உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு(World Classical Tamil Conference)-2010 முதலமைச்சர் கலைஞர் அறிக்கை :
கோவை மாநாகரில் ஜீன் திங்கள் 23 முதல் 27 வரை ஐந்து நாட்களுக்கு நடை பெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாடு தொடர்பான ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசனை செய்திடவும், நேரடியாக ஆய்வு செய்திடவும், கோவை மாநகரில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தேன். மாநாடு தொடர்பான பல்வேறு ஏற்பாடுகளை வகைப்படுத்தியும், முறைப்ப...டுத்தியும் நேர்த்தியான முறையில் செய்வதற்காக, நமது மாண்புமிகு அமைச்சர்களின் தலைமையில் 21 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தக் குழுக்களுடன் நான் நடத்திய கலந்தாலோசனைக் கூட்டத்தில், இதுவரை மாநாட்டிற்காகச் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், இனி செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் பற்றியெல்லாம் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களும், அதிகாரிகளும், தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் எந்த அளவிற்கு விரைவாகவும், தரத்தோடும் நடைபெறுகின்றன என்பதை எடுத்துக்காட்டின. அமைச்சர்களும், அதிகாரிகளும் மாநாடு வெற்றிகரமாக நடைபெறுவதற்குத் தம்மை முழு அளவில் ஈடுபடுத்திக் கொண்டு, முனைப்போடு பணியாற்றிக் கொண்டிருப்பது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாக இருந்தது.
மாநாடு தொடர்பாக பொது அரங்க நிகழ்ச்சிகள், ஆய்வரங்க நிகழ்ச்சிகள், கண்காட்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் கொடீசியா அரங்கத்தையும் நான் விரிவாகப் பார்வையிட்டேன். பொது அரங்க நிகழ்ச்சிக்கான பிரம்மாண்டமான பந்தல் மிக அழகாக உருப்பெற்று வருகிறது. பழம்பெரும் புலவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ள 28 ஆய்வரங்கங்களும் பல்வேறு நாடுகளிலிருந்தும் கலந்து கொள்ளவிருக்கும் தமிழறிஞர்கள் வியந்து பாராட்டும்வண்ணம் அமைக்கப்பட்டு வருகின்றன். கண்காட்சிக்கான ஏற்பாடுகள் - வெறும் கண்காட்சியாக மட்டுமில்லாமல், கருத்துக் காட்சியாகவும், காலமெல்லாம் நினைவுகளிலிருந்து விட்டு அகலாத வகையிலும் உருப்பெற்று வருகிறது. பழந்தமிழர் பண்பாடு, நாகரிகம், தமிழிலக்கிய காட்சிகள் போன்றவை இந்தக் கண்காட்சியில் இடம்பெற உள்ளன. பழந்தமிழர் வாழ்க்கை முறையை - இன்றைய தமிழ் இளைஞர்கள் அறிந்து, உணர்ச்சியும், எழுச்சியும் கொள்ளும்வண்ணம், அவை அமைந்து வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
அதைப்போலவே, ஊர்வலத்திற்கான ஏற்பாடுகள் - ஊர்வலத்திலே ஊர்ந்து செல்லவிருக்கின்ற ரதங்கள் போன்றவை காண்போரைக் கவரும் வண்ணம் வருகின்றன.
இவ்வளவு மகிழ்ச்சிக்கும், உற்சாகத்திற்கும் இடையே என் மனதுக்குக் கிலேசம் தருகிற ஒரு காட்சியையும் கோவையிலே காண நேர்ந்த்து. கோவை விமான நிலையம் தொடங்கி, வ.உ.சி. மைதானம் வரை - இன்னும் மாநகரின் பல்வேறு இடங்களிலும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் கொடிகள், பதாகைகள், கழகத்தின் அனைத்து நிலைகளிலும் பொறுப்பேற்றுச் செயல்பட்டுக் கொண்டிருப்போரின் உருவங்கள் தாங்கிய "பேனர்கள்", தொவிட்டிப் போகும் அளவுக்கு அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருந்தன. இதே காட்சியை முதல் நாளே,கோவை மாநகருக்குச் சென்ற துணை முதலமைச்சர் தம்பி மு.க. ஸ்டாலினும் கவனித்துக் கண்டித்திருக்கிறார் என்று கேள்வியுற்றேன்.
நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கட்சி சார்பற்ற முறையில் தமிழ் மொழிக்காகவும், தமிழர்களுக்காகவும், தமிழக அரசால் நடத்தப்படவிருக்கிற மாநாடே தவிர, அது எள்ளின் முனையளவும் கூட கட்சி மாநாடாக காட்சியளித்து விடக் கூடாது என்பதிலே நான் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறேன் என்பதை ஏனோ கோவை மாவட்டத்து கழக உடன்பிறப்புகள் இன்னும் அறிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதுதான் எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது.
கழகக் கொடிகள், பதாகைகளுக்குப் பதிலாக, பொது மக்களுக்கு எவ்வித சங்கடமும் ஏற்படாத வகையில் - சங்க இலக்கியக் காட்சிகள் அடங்கிய பேனர்கள், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் இலச்சினை தாங்கிய பதாகைகள், பழங்கால மன்னர்களின் திருவுருவங்கள், புலவர்களின் ஒவியங்கள் அழகாக அமைக்கப்படுமானால், அதுவே எனக்கு மட்டுமல்லாமல், மாநாட்டுக்கு வருகிற பல இலட்சக்கணக்கான மக்களுக்கும், வெளிநாட்டினருக்கும் நிறைவளிக்கக்கூடிய ஒன்றாகவும், தமிழ் மொழியின் பெருமை, வரலாறு, பண்பாடு இவற்றை விளக்குவதாகவும் இருக்கும்மென்பதை அனைவரும் அறிந்து - அதற்கேற்ப செயல்பட வேண்டுமென்று விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.
29
மே
என்றைக்கு செம்மொழி மாநாடு கோவையில் நடக்கும் என்று அறிவிப்பு வந்ததோ, அன்றிலிருந்து துவங்கியது இந்த கோரிக்கை மழை. நிறைய பாலங்கள் வேண்டும், சுற்றுச்சாலை வேண்டும், புதிய ஆட்சியர் அலுவலகம் வேண்டும்...என எல்லாமே அரசால் நிறைவேற்றப்படக் கூடிய கோரிக்கைகள்தான். இவற்றில், எந்தெந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, முக்கிய அறிவிப்புகளை முதல்வர் கருணாநிதி வெளியிடப்போகிறார் என்பது, செம்மொழி மாநாட்டின் முதல் நாளில் தெரிந்து விடும். யாரும் எதிர்பாராத அறிவிப்புகளை அறிவித்து, கோவை மக்களை ஆனந்த மழையில் நனைக்கப்போகிறார் என்பது எதிர்பார்ப்பு. இந்த வேளையில், உலக விஞ்ஞானிகளை ஈர்க்கும் வகையில் மாநாட்டைத் துவங்க வேண்டுமென்கிறார் கோவையைச் சேர்ந்த மூலிகை மணி வேங்கடேசன். புவி வெப்பமயமாதல் பற்றி உலகமே பேசும் சூழலில், வேப்பமரம், புங்க மரம், அரச மரம், ஆலமரம், பூவரசு மரம் போன்ற 5 லட்சம் மரங்களை தமிழகம் முழுவதும் உள்ள காலி இடங்களில் நட வேண்டுமென்பது முதல்வருக்கு இவர் வைத்துள்ள கோரிக்கை. வேப்பிலை நிறைய இருந்தால் வெப்பம் அதிகமில்லை என்கிற இவரின் ஆலோசனை, வெறும் வார்த்தைக் கோர்வையாகத் தெரியவில்லை. இந்த கோரிக்கையில், ஆயிரம் அர்த்தம் இருக்கிறது. தொல்காப்பியத்துக்கு விளக்கம் எழுதிய முதல்வருக்கு, இது தெரியாமலா இருக்கும்?
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சிவஞான பாலைய அடிகளார்
சிதம்பரத்தை சேசர்ந்த கந்தசசாமி அய்யர், செசன்னை வீரம்மாள் ஆகியோருக்கு பிறந்தவர் குமாரசசாமி (1894 - 1965). 1928ஆம் ஆண்டு பொம்மபுரம் மடாலயத்தின் 18-ஆம் குருமூர்த்தியாகக் குமாரசசாமி பட்டம் பெறுகையில், பட்டாபிஷேகத் திருப்பெயராக 'சிவஞான பாலைய சுவாமிகள்' எனும் பெயர் சூட்டப்பட்டது. இவர் 1938ஆம் ஆண்டு தம்மடத்தின் நிறுவனமாக ஒரு தமிழ்க் கல்லூரியை உருவாக்கினார். அதற்கு, 'ஸ்ரீமத் சிவஞான பாலைய சுவாமிகள் தமிழ்க் கல்லூரி' என பெயர் வைத்தனர். தமிழை முறையாகக் கற்க உருவான 'முதற் கல்லூரி' எனும் பெருமை இக்கல்லூரிக்கு உண்டு. 1937 ஆம் ஆண்டு 'முருகன் செசந்தமிழ்க் கழகம்' என்ற அமைப்பை உருவாக்கி, தமிழ் வளர்ச்சிக்கு ஊக்கம் அளித்தார் சிவஞான பாலைய அடிகளார்.
world tamil conferenc in kovai very coming soon
ReplyDeleteyou will see one by one very fair and culture
thanks