யலாம்.


தலைப்பாகை வைத்தல்



மணமகன் கிழக்கு நோக்கி நிற்க ஒரு பெரியவரைக் கொண்டு தலைபாகை வைக்க வேண்டும். உத்தரியம் அணிய வேண்டும். உத்தரியம் இடும்போது இடந்தோளின் மேலாக வந்து வலப்பாக இடுப்பளவில் கட்ட வேண்டும் (அந்தணர் பூணூல் அணிவது போல). அங்கு அவருக்குப் பூமாலை அணிவிப்பர். தோழனுக்கும் இதே போல் உடை உடுத்தி தலைப்பாகையும் உத்தரியமும் இட்டு மணமகனோடு அழைத்து வருவர். தோழன் மணமகனின் இடப் பக்கமாக நிற்பார்.

மணமகன் புறப்படுதல்

வீட்டை விட்டுப் புறப்படும் முன் வாசலில் இரு சுமங்கலிப் பெண்கள் ஆரத்தி எடுப்பார்கள். மாப்பிள்ளையோடு தோழி (மாப்பிள்ளையின் திருமணமான பெண் தோழியானவள் திருமணச் சடங்கில் முக்கிய பங்கு வகிப்பதால் நடை முறைகளை நன்கு தெரிந்த சுங்கலிப் பெண்ணையே அமர்த்த வேண்டும்). தோழன் (பெண்ணின் சசோதரன் அல்லது உறவு முறையில் உள்ள ஒரு ஆண் அநேகமாகத் திருமணமாகாதவராக இருக்க வேண்டும்). அவருடன் உற்றார் உறவினர்கள் திருமண மண்டபத்திற்குச் செல்வர். செல்லும் போது தோழி கூறைத்தட்டும் வேறு இரு பெண்கள் 3 தேங்காய் வைத்த தட்டமும் 3 அல்லது 5 பலகாரங்கள் கொண்ட ஒரு தட்டமும் எல்லாமாக 3 அல்லது 5 தட்டங்கள் கொண்டு போக வேண்டும். அலங்கரிக்கப் பட்ட வாகனத்தில் செல்வர்.

பலகாரத் தட்டம்

அரியதரம், அச்சுப்பலகாரம், பயற்றம் உருண்டை, வெள்ரொட்டி, சிற்றுண்டி போன்றவை.

தேங்காய்த் தட்டம்

3 முடியுள்ள தேங்காய்களுக்குச் சீவி மஞ்சள் பூசி வைக்க வேண்டும்.


கூறைத்தட்டம்

ஒரு பெரிய தட்டில் நெல் அல்லது பச்சையரிசி பரப்பி அதன் மேல் கூறைச்சேலை, சட்டை, வெற்றிலை 5 முழுப்பாக்கு, 3 கஸ்தூரி மஞ்சள், 1 குங்குமம் (டப்பி), 1 தேசிக்காய், 1 வாழைப்பழச் சீப்பு, 1 கொண்டை மாலை, அலங்காரப் பொருட்கள் முதலிய சாதனங்கள் சீப்பு, கண்ணாடி, பவுடர், வாசனைத்திரவியம், சவர்க்காரம் (சோப்) முதலியன. தாலிக்கொடியோடு மெட்டி1 சோடி ஆகியன வைக்க வேண்டும்.


பெண் புறப்படுதல்

பெண் வீட்டில் பெண்ணிற்கு அதே போல் அறுகு, காசு, பால் தலையில் வைத்து நீராட்டி (ருது சாந்தி செய்யாத பெண்ணாகில் அன்று அல்லது முந்தைய நாளில் ருது சாந்தி செய்யவேண்டும்), மணப்பெண் போல் அலங்கரித்து மண்டபத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். மணப் பெண்ணோடு ஒரு தட்டில் கோயிலில் அர்ச்சனை செய்யத் தேவையான பொருட்களை அடுக்கி எடுத்துச் செல்லவேண்டும். மண்டபத்தில் பெண் அவருக்கென்று கொடுக்கப்பட்ட அறையில் இருக்கவேண்டும்.


அர்ச்சனைக்குரிய பொருட்கள்: வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழங்கள், பூக்கள்


மாப்பிள்ளை அழைப்பு

மாப்பிள்ளை மண்டபத்திற்கு வந்தவுடன் அவரை பெண் வீட்டார் மேள தாளத்தோடு வரவேற்பர். அங்கு தோழன் மாப்பிள்ளையின் காலைக் கழுவி விடுவார். அதற்கு உபகாரமாக மாப்பிள்ளைத் தோழனுக்கு மோதிரம் ஒன்றை அணிவிப்பார். பின் பெண்ணின் தகப்பன், மாப்பிள்ளைக்கு மாலை சூடி வரவேற்பார். இரு சுமங்கலிப் பெண்கள் ஆரத்தி எடுப்பர். பின் தோழன், மாப்பிள்ளையின் கைகோர்த்து அவரை வலமாக மணவறைக்கு அழைத்துச் செல்வார் (கும்பத்திற்கு வலது பக்கம்).


மணமகன் மணவறைக்கு வந்தவுடன் தொடங்கும் திருமணச் சடங்கு புரோகிதரின் தலைமையில் நடைபெறும்.


கிழக்கு நோக்கியிருக்கும் மணவறையில் தோழன் மணமகனுக்கு இடப்பக்கத்தில் அமருவார். மணவறையில் நெல் பரவி அதன் மேல் கம்பளம் விரித்து மணமகனை இருத்துவதுதான் மரபு. கிரியை செய்யும் குருக்கள் மணவறையின் வலது பக்கத்தில் வடக்கு நோக்கியிருப்பார். மணமகனுக்கு திருநீறு கொடுத்து பவித்திரம் கொடுத்து வலக்கை மோதிரவிரலில் விநாயகர் பூஜை பஞ்சகௌவிய பூஜை ஆகியவற்றை மந்திர உச்சாடனத்துடன் செய்வர்.


பவித்திரம் வலது கை மோதிர விரலில் அணியவேண்டும். இந்தச் சடங்கு முடியும் வரை ஒரு குற்றமும் வராமலிருக்கவும் மனம், வாக்கு, காயங்களினால் வரத்தக்க பாவங்களினின்று காக்கவும் பவித்திரம் அணியப்படுகின்றது. பஞ்சகௌவியத்தை அவ்விடத்தில் சுற்றித் தெளிந்து அதனைப் பருகும்படி மணமகனின் அகமும் புறமும் சுத்தியடையும் என்பதாலும் இவை செய்யப்படுகின்றன. இதனை புண்ணியாகவாசனம் என்பர்.

அரசாணிக்கல்

முற்காலத்தில் திருமண வைபவங்களுக்கு அரசனுக்கும் அழைப்பிதழ் அனுப்புவார்கள். அரசனுக்கும் எல்லாத் திருமணங்களுக்கும் செல்ல முடியாத நிலை இருக்கும். எனவே அவர் தனது ஆணைக்கோலை அனுப்பி வைப்பார். அரசு ஆணைக்கோல் மருவி அரசாணைக்கால் ஆகிவிட்டது. இன்று பதிவுத் திருமணம் போல் அன்று ஆணைக்கோல் வந்துவிட்டால் அரசனால் அங்கீகரிக்கப்பட்டது. ஆகவே அத்திருமணம் அங்கீகாரம் பெற்றுவிடுகிறது. இதுவே இன்று திருமணப் பந்தலில் கலியாண முருங்கை மரக்கிளை ஒன்றை வைத்து அதற்கு பட்டுச்சாத்தி அலங்கரித்து வைப்பர்.


அங்குரார்ப்பணம்

வித்திடுதல் என்று அர்த்தம். அதாவது முளைக்கும் விதைகளை பாலிகையிடல் என்பது. சந்திர கும்பத்தை பூசித்து அதற்கு முன்பாக இருக்கும் மண்சட்டியில் 3 அல்லது 5 சுமங்கலிப் பெண்களை கொண்டு நவதானியம் இட்டு தண்ணீர் தெளித்து புஷ்பம் சாத்தி பூசைகள் செய்வது. இதன் அர்த்தம் நவதானியம் செழித்து வளர்வது போல இத் தம்பதிகளின் வாழ்வும் செழுப்புடையதாக அமைய வேண்டும் என்பதற்காக இப்பூஜை செய்யப்படுகின்றது. அப்பெண்களுக்கு வெற்றிலையில் பழம், பூ வைத்து உபசாரம் செய்தனுப்புவார்கள். அதன்பின் கற்பூரம் காட்டப்படும். (முன்பே பாலிகை போட்டிருந்தால் தண்ணீர் மட்டும் தெளித்தால் போதுமானது)


இரட்சாபந்தனம் (காப்புக்கட்டல்)

தொடங்கிய கருமம் நிறைபெறும் வரை எந்தவித தீட்டுக்களோ இடையூறுகளோ துக்கங்களோ மணமக்களைச் சாராதிருக்க வேண்டிய பாதுகாப்புக் கருதி செய்யப்படுவது. (காலமிருத்து அவமிருத்து போன்ற அபாயங்களில் இருந்து காப்பாற்றவும்). சர்வரோகம் அணுகாமலும், பீடை, பிணி அணுகாமலும் இருக்கவேண்டி விவாகச் சடங்குகள் இனிதே நடைபெறவும் கட்டப்படுவது நூல் காப்புக் கட்டுதல் ஆகும்.


