சிவில் சர்வீஸ் தேர்வில் மாற்றம் - 20-10-2010 |
புதுடில்லி: ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கான பாடத் திட்டத்தில், வரும் ஆண்டு முதல், புதிய முறை அமல்படுத்தப்படுகிறது. |
முதல்நிலை தேர்வில், தற்போது பின்பற்றப்படும் விருப்பப் பாட தேர்வு முறை ரத்து செய்யப்படுகிறது. ஐ.ஏ.எஸ்., தேர்வுகளை (சிவில் சர்வீஸ் தேர்வு) மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இதற்கான முதல் நிலை தேர்வில் (பிரிலிமினரி), தற்போது விருப்பப் பாடத் தேர்வு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதன்படி, இத்தேர்வை எழுதுவோர், தாங்கள் விரும்பும் ஏதாவது ஒரு பாடத்தை, தேர்வு செய்து தேர்வு எழுதலாம். தற்போது அந்த முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல், விருப்பப் பாடத் தேர்வு முறை ரத்து செய்யப்படுகிறது. புதிய முறைப்படி, முதல் கட்ட தேர்வு, இரண்டு தாள்களை கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு தாள்களும், 200 மதிப்பெண்களை கொண்டதாக இருக்கும். தேர்வில் பங்கேற்பவர்கள், இந்த இரண்டு தேர்வுகளையும் கட்டாயம் எழுத வேண்டும். முதல் தாளில், தற்போதைய உலக மற்றும் தேசிய நிகழ்வுகள், இந்திய வரலாறு, இந்திய, சர்வதேச புவியியல் - சமூகவியல், பொருளாதார புவியியல், இந்திய அரசியல் மற்றும் நிர்வாக அமைப்பு, பஞ்சாயத்து ராஜ், பொது கொள்கை, உரிமைகள், பொருளாதாரம் மற்றும் சில பாடத் திட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும். இரண்டாவது தாளில், பொது அறிவியல், தகவல் பரிமாற்றத் திறமை, பிரச்னைகளுக்கான தீர்வு, பொது அறிவுத் திறன், அடிப்படை கணிதம், ஆங்கிலத் திறமை மற்றும் சில பாடத் திட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும். |
முனைவர்.இராம.ஞானக்குமரன் MCA.,M.Tech.,Ph.D.,MISTE., https://twitter.com/rgkumaran
Wednesday, October 20, 2010
சிவில் சர்வீஸ் தேர்வில் மாற்றம் - 20-10-2010
Subscribe to:
Post Comments (Atom)
hai everybody must see and read here. thanks
ReplyDelete