முதல்வர் கருணாநிதிக்கு இன்று 87வது பிறந்ததின விழா
- நாசாவை கை கழுவும் இந்திய விஞ்ஞானிகள் : அலறுகிறது அமெரிக்கா
- பேத்தியை கற்பழித்து கொலை செய்த மகனை தூக்கில் போடும்படி தாய் ஆவேசம்
- ராஜ்யசபா தேர்தல்: தி.மு.க., வேட்பாளர்கள் மூவருக்கும் கோடிக்கணக்கில் சொத்து
- கோபாலபுரம் வீட்டை தானமாக வழங்கினார் முதல்வர்
- ராஜ்யசபா வேட்பாளர் தேர்வு: அ.தி.மு.க., நிர்வாகிகள் உற்சாகம்
பதிவு செய்த நாள் : ஜூன் 02,2010,23:54 IST
சென்னை : முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்த தினத்தை ஒட்டி, இன்று ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை தி.மு.க.,வினர் வழங்குகின்றனர்.
முதல்வர் கருணாநிதி இன்று தன் 87வது பிறந்ததின விழாவை கொண்டாடுகிறார். காலை 7 மணிக்கு, அண்ணாதுரை நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். காலை 7.15 மணிக்கு ஈ.வெ.ராமசாமி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். காலை 9 மணிக்கு தி.மு.க., தலைமை அலுவலகத்தில் கட்சியினரின் வாழ்த்துக்களை பெறுகிறார். மாலை 6 மணிக்கு திருவான்மியூரில் பொதுக்கூட்டம் நடக்கிறது. அக்கூட்டத்திற்கு, அமைச்சர் அன்பழகன் தலைமை வகிக்கிறார். தென் சென்னை மாவட்டச் செயலர் அன்பழகன் முன்னிலை வகிக்கிறார். முதல்வர் கருணாநிதி ஏற்புரை வழங்குகிறார். இன்று காலையில் தமிழகம் முழுவதும் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் கொடியேற்றி இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள், முதியோருக்கு இலவச வேட்டி சேலைகள், பிரியாணி வழங்கப்படுகின்றன. பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகம் மற்றும் அறுசுவை உணவு வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment