Tuesday, June 15, 2010

சிறந்த 10 ஐ.டி., பதவிகள்

சிறந்த 10 ஐ.டி., பதவிகள் என்னென்ன


print e-mail   Buzz  
பதிவு செய்த நாள் : ஜூன் 14,2010,00:00 IST

சர்வதேசப் பொருளாதார நெருக்கடியிலிருந்து வேலை வாய்ப்பு சந்தை வெகு வேகமாக மீண்டு வருகிறது. நாள் தோறும் ஆயிரக்கணக்கான பணி வாய்ப்புகள் குறித்த தகவல்களையும் நாம் கேட்டு வருகிறோம். குறிப்பாக இந்தப் பிரச்னையால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஐ.டி., துறையிலும் நம்பிக்கைக் கீற்று தென்பட ஆரம்பித்துவிட்டது. ஆனால் ஐ.டி., யில் பொறியியல் படித்துவிட்டு வெளியேறும் பல மாணவர்களுக்கு ஐ.டி., துறையில் எந்தப் பதவியில் இணைவதன் மூலம் வளமான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்பதில் குழப்பம் நிலவுகிறது. ஐ.டி., துறையில் உள்ள நிபுணர்களின் கருத்துக்களின் அடிப்படையிலும், ஐ.டி., துறை சார்ந்த கன்சல்டன்சி நிறுவன நிபுணர்களின் கருத்துக்களின் அடிப்படையிலும் இத்துறை சார்ந்த முதல் 10 பதவிகள் பற்றிய தகவல்கள் இங்கே தரப்படுகின்றன.
எத்திக்கல் ஹேக்கர்கம்ப்யூட்டர் தொடர்புடைய ஒருவரின் ரகசியங்களைத் திருடி, தவறுகளுக்குப் பயன்படுத்துவர்களை 'ஹேக்கர்ஸ்' என்று கூறுகிறார்கள். இப்படி கம்ப்யூட்டர் ரகசியங்களைத் திருடி குற்றம் புரிபவர்களைக் கண்டுபிடிப்பதற்கென்று 'சைபர் கிரைம்' துறையும் தற்போது செயல்பட்டு வருகிறது. ஹேக்கர்களைக் கண்டுபிடிக்கும் துறையை எத்திக்கல் ஹேக்கர் துறை என்று கூறுகிறார்கள். இந்தத் துறையில் சிறப்பு பெற விரும்புபவர்கள் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேஷன், புரொகிராமிங், டிசைன் ஆகிய பிரிவுகளில் திறன் பெற்றவர்களாக இருத்தல் அவசியம்.
சிஸ்டம்ஸ் மேனேஜர்ஒரு நிறுவனத்தின் நடைமுறையில் தொழில் நுட்பத்தை திறமையாக செயல்படுத்துவதில் இவர்கள் முக்கியப் பங்காற்றுகிறார்கள். இதனாலேயே இவர்களை நிறுவனத்தின் தூண் என்று கூறுகிறார்கள். ஒரு நிறுவனத்தில் தொழில் நுட்ப அம்சங்களைப் பற்றி திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல், செயல்படுத்துதல் என்ற பணிகளை இவர்கள் செய்கிறார்கள். பல்வேறு துறை வாரியாக கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில் நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரிக்கும் செயல்களில் ஈடுபடுவதால் இந்தப் பதவிக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளது.
நெட்வொர்க் இன்ஜினியர்ஒரு நிறுவனத்திலுள்ள கம்ப்யூட்டர் களை இன்டர்நெட்டுடன் இணைத்தல், இதற்குத் தேவைப்படும் ரவுட்டர், மோடம், பயர் வால் ஆகியவற்றை கான்பிகர் செய்தல் போன்ற பணிகளை இவர்களே மேற்பார்வையிடுகிறார்கள். இன்றைய நிறுவனங்களின் சூழலில் அங்கு நடைபெறும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை தொடர்ந்து
அதிகரித்து வருவதால் நெட் வொர்க்கிங்கின் தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே எதிர்காலத்தில் நெட்வொர்க்கிங்கின் தேவையும், நெட்வொர்க் மேனேஜர்களின் தேவையும் அதிகரிக்கும்.
பேர்ம்வேர் இன்ஜினியர்
இன்று நாம் உபயோகிக்கும் ஒவ்வொரு எலக்ட்ரானிக் உபகரணத்திலும் 'சிப்'பின் பயன் கட்டாயத் தேவையாகியுள்ளது. கம்ப்யூட்டரிலுள்ள ஹார்டுவேர் கருவிகளில் பொருத்தமான சாப்ட்வேர்களை நிறுவுவதன் மூலம் மட்டுமே ஒவ்வொரு கருவியும் இதர கருவிகளுடன் தகவல் பரிமாறிக் கொள்வது உறுதிப் படுத்தப்படுகிறது. இதற்கான ஆணி வேராக இருப்பவர்கள் இவர்களே. அல்கோரிதம்களை ஆராய்தல், ஒட்டுமொத்த பேர்ம்வேரின் செயல்பாட்டை அதிகப்படுத்துதல் போன்ற தலையாய பணிகளை இவர்களே செய்கிறார்கள்.
வெப் அனலிஸ்ட்டிஜிட்டல் மீடியா மற்றும் இன்டர் நெட்டின் உபயோகம் அதிகரித்து வரும் இன்றைய நவீன யுகத்தில் வெப் அனலிஸ்ட்டுகளின் பணியும் தலையாய பங்கு வகிக்கிறது. பல்வேறு தொழில் சார்ந்த இணைய தளங்களை ஆராய்ந்து நிறுவனத்தின் முடிவெடுக்கும் தளத்தைக் கட்ட இவர்கள் முக்கியப் பங்காற்றுகிறார்கள். நிறுவனத்தின் நிர்வாகத்திற்கு அவ்வப்போது தேவைப்படும் முக்கிய முடிவுகளை எடுக்க இவர்களே உதவுகிறார்கள்.
டிசைன் இன்ஜினியர்ஒரு வடிவத்தின் உள்ளார்ந்த அம்சங்களை வடிவமைத்து உபகரணங்களுக்கு வடிவம் கொடுப்பவர்களையே டிசைன் இன்ஜினியர் என்று கூறுகிறார்கள். இதற்கு இவர்கள் இஅஈ, Nஙீ, இஅகூஐஅ போன்ற சாப்ட்வேர்களைப் பயன்படுத்தி மாதிரிகளை இவர்களே வரைகிறார்கள். சிப்களை வடிவமைப்பதற்கு தற்போது டி.சி.எஸ்., விப்ரோ போன்ற பெரிய நிறுவனங்களும் இந்தியாவில் ஆர்வம் செலுத்தத் துவங்கிவிட்டன. இந்தியாவில் டிசைன் இன்ஜினியரிங் துறை அபரிமிதமாக வளரும் என்று கார்ட்னர் நிறுவனம் கணிக்கிறது. இவ்வளவு பிரகாசமான சூழ்நிலை இருந்த போதும் இந்தியாவிலுள்ள பொறியியற் கல்லூரிகள் ஆண்டுக்கு 250 முதல் 300 பேரை மட்டுமே வி.எல்.எஸ்.ஐ., என்ற வெரி லார்ஜ் சிஸ்டம் இன்டக்ரேஷன் பிரிவில் பயிற்றுவிக்கின்றன. இந்தத் துறையில் இணைய அடிப்படையில் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷனில் பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். இத்துடன் கணிதம், இயற்பியல், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய துறைகளில் நல்ல திறனும், கம்ப்யூட்டர் தொடர்புடைய பல்வேறு லாங்வேஜ்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
ஓபன் சோர்ஸ் ஸ்பெஷலிஸ்ட்ஓபன் சோர்ஸ் ஸ்பெஷலிஸ்டுகள் சோர்ஸ் கோடுகளை அனைவரும் சோதிக்கத் தக்க ஓபன் சோர்ஸ் தொழில் நுட்பத்தில் பணிபுரிகிறார்கள். இதன் மூலமாக அதிகபட்ச நம்பிக்கைக்குரிய, பாதுகாப்பான மற்றும் அதிகத் திறன் வாய்ந்த அப்ளிகேஷன்களைப் பெற முடிந்துள்ளது.
ஹெல்த் ரெகார்ட்ஸ் சிஸ்டம்ஸ் மேனேஜர்பல்வேறு பொதுமக்கள் சார்ந்த திட்டங்களிலும், சேவைகளிலும் மருத்துவ ஆவணங்களை முறைப்படி சேமிப்பது சவாலான வேலையாக உள்ளது. இதனை முறைப்படி சேமிக்காத நிலையில் எதிர்பாராத மற்றும் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுவது கண்கூடான ஒன்றாகும். இதனாலேயே ஹெல்த் ரெகார்ட்ஸ் சிஸ்டம்ஸ் மேனேஜர்களுக்குத் தற்போது கடும் கிராக்கி ஏற்பட்டு வருகிறது. அடுத்த 12 மாதங்களில் 70 ஆயிரத்துக்கும் அதிகமான ஹெல்த் ரெகார்ட்ஸ் சிஸ்டம்ஸ் மேனேஜர்களுக்கான தேவை ஏற்படும் என்று ஒரு கணிப்பு கூறுகிறது.
பிஸினஸ் பிராசஸ் இன்ஜினியர்
ஒரு நிறுவனத்தின் தொழில்ரீதியான செயல்களை நிறுவனத்திற்குள்ளும் தொழிலரங்க அளவிலும் ஆராய்ந்து வடிவமைத்தல் மற்றும் மறுவடிவமைக்கும் பணியைச் செய்பவர்கள் இவர்களே. இந்த ஆண்டு இவர்களுக்கு மிகவும் நிறைவளிக்கும் ஆண்டாக இருக்கும் என்ற கணிப்பு நிலவுகிறது. தொழில் ரீதியான முக்கிய அம்சங்களையும், ஐ.டி., துறை சார்ந்த தொழில் நுட்ப அம்சங்களையும் சரியான விகிதத்தில் பிணைப்பதன் மூலம் வெற்றிக்கான அடிகோலிடுபவர்களும் இவர்களே. இதன் காரணமாக நிறுவனங்களில் இந்தப் பிரிவினர் மிக முக்கியப் பதவிகளைப் பெற முடியும் என்று துறைசார்ந்த நிபுணர்கள் கூறுகிறார்கள்.
கெபாசிட்டி மேனேஜர்ஒரு நிறுவனத்தின் கம்ப்யூட்டர் சர்வரின் செயல்திறன், கொள்ளளவு ஆகியவற்றுடன் இருக்கும் மொத்த ஆதாரங்களின் பயன்பாடு ஆகியவற்றை கண்டறிபவர்கள் கெபாசிட்டி மேனேஜர்கள்தான். இவற்றுடன் கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் குறித்த எதிர்காலத் தேவை, சாதக பாதகங்களைப்பற்றிய திட்டமிடலையும் இவர்களே செய்கிறார்கள். நிறுவனத்தின் செலவீனங்களைக் கட்டுப்படுத்தும் முக்கியமான பணி என்பதால் இந்தப் பிரிவினருக்கு நல்ல கிராக்கி நிலவுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment