Friday, May 21, 2010

ஏ.டி.எம். எந்திரத்தை கண்டு பிடித்தவர் மரணம்

Thanks maalimalar.com  rgkumaran

ஏ.டி.எம். எந்திரத்தை கண்டு பிடித்தவர் மரணம்: இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் London வெள்ளிக்கிழமை, மே 21, 11:31 AM IST முந்தைய பதிவுகள் 5



இமெயில் பிரதி வலைப்பூக்கள் digg del.icio.us newsVine திரைப்படம் லண்டன், மே 21-திரைப்படம் லண்டன்,

உலகின் முதல் ஏ.டி.எம். எந்திரத்தை கண்டு பிடித்தவர் ஜான்ஷெப்பர்டு பாரோன் (84). இந்திய வம்சாவழியை சேர்ந்த இவர் இங்கிலாந்தில் உள்ள ஸ்காட்லாந்தை சேர்ந்தவர்.






கடந்த சில நாட்களாக உடல் நலக்கோளாறினால் அவதிப்பட்டு வந்தார். அவரை வடக்கு ஸ்காட்லாந்தில் உள்ள இன்வர்னஸ் ரெய்க்மோல் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.






கடந்த 1965-ம் ஆண்டு ஏ.டி.எம். எந்திரத்தை கண்டுபிடித்தார். அப்போது அவர் அச்சு தொழில் செய்து வந்தார். பாங்கிக்கு சென்றிருந்த போது பணம் பெற அவருக்கு மிகவும் காலதாமதம் ஏற்பட்டது.






இதை தொடர்ந்து அவருக்கு பாங்கியை தவிர வேறு எந்த இடத்திலும் பணம் பெறும் வசதியுடைய ஏ.டி.எம். எந்திரத்தை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.






அதை தொடர்ந்து ஏ.டி.எம். எந்திரத்தை அவர் வடிவமைத்தார். இவர் தயாரித்த அந்த எந்திரம் கடந்த 1967-ம் ஆண்டு ஜூன் 27-ந்தேதி வடக்கு லண்டனில் உள்ள பார்கிளேஸ் பாங்கி கிளையில் பொருத்தப்பட்டது.






அப்போது பிளாஸ்டிக் கார்டு கண்டு பிடிக்கவில்லை. ரசாயன குறியிடப்பட்ட சிறப்பு செக் மற்றும் தனி அடையாள குறியீட்டு நம்பர் மூலமும் இயக்கப்பட்டு பணம் பெறப்பட்டது. தொடக்கத்தில் 6 இலக்க அடையாள குறியீட்டு நம்பரை பதிவு செய்யும் வகையில் அவர் வடிவடைத்து இருந்தார். பின்னர் 4 இலக்கமாக குறைத்து வடிவமைத்தார்.






மரணம் அடைந்த ஷெப்பர்டு பாரோனின் மனைவி பெயர் கரோலின் இவர்களுக்கு 3 மகன்களும் 6 பேரக்குழந்தைகளும் உள்ளனர்.

1 comment:

  1. HAI

    He is a good person if you were there that country is not atmbank

    indian proved here and there .

    i salute here.
    Thanks

    ReplyDelete