Tuesday, June 15, 2010

கலைஞர் பிறந்த கதை...

கலைஞர் பிறந்த கதை...

                                                                       
திருவாரூரிலிருந்து பத்து கி. மீ. தூரத்திலிருக்கிறது அந்த ஊர்.திருக்குவளை. திருவாரூரில் இருந்து கச்சனம் என்கிற ஊர் வரைக்கும் தான் பஸ் வசதி. இப்போதிருப்பது போல் அப்போ தெல்லாம் மினி பஸ் என்ன, மாட்டு வண்டி கூட கிடையாது. நடராஜா சர்வீஸ் தான்.கச்சனத்தில் இறங்கி காலரா நடக்க ஆரம்பித்தால் அரை மணி நேரத்துக்குள் திருகுவளைக்கு வந்துவிடலாம். 


முனீஸ்வரன் கோயில் போகும் வழியில் அங்காளம்மன் தெருவில் நெருக்கி அடித்தாற்போல் இருக்கும் நாலைந்து வீடுகள்.அதில் ஒரு விடுதான் கருணாநிதியின் வீடு. இப்போது அந்த வீடு திருக்குவளை பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியாக இருக்கிறது இந்தப்பள்ளிக் கூடம் தான் கருணாநிதியின் வீடு. சுமாரான குடுபம்தான். முத்துவேலருக்கு மூன்றாவதாகப் பிறந்தவர் கருணாநிதி.


திருக்குவளையில் முத்து வேலரைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இசை வேளாளர்  குடுபத்தைச் சேர்ந்த இவர், திருக்குவளையின் அதிகாரபூர்வமற்ற டாக்டர்.லேசான தலைவலியாக இருந்தாலும் சரி, பாம்புக்கடியாக இருந்தாலும் சரி. இவரிடம்தான் வைத்தியம் பார்க்க வேண்டும். எந்த வியாதியாக இருந்தாலும் மருந்து என்ற பெயரில் இவர் தரும் வஸ்து, விபூதி மட்டுமே. அதையும் பய பக்க்தியோடு வரிசையில் நின்று வாங்கிக்கொண்டு போவர்கள். இங்கே பீஸ் கொடுக்காவிட்டாலும் ட்ரீட்மெண்ட் உண்டு. சிக்கலான வியாதியாக இருந்தால் இடும்பன் சாமிக்குப் பூஜை போடச் சொல்வார்.கொஞ்சம் காஸ்ட்லிதான்.ஒரு கள்ளுப் புட்டி, நாலு பீடி தவிர,கோழியைப் பலி கொடுக்க வேண்டியிருக்கும்.


சின்ன வயதிலேயே முத்து வேலருக்குக் கல்யாணமாகி விட்டது. காதல் கல்யாணம்தான். குஞ்சம்மாள் என்ற குத்துவிளக்கு கொஞ்ச நாளைக்கு மட்டுமே எரிந்தது. கல்யாணம் முடிந்து சில வருஷ்ங்களிலேயே குஞ்சம்மாள் உயிரிழந்தார். அடுத்ததாக முத்துவேலர் வேதம்மாளை கல்யாணம் செய்து கொண்டார். அந்த வாழ்க்கையும் ரொம்ப நாள் நீடிக்கவில்லை மூன்றாவதாக
அவர் திருமணம் செய்து கொண்டார் அவர் தான் அஞ்சுகம் அம்மாள்.

குடும்ப வாழ்கை என்னவோ சந்தோஷமாகவே போய்க் கொண்டு ருந்தது. முத்து வேலருக்குத்தான் குழந்தையில்லாத குறை நெருடலாக இருந்தது ஏற்கனவே இரண்டு முறை மனைவியை இழந்த சோகம் வேறு அவரிடம் மிச்சமிருந்து, குழந்தை வேண்டி ஏறி இறங்காத கோவில் இல்லை. அதற்குப் பரிசாகக் கிடைத்தவை, இரண்டு பெண் குழந்தைகள் வாரிசு இல்லையே என்று வருத்தத்தில் இருந்த முத்துவேலருக்கு ஆறுதலாக இருந்தாலும் இதில் மனநிறைவு இல்லை, இரண்டு பெண் குழந்தைகளுக்கும் பெரிய நாயகத்தம்மாள், சண்முகம் சுந்தரம்மாள் என்று பெயர் வைத்தார்கள்.

முத்துவேலரின் கவலை தீரும் நாள் வந்தது 1924-ம் வருஷம் ஜூன் மாதம் முன்றாம் நாள் கருணாநிதி பிறந்தார். முத்துவேலர் வைத்த பெயர் தட்சிணா மூர்த்தி. 


இன்று 87 வது பிறந்தநாள் காணும் அய்யா கலைஞர் திரு. மு. கருணாநிதி அவர்களை வாழ்த்த எனக்கு வயது இல்லை வணங்குகிறேன்.     

No comments:

Post a Comment