திரைப்படம் காஞ்சீபுரம், மே. 29-
ஜெயந்தி விழா நேற்று காலை 7 மணியிலிருந்து பகல் 12.30 மணி வரை ஜெபம், ருத்ர பாராயணம், ருத்ர ஹோமம் நடந்தது. இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தொடர்ந்து மகா பெரியவர் அதிஷ்டானத்தில் சங்கராச் சாரியார்கள் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜேயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் மகா அபிஷேகம் நடந்தது. மாலை 6.30 மணிக்கு ஸ்ரீநிவாஸ், ராஜேஷ் குழுவினரின் மாண்டலின் இசை நிகழ்ச்சி நடந்தது. திரளான பகதர்கள் கலந்து கொண்டனர்.
மகா பெரியவரின் ஜெயந்தி விழாவையொட்டி, காமாட்சியம்மன் கோவிலில் நாளை (30-ந்தேதி) முதல் மே 9-ந்தேதி வரை அதிருத்ரம் மற்றும் ஷஹஸ்ரசண்டி மகா யாகம் நடைபெறுகிறது.
ஸ்ரீசங்கர பக்த ஜன சபா மூலம் இந்த மகா யாகம் நடத்தப்படுகிறது. தினமும் சுமங்கலி பூஜை, கன்யா பூஜை, வடுக பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும் நடைபெற உள்ளது. 8-ந்தேதி வரை தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள் கோவிலில் நடைபெறும். இதில் பிரபல இசை கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர்.
No comments:
Post a Comment