Thursday, October 14, 2010

இந்தியாவுக்கு 37-வது தங்கம்

பேட்மின்டன் இரட்டையர் ஜோடி: இந்தியாவுக்கு 37-வது தங்கம்- ஜுவாலா- அஸ்வினி ஜோடிக்கு கிடைத்தது
புதுடெல்லி, அக். 14-
 
19-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. கடந்த 3-ந்தேதி கோலாகலமாக தொடங்கிய இந்தப்போட்டி இன்றுடன் நிறைவு பெறுகிறது. நேற்றைய போட்டி முடிவில் இந்தியா 36 தங்கம் வென்று இருந்தது.
 
இன்று இந்தியாவுக்கு 37-வது தங்கப்பதக்கம் கிடைத்தது. பேட்மின்டன் போட்டியில் இந்த தங்கம் கிடைத்தது. பேட்மின்டன் பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டம் இன்று காலை நடந்தது.

இந்தியாவின் ஜுவாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா ஜோடி சிங்கப்பூரைச் சேர்ந்த முலியாசரி-யாலி ஜோடியை எதிர்கொண்டது. இதில் ஜுவாலா-அஸ்வினி ஜோடி 21-16, 21-19 என்ற நேர்செட் கணக்கில் வென்று தங்கப்பதக்கம் பெற்றது.
 
பேட்மின்டன் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். இந்தியாவும், இங்கிலாந்தும் தலா 37 தங்கப்பதக்கம் பெற்றுள்ளன. இங்கிலாந்து அதிகமான வெள்ளிப்பதக்கம் பெற்றதால் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.
 
இதேபோல் ஆக்கிப்போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கமே கிடைத்தது. இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.
 
மேலும் இன்று டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு ஒரு வெண்கலப்பதக்கம் கிடைத்தது. பெண்கள் இரட்டையர் பிரிவில் பவுலோமி-மவுமா தாஸ் வெண்கலப்பதக்கம் பெற்றனர்.
 
இன்று பிற்பகல் நடைபெறும் பேட்மின்டன் பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், மலேசியாவைச் சேர்ந்த வாங் மியூவை எதிர்கொள்கிறார்.
 
இதில் சாய்னா வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வெற்றி பெற்றால் இந்தியாவின் தங்கப்பதக்க எண்ணிக்கை 38 ஆக அதிகரிக்கும்.
 
பேட்மின்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் மலேசியா 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி தங்கப்பதக்கம் பெற்றது.

No comments:

Post a Comment