1. I do a job
நான் செய்கின்றேன் ஒரு வேலை.
இந்த "I do a job" எனும் வாக்கியம் ஒரு சாதாரண நிகழ்கால வாக்கியமாகும். இதை ஆங்கிலத்தில் Simple Present Tense அல்லது Present Simple Tense என்று அழைப்பர்.
இந்த "Simple Present Tense"" சாதாரண நிகழ்காலச் சொற்களை எப்படி கேள்வி பதிலாக மாற்றி அமைப்பது என்று பார்ப்போம். கீழே பாருங்கள்.
Subject + Auxiliary verb + Main verb1. I/ You/ We/ They + __ + do a job.
2. He/ She/ It + __ + does a job. இவற்றில் "Subject" வாக்கியத்தின் முன்னால் வந்துள்ளது. இவ்வாக்கிய அமைப்புகளில் "Auxiliary verb" "அதாவது துணைவினை பயன்படுவதில்லை என்பதை கவனத்தில் கொள்க.
Auxiliary verb + Subject + Main verb1. Do + I/ you/ we/ they + do a job?
2. Does + he/ she/ it + do a job.
இவற்றில் "Auxiliary verb" பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது சாதாரண நிகழ்காலக் கேள்வி வாக்கியங்களின் போது Do/ Does துணைவினை முன்பாகவும் "Subject" அதன் பின்னாலும் பயன்படும். இதை சற்று விளங்கிக்கொண்டோமானால் எந்த ஒரு வாக்கியத்தையும் மிக இலகுவாக கேள்வி பதிலாக மாற்றி அமைத்துவிடலாம்.
இப்பாடத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்து கற்போம்.
No comments:
Post a Comment