Wednesday, June 9, 2010

"தமிழ் தந்த பெருமை! தமிழில் ஐ.ஏ.எஸ்

தினமலர் முதல் பக்கம் » சிறப்பு பகுதிகள் செய்தி »சொல்கிறார்கள்
சொல்கிறார்கள்
 

 
எழுத்தின் அளவு:   A+  A-
print e-mail   Buzz  
பதிவு செய்த நாள் : ஜூன் 09,2010,00:00 IST

"தமிழ் தந்த பெருமை!' : தமிழில் ஐ.ஏ.எஸ்., எழுதி வெற்றி பெற்ற மணிகண்ட சாமி: திருப்பூர் மாவட்டம் கொழுமங்கலி கிராமம் தான் என் சொந்த ஊர். பிளஸ் 2வில் நான் எடுத்த மார்க்கிற்கு, இன்ஜினியரிங் சீட் கிடைத்தது. ஆனால், அப்போது என் தந்தை புற்றுநோய் தாக்கி இறந்ததால், குறுகிய கால படிப்பான டிப்ளமோவைத் தேர்ந்தெடுத்து படித்தேன். அதைப் படிக்க, என் தந்தையின் இன்சூரன்ஸ் பணம் தான் உதவியது. மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ படித்தேன். அதில் மாநிலத்திலேயே முதல் இடம். பின் பகுதி நேர பி.இ., மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் தங்கப் பதக்கம். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். பின் அங்கிருந்தபடியே, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வில், முதல் முயற்சியிலேயே டி.எஸ்.பி.,யாக தேர்வானேன். இப்போது ஐ.ஏ.எஸ்.,சில் இரண்டாவது முயற்சியிலேயே தேர்வாகி உள்ளேன்.நான் தமிழில் தேர்வு எழுதியதற்கு முக்கிய காரணம், நினைப்பதை தெளிவாகவும், அதே சமயம், ரொம்ப விரிவாகவும் சொல்ல முடியும்னு நம்பினேன். தாய்மொழியில் சொல்லக் கூடிய விஷயங்கள், எல்லாருக்கும் சிறப்பான முறையில் போய்ச் சேரும்ங்கறது தான் உண்மை. இந்த முறை தமிழில் எழுதி நான் மட்டும் தான் தேர்வாகியிருக்கேன்னு தெரிஞ்சப்ப ஆச்சர்யமா தான் இருந்தது.பலரும் தமிழில் தேர்வு எழுதுவதை தவிர்க்கிறாங்க. தமிழில் விடைகளை சுருக்கமா எழுத முடியாது. தேர்வுக்கான புத்தகங்கள், தமிழில் சுலபமாகக் கிடைப்பதில்லை.  தமிழ், வட்டெழுத்துங்கிறதால, வெகு நேரம் எழுதும் போது, கை வலிக்கும் என்ற காரணங்களால் தான், பலரும் தமிழில் தேர்வெழுத பயப்படுறாங்க. ஆனா, மற்ற மொழிகளைக் காட்டிலும், தமிழ் எந்த விதத்திலும் நம் தேர்ச்சியைப் பாதிப்பதாக எனக்குத் தோன்றவில்லை.நேர்முகத் தேர்வு, பிராந்திய மொழிகள் அனைத்திலும் நடக்கும். எல்லா மொழிகளுக்கும், கூடவே ஒரு மொழிபெயர்ப்பாளர் இருப்பாங்க. எதைக் கேட்டாலும் பதில் சொல்லும் எண்ணத்துடன் போனால், வெற்றி நிச்சயம்.

1 comment:

  1. HE is a very fair and good person i salute him

    Thanks

    RGK

    ReplyDelete