சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்று சொல்வதற்கு காரணம் உண்டு, கொழுக்கட்டை விநாயகருக்கு மிகவும் பிடிக்கும். சதுர்த்தியன்று அதாவது பிறந்த நாள் ஒன்றின் போது விநாயகரை தேவலோகத்தினரும், பூலோக மக்களும் வாழ்த்தியும், வழிப்பட்டும் வந்தார்கள். இவ்வாறு வழிபாடு நடப்பதை கண்ட விநாயகர், ஆனந்தத்தில் தன் மனமகிழ்ச்சியை நடனமாக வெளிப்படுத்தினார். அவர் நடனமாடியதை கண்ட சந்திரன்,விநாயகரைப் பார்த்து கேலியாக சிரித்தான். இதைப் பார்த்து கோபம் கொண்ட விநாயகர் தனது கொம்புகளில் ஒன்றை ஒடித்து அதை சந்திரனை நோக்கி எறிந்தார். விநாயகர் சதுர்த்தியன்று சந்திரனை யாரும் பார்க்க கூடாது என்று சபித்தார். அவ்வாறு பார்த்து விட்டால் அன்றைய நாள் முழுவதும் விக்னேஸ்வரனுக்கு செய்த பூஜையும் பெற்ற புண்ணியமும் பலன் இல்லாமல் போய்விடும். அதனால் தெரியாமல் நாம் விநாயகர் சதுர்த்தி அன்று சந்திரனை பார்த்துவிட்டால், அதற்கு பரிகார நிவர்த்தியாக சங்கடகர சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானுக்கு அறுகம்புல் தந்து வணங்கினால், தோஷம் நிவர்த்தியாகும்.
No comments:
Post a Comment