இதற்கு ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் காப்பு நூல் முதலியவற்றை வைத்து பூசித்து மாப்பிள்ளையின் வலது மணிக்கூட்டில் காப்புக் கட்டுவார்கள் காப்புக் கட்டும்போது மாப்பிள்ளை வீட்டார் ஒரு தேங்காய் உடைப்பார்கள். பின்னர் குருக்கள் சிவன், பார்வதி பூசை முதலியவற்றை மந்திர உச்சாடனத்துடன் செய்வர் (பின்னர் அக்கினி மூட்டப்பட்டு அதற்குரிய பூசை வழிபாடுகள் நடைபெறும்) முகூர்த்தோஷம், லக்கினதோஷம் போன்ற் தோஷங்கள் நீக்கும் பொருட்டும் இத் திருமணத்தின் போது நல்லருள் புரியவேண்டுமென நவக்கிரக தேவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள கும்பங்களிற்கும் பூஜை செய்வார்கள். அதன்பின் அரசாணி மரத்திற்கும் அதன் நாலு பக்கங்களிலும் உள்ள கும்பங்களிற்கும் பூஜை செய்வர்.


மணமகளை அழைத்தல்

மணமகளை (பட்டாடை அணிந்து, அணிகலன்கள் பூண்டு முகத்தை மெல்லிய திரையால் மறைத்த வண்ணம்) தோழிகள், மணமகளின் பெற்றோர் மற்றும் உறவினர் புடைசூழ மணமேடைக்கு அழைத்து வருவர். மணமகனுக்கு வலப்பக்கத்தில் பெண்ணை அமரச்செய்வர். மணமகனிற்குச் செய்யப்பட்ட அத்தனை பூசைகளும் இவருக்கும் செய்யப்படும். பவித்திரம் இடது கைமோதிர விரலில் அணிவித்து ரட்சாபந்தனம் இடக்கை மணிக்கட்டில் கட்டப்படும். பெண் வீட்டார் ஒருவர் தேங்காய் உடைப்பார். பின்னர் இருவரின் பெற்றோர்களை அழைத்து மணமகளின் பெற்றோர்கள் பெண்ணின் வலப்பக்கத்திலும் மணமகனின் பெற்றோர் மணமகனின் வலப்பக்கத்திலும் கிழக்கு நோக்கி அமர்வர். இவர்களும் குருக்கள், பவித்திரம், விபூதி கொடுத்து சங்கல்பம் செய்வித்து இரு வழியிலும் பிதுர்தோஷம் நீங்கவும் இரண்டு (நாந்தி தானம்) கொடுத்து பிதிரரின் ஆசியைப் பெறச்செய்வர். பின் கன்னிகாதானக் கிரியைகளை ஆரம்பிப்பார்.

கன்னிகாதானம்

மணமகளை அவரின் பெற்றோர் தாரைவார்த்துக் கொடுப்பதை கன்னிகாதானம் என்பர். மணமக்களின் பெற்றோர் இருபகுதியினரும் சங்கற்பம் செய்து பெண்ணின் பெற்றோர் மணமகனின் பெற்றோர்க்கும் மணமகனின் பெற்றோர் பெண்ணின் பெற்றோருக்கும் திலகமிட்டு பன்னீர் தெளித்து மரியாதை செய்வர். பின் பெண்ணின் வலக்கரத்தில் வெற்றிலை, பாக்கு, பழம், எலுமிச்சம்பழம், தங்கக்காசு அல்லது நடைமுறை நாணயம் ஒன்றை கையில் கொடுத்து பெண்ணின் தந்தை இடது கை கீழாகவும் வலது கை மேலாகவும் சேர்த்துப் பிடித்து குருக்கள் மணமகளின் மூன்று தலைமுறைப் பெயர்களையும் மணமக்களின் பெயர்களையும் உரிய மந்திரத்துடன் 3 முறைகள் சொல்லி இரு வம்சம் தழைக்கவும், அறம், பொருள், இன்பம் வீடு ஆகிய 4 பயன்களையும் பெற வேண்டியும் கன்னிகாதானம் செய்து தருகின்றேன். எல்லாவித செல்வமும் பெற்று எனது மகளைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொள்வார். மணமகனின் சம்மதம் பெற்றவுடன் மணமகளின் தாயார் நீர் விட்டு தாரைவார்க்க தந்தையார் மணமகளின் கரங்களில் ஒப்படைப்பார். அப்போது மங்கள் வாத்தியம் முழங்க, பெண்வீட்டார் ஒருவர் தேங்காய், உடைக்க, மணமகன் பெண்ணை தானம் எடுப்பார். தொடர்ந்து மணமகன் கொண்டுவந்த தாலியோடு கூடிய கூறைத்தட்டத்தை விதிப்படி பூசித்து, ஆசீர்வதித்து அக்கினியாற் சுத்தி செய்தபின் அச்சபையிலுள்ள பெரியோர்களிடம் காட்டி நல்லாசி பெறப்படும். பின் மணமகன் மணமகளிடம் கூறையைக் கொடுப்பார். மணமகளும் தோழியுடன் சென்று கூறை உடுத்தி மீண்டும் மணவறைக்கு அழைத்து வரப்படுவார். இதற்கிடையில் குருக்கள் மாங்கல்யத்தை எடுத்து சுத்தி செய்து மந்திரம் சொல்லி, சந்தனம், குங்குமம் சாத்தி தீபம் காட்டி சம்பாதஹோமம் செய்து பூசை செய்வார். (சம்பாதஹோமம் – சிருவத்தில் நெய் எடுத்து ஆகுதி செய்து மிகுதி நெய்யைத் தாலியில் விடுதல்) மணவறையைச் சுற்றி நிற்பவர்களுக்கு அட்சதை மலர்கள் கொடுக்கப்படும்.


தாலி கட்டுதல்


கூறை உடுத்தி வந்த மணமகள் மீண்டும் மணமகனின் வலப்புறத்தில் கிழக்கு நோக்கி அமர்வார். குறித்த சுபமுகூர்த்ததில் மணமகன் எழுந்து மணமகளின் வலப்புறம் சென்று வடக்கு நோக்கி நின்று இறைவனைத் தியானித்து குருக்கள் ஆசிர்வதிதுக் கொடுக்கும் மாங்கல்யத்தை இரு கரங்களால் வலப்புறம் சென்று வடக்கு நோக்கி நின்று இறைவனைத் தியானித்து குருக்கள் ஆசிர்வதித்து கொடுக்கும் மாங்கல்யத்தை இரு கரங்களால் பற்றி கெட்டிமேளம் முழங்க, வேதியர் வேதம் ஓத, மாப்பிள்ளை வீட்டார் ஒருவர் தேங்காய் உடைக்க, பெரியோர் அட்சதை மலர்கள் தூவ, ஒரு பெண் பின்னால் தீபம் பிடிக்க மணமகன் மேற்கு திசை நோக்கி திரும்பிப் பெண்ணின் கழுத்தில் திருமாங்கல்யம் பூட்டுவார். அப்போது சொல்லப்படும் மந்திரம்



“மாங்கல்யம் தந்துநாநேந மம ஜீவனஹேதுநா கண்டே பத்தாமி ஸூபகே ஸஞ்ஜிவசரதசதம்”


‘ஓம்! பாக்கியவதியே’ யான் சீரஞ்சீவியாக இருப்பதற்கு காரணமாக மாங்கல்யத்தை உன் கழுத்தில் கட்டுகிறேன். நீயும் நூறாண்டு வாழ்வாயாக



என்று குருக்கள் கூறும் மந்திரத்தை மனதில் கொண்டு தாலி முடிச்சில் திருநீறு இட்டு தனது இடத்தில் இருக்க வேண்டும். மணமகளின் உச்சந்தலையில் குங்குமத்தில் திலகமிட வேண்டும்.



தாலி – தாலியில் சிவலிங்கம், விநாயகர் அல்லது லட்சுமியின் திருவுருவம் அமைத்தல் நல்லது. கொடியும், தாலியும் அதனருகில் கோத்திருக்கும் இரு தங்க நாணயங்கள் சேர்த்து என்ற ஒற்றை எண் வரக்கூடிய அளவு பவுணில் செய்ய வேண்டும். தாலிக்கொடியில் சேர்க்கப்படும் தங்கநாணயம் ஆங்கில நாணயமாக இருக்கவேண்டும் என்ற நியதியில்லை. அந்த நாணயத்தில் கடவுளின் உருவங்களுக்கு விருப்பத்திற்கேற்ப அமைக்கலாம்.


மாலை மாற்றுதல்


மணமகள் எழுந்து வடக்கு நோக்கி இறைவனை தியானித்து மணமகள் கழுத்தில் மாலை சூட்டுவாள். மணமகள் மணமகளைத் தன் இடப்பக்கத்தில் அமரச் செய்து மாலை சூட்டுவாள். மாலை மாற்றுதலின் பொருள் இருமனம் கலந்து ஒரு மனமாகி இல்வாழ்க்கையை ஆரம்பித்தல். மூன்று முறை மாலை மாற்ற வேண்டும்.



தொடர்ந்து கொண்டு வந்த மங்கலப் பொருட்களாகிய மஞ்சள், குங்குமம், பூ, வாசனைப் பொருட்கள், சீப்பு, கண்ணாடி முதலியவற்றை மணமகன் மணமகளிடம் கொடுப்பார். கணவன் மனைவியாக ஆனபின் தம் மங்கலக் கோலத்தை இருவரும் கண்ணாடியில் பார்த்து மகிழ்வார்கள்.


