தஞ்சாவூர்: தஞ்சை அடுத்த திட்டை குரு ஸ்தலமான வசிஷ்டேஸ்வரர் கோவிலில் நவம்பர் 21ம் தேதி குருப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு லட்சார்ச்சனை மற்றும் குருபரிகார ஹோமம் நடக்கிறது.
இந்தாண்டு குருபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு நவம்பர் 21ம் தேதி பெயர்ச்சி அடைகிறார். மீனராசி குருவின் ஆட்சி வீடு. இப்பெயர்ச்சியால் நமது ஜென்ம ராசியில் இருந்து 2, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் சஞ்சாரம் செய்வதால் நற்பலன் அளிக்கிறார். இதன்படி, இரண்டாமிடத்தில் கும்பம், ஐந்தாமிடத்தில் விருச்சிகம், ஏழாமிடத்தில் கன்னி, ஒன்பதாமிடத்தில் கடகம், 11ம் இடத்தில் ரிஷப ராசியினருக்கு குரு நற்பலன்களை வழங்குவார்.ஜென்ம ராசியான 1, 3, 4, 6, 8, 10, 12 ஆகிய இடங்களில் குருபகவான் சஞ்சாரம் நற்பலன்களை அளிக்காது. இதன்படி, ஒன்றாமிடம் மீனம், மூன்றாமிடம் மகரம், நான்காமிடம் தனுசு, ஆறாமிடம் துலாம், எட்டாமிடம் சிம்மம், பத்தாமிடம் மிதுனம், 12ம் இடம் மேஷம் ஆகிய ராசியினர் பரிகாரம் செய்வது அவசியம். இந்த ராசியினர் தொடர்ந்து குருபகவானை வழிபட்டு, அர்ச்சனை செய்து, ஹோமங்களில் பங்கேற்று பலன்பெறலாம்.இந்த குருப்பெயர்ச்சிக்காக தஞ்சை மாவட்டம் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் நின்ற நிலையில் ராஜகுருவாக அருள் பாலிக்கும் குருபகவானுக்கு நவம்பர் 18ம் தேதி முதற்கட்ட லட்சார்ச்சனையும், டிசம்பர் ஒன்றாம் தேதி இரண்டாம் கட்ட லட்சார்ச்சனையும் நடக்கிறது. இதற்கு 150 ரூபாய் கட்டணமாகும்.மேலும், டிசம்பர் இரண்டு முதல் ஐந்தாம் தேதி வரை நான்கு நாட்களுக்கு குருபரிகார ஹோமம் வேதவிற்பன்னர்களால் நடத்தப்படுகிறது. குருபகவான் சன்னதியில் நடக்கும் இந்த ஹோமத்தில் நேரில் பங்கு கொள்ளுவோருக்கு தனிப்பட்ட முø றயில் சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்து பரிகாரம் செய்யப்படும். இதற்கு கட்டணம் 300 ரூபாயாகும்.இந்த லட்சார்ச்சனை மற்றும் குருபரிகார ஹோம நாட்களில் நேரில் பங்கேற்கு பெறுவோர் கட்டணத்தை செலுத்தி நேரில் பங்கேற்கலாம். முடியாதவர்கள் லட்சார்ச்சனைக்கு 150 ரூபாயும், ஹோமத்துக்கு 300 ரூபாயும் மணியார்டர் அல்லது டிமாண்ட் டிராப்ட்டாக அனுப்பலாம்.அத்துடன் தங்கள் பெயர், ராசி, நட்சத்திரம், லக்கனம் ஆகியவற்றுடன் சரியான முகவரியை எழுதினால் அவர்களுக்கு அர்ச்சனை, சங்கல்பம் செய்து தபால் மூலம் பிரசாரம் அனுப்பி வைக்கப்படும். பிரசாதத்துடன் பூஜையில் வைத்த குருபகவான் உருவம் பொறித்த இரண்டு கிராம் வெள்ளி டாலர், குரு பகவான் படம் அனுப்பப்படும்.முன்கூட்டியே பணம் அனுப்புவோர் பெயர்கள் வரிசை முறையில் முன்பதிவு செய்து பிரசாதம் அனுப்பப்படும். மணியார்டர், டிமாண்ட் டிராப்ட்கள், "நிர்வாக அதிகாரி, வசிஷ்டேஸ்வரர் கோவில், திட்டை - 613003, தஞ்சை மாவட்டம், தொலைபேசி 04362 252858,' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும், என கோவில் நிர்வாக அலுவலர் கோவிந்தராஜு, தக்கார் கிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment