முனைவர்.இராம.ஞானக்குமரன் MCA.,M.Tech.,Ph.D.,MISTE., https://twitter.com/rgkumaran
Monday, October 11, 2010
இலவச ஆன்டி வைரஸ் சேவையை விரிவுபடுத்தும் மைக்ரோசாப்ட்
புதுடில்லி : இந்தியாவின் முன்னணி நிறுவனமான மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனம், சிறு மற்றும் நடுத்தர வர்த்தக மக்களுக்கும் , ஆன்டி வைரஸ் புரோகிராம்களை இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவன விண்டோஸ் கிளையண்ட் பிஜி உயர் அதிகாரி பங்கஜ் உகே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : மைக்ரோசாப்ட் நிறுவனம், வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களுக்கு, மைக்ரோசாப்ட எசன்சியல்ஸ் என்ற பெயரில் ஆன்டி வைரஸ் புரோகிறாம்களை இலவசமாக வழங்கி வருகிறது. இந்நிலையில் சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை மக்களும் பயன்பெறும் வகையில், 10 கம்ப்யூட்டர்கள் வரை பயன்படுத்துவதற்கான ஆன்டி வைரஸ் புரோகிராம்களை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது. இதற்காக, ஹெச்பி நிறுவனத்துடன் மைக்ரோசாப்ட் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாகவும், இதன்மூலம் ஹெச்பி நிறுவனத்தின் நோட்புக்குகளை வாங்கும் போது அதனுள்ளே மைக்ரோசாப் எசன்சியல்ஸ் விண்டோசுடன் இணைக்கப்பட்டிருக்கும் என்றும், இதற்காக, தனியாக எந்தவொரு கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என்றும், இதனைக் கொண்டு 10 கம்ப்யூட்டர் அல்லது நோட்புக்குகளுக்கு ஆன்டி வைரஸ் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்ய முடியும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment