பதினோரு கல்லூரிகளுக்கு ஒரே விரிவுரையாளர்? - 08-06-2010 |
|
புதுடில்லி: மகாராஷ்டிராவில், 50 சதவீத கல்லூரிகளை, அரசியல்வாதிகள் நடத்துகின்றனர். புனேயில் மட்டும் 16 கல்லூரிகளை ஒரே நபர் நடத்துகிறார். அரியானாவில், ஒரே ஆசிரியர், 11 கல்லூரிகளில் பணிபுரிகிறார். உண்மையை சொல்லுங்கள். அடிப்படை வசதியே இல்லாத கல்லூரிக்கு பரிந்துரைக்கும், உங்கள் மாநில அரசியல்வாதி யார்? என, சத்திஸ்கர் அரசு வக்கீலை, சுப்ரீம் கோர்ட் நீதிபதி எழுப்பிய கேள்வியால், அனைத்து மாநில அரசுகளும் ஆடிப்போயுள்ளன. சத்திஸ்கரை சேர்ந்த பல் மருத்துவக் கல்லூரி ஒன்று, சுப்ரீம் கோர்ட்டில் சமீபத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், புதிதாக இரண்டு சிறப்பு பாடப் பிரிவுகளை துவக்கவுள்ளதாகவும், அதற்கு மாநில அரசு அனுமதி வழங்க மறுப்பதாக தெரிவித்து, புதிய பாடப்பிரிவுகளை துவங்க, மாநில அரசு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டுமென கூறியிருந்தது. இந்த மனுவிற்கு, சத்திஸ்கர் அரசு சார்பில் அளித்த விளக்கத்தில், ‘புதிய பாடப்பிரிவுகளை துவங்குவதற்கு, அந்த கல்லூரியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் எதுவும் இல்லை. மேலும் தகுதியான ஆசிரியர்கள் இல்லாததால், அனுமதி வழங்கவில்லை’ என, தெரிவித்தது. அரசின் விளக்கத்தை ஏற்ற சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், பல் மருத்துவக் கல்லூரிக்கு கண்டனம் தெரிவித்தது. மேலும் பல கூர்மையான கேள்விகளையும், சுப்ரீம் கோர்ட் எழுப்பியுள்ளது. இந்த விசேஷ படிப்புகளை, சாதாரண ஆசிரியர்களை வைத்து நடத்தி விட முடியாது. அடிப்படை வசதிகள், ஆசிரியர்கள், கருவிகளே இல்லாத இந்த கல்லூரி குறித்து நன்கு தெரிந்தும், துவக்க நிலையிலேயே இதற்கு மாநில அரசு அங்கீகாரம் கொடுத்தது ஏன்? உண்மையை கூறுங்கள். இந்த கல்லூரியில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதி யார்? கல்லூரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பது இப்போது உண்மையாகி விட்டது. மகாராஷ்டிராவில், 50 சதவீத கல்லூரிகளை அரசியல்வாதிகள் தான் நடத்துகின்றனர். புனேயில் மட்டும் 16 கல்லூரிகளை, ஒருவரே நடத்துகிறார். அரியானாவில், ஒரே கல்லூரி ஆசிரியர்கள், மேலும் 11 கல்லூரிகளில் பணிபுரிகிறார். ராஜஸ்தானில், ஒன்பது ஆசிரியர்கள், பல கல்லூரிகளில் பணிபுரிகின்றனர். ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் தோன்றுவதற்கு, இவர்கள் என்ன, கிருஷ்ணர் கடவுளா? இப்படி சரமாரியாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த தீர்ப்பு குறித்து கேள்விப்பட்ட, இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் மாநிலங்கள் அனைத்தும், தற்போது செய்வதறியாமல் திகைக்கின்றன. |
முனைவர்.இராம.ஞானக்குமரன் MCA.,M.Tech.,Ph.D.,MISTE., https://twitter.com/rgkumaran
Tuesday, June 8, 2010
பதினோரு கல்லூரிகளுக்கு ஒரே விரிவுரையாளர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment