அண்ணாமலையார் கோயிலில் பிரம்மோற்சவம் தொடக்கம்
First Published : 08 Jul 2010 12:16:31 AM IST
திருவண்ணாமலை, ஜூலை 7: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தட்சிணாயன புண்ணிய கால பிரம்மோற்சவம் புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலையில் கார்த்திகை மகாதீபம், சித்திரை பெருவிழா உள்பட பல்வேறு விழாக்கள் ஆண்டுதோறும் நடக்கின்றன. மேலும் கோயிலில் அமைந்துள்ள தங்கக் கொடி மரத்தில் ஆண்டுக்கு 4 முறை கொடியேற்றும் விழா நடக்கிறது.அதன்படி புதன்கிழமை காலை 9.30 மணிக்கு தட்சிணாயன புண்ணியகால கொடியேற்றம் நடைபெற்றது. சூரியன் தெற்கு திசை நோக்கி நகரும் காலத்தின் தொடக்கத்தை வரவேற்கும் வகையில் பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. 10 நாள்கள் நடைபெறும் உற்சவத்தில் நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் மாடவீதிகளில் உற்சவர் வீதி உலா நடைபெறும்.
No comments:
Post a Comment