பால்பழம் கொடுத்தல்

பால், வாழைப்பழம் கலந்து மணமகள் முதலில் மணமகனுக்கு மூன்று முறை கொடுப்பார். பின் மணமகன் மணமகளுக்கு மூன்று முறை கொடுப்பார். நாயகன் நாயகி உணவு கொள்ளல் மறைவில் செய்யவேண்டும் என்பதால் திரை ஒன்று முன்னால் பிடிக்கப்படும். முதன் முதலில் தம்பதிக்களுக்குக் கொடுக்கும் இனிப்புப் பதார்த்தமாகையால் வாழ்க்கை இனிமையாக இருக்கவேண்டும் என்று உணர்த்தவே இச் சடங்கு.

கோதரிசனம்


இல்லறவாழ்வு தொடங்கும் தம்பதியர் வாழ்விற்கு வேண்டிய அட்ட ஐஸ்வரியங்களையும் வேண்டி பசுவை இலட்சுமிதேவியாக வணங்குவர். பசுவைக் கிழக்கு முகமாக நிறுத்திச் சந்தனம், குங்குமம், புஷ்பம் சாத்தித் தீபாராதனை செய்து வணங்குவர் பசுவின் உடலெங்கும் உறைகின்ற சகல தேவர்கள், முனிவர்கள், தெய்வங்கள் ஆசிர்வாதமும் இதன் மூலம் கிடைக்கும். அரிசி, காய்கறி, தட்சிணை வைத்துத் தானமும் வழங்கவேண்டும்.


பாணிக்கரம் (கைப்பிடித்தல்)

தருமம் செய்வதற்காகவும் சந்ததி விருத்திக்காகவ்ம் திருமணம் செய்யப்படுகின்றது. பாணிக்கிரகணம் என்றால் மணமகளின் கையை மணமகன் பிடிப்பது என்று பொருள். ‘நீயும் நானும் முதுமையடைந்து விட்டாலும் கூட ஒருவரை ஒருவர் பிரியாதிருப்போம் என்று கையைப் பிடிக்கிறேன்’ என்று கூறி மணமகளின் கையைப் பிடிக்கவேண்டும். ஆணின் வலக்கை பெண்ணின் வலக்கையைப் பிடித்தல் வேண்டும். பின்னர் ஏழடி எடுத்து வைத்து அம்மி மிதித்து அக்கினியை வலம் வருவார்கள். வலம் வரும்போது தோழனும் தோழியும் செர்ந்து வருவார்கள். பஞ்ச பூதங்களின் சாட்சியாக கையைப் பிடிப்பதாக ஒருகருத்து. மணப்பெண்ணால் ஐம்புலன்களால் செய்யப்படும் செயல்கள் கணவனுக்கு மட்டுமே உரியவை. கன்னியின் கையை வரன்கிரகிப்பது என்று பொருள்.

ஏழடி நடத்தல்


பெண்ணின் வல காலை மணமகள் கைகளாற் பிடித்து ஏழடி எடுத்து வைக்கும் படி செய்யவேண்டும். ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு மந்திரம் சொல்லப்படும்.


1. உனக்கும் வாழ்க்கையில் உணவு குறைவில் அளிப்பதற்கு இறைவன் உன்னைப் பின் தொடர்ந்து வரட்டும்.


2. உடல் வலிமை கிடைக்க இறைவன் பின் தொடரட்டும்

3. விரத்தை அனுஷ்டிக்கும் பொருட்டு உன்னை இறைவன் பின் தொடர்ந்து வரட்டும்.

4. சுகமும் மனச்சாந்தியும் கிடைக்க இறைவன் உன்னைப் பின் தொடரட்டும்


5. பசுக்கள் தூயலான பிராணிகள் பின் தொடர்ந்து வரட்டும்.

6. சகல் சௌபாக்கியங்களும் கிடைக்க பின் தொடர்ந்து வரட்டும்.

7. உடன் வாழ்வில் இடம்பெறும் சுபகாரியங்கள், ஹோமங்கள் குறைவின்றி நிறைவேற்ற இறைவன் உன்னை பின் தொடர்ந்து வரட்டும். ஏழடிகள் நடந்த நாமிருவர்கள் சினேகிதரனேம். இருவரும் சேர்த்து அனுபவிப்போம். என்னுடன் கூடவா என்னும் பொருளில் இந்நிகழ்ச்சி அமையும் இதற்கு “ஸ்பத பதி” என்று பெயர்.

அம்மி மிதித்தல்

பெண்ணின் வலதுகாலை (அதாவது எட்டாவது அடி) மணமகன் கையால் தூக்கி அம்மியில் வைத்து பெருவிரலுக்கு அடுத்துள்ள விரலில் மெட்டி வைத்து அணிவிப்பார். இந்தக் கல்லைப் போல் நிலையாக நின்று உன் எதிரிகளைச் சகித்துக் கொள். இது பெண்ணிற்கு கற்பையும் ஆணுக்கு ஒழுக்கத்தையும் புகட்டுகின்றது. கல் எப்படி எதையும் தாங்குமோ அதுபோல் வாழ்கையிலும் இன்ப துன்பங்களைக் கண்டு கலங்காமல் உறுதியான கொள்கைகளைக் கடைப்பிடித்து நடக்கவேண்டும் என்று உணர்த்துகிறது.


தொடர்ந்து அக்கினியை வலம் வந்து ஓம குண்டத்தில் நெற்பொரியும் ஓமப்பொருட்களையும் இடுவார்கள். திரும்பவும் இரண்டாம் முறை அக்கினியை வலம் வரும்போது இடக்காலை அம்மியில் வைத்து மெட்டி அனுவிக்கப்படும். திருமணமான பெண் அவளைப் பார்க்கும் இன்னொரு ஆடவன் அவள் திருமணமானவள் என்பதை உணர்த்த மெட்டி அணிவிக்கப்படுகின்றது.


கணையாழி எடுத்தல்

மூன்றாம் முறை அக்கினியை வலம் வரும்போது கிழக்குப் பக்கத்தில் வைத்திருக்கும் மஞ்சள் நீர் நிறைந்த பாத்திரத்தில் இருக்கும் தேடி எடுக்கவேண்டும். இது மூன்று முறைகள் நடைபெறும். இருவரும் ஒருவருக்குகொருவர் விட்டுக் கொடுத்து எடுத்தல் வேண்டும். இது தம் வாழ்க்கையிலும் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

அருந்ததி பார்த்தல்


மூன்றாம் சுற்றில் அருந்ததி பார்த்தல் நடைபெறும். இருவரையும் கூட்டிக்கொண்டு மண்டபத்தின் வடக்கு வாசலக்கு வந்து வானத்தில் இருக்கும் நடத்திரங்களுக்குப் பூஜை செய்து அருந்ததியைக் காண்பிப்பார்.


“நிரந்தரக் கற்பு நடசத்திரமாக மின்னுவேன்” என்று ஆணையிடுவதாகும். சப்தரிசிகள் கிருத்திகை எனப்பெயர் கொண்ட தங்கள் மனைவிக்குள்ளே முதலானவளான அருந்தியை எப்படி நிலைத்திருக்கச் செய்ய செய்தார்களோ அப்படி மற்ற ஆறு கிருத்திகைகளும் அருந்ததியைப் போலிருக்கச் செய்கின்றனர். இந்த அருந்ததியை தரிசனம் செய்தால் என்னுடைய மனைவி எட்டாளவாக வளர்ச்சி பெறட்டும் என்பதேயாகும். இந்த நட்சத்திரத்தைக் காட்டுவது நல் வாழ்க்கையும் வழத்தையும் பெறுவதற்கேயாகும்.


அருந்ததி வசிட்டரின் மனைவி. சிறந்த பதிவிரதை. வானத்தில் துருவ மண்டலத்திற்கு அருகில் ஏழு நட்சத்திரங்களிற்கிடையில் வசிட்ட நட்சத்திரமும் அதன் அருகில் அருந்ததி இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.



அருந்ததியோடு சேர்த்து துருவ நடத்திரத்தையும் காட்டுவாள். துருவ நட்சத்திரம் விண்ணில் ஒரு நிலையான இருப்பிடத்தை உடையவராகவும் மற்ற விண்மீன்கள் நிலைத்திருப்பதற்குக் காரணமாகவும் கட்டுத் தறியாகவும் இருப்பதால் எங்களை எதிரிகளிடமிருந்து காப்பற்றுவீராக என்று தரிசிப்பதாகும். இவர்கள் எம்வாழ்க்கையில் ஒரு வழிகாட்டியாக அமைகிறார்கள். துணைவனைப் போல் மணமகனுக்கு ஸ்திரத்தன்மையும் அருந்ததியைப் போல் மணமகளுக்குப் பதிவிரதத் தன்மையும் இருத்தல் வேண்டும்.

பொரியிடல்


அக்கினியை மூன்று முறை வலம் வரவேண்டும். ஒவ்வொரு முறையும் வலம்வந்து மணமக்கள் கிழக்கு நொக்கி நிற்கத் தோழன் நெற்பொரியை குருக்களிடம் இருந்து பெற்று மணமகனின் கையில் கொடுக்க மணமகன் மணமகளின் கையில் கொடுத்து மணமகனின் கைகளை தன் கைகளால் தாங்கி ஓம் குண்டத்தில் இடுவார்கள். “அக்கினி பகவானே சகல் செல்வங்களையும் எமக்குத் தந்தருள வேண்டும்.”. என வேண்டிக் கொண்டு பொரியிடுதல் வேண்டும். நெல் பொரியாக மலர்வது போல் நம்வாழ்வு மலரவேண்டும் என்பதே தத்துவம்.

மூன்றாம் முறை சுற்றி வந்தவுடன் பூர்ணாகுதிற்குரிய பொருட்களை தட்டத்தில் வைத்து குருக்கள் மணமக்களுக்குக் கொடுக்க இருவரும் சேர்ந்து குண்டத்தில் சொரித்தல் வேண்டும்.

அக்கினி பகவானிடம் சேர்க்கும் சகல் திரவியங்களும் அக்கினி பகவான் அந்ஹ்ட அந்தக் தெய்வங்களிடம் ஒப்படைத்து விடுவார்கள் என்பதை வேதங்கள் கூறுகின்றன. ஆகவே அக்கினியில் ஆவாகனம் செய்யப்பட்ட மூர்திகளுக்கு செய்யும் சடங்கு குறைவின்றி செய்து அவர்களுக்குப் பரிபூரண பலன் வேண்டி அனுப்பவேண்டும் என்று பிராத்தித்து செய்வதே ஓமம்.


அதன் பின் தீபாரத்னை செய்து ஓமத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட ரட்சயை (கரிப்பட்டு) மணமக்களுக்கு திலகமிட்டு விபூதி சந்தனம் கொடுத்து ஆசி வழங்குவார் குருக்கள்.


ஆசிர்வாதம்

மணமக்களை கிழக்கு முகமாக நிற்க வைத்தக் குருக்கள் பிராத்தனன செய்து மந்திரத்துடன் ஆசீர்வாதம் சொல்லி மணமக்களுக்கு ஆசிர்வாதம்வாதம் சொல்லி மணமக்களுக்கு சிரசில் அட்சதையிட்டு ஆசீர்வதிப்பர். தொடர்ந்து மணமகளின் பெற்றோர் சபையில் ஆசிர்வதிப்பர்.


அட்சதை

முனை முறியாத பச்சையரிசி, அறுகம்புல், மஞ்சள்மா கலந்த கலவையே அறுகரிசி என்று சொல்வார்கள். பெரியோர் இரண்டு கைகளாலும் அறுகரிசி எடுத்து “ஆல் போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் முழுமையாய்ச் சூழப் பதினாறு பேறு பெற்றுப் பெருவாழ்வு வாழ்க” என வாழ்த்தி உச்சியில் 3 முறை இடவேண்டும்.

நிறைவு

மணமக்களின் கைகளில் கட்டப்பட்ட காப்புக்களை அவிழ்த்து பவித்திரங்களை கழற்றி அவற்றுடன் பெற்றோரின் பவித்திரங்களையும் வெற்றிலையில் வைத்து குருக்களின் தட்சணையும் சேர்த்து குருக்களிடம் கொடுக்கவேண்டும்.

ஆரத்தி


இரு தரப்பிலும் இருந்து ஒரு பெண்ணாக இரு சுமங்கலிப் பெண்கள் ஆரத்தி எடுப்பார்கள். தம்பதிகளுக்கு தீய சக்தியினால் தீமை ஏற்படாமலும் கண் திருஷ்டி நீங்கும் பொருட்டும் இவை செய்யப் படுகின்றன.

விருந்துபசாரமும் நடைபெறும். மணமக்கள் இருவரும் அர்சனைத் தட்டோடு ஆலயம் சென்று வணங்கி அர்ச்சனை செய்து மணமகன் இல்லம் செல்வர். அங்கு வாசலில் ஆரத்தி எடுத்து வல்து காலை முதலில் வைத்து வீட்டுக்குள் செல்வர். முதலில் பூசை அறைக்குள் சென்று வணங்கிப் பின் பால் அருந்தக் கொடுப்பார்கள்.


பூதாக்கலம்

மணமக்கள் ஒரே இலையில் மணமகள் உணவு பரிமாறி மணமகனுக்கு முதலில் தன் கையால் உணவூட்டிய பின் மணமகன் மணமகளுக்கு உணவூட்ட வேண்டும்.

பின் மணமகன் மணமகளைத் தன் வீட்டுக்கு அழைத்து செல்வார். அங்கும் ஆரத்தி எடுத்து உள்செல்வார். வலது கால் எடுத்து உட்சென்று பூசை அறை சென்று வணங்கி பெற்றோர் காலிலும் விழுந்து வணங்குவர்.


சில தத்துவங்கள்

* தாலி கட்டிய பின் மணமகள் மணமகளின் உசந்தலையில் குங்குமத்தால் திலகமிடுவார். இது அவள் தன் கணவனுக்கே உரியவள் என்பதை எடுத்துக்காட்டவே. அத்தோடு அவ்விடத்தில் தான் மகா லட்சுமி வாசம் செய்கின்றாள்.

* மாங்கல்யம் சூட்டும்போது கெட்டிமேளம் கொட்டுவது சபையில் உள்ளோர் யாராவது தும்முதல், அபசகுன வார்த்தைகள் பேசுதல் போன்றவை மணமக்களிற்குக் கேட்கக்கூடாது என்பதற்காகவே.

* மஞ்சள் கயிற்றில் தாலி கட்டும் போது மூன்று முடிச்சுப் போடுவார்கள். இதற்கு ஒரு விளக்கம்.



o முதலாவது முடிச்சு – கணவனுக்குக் கட்டுப்பட்டவள் அல்லது புகுந்த வீட்டிற்கு.



o இரண்டாவது முடிச்சு – தாய் தந்தையருக்குக் கட்டுப்பட்டவள் அல்லது பிறந்த வீட்டிற்கு.



o மூன்றாம் முடிச்சு – தெய்வத்திற்குப் பயந்தவள்



தாலி கட்டும்போது தூவப்படும் அட்சதை மணமக்கள் தீய சக்திகளிடம் இருந்து காப்பதற்கும் வளமான வாழ்க்கை அமைவதற்கும் ஆசீர்வதிப்பதாகும். தாலி கட்டும்போது கைவிளக்கு ஏந்தி நிற்பது ஏனென்றால் தாலி கட்டியதற்கு விளக்கு ஏந்தியவர் ஒரு சான்றாவார். இன்னொரு விளக்கம் சகுனத் தடைகள் ஏற்படாமலிருக்க.


திருமணத்தின் போது மணப்பெண் முகத்திரை அணிவது ஏன்?


முக்காலத்தில் மணமகள் தாலி கழுத்தில் ஏறும் வரை மணமகனைப் பார்ப்பதில்லை. ஆகவே முகத்திரை அணிந்து மணவறைக்கு அழைத்து வந்தார்கள். அத்தோடு கண் திருஷ்டிக்கும் விமர்சனங்களில் இருந்து விடுவிப்பதும் ஒரு காரணமாகும். தாலி ஏறியதும் முகத்திரையை அகற்றி நான் இப்போது “இவரின் மனைவியாகி விட்டேன்” என்று சபையோரிற்கு தன் முகத்தைக் காட்டுகிறாள்.


அட்சதை

அட்சதை என்றால் குத்துப்படாததும், பழுதற்றதும் என்று பொருள்படும். பழுதுபடாத பச்சைஅரிசியைப் போல் வாழ்க்கையும் பழுதுபடாமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே ஆசி வழங்கும் போது பெரியவர்கள் அதைத் தெளிக்கிறார்கள். (நுனி முறியாத முழு அரிசியாக இருக்கவேண்டும்).


நெல்லில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட முளையுள்ள அரிசியுடன் மஞ்சள்மா, பன்னீர், மலர் இதழ்கள் ஆகியவை கலந்து அட்சதை தூவுவதே முறையாகும்.

ஆரத்தி



ஒரு தட்டில் 3 வாழைப்பழத் துண்டுகள் வைத்து அதன் நடுவே திரியைச் செருகவேண்டும். இலகுமுறை ஒரு நெருப்புக் குச்சியில் பச்சைசுற்றி நெய்யில் தோய்த்த வாழைபழத்தின் நடுவே குத்துவதாகும்.



ஆரத்தி எடுக்கும் போது யாருக்கு திருஷ்டி கழிக்கின்றோமோ அவரை நிற்க வைத்து (கிழக்கு முகமாக அல்லது வடக்கு பார்க்க நிற்கவேண்டும்). அவரை இறைவனாக நினைத்து இறைவனுக்கு எப்படிக் கற்பூரம் காட்டுகிறோமோ அதேபோல் ஆரத்தித் தட்டைச் சுற்றவேண்டும் (வலம் சுழியாக).



மணமக்களுக்கு எடுக்கும்போது மணமகன் பக்கத்தில் மேலெழும்பி மணமகளின் பக்கத்தில் கீழிறங்கவேண்டும். கீழே 3 முறை செய்யவேண்டும். கீழே 3 தரம் ஆட்டி பின் மேலெழும்பிச் சுற்ற வேண்டும்.

திருமணத்தில் அறுகரிசி இடும்முறை

இந்துசமய விளக்கப்படி அறுகரிசியை (அட்சதை) பெரியோர்கள் இரு கைகளாலும் எடுத்து மணமக்களின் சிரசில் தூவிப்பின் இரு தோழ்களிலும் இடுப்பு, முழந்தாள் என்று மேலிருந்து கீழே வர வாழ்த்த வேண்டும். (3 முறை அல்லது சிரசில் மட்டும் 3 முறை 3 தூவி ஆசிர்வதிக்கலாம்).



நாங்கள் மணமக்களைத் தெய்வமாகக் கருதுவதால் தெய்வத்திற்குப் பாதத்திலிருந்து சிரசிற்குச் செல்லவேண்டும். என்று சொல்வார்கள். மணமக்களை மானிடராகக் கருதினால் சிரசில் இருந்து பாதத்திற்கு வரவேண்டும் என்று சொல்வார்கள். இவ்விரண்டு விதமான வருணணைகளையும் இலக்கியங்களிற் காணலாம். பதாதி கேசமா? கேசாதி பாதமா? இவை வர்ணணைகளே அன்றி அட்சதை தூவுவதற்கல்ல. தெய்வத்திற்கு நாம் செய்வது பாத பூஜை பூச்சொரிவது அல்ல. அத்தோடு மணமக்களை பெரியோர்களே அட்சதை தூவி ஆசிர்வதிப்பார்கள். ஆகவே சிரசில் இருந்து தான் வரவேண்டும். மீனாட்சி சுந்தரேசர் கல்யாணத்தில் தேவர்கள் வானிலிருந்து மலர் தூவி ஆசிர்வதித்து வாழ்த்தியதாகப் புராணம் சொல்கின்றது. ஆகவே அரிசி மேலிருந்து கீழே வருவதுதான் சாலப் பொருத்தம்.



