தற்போதைய செய்தி
வருகிறது லைலா புயல் ; சென்னை - நாகை ராமேஸ்வரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
மே 18,2010,12:19 IST
சென்னை : வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் வலுப்பெற்று புயலாக உருவெடுக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னைக்கு கிழக்கே அந்தமான் கடல் பகுதியில் சென்னையில் இருந்து சுமார் 700 மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த தாழ்வு மண்டலம் வட மேற்காக நகர்ந்து ஆந்திரா நோக்கி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கடலூர் நோக்கி மையம் கொண்டுள்ளது. இந்த மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறும் என தெரிகிறது.
மணிக்கு 17 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. எந்த அளவிற்கு எப்போது வலுப்பெறும் என வானிலை ஆராய்ச்சிமையம் மதியத்திற்குமேல்தான் அறுதியிட்டு கூற முடியும் என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த புயலுக்கு லைலா என பெயரிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலில் அலைகளின் சீற்றம் ( 12 அடி உயரம் எழும்பும்) அதிகரிக்கும். காற்று மணிக்கு 65 கி.மீட்டர் முதல் 85 கி.மீட்டர் வரை இருக்கும். லேசான முதல் கனத்த மழை பெய்யக்கூடும். சென்னை, நாகை, ராமேஸ்வரம், காக்கிநாடா, புதுச்சேரி பகுதிகளில் நல்ல மழை இருக்கும்.
கடந்த ஆண்டில் 169 பேர் புயலுக்கு பலி ; தற்போது சென்னை, கடலூர் , நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் வானம் இருண்டு மப்பும், மந்தாரமுமாக இருக்கிறது. நாகையில் 2 ம் எண் புயல் எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது. கடலூர் துறைமுகத்தில் 1 ம் எண் எச்சரிக்கை கூண்டும் ராமேஸ்வரம், பாம்பன் துறைமுகத்திலும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஏப்ரல், நவம்பர் மாதத்திற்கு இடையிலான காலத்தில் வங்க கடலில் புயல் மற்றும் மழை ஏற்படுவதுண்டு. இந்தியா மற்றும் வங்கதேசத்தில் கடந்த ஆண்டில் 169 பேர் புயலுக்கு இதே மே மாதத்தில் கொல்லப்பட்டனர் .
No comments:
Post a Comment