முனைவர்.இராம.ஞானக்குமரன் MCA.,M.Tech.,Ph.D.,MISTE., https://twitter.com/rgkumaran
Sunday, October 17, 2010
100 வயதில் பல்கலை.யில் பி.எச்.டி. படிக்கும் சுதந்திர போராட்ட தியாகி
கவுஹாத்தி: தனது பிறந்த நாளை கொண்டாடிய கையோடு பல்கலை.யில் பி.எச்.டி மாணவராக பதிவு செய்துள்ளார் அசாமைச் சேர்ந்த 100- வயது சுதந்திர போராட்ட வீரர். கல்வி கற்க வயது ஒரு தடையல்ல என்பார்கள். அசாம் மாநிலம் கவுஹாத்தியில் புஹோரி கிராமத்தைச் சேர்ந்தவர் பகூலராம் தாஸ் (100). இவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர். கடந்த 1930-ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்கெதிராக போராடி தனது 19-வது வயதில் சிறை சென்றார். இரணடு மாத சிறைவாசத்திற்கு பின் 1945-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அடிப்படையில் இவர் வர்த்தகம், சட்டப்படிப்பில் பட்டம் பெற்றவர். ஆசிரியராக, வழக்கறிஞராக, மாஜிஸ்திரேட் என முக்கிய பதவிகளை வகித்து கடந்த 1971-ம் ஆண்டு ஒய்வுபெற்றார். தற்போது கவஹாத்தி பல்கலைக்கழகத்தில் இந்து மதத்தி்ல் வைணவ ஆதிக்கம் குறித்த ஆராய்ச்சி படிப்பில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், எனது 100 வயதில் அரசியல், மதம், அரசாங்கம் என எத்தனையோ விஷயங்களை தெரிந்து கொண்டேன். எனக்கு எனது சமூகம் சார்ந்த சமுதாயத்திற்கு எதாவது செய்ய வேண்டும் என்பதற்காக எனது கல்வி கற்கும் ஆர்வத்தினை விடவில்லை. அதனால் இந்து மதத்தில் உள்ள கடவுளுக்கும், மனித்தன்மைக்கும் உள்ள தத்துவத்தினை அறிந்து கொள்ள ஆராய்ச்சி படிப்பில் மூலம் அதனை நிறைவேற்றி கொள்ள விரும்புகிறேன் என்றார். பகூலராம் தாஸிற்கு மந்தாஹினி என்ற மனைவியும், 5 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். 10-க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகள் உள்ளனர். மனைவி 1988-ம் ஆண்டு இறந்தார்.. இந்நிலையில், கவுஹாத்தி பல்கலை.யில் துணைவேந்தர் ஒ.கே. மேதி கூறுகையில், இந்த பல்கலை.யில் 100 -வயதில் இதுவரை யாரும் பி.எச்.டி. படிப்பில் சேரவில்லை. இவர்தான் முதல் மாணவர். இதை நினைத்தால் எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இவரது பேரனான கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறுகையில், எனது தாத்தா பகூலராம் தாஸ் ஓய்வு பெற்ற 40 ஆண்டுகள் ஆனாலும் படிப்பில் இன்னமும் ஆர்வம் காட்டிவருவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், முன்மாதிரியாக உள்ளது என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment