Sunday, October 3, 2010

ADMISSION TO Ph.D. PROGRAMMES – JANUARY 2011

ANNA UNIVERSITY OF TECHNOLOGY CHENNAI
CENTRAL POLYTECHNIC CAMPUS, TARAMANI, CHENNAI - 600 113
ADMISSION TO Ph.D. PROGRAMMES – JANUARY 2011
Applications are invited for admission to Ph.D Programmes of this university for
January 2011 session
The details such as eligibility, fee and other information are available at http://www.annatech.ac.in
from 01.10.2010
The Application form for Ph.D. Programmes is to be downloaded from the above website and to be
submitted to The Director, Centre for Affiliation and Research, Anna University of Technology
Chennai, CPT Campus, Taramani, Chennai – 600 113 with copies of necessary certificates and a DD
for Rs.600/- (Rs.300/- for Tamil Nadu SC/ST Candidates) drawn in favour of “The Director, Centre for
Affiliation and Research, Anna University of Technology Chennai “payable at Chennai. The last date
for receipt of the completed applications is 01.11.2010.
Note: Candidates working in Engineering Colleges affiliated to Anna University of Technology
Chennai, located in the districts of Chennai, Kancheepuram, Thiruvallur, Vellore, Thiruvannamalai
and Villupuram are only eligible to apply under part-time category. For further details please refer
the above website.
DIRECTOR
CENTRE FOR AFFILIATION AND RESEARCH

ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை




»தமிழ்நாடு
ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர்
 

  


 சென்னை :"பதினேழு லட்சம் ஆண்டுகளுக்கு முன் ராமர் பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது. ஆனால், 1,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து, தென்னகத்தை கட்டி ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழன் மறைந்த விதத்தையோ, அவன் கல்லறையையோ, அவனுக்கு நினைவுத் தூண் அமைத்த இடத்தையோ நம்மால் இன்னமும் அறிய முடியவில்லையே என அகம் நொந்து வருந்தத்தானே வேண்டியுள்ளது' என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:நாகர்கோவிலில் நடந்த தி.மு.க., முப்பெரும் விழாவில் நான் பேசும்போது, திராவிட பாரம்பரியத்தின் பரிணாம வளர்ச்சியைக் குறிப்பிட்டு காட்டினேன். அதைப் போலவே, தமிழரின் கலை, பண்பாடு, கலாசாரத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் தஞ்சை பெரிய கோவில் ஆயிரமாவது ஆண்டு விழாவில் பேசும்போது, ராஜராஜ சோழன் காலத்திய நிர்வாக முறை பற்றி தெரிவித்தேன்.இவை அனைத்திற்கும் ஆதாரமாக ராஜராஜன் எழுப்பியிருக்கும் தஞ்சை பெரிய கோவிலும், பொறித்து வைத்திருக்கும் கல்வெட்டுகளும் நீடித்து நிலைக்கும் சான்றுகளாக காட்சியளிக்கின்றன. அயோத்தி சம்பந்தமான வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாகப் பிரித்து, இரண்டு இந்து அமைப்புகளுக்கும், ஒன்று முஸ்லிம் அமைப்பிற்கும் சமமாக வழங்க வேண்டுமென்று தீர்ப்பு சொல்லப்பட்டது.நீதிபதி சர்மா தனது தீர்ப்பில், "சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடம் தான். ராமர் ஒரு கடவுள். அவர் தெய்வாம்சம் பொருந்தியவராக வழிபடப்பட்டிருக்கிறார். அங்கு பாபரால் கட்டடம் எழுப்பப்பட்டது. எந்த ஆண்டு என்பது நிச்சயமாகத் தெரியவில்லை.

 சர்ச்சைக்குரிய இடத்தில் 1949ம் ஆண்டில் டிசம்பர் 22ம் தேதி நள்ளிரவில், சிலைகள் வைக்கப்பட்டன.சர்ச்சைக்குரிய இடத்தை ராமர் பிறந்த இடமாகக் கருதி, இந்துக்கள் வழிபட்டு வந்துள்ளனர். நினைவு தெரிந்த நாளிலிருந்தே, அதை புனிதத் தலமாகக் கருதி, ஆன்மிகப் பயணம் சென்று வருகின்றனர்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.ராமர் கிருதயுகத்தில் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது. கிருதயுகம் என்பது 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகள் கொண்டது. இப்படி கற்பனைக்கு எட்டாத எண்ணிக்கை கொண்ட ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சியைப் பற்றி, ராமர் பிறந்த இடம் இதுதான் என அறுதியிட்டு உறுதியாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது, 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ராமர் பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது.

ஆனால், 1,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து, தென்னகத்தை கட்டி ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழன் மறைந்த விதத்தையோ, அவன் கல்லறையையோ, அவனுக்கு நினைவுத் தூண் அமைத்த இடத்தையோ நம்மால் இன்னமும் அறிய முடியவில்லையே என அகம் நொந்து வருந்தத்தானே வேண்டியுள்ளது.திராவிட இனத்தின் வரலாறு, நிரல்படுத்தி முறையாக எழுதப்படவில்லை என்றாலும் கூட, லெமூரியா கண்டத்தைப் பற்றிய ஆராய்ச்சி, சிந்து சமவெளி நாகரிகத்தைப் பற்றிய ஆராய்ச்சி, தமிழ் மொழியைப் பற்றிய மூல ஆராய்ச்சி ஆகிய ஆராய்ச்சிகளின் மூலமாக வெளிநாடுகளைச் சேர்ந்த தொல்லியல், மொழியியல் வல்லுனர்கள், திராவிட நாகரிகம் குறைந்தது 3,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த அடிப்படையில், நம்முடைய திராவிட இனத்தின் வரலாறு பற்றிய ஆதாரங்களை, பிற வரலாறுகளுடன் ஒப்பிட்டு நோக்கும் போது, திராவிட இனம் அறிவியல் ரீதியாக வாழ்ந்துள்ள உண்மை வரலாற்றை தெளிவாக உலகம் அறிந்து கொள்ள முடியும்.ஆனால், திராவிட இனத்தைப் புறந்தள்ள முயற்சித்த ஆரிய நாகரிகம், அடிப்படை ஆதாரம் இல்லாமலேயே வெறும் மூட நம்பிக்கையை மக்களிடம் வளர்ப்பதில் மட்டும் முனைப்பாகச் செயல்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொண்டால் போதும்.இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளா

கோலாகல விழா துவக்கம் காமன்வெல்த் விளையாட்டு தில்லி












துவங்கியது காமன்வெல்த் விளையாட்டு: விழாக் கோலம் பூண்டது தில்லி

First Published : 04 Oct 2010 12:00:00 AM IST

Last Updated : 04 Oct 2010 08:44:04 AM IST

மூவர்ணக் கொடியை ஒலிம்பிக் தங்க வீரர் அபிநவ் பிந்த்ரா ஏந்தி வர பின்தொடரும் இந்திய அணியினர்.
புது தில்லி, அக். 3: பத்தொன்பதாவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி தில்லியில் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் துவங்கியது. போட்டியையொட்டி தில்லி நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது.போட்டியை முதல்முறையாக இந்தியா நடத்துவதால் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.போட்டியை பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸýம், குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலும் முறைப்படி துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங், அவரது மனைவி குர்சரண் கெüர், பிரதிபா பாட்டீலின் கணவர் தேவிசிங் ஷெகாவத், சார்லஸின் மனைவி கமீலா பார்க்கர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.விழாவில் மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், காமன்வெல்த் விளையாட்டு சம்மேளன அதிகாரிகள், இந்திய ஒலிம்பிக் சங்க அதிகாரிகள், காமன்வெல்த் போட்டி அமைப்புக் குழுத் தலைவர் சுரேஷ் கல்மாடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.போட்டி துவக்க விழா இரவு 7 மணிக்கு தில்லி ஜவாஹர்லால் நேரு மைதானத்தில் துவங்கியது. பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டதால் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மைதானத்தில் குழுமியிருந்தனர்.காமன்வெல்த் போட்டியின் சின்னமான ஷெரா பொம்மை துவக்க விழா நிகழ்ச்சியைக் காணவந்தவர்களை அன்புடன் வரவேற்றது. அதன்பிறகு கலைநிகழ்ச்சிகள் துவங்கின.பல்வேறு மாநிலக் கலைஞர்கள் இசை வாத்தியங்களை இசைத்தபடி மைதானத்தை வலம் வந்தனர்.மைதானம் முழுவதும் உயரமான பொம்மைகள் அமைக்கப்பட்டிருந்தன. கலைஞர்களுடன் பொம்மைகளும் நாட்டியமாடும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. உயரமாக இருந்த பொம்மைகளை கம்பிகளில் கட்டி கலைஞர்கள் இயக்கினர். இசை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி என 7 வகையாக துவக்க விழா கலைநிகழ்ச்சிகள் பிரிக்கப்பட்டிருந்தன.ரிதம் ஆஃப் இந்தியா, ஸ்வாகதம், டிரீ ஆஃப் நாலெட்ஜ், யோகா, கிரேட் இந்தியன் ஜர்னி, ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின.கலைஞர்கள் மைதானத்தில் வாத்தியக் கருவிகளை இசைத்துக் கொண்டு வலம் வந்தது மைதானத்திலிருந்த பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்டது.ஜொலித்தது ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியம்: துவக்க விழாவையொட்டி ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியம் மின்னொளியால் ஜொலித்தது. மைதான வளாகங்களில் இரவை பகலாக்கும் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.மைதானத்துக்குள் வண்ணமயமான விளக்குகளால், மைதானம் பிரகாசமாக மின்னியது. மைதானத்தின் நடுவே அமைக்கப்பட்டிருந்த ராட்சத பலூன், விடியோ திரையாகவும் செயல்பட்டது. கலைநிகழ்ச்சிகளை ரசிகர்கள் அந்தத் திரையில் கண்டுகளித்தனர். மேலும் மைதானத்தின் நான்கு பக்கங்களிலும் அமைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் திரைகளிலும் விழா நிகழ்ச்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன.இந்திய அணி: இந்த போட்டியில் 619 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. கலைநிகழ்ச்சிகளுக்குப் பின்னர் போட்டிகளில் பங்கேற்கும் அணிகளின் அணிவகுப்பு நடைபெற்றது. 54 நாடுகளைச் சேர்ந்த 71 அணிகள் போட்டியில் பங்கேற்கின்றன. போட்டிக்கான செலவு | 70 ஆயிரம் கோடியைத் தாண்டிவிட்டது.போட்டிகளுக்காக 12 ஸ்டேடியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சில ஸ்டேடியங்கள் புதிதாகக் கட்டப்பட்டன. மேலும் சில ஸ்டேடியங்கள் சர்வதேச தரத்துக்கு உயர்த்தப்பட்டன. போட்டிகளில் பங்கேற்க 6,700 வீரர், வீராங்கனைகள் உலகம் முழுவதிலுமிருந்தும் வந்துள்ளனர். வீரர்கள் அணிவகுப்பின்போது இந்திய அணியை, ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய வீரர் அபிநவ் பிந்த்ரா வழிநடத்திச் சென்றார். மூவர்ணக் கொடியை பிந்த்ரா ஏந்திச் செல்ல அவரை இந்திய வீரர், வீராங்கனைகள் பின்தொடர்ந்தனர்.7,500 போலீஸôர் பாதுகாப்பு: போட்டி துவக்க விழா நடைபெற்ற ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் 7,500 போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் என்எஸ்ஜி கமாண்டோ வீரர்களும் அடங்குவர்.வான்வழியாகத் தாக்குதல் நடத்தும் முயற்சி நடந்தால் அதைத் தடுக்கும் வகையில் இந்திய விமானப் படை ஹெலிகாப்டர்கள் ஸ்டேடியத்தை வட்டமிட்டன.மைதானத்துக்குள் நுழையும் ஒவ்வொருவரும் கடும் சோதனைக்குப் பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அடையாள அட்டை, அங்கீகார அட்டை இல்லாமல் வந்தவர்கள் பாரபட்சமின்றி திருப்பி அனுப்பப்பட்டனர்.4 அடுக்கு பாதுகாப்பு: ஸ்டேடியத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. உயர் அதிகாரிகள் உள்பட அனைவரும் சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

Thursday, September 30, 2010

ஏழில் ஒரு அமெரிக்கர் வறுமையில் வாடுகிறார் : அதிர்ச்சி தகவல்

ஏழில் ஒரு அமெரிக்கர் வறுமையில் வாடுகிறார் : அதிர்ச்சி தகவல்
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2010,23:10 IST
மாற்றம் செய்த நாள் : செப்டம்பர் 29,2010,02:50 IST
print e-mail   Buzz  Share  

..
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2010,23:10 IST
மாற்றம் செய்த நாள் : செப்டம்பர் 29,2010,02:50 IST

வாஷிங்டன் : "அமெரிக்கர்களில் ஏழில் ஒருவர் வறுமையில் வாடுகிறார்' என, அந்நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் பணக்கார நாடாக அமெரிக்கா கருதப்படுகிறது. அங்கு சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 14.3 சதவீத மக்கள் வறுமையில் வாழ்வதாகவும், இது 2008ல் இருந்த அளவான 13.2 சதவீதத்தை விட அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட புள்ளி விவரம்: சமீபத்திய கணக்கெடுப்பின்படி, அமெரிக்காவில் 4.36 கோடி மக்கள் வறுமையில் வாழ்கின்றனர். அதாவது, ஏழில் ஒரு அமெரிக்கர் வறுமையில் வாடுகிறார். கடந்த 2008ல் நடந்த கணக்கெடுப்பில் 3.98 கோடி பேர் வறுமையில் வாழ்ந்தனர். தற்போது எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஒபாமா அதிபராக பதவியேற்ற காலக்கட்டத்தில், பொருளாதார நெருக்கடி காரணமாக, மாதந்தோறும் 7 லட்சம் பேர் வேலை இழந்தனர். இவர்களில் பெரும்பான்மையோர் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இதனால், அவர்கள் தங்கள் வீடுகளை விற்றுவிட்டு, கூடாரங்கள் அமைத்து தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இவ்வாறு புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னம்பிக்கை உடையவரா நீங்கள்


தன்னம்பிக்கை உடையவரா நீங்கள் - 29-09-2010
மனிதன் வாழ்வில் பெறும் வெற்றியும் தோல்வியும் அவனுடைய தன்னம்பிக்கையை பொறுத்தே அமைகின்றது.
ஆண், பெண் வேறுபாடு இல்லாமல், வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் தன்னம்பிக்கை பெற்றிருக்க வேண்டும். நீங்கள் யோசிக்கலாம். நமக்கு தன்னம்பிக்கை உள்ளதா? இல்லையா? என்று. நீங்களே உங்கள் தன்னம்பிக்கையின் அளவை தெரிந்து கொள்ளலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள தன்னம்பிக்கை இல்லாதவருக்கான விஷயங்களை கவனித்துப் பாருங்கள். அவற்றிலிருந்து நீங்கள் பெருமளவு நீங்கள் முரண்பட்டு நின்றால், நீங்கள் அதிக தன்னம்பிக்கை உள்ளவர் என்று அர்த்தம்.

எண்ணங்கள்:
தன்னம்பிக்கை இல்லாதவரின் எண்ணங்கள் கீழ்கண்டவாறு இருக்கும்.
* என்னால் முடியாது
* இது மிகவும் கஷ்டம்
* இது எப்படி என்று எனக்கு தெரியாது
* இதை என்னால் செய்ய முடியுமா என்று தெரியவில்லை
* இதை நான் செய்வதை விட இவர் செய்வது சிறப்பாக இருக்கும்.
* என்ன செய்ய வேண்டும் என்பதை என்னால் தீர்மானிக்க முடியவில்லை.

உணர்வுகள்:
தன்னம்பிக்கை இல்லாதவரின் உணர்வுகள் கீழ்கண்டவாறு இருக்கும்.
* சந்தேகம்
* வரப்போவதை நினைத்து பயம்
* எதிர்கொள்ளும் விஷயத்தைப் பற்றிய கவலை
* தன்னைப்பற்றியே வெறுப்பு, கோபம்
* புதிய சூழ்நிலையில் எதையோ நினைத்து பயம்
* மனக்கசப்பு
* குற்ற உணர்ச்சி மற்றும் ஊக்கமின்மை

நடத்தைகள்: தன்னம்பிக்கை இல்லாதவரின் நடத்தைகள் கீழ்கண்டவாறு இருக்கும்.
* எதையாவது செய்து மாட்டிக் கொள்வதைவிட பேசாமல் இருந்துவிடலாம் என்ற போக்கு
* பரிந்துரைகள் சொல்வதில் இடர்பாடு
* யாராவது செய்யட்டும் பார்க்கலாம் என்று இருந்துவிடல் அல்லது எதையும் முந்தி செய்யாமலிருத்தல்
* புதிய விஷயங்களை தவிர்த்தல் அல்லது மாற்றம் ஏற்படுவதை ஏற்றுக் கொள்ளாமலிருத்தல்.
* தெரிந்த விஷயத்தைப் பற்றிக்கூட தொடர்ந்து அடுத்தவரிடம் ஆலோசனை மற்றும் உறுதிப்படுத்துவதற்கு கேட்பது.
* எல்லாவற்றுக்கும் தயங்குவது. தொடர்ந்து ஊக்கமளித்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை.
* கடைசி பெஞ்சில் அமர்வது
* மீண்டும் மீண்டும் உறுதிபடுத்தல்

உடல்ரீதியான அறிகுறிகள்: தன்னம்பிக்கை இல்லாதவரின் உடல் ரீதியான அறிகுறிகள் கீழ்கண்டவாறு இருக்கும்.
* தலைகுனிந்து நிற்பது.
* கண்களைப் பார்த்து பேசாதது
* அமைதியின்றி அங்கும் இங்கும் அலைவது
* பதட்டத்துடனும் படபடப்புடனும் காணப்படுவது
* சோம்பலாகவும் அக்கறையின்றியும் காணப்படுவது.

இவ்விஷயங்கள் அனைத்தும் தன்னம்பிக்கை இல்லாததை காட்டுகிறது. இதில் எது உங்கள் குணத்துடன் பொருந்திப் போகிறது என்பதை அறிந்து, அதை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். மேற்கூறியவை அனைத்தும் தகர்த்து உங்களை வெற்றியாளராக மாறுங்கள்.

Wednesday, September 29, 2010

இணையதளத்தை பயன்படுத்துவதால் மூளையில் பாதிப்பு?

Add caption
கூகுள் இணையதளத்தை பயன்படுத்துவதால் மூளையில் பாதிப்பு?
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2010,23:44 IST
லண்டன் : கூகுள் தேடல் இணையதளத்தில் உடனுக்குடன் வெளிவரும் தகவல்களை கூர்ந்து கவனிப்பதால் மூளையில் பாதிப்பு ஏற்படும் என, பிரிட்டனை சேர்ந்த ஆய்வு எழுத்தாளர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனை சேர்ந்த பிரபல ஆய்வு எழுத்தாளர் நிக்கோலஸ். இவர் இணையதளங்கள் பார்ப்பதால் மூளையில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து "தி ஷாலோஸ்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் கூகுள் இணையதளத்தில் உடனுக்குடன் வரும் தகவல்களை கூர்ந்து கவனிப்பதால் மூளையில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி: இணையதளங்களை பார்க்கும் போது நமது மூளை இயல்பை விட சற்று கூடுதல் கவனம் செலுத்துகிறது. இதனால் மூளையில் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக கூகுள் இணையதளத்தில் தகவல் மற்றும் இணையதளங்களை தேடும் போது, அது நமது மூளையின் செயல்பாட்டை விஞ்சிய வேகத்தில் தகவல்களை தருவதால், பாதிப்புகளை உண்டாக்குகிறது.

வாடிக்கையாளர் மற்றும் இணையதளங்களை பயன்படுத்துவோருக்கு எளிய முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக சாப்ட்வேர் நிபுணர்கள் பல புதிய யுக்திகளை கண்டுபிடித்து அறிமுகப்படுத்துகின்றனர். இதன் மூலம் கம்ப்யூட்டர் மற்றும் இணையதளங்களில் நாம் வேகமாக பணிகளை செய்ய முடிகிறது. ஆனால் அந்த அளவிற்கு மூளையும் வேகமாக செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்படுவதால் பாதிப்புகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது. என்னை கவர்ந்த தேடுதல் இணையதளம் கூகுள். ஆனால் அதில் ஒரு குறிப்பிட்ட வழிமுறைகளை கையாண்டு பயன்படுத்த வேண்டும். ஒரு எழுத்தின் அர்த்தத்தை வைத்து தேடி முடிவுகள் தெரிவிப்பதற்குள் அடுத்த முடிவுகளுக்கு செல்லும் அளவிற்கு கூகுள் இணையதளம் வேகமாக செயல்டுகிறது. இதுவே பாதிப்புகளுக்கு காரணம். இதேபோன்று செயற்கைக்கோள் உதவியுடன் செயல்படும் ஜி.பி.எஸ்., வழிகாட்டும் தொழில்நுட்ப முறையும் மனித மூளையின் ஆற்றலை குறைக்கிறது. இவ்வாறு நிக்கோலஸ் கூறினார்.

வேலைவாய்ப்பு பதிவுக்கு புதிய சலுகை

வேலைவாய்ப்பு பதிவுக்கு புதிய சலுகை

First Published : 30 Sep 2010 12:35:00 AM IST

Last Updated : 30 Sep 2010 04:25:38 AM IST

சென்னை, செப். 29: வேலைவாய்ப்பு பதிவுக்கு புதிய சலுகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையாளர் ஏ.எஸ்.ஜீவரத்தினம் வெளியிட்ட அறிவிப்பு:பதிவு செய்தவர்கள் தங்களது பதிவினை மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். அவ்வாறு புதுப்பிக்கும் மாதத்திலோ அல்லது அதனைத் தொடர்ந்து இரண்டு மாதங்களிலோ தங்களது பதிவுகளை புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு புதுப்பித்தல் மாதத்திலிருந்து 18 மாதங்கள் வரை கால அவகாசம் ஒரே ஒருமுறை மட்டும் சலுகையாக வழங்கப்பட்டு வந்தது.இப்போது அரசால் கம்ப்யூட்டர் வழியே ஒருங்கிணைப்புத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஆன்லைனில் புதுப்பிக்க ஏதுவாக ஒரேசீரான நடைமுறை கடைப்பிடிக்கும் வகையில் 18 மாத புதுப்பித்தல் சலுகையை மறுமுறை கோரினாலும் அனுமதிக்கலாம் என உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்களுக்கு வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்த 18 மாத புதுப்பித்தல் சலுகை தளர்த்தப்பட்டு அடுத்த புதுப்பித்தல் தேதிகளிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறு, விடுபட்ட பதிவினை 18 மாத சலுகையின்படி, புதுப்பிக்கையில் பழைய பதிவு மூப்பு கணக்கில் கொள்ளப்படும் என தனது அறிவிப்பில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.