தமிழின் வளர்ச்சி


தமிழ் - தமிழ்மொழி

தமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும். இத்தமிழ் மொழிக்கு வரி வடிவம் அதாவது எழுத்து உருவம் என்று உருவானது? என்ற வினாவிற்குச் சரியான விடை கிடைக்கவில்லை. தற்சமயம் நமக்குக் கிட்டியுள்ள ஆதாரங்களைக் கொண்டு சில மொழி வழி உண்மையை உணர்கிறோம். இன்று நாம் பேசும் தமிழ்மொழி பல கால கட்டங்களில் பல மொழிகளோடு இணைந்து பல உருக்கள் மாறி இறுதி நிலையில் காண்கிறோம். ஆனால் தொல் கால இந்திய எழுத்து முறையை ஆராய்ச்சியாளர்கள் தமிழெழுத்து முறை மற்ற இந்திய எழுத்து முறைகளைக்குத் தாய் பெருங்குரல் கொடுக்கிறார்கள் அறிஞர்கள் பூலரும், ஐராவதம் மகாதேவன் அவர்களும்.



தமிழ் வட்டெழுத்து



தமிழ் மொழியின் எழுத்து வடிவங்களில் மிகமிகத் தொன்மை வாய்ந்தது வட்டெழுத்து முறையே! வளைந்த கோடுகள் அவ்வெழுத்து முறையில் அதிகமாகப் பயன்படுத்தப் பட்டதால் அம்முறைக்கு வட்டெழுத்து எனப் பெயர் பெற்றது. இதன் அடிப்படையில் சேர நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் கோலெழுத்துக்கள் அல்லது “மலையாண்மா” என்ற எழுத்து முறை உருவானது. இக்கோலெழுத்துகள் செப்பேடுகளிலும் ஓலைச் சுவடிகளிலும் எழுதப்பட்டன. அக்கோலெழுத்துக்களே ஆங்காங்கே கிடைத்துள்ள கல்வெட்டுக்களிலும், நடு கற்களிலும் தமிழ் எழுத்துக்கள் வட்டெழுத்தாக உருமாறி மலர்ந்து வளர்ந்தது என இரா. நாகசாமி அவர்கள் மார் தட்டிக் கூறுகிறார்.



வட்டெழுத்தின் தோற்றம்



வட்டெழுத்துக்களின் ஆரம்ப நிலைகளைத் தெரிந்து கொள்வதற்கு, நடுகற்களே சரியான சாட்சிகள். நடுகற்கள், நடப்பட்ட கற்களைத் தான் நடுகற்கள் என்று வரலாற்று மேதைகள் கூறுகின்றனர். அதன் வாயிலாகத் தமிழ் வட்டெழுத்தைப் பற்றிய பல செய்திகளை அறிய முடிகிறது. தமிழ் பிராமியில் புழக்கத்திலிருந்த “தமிழ்” எழுத்துக்கள் தான் தமிழ் வட்டெழுத்தாக மாறி வளரத் தொடங்கியது என வரலாறு ஆசிரியர்கள் கருதுகின்றனர்.



கி.பி. 3 - ஆம் நூற்றாண்டிலிருந்து வட்டெழுத்தானது தமிழ்ப் பிராமியிலிருந்து பிரியத் தொடங்கியது. பிராமியிலிருந்து பிரியத் தொடங்கிய வட்டெழுத்துக்கள் நாளடைவில் சிறுகச் சிறுக வளர்ந்து கி.பி. 6 -ஆம் நூற்றாண்டில் தனித்தன்மை பெற்றது எனலாம்.



அன்று செந்தமிழ் நாடு எனப் போற்றப்பட்ட பாண்டிய நாடு “தன்னார் தமிழ் அளிக்கும் தென் பாண்டி நாடு” என மாணிக்கவாசகரால் பாராட்டப்பட்டது. தமிழை வளர்த்த பாண்டியர்கள் வட்டெழுத்து முறைக்கு ஊக்கம் காட்டினர். கொடுந்தமிழை மேற்கொண்ட சேரர்களும் வட்டெழுத்தில் ஆர்வம் காட்டினர். இரு நாட்டிலும் வட்டெழுத்தில் அரசுச் சாசனங்கள் எழுதப்பட்டன என்றால் அதன் வளர்ச்சியைத் தெரிந்து கொள்ளுங்கள்.



வட்டெழுத்துப் பகுதிகள்



தமிழ் வட்டெழுத்து தமிழகம் முழுவதிலும் பரவிச் செயல்முறையில் இருந்தது. தமிழகப் பகுதிகளாகிய மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், கோவை, சேலம், வடாற்காடு, தென் ஆற்காடு, செங்கற்பட்டு போன்ற பகுதிகளிலும் பரவியிருந்தது. கொங்கு நாட்டு மன்னர்களின் சாசனங்களிலும் தமிழ் வட்டெழுத்துக்கள் காணப்படுகின்றன.







தமிழ்க்கோலெழுத்துக்கள் - “மலையாண்மா”



பாண்டிய நாட்டிலும் சேர நாட்டிலும் பல நூற்றாண்டுகள் கொடி கட்டிப்பறந்த வட்டெழுத்துக்கள் நாள்பட நாள்பட அவை ஒழுங்கு முறையில் எழுதப்படாமல் உருமாற்றங்களைப்பெற்று தமிழ் வட்டெழுத்து ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டன. இவ்வெழுத்து முறையைத்தான் திருவாங்கூர் போன்ற கேரளப் பகுதிகளில் “மலையாண்மா” என்றும் “கோலெழுத்து” என்றும் அழைக்கலாயினர். சோழர்களின் ஆட்சிக் காலத்தில் வட்டெழுத்து குறையத்தொடங்கியது. ஆனால் சேர நாட்டில் கி.பி. 1663 வரை நிலைத்திருந்தது என திரு. டி.ஏ. கோபிநாதராவ் கூறுகிறார்.



வட்டெழுத்து வீழ்ச்சசி



பாண்டிய நாட்டில் மிகச் செல்வாக்குடன் ஓங்கி வளர்ந்த பாண்டிய நாட்டை வென்ற சோழர்கள் தமிழ் வட்டெழுத்துக்களை ஆதரிக்கவில்லை. முதலாம் பராந்தகச்சோழன் முதலாம் இராசராசன் காலம் வரையாண்ட சோழர்கள் வட்டெழுத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கி.பி. 12ஆம் நூற்றாண்டில் வட்டெழுத்து பாண்டியர் பகுதிகளில் மறைந்துவிட்டது.







தமிழ்க் கிரந்தம் உதயம்



தென் இந்தியா முழுவதையும் ஒரு குடையின் கீழ் வைத்தாண்ட சோழர்கள் காலத்தில் தமிழ் வட்டெழுத்து மங்கி கிரந்தத் தமிழ் மேலோங்கியது. பல்லவர்களால் போற்றி வளர்க்கப்பட்ட “பிராமிலிபி”யின் வழிவந்த கிரந்தமும், அதனை ஒட்டி வளர்ந்த கிரந்தத் தமிழும் வழக்காறு பெற்றது. சோழ மன்னர்களால் போற்றி வளர்க்கப்பட்டது. வட்டெழுத்துக்கள் மறைந்து கிரந்தத் தமிழ் தலை தூக்கியது.



தமிழ் இலக்கியங்கள்



“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறுநல்லுலகம்” எனப் புகழப்படும் தமிழ் உலகில் பல விலக்கியங்கள் தற்பொழுது தமிழகத்தில் தமிழ் பற்றும் புத்துணர்வும், மொழித் தூய்மையும், ஒழுங்கு முறை எழுத்து வடிவமைப்பும் அமையக் காரணங்களாக அமைகின்றது. இலக்கியங்கள் அனைத்துமே பெரும்பாலும் 1. முதற்பொருள், 2. கருப்பொருள், 3. உரிப்பொருள், என வகைப் படுத்தப்பட்டுள்ளன.



நம் தமிழ் மொழி இலக்கிய வளம் பெற்ற மொழியாகும். இலக்கியங்களும் இலக்கண நூல்களும் பெருகி இருந்தமையால் தமிழ்மொழி திருந்திய மொழியாக, திருத்தம் செய்யப்பட்ட மொழியாக, ஒழுங்கு படுத்தப்பட்ட மொழியாகச் சிறப்புற்றது. இலக்கண மரபுகளைத் தகுத்து ஒழுங்குபடுத்தி “எழுத்து”, “சொல்”, “பொருள்” என்ற மூன்று தலைப்புக்கள் ஒலியைக் குறிக்கும் குறில், நெடில், ஆய்தம், இகரம், உகரம் போன்ற அனைத்துத் தமிழ் இலக்கண நெறிகளை நாம் அறிவோம்.



தமிழ் மொழியின் நான்கு நிலைகள்



1. பண்டைத் தமிழ் நிலை

2. காப்பியக்காலத் தமிழ் நிலை

3. இடைக்காலத் தமிழ் நிலை

4. தற்காலத் தமிழ் நிலை



என நான்கு வகைகளாகப் பிரிக்கிறார். திரு. எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள்,



பண்டையத் தமிழை அறியத் தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களும் உதவுகின்றன.



இடைக்காலத் தமிழை அறியத் தேவாரம், திவ்யப்பிரபந்தம், சிந்தாமணி போன்ற இலக்கியங்கள் உதவுகின்றன.



தற்காலத் தமிழ்நிலையை, நன்னூலுக்குப் பிற்பட்ட இலக்கியங்கள் மற்றும் பேச்சு வழக்குத் தமிழ் கொண்டும் தெரிய முடிகிறது.



ஒலியாகத் திரிந்து, சித்திரமாய் மாறி, பலமொழிகளுடன் இணைந்து உருக்கள் பலப், பல எடுத்து, காலம் பல கடந்து, கல்வெட்டுகளில் உராய்ந்து, செப்பேடுகளிலும் ஓலைச் சுவடிகளிலும் தோய்ந்து, வெள்ளைக் காகிதத்தில் வீரநடை போடும் தேன்தமிழ் மொழியே நம் தாய்த் தமிழ்.



என்றும், மழலையாய், குன்றாச் சிறப்புடன் தேன் சுவையொத்த, தமிழாம் கன்னியை முன்னோன் தன் கருவினில் சுமந்து, மகவாய் ஈன்று, மழலையாய் வளர்த்து, குமரியாய்ப் போற்றிக்காத்து நம்மிடம் விட்டுச் சென்றான். அன்னவள் விரிந்த கூந்தலை வாரிப் பின்னலிட்டு, மலர் வைத்து அன்புடன் அழகு பார்த்தல் நம் கடமையல்லவா? அழகு பார்க்க எவரும் துணியாதது ஏன்? என்பதுதான் புதிராக உள்ளது.



ஃ - அக் என்னும் ஆயுத எழுத்து







அகரக்குறிலொலி துவக்கத்திலெழுப்ப

இக்கென மெய்யொலி இறுதியில் முடிக்க

அக்கென எழும்புமாயுத ஒலியை

மும்முற்றுப்புள்ளிகளெங்கனம் ஒலிக்கும்?

ஒலியே! இல்லா பிற ஒலி திருடும்

அவல நிலையைப் போக்கலாமெண்ணி

மும் முற்றுப் புள்ளியை நீக்கலும் சரியே!









பொதுவான பழமொழிகள்


தமிழ் - பழமொழி

* அகத்தினழகு முகத்தில் தெரியும்

* அம்மாவைக் குளிக்குமிடத்தில் பார்த்தால் மகளை வீட்டில் பார்க்கவேண்டியதில்லை

* அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.

* அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.

* அடியாத மாடு படியாது.

* அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்

* அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.

* அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.

* அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.

* அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.

* அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.

* அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.

* அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.

* ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.

* ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.

* ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.

* ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.

* ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.

* ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.

* ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.

* ஆழம் தெரியாமல் காலை விடாதே.

* ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை (அ) ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.

* ஆறிலும் சாவு நூறிலும் சாவு.

* ஆனைக்கும் அடிசறுக்கும்.

* இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.

* இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.

* உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.

* உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?

* ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி

* எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.

* எறும்பூரக் கல்லும் தேயும்.

* ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.

* ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.

* ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

* கடுகு சிறிதானாலும் காரம் பெரிது.

* கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.

* கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக் குறைவில்லை.

* கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்.

* கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?

* கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.

* கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.

* கழுதை அறியுமா கற்பூர வாசனை?

* காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.

* காக்காய் பிடித்தாவது காரியம் சாதித்துக்கொள்

* காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல்.

* காகம் திட்டி மாடு சாகாது.

* காய்த்த மரம்தான் கல்லடிபடும்.

* காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.

* காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.

* கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?

* குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.

* குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்.

* குரங்குப் புண்ணுக்கு அருமை காட்டினால் கொப்பிலே கொப்பிலே தாவுமாம்.

* குரைக்கிற நாய் கடிக்காது.

* கூட்டுற வெலக்குமாத்துக்குக் குஞ்சரம்னு பேராம்

* கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு.

* கொக்குத் தலையில் வெண்ணெய் வைத்து கொக்கைப் பிடிப்பதுபோல

* கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல்.

* கோழி மிதித்துக் குஞ்சு சாகாது.

* கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.

* சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.

* சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்.

* சாமியே சைக்கிள்ல போகும்போது பூசாரி கேட்டானாம் புல்லட்

* சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.

* சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்.

* சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்?

* சோளியன் குடுமி சும்மா ஆடுமா?

* தடியெடுத்தவன் தண்டக்காரன்.

* தம்பியுள்ளான் படைக்கஞ்சான்.

* தன் வினை தன்னைச் சுடும்.

* தனிமரம் தோப்பாகாது.

* தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.

* தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.

* தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன.

* தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்.

* தெய்வம் வரங் கொடுத்தாலும் பூசாரி விடாதது போல்.

* நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன?

* நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.

* நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.

* நிலவுக்கு அஞ்சிப் பரதேசம் போவது போல்.

* நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.

* நிறைகுடம் தளம்பாது.

* தாட்சண்யவான் தரித்திரவான்

* பசி வந்தால் பத்தும் பறந்திடும்.

* படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில்.

* பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.

* பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.

* பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.

* பனை மரத்தடியில் பால் குடித்தது போல.

* பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.

* பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதையும் பறித்ததாம் அனுமார்.

* பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.

* புதுமைக்கு வண்ணான் கரைகட்டி வெழுப்பான்.

* புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது.

* பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்.

* பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.

* போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.

* மக வாழ்ற வாழ்க்கைக்கு மாசம் பத்துக்கட்டு விலக்குமாரு

* மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

* மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்.

* மின்னுவதெல்லாம் பொன்னல்ல.

* முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.

* முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல.

* முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.

* மைத்துணன் உதவி மலைபோல

* மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.

* யானை படுத்தாலும் குதிரை மட்டம்

* யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.

* யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.

* வழியோடு போய் வழியோடு வந்தால் அதிகாரி சுண்டைக்காய்க்குச் சமம்

* விடிய விடிய ராமாயணம் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.

* விரலுக்குத் தக்கதே வீக்கம்.

* விளையும் பயிரை முளையிலே தெரியும்.

* வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.

* வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.

* வெளுத்ததெல்லாம் பாலல்ல.

* வேலிக்கு ஓணான் சாட்சி.

* வைக்கோற் போர் நாய் போல.





கணினி கலைச் சொற்கள்

தொழில்நுட்பம் - கணினி

absolute address—தனி முகவரி

absolute cell address — தனித்த நுண்ணறை முகவரி

access — அணுக்கம், அணுகல்

accuracy — துல்லியம்

action — செயல்

active cell — இயங்கு கலன்

address modification — முகவரி மாற்றம்

address — முகவரி

addressing — முகவரியிடல்

album — தொகுப்பு

algorithm — வழிமுறை

algorithm — நெறி முறை

algorithmic language - நெறிப்பாட்டு மொழி

alignment — இசைவு

allocation — ஒதுக்கீடு

alphabetic string — எழுத்துச் சரம்

alphanumeric — எண்ணெழுத்து

alphanumeric sort — எண்ணெழுத்து வரிசையாக்கம்

alphanumeric — எண்ணெழுத்து

and gate — உம்மை வாயில்

animation — அசைவூட்டம்

anti virus — நச்சு நிரற் கொல்லி

append — பின் தொடர், பின்சேர்

apperarance — தோற்றம்

application — செயலி

application — பயன்பாடு

applications oriented language - பயன்பாட்டு நோக்கு மொழி

applications program — பயன்பாட்டு நிரல்கள்

applications programmer — பயன்பாட்டு நிரலர்

applications programming - பயன்பாட்டு நிரலாக்கம்

applications software — பயன்பாட்டு மென்பொருள்

architecture — கட்டமைப்பு

archive — பெட்டகம்

archive — ஆவணக்காப்பகம்

area search — பரப்பில் தேடல்

arithmetic expression — எண்கணிதக் கோவை

arithmetic operation - எண்கணித வினை

arithmetic operator — எண்கணித வினைக்குறி

array — வரிசை, அணி

arrow key(direction key) — திசைப் பொத்தான்

artificial intelligence — செயற்கை நுண்ணறிவு

assembler — பொறிமொழியாக்கி

assembly language — பொறி மொழி

audio — ஒலி

audio — ஒலியுணர்

automated data processing — தன்னியக்கத் தரவுச் செயலாக்கம்

automatic — தன்னியக்க

autopilot — தன்னியக்க வலவன்

auxiliary function — துணைச் செயல் கூறு

axes — அச்சுகள்

background — பின்னணி

backspace — பின்னழிக்க, பின்வெளி

backspace — பின்நகர்வு

bad sector — கெட்ட துண்டம்

bar chart — பட்டை வரைபடம்

bar code - பட்டைக் குறிமுறை

bar printer — பட்டை அச்சுப்பொறி

bar-code scanner — பட்டைக் குறிமுறை வருடி

batch processing — தொகுதிச் செயலாக்கம்

bebugging — பிழைவிதைத்தல்

bill — விலைப்பட்டியல்

binary device — இரும நிலைக் கருவி

binary digit — இரும இலக்கம்

binary number — இரும எண்

binary operation — இருமச்செயற்பாடு

binary system — இரும எண்முறை

binary — இரும

bit map — பிட்டுப்படம்

bit mapped screen — பிட்டுப் படத்திரை

bit — நுண்மி, துணு, பிட்டு

blank character — வெற்றுரு

block diagram — கட்ட வரைபடம்

block — கட்டம், தொகுதி

blog — வலைப்பதிவு

boot — தொடக்கு

Brennen — எரிக்க

browser — உலாவி

browsing - மேலோடல்

button(key) — பொத்தான்

byte — எண்பிட்டு, எண்ணுண்மி

cache memory — பதுக்கு நினைவகம்

caculations — கணக்கீடுகள்

caculator — கணிப்பான்

calculating— கணக்கிடல்

calculator mode— கணிப்பான் நிலை

cancel — நீக்கு

capacity — கொள்திறன்

caps lock — மேலெழுத்துப் பூட்டு

carriage return(CR) — ஏந்தி மீளல்

catalog — அடைவு

CD player — குறுவட்டு இயக்கி

cell pointer — நுண்ணறைச்சுட்டி

cell — சிற்றறை, நுண்ணறை

center — மையம், மையப்படுத்து

central processing unit(CPU) — மைய செயலகம்

central processor — மையச் செயலி

channel — தடம்

character code — உருக்குறிமுறை

character generator — உரு ஆக்கி

character map — உரு விவரப்படம்

character recognition — உரு அறிதல்

character set — உருக்கணம்

character string — உருச்சரம்

character — வரியுரு

character — உரு

characteristic — படி

chart — வரைபடம்

clear —துடை

click சொடுக்கு

click— ‘கிளிக்’, அழுத்து

client — சேவைக்கான பயன்பாடு

client —வாங்கி

clone — நகலி, போலிகை

close - மூடு

closed file — மூடிய கோப்பு

coaxial cable — அச்சு ஒன்றிய வடம்

code — நிரற்தொடர்

code — குறிமுறை

collection — திரட்டல்

color coding — வண்ணக் குறிமுறை

color graphics - வண்ண வரைவியல்

column split — நெடுவரிசைப் பிரிப்பு

column - நிரல், நெடுவரிசை

column — நெடுவரிசை

command key — கட்டளைத்திறவு

command — கட்டளை, ஆணை

comment — குறிப்புரை

common storage — பொதுத் தேக்கம்

communication — தொடர்பு

communications link — தொடர்பு இணைப்பு

communications processor — தொடர்பு செயலகம்

communications satellite — தொடர்பு செயற்கைக்கோள்

communications software — தொடர்பு மென்பொருள்

compact disc (CD) — இறுவட்டு

compaction — நெருக்கம்

comparative operator — ஒப்பீட்டு இயக்கி

compare — ஒப்பிடு

comparison — ஒப்பீடு

compilation — தொகுத்தல்

compiler language — தொகுப்பு மொழி

compiler — தொகுப்பி

component — உறுப்புக்கூறு

compuserve — கணிச்சேவை

computation — கணிப்பு

computer code — கணிப்பொறி நிரல்

computer game — கணிப்பொறி விளையாட்டு

computer graphics — கணிப்பொறி வரைவியல்

computer network — கணிப்பொறி வலையமைப்பு

computer operations — கணிப்பொறி சார் செயல்பாடுகள்

computer user — கணிப்பொறி பயனர்

computer utility — கணிப்பொறிப் பயனமைப்பு

computer — கணிப்பொறி

computer-aided manufacturing - கணிப்பொறிவலய உற்பத்தி

computerised data processing — கணிப்பொறி வழித்தரவுசெயலாக்கம்

computerization — கணிப்பொறிமயமாக்கல்

computerized database — கணிப்பொறித் தரவுத் தளம்

computing — கணிப்பு

condition — நிபந்தனை, நிலை

configuration — அமைவடிவம்

console — முனையம்

continuous scrolling — தொடர் உருளல்

control key — கட்டுப்பாட்டுத்திறவுகோல்

control program — கட்டுப்பாட்டு நிரல்

control statement— கட்டுப்பாட்டுக் கூற்று

control system—கட்டுப்பாட்டு அமைப்பு

conversion— மாற்றம்

convert — மாற்று

cookie — நினைவி

coordinates — ஆயத்தொலைவுகள்

copy holder — நகல் தாங்கி

copy protection — நகல் காப்பு

copy — நகல்

cordless — தொடுப்பில்லா

core storage — வளையத் தேக்கம்

cost analysis — விலை பகுப்பாய்வு

cost benefit analysis — விலை பயன் பகுப்பாய்வு

cost effectiveness — விலை பயன் திறன்

costing — விலையிடல்

counter — எண்ணி

create — படை (படைப்பு)

cursor control — சுட்டிக் கட்டுப்பாடு

cursor key — சுட்டிப்பொத்தான்

cursor tracking — சுட்டி பின் தொடரல்

cursor — சுட்டி

curve fitting — வளைகோட்டுப் பொருத்தம்

custom software — தனிப்பயன் மென்பொருள்

customize — தனிப்பயனாக்கு

cut — வெட்டுக

cut — வெட்டு

cyber — மின்வெளி

data — தரவு

delete —அழிக்க

design —வடிவமைப்பு

digital — எண்முறை

discovery — கண்டறிதல்

driver — இயக்கி

DRM: — காப்புரிமை

edit — தொகுக்க

firewall — அரண்

floppy — நெகிழ்வட்டு

folder — உறை

format — வடிவூட்டம், வடிவூட்டு

function — செயற்பாடு

gallery — காட்சியகம்

graphics — வரைகலை

guest — வருனர்

home — முகப்பு, அகம்

homepage — வலையகம், வலைமனை

icon — படவுரு

information — தகவல்

interface — இடைமுகப்பு

interpreter — வரிமொழிமாற்றி

invention — கண்டுபிடிப்பு

IRC- இணையத் தொடர் அரட்டை

LAN — உள்ளகப் பிணையம்

license — உரிமம்

link — இணைப்பு, தொடுப்பு, சுட்டி

live cd — நிகழ் வட்டு

log in — புகுபதிகை, புகுபதி

log off — விடுபதிகை, விடுபதி

media player — ஊடக இயக்கி

menu — பட்டியல்

microphone — ஒலிவாங்கி

network — பிணையம், வலையம்

object — பொருள்

offline — இணைப்பறு

online — இணைப்பில்

package — பொதி

password — கடவுச்சொல்

paste — ஒட்டுக

patch — பொருத்து

plugin — சொருகு, சொருகி

pointer — சுட்டி

portal — வலை வாசல்

preferences — விருப்பத்தேர்வுகள்

preview — முன்தோற்றம்

processor — முறைவழியாக்கி

program — நிரல்

proprietary — தனியுரிம

RAM — நினைவகம்

redo — திரும்பச்செய்க

refresh — மீளேற்று

release — வெளியீடு

repository — களஞ்சியம்

row — நிரை, குறுக்குவரிசை

screensaver — திரைக்காப்பு

server — வழங்கி

settings — அமைப்பு

shortcut — குறுக்குவழி

shutdown — அணை

sign in — புகுபதிகை, புகுபதி

sign off — விடுபதிகை, விடுபதி

skin — ஆடை

space — வெளி, இடைவெளி

speaker — ஒலிபெருக்கி

spreadsheet — விரி தாள்

subtitle — உரைத்துணை, துணையுரை

system — கணினி

tab — தத்தல்

table — அட்டவணை

terminal — முனையம்

theme — கருத்தோற்றம், தோற்றக்கரு

thumbnail — சிறுபடம்

undo — திரும்பப்பெறுக

update — இற்றைப்படுத்தல், இற்றைப்படுத்து

upgrade - மேம்படுத்து, மேம்படுத்தல்

URL — முகவரி

version — பதிப்பு

video — நிகழ் படம்

view — பார்க்க

virus — நச்சு நிரல்

volume — ஒலியளவு

wallpaper — மேசைப்பின்னணி

window — சாளரம்

wireless — கம்பியில்லா

wizard — வழிகாட்டி

worksheet — பணித் தாள்

அகலப்பட்டை — இணைப்பு (Breitband)

அலுவலகப் பயன்பாடு - Office Application

அழித்தல் — Deletion, Removal

அழிப்பான், எரேசர் — Eraser

அனுமதி — Permission

ஆவணங்கள் — Documents

இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் — IE – Internet Explorer

இணைய இயங்குதளம் — Web Operating System

இயக்கிகளை — (drivers)

இயங்குதளம் — Operating System

உலவி — Browser

உலவி — Web Browser

எண்முறை (டிஜிடல்) உரிமைகள் முகாமைத்துவம் —

Digital Rights Management

ஐகான் — Icon

ஒலிப்பான்+ஒலிவாங்கி - Head phone with Mic

ஒலிவட்டுகள் — (Compact Disk)

ஒளியிழைகளைக்கான — (Lichtleiter)

கடவுச்சொல் — Password

கடனட்டை — Credit Card

காணொளி — Video

குறுக்கு தட்டாச்சு — Shortcut

கையடக்கக் கணினி, கருவிகள் — PDA – Personal Digital Assistant

கோப்பு — File

கோப்புகள் — Files

கோப்புப்பகிர்வான் — File Sharing

சிடியில் எரித்தல் — CD Burning

சுட்டிகளில் — (links)

செயலியை — program

செல்பேசி — Mobile / cell phone

சொடுக்கி — klick

டீம்வியூவர் — Team viewer

தகவல் — Information, Data

தரவிறக்கம் — Download

தரவுத்தளமாக — (Database)

நிறுவுதல் — Installation

நினைவகம் — memory (RAM)

நீட்சிகள் — (Firefox add-ons)

பகிரப்பட்ட கோப்புகள் - Shared Files

பணிச்சூழல் — Working Environment

பயன்பாடுகள் — Software Applications

பயனர் கணக்கு — User Account

பார்க்க — Read

மடிக்கணினி — Laptop

மாய — Virtual

மாற்றியமைக்க — Edit

மீட்பான் — Recovery tool

முரண்பாடு — incompatible

மூலவரைவு — Source Code

மென்நூல் — E-book

மென்பொருள் — Software / Application

மைக்ரோசாப்ட் ஆபீஸ் — Microsoft Office

வருடச் சந்தா — Yearly fee

வரைகலை — Graphics

வன்பொருள் — Hardware

வன்வட்டு — Hard disk

விண்டோஸ் விஸ்டா — Windows Vista

வீட்டுக்கணினி — Home PC

வீட்டுத் தொலைபேசி - Home based Fixed Wired / Wireless phone

வேகமான இணைய இணைப்பு — Fast Internet Connection



பிட்/பைட் (bit/bytes)


கணினி ஒரு இலத்திரனியல் சாதனம் என்பது நீங்கள் அறிந்ததுதான். ஒரு மின் விளக்குப் போல் கணினியிலுள்ள மின் சுற்றுக்களும் On அல்லது off எனும் இரண்டு நிலைகளைக் கொண்டுள்ளன. On ஆக இருக்கும் நிலையை 1 (ஒன்று) எனும் இலக்கத்தாலும் off நிலையை 0 (பூச்சியம்) எனும் இலக்கத்தாலும் குறிக்கப்படுகின்றன. தகவல்களைக் கணினி நினைவகத்திலும், டிஸ்க் ட்ரைவ்லிலும் சேமிக்கும் போது ஒன்றுகளாலும் பூச்சியத்தாலும் மட்டுமே பதிவு செய்கின்றன. இங்கு ஒன்று அல்லது பூச்சியத்தை ஒரு பிட் என அழைக்கப்படும். பைனரி டிஜிட் (binary digit) எனும் வார்த்தைகளிலிருந்ததே பிட் (bit) எனும் வார்த்தை உருவானது. பிட் என்பது ஒரு தகவலின் மிகச் சிறிய அலகாகும்.


ஒரு பிட்டை மாத்திரம் கொண்டு ஒரு எழுத்தையோ அல்லது குறியீட்டையோ உருவாக்கி விட முடியாது. ஒன்றுக்கு மேற்பட்ட பிட்டுகளை ஒரு அணியாக ஒன்று சேர்க்கும்போதே எதனையும் (ஒரு தகவலை) அர்த்தமுள்ளதாக வெளிப்படுத்த முடிகிறது. இவ்வாறு 8 பிட்டுகள் சேர்ந்ததை ஒரு பைட் (byte) எனப்படும். ஒரு பைட் மூலம் 256 வெவ்வேறான எழுத்துக்களையோ அல்லது குறியீடுகளையோ வெளிப்படுத்தலாம். அதாவது எட்டு பிட்டுகளை மூலம் 256 வெவ்வேறான சேர்மானங்களை உருவாக்கலாம். இதன் மூலம் கீபோர்டிலுள்ள ஆங்கில பெரிய எழுத்துக்கள், சிறிய எழுத்துக்கள் மற்றும் குறியீடுகளையும் உருவாக்க முடிகிறது.

உதாரணமாக் "A" எனும் எழுத்தானது கணினியில் 01000001 என பதியப்படுகிற்து. (அதாவது கணினி மின் சுற்றில் 8 Switches / ஆளிகள் இயங்குகின்றன) அதேபோல் " * " எனும் குறியீடு 00101010 என பதியப்படுகிறது. Cat எனும் பெயரை பதிய 010000110110000101110100 பிட்டுகள் இவ்வாறு அணி சேர்கின்றன. இவை மூன்று எழுத்துக்களைக் குறிக்கின்றன. எனவே இது மூன்று பைட்டுகளைக் கொண்டிருக்கும்.


பைட் கொண்டு ஒரு சிறு அளவிலான தகவலையே சேமிக்க முடியும் தகவலின் அளவு கிலோ பைட், மெகாபைட், கிகா பைட் போன்றவற்றிலேயே குறிப்பிடப்படுகின்றன.

ஒரு Kilobyte (KB) கிலோ பைட் என்பது 1024 பைட்டுகளுக்குச் சமனானது. ஒரு சராசரி எம்.எஸ். வர்ட் ஆவணம் 100 பைட்டுகளைக் கொண்டிருக்கும்.


ஒரு மெகா பைட் Megabyte (MB) என்பது 1024 கிலோ பைட்டுகள் கொண்டது. 1024 மெகா பைட்டுகளை ஒரு கிகாபைட் (Gigabyte) கொண்டிருக்கும்.

பைல்களின் அளவு பைட்டிலும் கிலோ பைட்டிலும் அளவிடப்படுகின்றன. ஒரு தசாப்தத்துக்கு முன்பு வரை அனேகமன மென்பொருள்கள் 1.44 மெகா பைட் அளவு கொண்ட ப்லொப்பி டிஸ்கிலேயே கிடைக்க்கப்பெற்றன. அப்போது வெளிவந்த மென்பொருள்க்ளின் அளவு மிகவும் சிறியதாயிருந்தன. அதனால் ஒரு மென்பொருளை ஓரிரு ப்லொப்பி டிஸ்கில் அடக்கக் கூடியதாயிருந்தது. எனினும் தற்காலத்தில் வெளி வரும் மென்பொருள்களின் அளவு முன்னரை விடப் பல மடங்கு பெரிதாகவுள்ளன. உதராணமாக் எம்.எஸ்.ஒபிஸ் மென்பொருள் தொகுப்பின் அண்மைய பதிப்பை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் கொள்ளளவு சுமார் 700 மெகா பைட்டுகளாகவுள்ளது. அதாவது ஒரு சீடியின் அளவுக்குச் சமமானது.

மென்பொருள்களைப் போன்றே ஹாட் டிஸ்கின் கொள்ளளவுகளும் தற்போது நினைத்தும் பார்க்க முடியாத அளவுகளில் கிடைக்கின்றன. பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கு முன்னர் ஒரு ஹாட் டிஸ்கின் உச்ச கொள்ளளவு 1 கிகாபைட்டிலும் குறைவாகவேயிருந்தன. பின்னர் அதன் கொள்ளளவு 10, 20, 40, 60, 80, 120, 160, 300 500 கிகாபைட் என படிப்படியாக மிக வேகமாக அதிகரித்து தற்போது ஒரு டெராபைட் அளவிலும் கூட ஹாட் டிஸ்க்குகள் கிடைக்கப் பெறுகின்றன. ஒரு டெரா பைட் என்பது 1024 கிகா பைட்டுகளுக்க்ச் சமனானது.

டேட்டாவை சேமிக்கும் ப்ளொப்பி, சிடி, டிவிடி, ஹார்ட் டிஸ்க், பென் ட்ரைவ் போன்றவற்றில் அதிக அளவில் டேட்டா சேமிக்கப் படுகையில் அவற்றின் அளவைக் குறிக்க கிலோபைட், மெகாபைட், கிகாபைட் போன்ற அளவீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.


 பிட் (Bit) 0 அல்லது 1 ஐக் குறிக்கும்

· 4 பிட்டுகளின் சேர்க்கையை நிப்பல் (Nibble) என்ப்படும்.

· 8 பிட்டுகளின் சேர்க்கையை ஒரு பைட் (Byte) எனப்படும்.

· 16 பிட்டுகளின் சேர்க்கையை ஒரு வர்ட் (Word) எனப்படும்.

· 1024 பைட்டுகள்(Byte) சேர்ந்தவை ஒரு கிலோபைட் Kilobyte (KB) எனப்படும்.

· 1024 கிலோ பைட்டுகள் சேர்ந்தவை ஒரு Megabyte (MB) எனப்படும். ஒரு மெகாபைட் 1200 எழுத்துக்களாலான 873 பக்கங்கள் கொண்ட ஒரு ஆவணத்திற்குச் சமமானது.

· 1024 மெகா பைட்டுகள் சேர்ந்தவை ஒரு கிகா பைட் Gigabyte (GB)எனப்படும். இதனுள் 200 பக்கங்கள் கொண்ட 4473 புத்தகங்களை அல்லது 3 MB அளவு கொண்ட 341 படங்களை அல்லது 4 MB அளவு கொண்ட 256 பாடல்களைச் அடக்கிவிட்லாம்.

· 1024 கிகா பைட்டுகள் சேர்ந்தவை ஒரு Terabyte (TB) எனப்படும். ஒரு டெராபைட்டில் 200 பக்கங்கள் கொண்ட 4,581,298 புத்தகங்களை அல்லது 3 MB அளவு கொண்ட 349,525 படங்களை அல்லது 4 MB அளவு கொண்ட 262,144 MP3 பாடல்களைச் சேமிக்கலாம். மேலும் இது 650 MB அளவு கொண்ட 1,613 சீடிக்களுக்கு அல்லது 4.38 GB அளவு கொண்ட 233 டிவிடிக்களுக்கு அல்லது 25GB அளவு கொண்ட 40 ப்ளூரே டிஸ்க்குகளுக்குச் சமமானது.



இந்த பயணம் டெரா பைட்டுடன் நின்று விடவில்லை. Petabyte (PB), Exabyte (EB), Zettabyte (ZB), Yottabyte (YB) என எதிர் காலத்தில் தொடர இருக்கிறது. மேற்சொன்ன உதாரணங்களை நோக்கும் போது நாம் தகவல் யுகத்தில் வாழ்கிறோம் என்பதில் எந்த ஐயமும் இல்லை.