Tuesday, November 2, 2010

கூகுளுக்கு போட்டியாக வந்துவிட்டது புதிய சர்ச் இன்ஜின்

வாஷிங்டன்: இன்டெர்நெட்டில் தகவலை தேடுவோர் அனைவரும் நாடுவது கூகுள் என்ற சர்ச் இன்ஜினைத்தான். அந்தளவிற்கு அதில் இல்லாத தகவல் இல்லை என்றே கூறலாம். இந்நிலையில் தகவலை தேடுவோரின் ஆவலை பூர்த்தி செய்ய வந்துள்ளது பெலிக்கோ எனப்படும் புதிய சர்ச் இன்ஜின். இந்த சர்ச் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது.அமெரிக்காவை சேர்ந்த பீட்டா நிறுவனம் தான் இந்த பெலிக்கா.காம் என்ற புதிய சர்ச் இன்ஜினை வெளியிட்டுள்ளது. மற்றொரு சர்ச் இன்ஜினை சேர்ந்த லேண்ட்.காம்மின் எடிட்டர் டேனி சுலிவன் கூறும்போது கடந்த காலங்களில் கூகுளுக்கு போட்டியாக எத்தனையோ சர்ச் இன்ஜின்கள் வந்து தோல்வியை தழுவியுள்ளது. தற்போதைய பெலிக்கோ.காம் இந்த சாதயை முறியடிக்கும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment