சென்னை : ""செல்வந்தர்கள் பயன்படுத்திய மொபைல் போனை கோடான கோடி ஏழை எளியவர்கள் பயன்படுத்த உதவியதற்காக சிறை சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவை பாராட்டுகிறேன்,'' என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த தி.மு.க., பொதுக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது: கேரளத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட ஒரு வரலாறு உண்டு. அந்த பண்டிகை ஆயுத பூஜை, தீபாவளி போன்று கொண்டாடுகின்றனர் என நான் நினைத்தேன். மாவலி சக்கரவர்த்தி என்ற மன்னன் நீண்ட காலமாக கேரளாவில் நல்லாட்சி புரிந்தான். இதில், ஒரு சில உயர் ஜாதியினர், நாங்களும் ஆட்சிக்கு வர வேண்டாமா என விஷ்ணுவிடம் வரம் கேட்டனர். அதன் அடிப்படையில், மாவலி சக்கரவர்த்தியை விஷ்ணு அழிக்கும் போது, மன்னன் சக்கரவர்த்தி ஒரு வரம் கேட்டான். "என்னால் வாழ்ந்த வளம் பெற்ற குடிமக்கள், ஆண்டுக்கு ஒரு முறையாவது என்னை பார்த்து வாழ்த்து பெற வேண்டும் என்ற வரம் கொடுத்தால் சாகத் தயார்' எனக் கூறினான். இந்த வரத்தை கடவுள் கொடுத்த பின், மன்னன் இறந்தார். இதனால் தான் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆனால், கொடுமை புரியும் அசுரர்களைத் தான் தேவர்கள் அழிப்பர் என்பதை புராணங்கள் கூறுகின்றன. ஆனால், நல்லவனாக ஆண்ட மாவலி மன்னனை அழித்ததாக இந்த கதை வருகிறது.
நான் மாவலி மன்னன் அல்ல; மாவலி மன்னனின் மரபு வழி ஆட்சி செய்கிறவன். அந்த மாவலி மன்னனுக்கு நடந்தது போல், இன்றைக்கும் நமக்கு நடக்கிறது. ராஜா போன்றவர்களுக்கு இதே கொடுமை தான் நடக்கிறது. என்ன செய்வது இதுபோன்ற கொடுமைகளை நாம் அனுபவித்து ஆக வேண்டியுள்ளது. "2ஜி' அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ராஜா என்ன குற்றம் புரிந்தார். செல்வனும், சீமாட்டியும் மட்டுமே பயன்படுத்திய மொபைல் போன் சேவையை, கோடான கோடி ஏழைகள் குறைந்த விலையில் பயன்படுத்துகின்றனர். இது ராஜா செய்த சாதனை. இதைத் தான் ராஜா செய்திருக்கிறார். இன்று டில்லி சிறையில் இருக்கும் ராஜாவின் சாதனைக்காக மனமார பாராட்டுகிறேன்; வாழ்த்துகிறேன். இந்த ஆட்சியின் மூலம் எத்தகைய வரங்களை மக்கள் பெற்றனர் என்பதை சொல்கிறேன். கிராமங்கள், நகரங்களில் குடிசையில்லாத நிலையை ஏற்படுத்த வீட்டு வசதி திட்டம் கொண்டு வந்தோம். இத்திட்டத்தை செயல்படுத்தும்போது, சிலர் கேட்டனர்; அதற்கு பிறகும் திட்டம் வருமா, என சிலர் கேட்டனர். ஆனால், இத்திட்டம் தொடரும்: நாங்களும் தொடர்வோம். இத்தனை ஆண்டு காலத்தில் பல்வேறு சிறப்புமிக்க திட்டங்களை கொடுத்துள்ளோம். இதைப் பற்றி பாராட்டாவிட்டாலும் கவலைப்படவில்லை. என்னை பொறுத்தவரை நான் இல்லாத காலத்தில், நான் ஆற்றிய பணிகள் பல நூறு ஆண்டுகள் கழித்து என்றாவது நிலைக்கும். அவற்றை யாரும் அழிக்க முடியாது. தமிழ் சமுதாயத்திற்கும், திராவிட இயக்கத்திற்கும் நான் பல பணிகள் ஆற்றியிருக்கிறேன். அதை தொண்டர்கள் ஏற்று நடத்த வேண்டும். இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்.

No comments:
Post a Comment