ஏ.டி.எம்.,மில் லட்சம் ரூபாய் எடுக்கலாம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது
மே 31,2010,04:35
புதுடில்லி: நாளை முதல் வங்கி ஏ.டி.எம்.,மில் ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் பெற்று கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. வங்கிகளில் தற்போது பணப் பட்டுவாடா பெரும்பாலும் ஏ.டி.எம்., எனப்படும் தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரத்தின் மூலம் நடைபெறுகிறது. ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் இந்த ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க முடியாத நிலை உள்ளது.
ஒரு சில வங்கிகளின் ஏ.டி.எம்., களில் 25 ஆயிரம் ரூபாய் வரை தான் எடுக்க முடியும். எச்.டி.எப்.சி.,வங்கி ஏ.டி.எம்.,களில் 50 ஆயிரம் ரூபாய் வரை எடுக்க முடியும். தற்போது ஒரு லட்சம் ரூபாய் வரை ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க எச்.டி.எப்.சி., வங்கி ஏற்பாடு செய்துள்ளது. நாளை முதல் தனது வங்கி ஏ.டி.எம்.,களில் ஒரு லட்சம் ரூபாய் வரை பெறுவதற்கு எச்.டி.எப்.சி., வங்கி ஏற்பாடு செய்துள்ளது. இதே போல இந்த வங்கியின் 'டெபிட் கார்டு'களை பயன்படுத்தி கடைகளில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரை பெறுமானமுள்ள பொருட்களை வாங்கிக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வசதி மற்ற வங்கிகளும் வெகுவிரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. ஒரு லட்ச ரூபாய் வரை மட்டுமே டெபிட் கார்டில் பொருட்களை வாங்கும் வசதி முன்பு இருந்தது. இதே போல குழந்தைகளுக்கான 'கிட்ஸ் அட்வான்ஸ் டெபிட்' கார்டில் 2,500 ரூபாய் வரை பொருட்களை பெறவும், 1,500 ரூபாய் வரை பணம் பெறவும் வசதி செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கான டெபிட் கார்டில் முன்பு 20 ஆயிரம்ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க முடிந்தது. தற்போது 25 ஆயிரம் ரூபாய் வரை பணம் பெறறுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
Good chance take in atm also thief
ReplyDeleteநான் எதையும் சாதிக்க வல்லவன் என்று கூறு
ReplyDelete