முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகம் - 08-11-2010 |
|
இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் தங்களது கிளைகளை துவங்கி கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, ஏற்கனவே வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சில இந்தியாவில் கிளைகளை துவங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வரிசையில் தற்போது ஸ்காட்லாந்து நாட்டின் "ஸ்டார்த்சிலைடு பல்கலைக்கழகம்&' டில்லியில் "ஸ்டார்த் சிலைடு பிசினஸ் ஸ்கூல்&' ஒன்றை விரைவில் துவங்க உள்ளது. இது குறித்து இதன் தலைவர் சுசன் ஹார்ட் கூறியதாவது: "இங்கு இளநிலை, முதுகலை, எம்.பி.ஏ., உள்ளிட்ட படிப்புகள் தொடங்கப்படுகின்றன. வரும் 2011ம் ஆண்டு செப்., மாதத்திலிருந்து இப்பல்கலை கிளை செயல்பட ஆரம்பிக்கும். துவக்கத்தில் 1200 மாணவர்கள் சேர்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான தேர்வு அடுத்த மாதம் துவங்க உள்ளது. இதே மாதிரியான "பிசினஸ் ஸ்கூல்&' விரைவில் மும்பை மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் தொடங்கவும் இப்பல்கலை திட்டமிட்டு வருகிறது&' என்றார். இப்பல்கலைக்கழகம் செயல்படத் துவங்கும்போது வெளிநாட்டு பல்கலைக்கழக கிளை ஒன்று இந்தியாவில் செயல்பட துவங்கிய முதல் பல்கலைக்கழகம் என்ற பெருமையை பெற உள்ளது. |
முனைவர்.இராம.ஞானக்குமரன் MCA.,M.Tech.,Ph.D.,MISTE., https://twitter.com/rgkumaran
Tuesday, November 9, 2010
முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகம் - 08-11-2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment