Monday, May 31, 2010

குழந்தை மூளை வளர்ச்சி

தாய் வயிற்றில் இருக்கும் குழந்தை மூளை வளர்ச்சிக்கு உதவும் மீன்கள்
லண்டன், மே.31-
 
இங்கிலாந்தில் உள்ள லண்டன் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்தில் உள்ள சத்துணவு துறை இயக்குனர் பேராசிரியர் ஜோக்வின்க்லர் தலைமையிலான குழுவினர் கருவில் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறித்து ஆராய்ச்சி நடத்தினர். இதற்காக கர்ப்பிணி பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
 
பொதுவாக குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு “ஒமேகா 3 பேட்டிஆசிட்” தேவை. அவை மீன்களில் மட்டுமே அதிக அளவில் உள்ளது. எனவே, கர்ப்பிணி பெண்கள் அதிக அளவில் மீன் சாப்பிடும்படி சிபாரிசு செய்தனர். அதன்படி கூடுதலாக மீன் சாப்பிட்ட பெண்களின் கர்ப்பபையில் வளர்ந்த குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி திறன் நன்றாக இருந்தது தெரிய வந்தது.
 
மேலும், டொகோசா கெசானிக் ஆசிட் குறை பாட்டினால் குழந்தைகளின் மூளையின் நினைவாற்றல் திறன் குறைந்து வருவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த கண்டுபிடிப்புகள் சமீபத்தில் லண்டனில் நடந்த ராயல் சொசைட்டி மாநாட்டில் வெளியிடப்பட்டது.

1 comment: