Thursday, June 3, 2010

கோபாலபுரம் வீட்டை தானமாக வழங்கினார் முதல்வர்

 
 
 
 
 
கோபாலபுரம் வீட்டை தானமாக வழங்கினார் முதல்வர்
 
 
  இ-பேப்பர்


AAnmeegam News

எழுத்தின் அளவு:   A+  A-
print e-mail   Buzz  Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜூன் 02,2010,23:43 IST

சென்னை : முதல்வர் கருணாநிதி தன் கோபாலபுரம் இல்லத்தை, ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில், "கலைஞர் கருணாநிதி மருத்துவமனை' அமைப்பதற்காக அஞ்சுகம் அறக்கட்டளைக்கு நேற்று தானமாக வழங்கினார்.


முதல்வர் கருணாநிதி, கோபாலபுரம் நான்காவது தெருவில் உள்ள வீட்டில் தன் மனைவி தயாளுவுடன் வசித்து வருகிறார். இந்த வீட்டை 1955ம் ஆண்டு சரபேஸ்வர அய்யரிடமிருந்து கருணாநிதி வாங்கினார். பின், 1968ம் ஆண்டு, தன் மகன்கள் அழகிரி, ஸ்டாலின், தமிழரசு ஆகியோருக்கு இந்த வீட்டை கருணாநிதி வழங்கினார்."இந்த இல்லத்தை தான் மற்றும் தன் மனைவி தயாளு காலத்திற்கு பின், ஏழை மக்கள் மருத்துவ சிகிச்சை பெற மருத் துவமனையாக மாற்ற இலவசமாக அளிப்பேன்' என, முதல் வர் கருணாநிதி அறிவித்திருந் தார். தன் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கருணாநிதியின் மூன்று மகன்களும் வீட்டை கருணாநிதிக்கே 2009ம் ஆண்டு திருப்பி அளித்தனர்.


கருணாநிதியின் 87வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, தானப் பத்திரம் மூலம் நேற்று தன் இல்லத்தை, "கலைஞர் கருணாநிதி மருத்துவமனை' என்ற பெயரில், "அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை'க்கு நன்கொடையாக அளித்தார். இம்மருத்துவமனையை நிர்வகிக்க, கருணாநிதியின் தாய் பெயரில், "அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை' என்ற அறக்கட்டளையை முதல்வர் கருணாநிதி நிறுவியுள்ளார். தொழிலதிபர் ரங்கநாதன், இயக்குனர் ராமநாராயணன், கவிஞர் வைரமுத்து, மத்திய அமைச்சர்கள் ராஜா, ஜெகத்ரட்சகன் ஆகியோரை முதல்வர் கருணாநிதி இந்த அறக்கட்டளைக்கு அறங்காவலர்களாக நியமித்துள்ளார்.


இதற்கான பத்திரப்பதிவு நேற்று காலை 9:45 மணிக்கு கோபாலபுரம் இல்லத்தில் நடந்தது. அப்போது, கருணாநிதியின் மனைவி தயாளு, மத்திய அமைச்சர்கள் அழகிரி, ராஜா, தமிழக அமைச்சர் துரைமுருகன், தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம், முன்னாள் துணைவேந்தர்கள் அவ்வை நடராஜன், குழந்தைசாமி, குன்றக்குடி பொன்னம்பல அடிகள், தொழிலதிபர் ரங்கநாதன், இயக்குனர் ராமநாராயணன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர். மத்திய சென்னை பத்திரப்பதிவுத் துறை உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஹரிஹரன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ராமசாமி, சென்னை ஐகோர்ட் வக்கீல்கள் சுதர்சனம், பழனிஆண்டவன், ஆடிட்டர் சிவசுப்ரமணியம் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பத்திரப்பதிவு நடந்தது.தன் வீட்டை தானமாக வழங்குவதற்கான பத்திரத்தில் முதல்வர் கருணாநிதி கையெழுத்திட்டு, அறக்கட்டளை நிர்வாகிகளிடம் வழங்கினார்.


பின் முதல்வர் கருணாநிதி, நிருபர்களுக்கு அளித்த பேட்டி :


நீங்கள் வாக்களித்தவாறே சொந்த வீட்டை அறக்கட்டளைக்கு ஒப்படைத்து விட்டீர்கள். இப்போது உங்கள் உணர்வு எவ்வாறு உள்ளது?


நான் ஆத்திகனாக இருந் தால், ஆத்ம திருப்தி அடைந்ததாக சொல்லியிருப்பேன். ஆனால், நான் நாத்திகன். மனநிறைவு கொள்கிறேன்.


நீங்கள் இம்முடிவு எடுத்தபோது, உங்கள் பிள்ளைகளின் உணர்வு எப்படி இருந்தது?


என் எண்ணத்தை மீறி என் பிள்ளைகள் யாரும் நடக்க மாட்டார்கள்.


இந்த வீட்டில் எத்தனையோ தலைவர்கள் வந்து உங்களை சந்தித்துள்ளனர். எத்தனையே நிகழ்வுகள், திருப்பங்கள், முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமானதாக எதைக் கருதுகிறீர்கள்?


எவ்வளவோ பெரிய தலைவர்கள் எல்லாம் வந்துள்ளனர். அதில் நான் குறிப்பிட்டு சிலரை மட்டும் சொல்வது நல்லதல்ல.


இந்த வீட்டைப் பற்றி நினைவில் கொள்ளத்தக்க நிகழ்ச்சி?


நினைவில் கொள்ளத்தக்க நிகழ்ச்சி, இன்றைக்கு நடக்கும் நிகழ்ச்சி தான்.


உங்களுக்குப் பின் இங்கே அமையவுள்ள மருத்துவமனை எவ்வாறு இயங்கும் என்பதைப் பற்றி அறங்காவலர்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறீர்களா?


இது பற்றியெல்லாம் நீங்கள் அறக்கட்டளை உறுப்பினர்களை, எதிர்காலத்தில் அணுகி விவரங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.


உங்கள் வீட்டை தானமாக வழங்கும் முக்கிய முடிவை எடுக்க முக்கியக் காரணமாக அமைந்தது எது?


முக்கிய காரணத்திற்காக எடுக்கப்பட்ட முக்கிய முடிவு இது.


வரும் ஆண்டில் சட்டசபை தேர்தலை சந்திக்கவுள்ளீர்கள். தி.மு.க., தலைமையில் மாற்றம் வருமா?


மாற்றமும் இல்லை; ஏமாற்றமும் இல்லை.இவ்வாறு முதல்வர் கூறினார்.

No comments:

Post a Comment