மும்பை : இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, "ஆண்டிலியா' என்ற 27 அடுக்கு மாளிகையில் விரைவில் குடியேற இருக்கிறார்.
இந்தியாவின் மிகப்பெரிய வணிக சாம்ராஜ்யமான, "ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' தலைவர் முகேஷ் அம்பானி (54)யின் சொத்து மதிப்பு 27 பில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அவரது மனைவி நிடா, திருபாய் அம்பானி சர்வதேச பள்ளி மற்றும் மும்பை இந்தியன் ஐ.பி.எல்., கிரிக்கெட் அணியையும் நிர்வகித்து வருகிறார். முகேஷ், நிடா மற்றும் அவர்களது குழந்தைகள் ஆகாஷ் , அனந்த் மற்றும் இஷா ஆகிய ஐந்து பேர் வசிப்பதற்காக, தெற்கு மும்பையில் "ஆண்டிலியா' என்ற மிகப் பெரிய ஆடம்பர மாளிகை கட்டப்பட்டுள்ளது. அந்த பகுதியில், எந்த பக்கமிருந்து பார்த்தாலும், இந்த மாளிகை தெரியும் வகையிலும், உலகில் வேறு எங்கும் இல்லாத அளவிலும், மிகுந்த பொருட்செலவிலும் இந்த பிரமாண்ட மாளிகை எழுந்துள்ளது.
வரும் 28ம் தேதி மிகப் பெரிய அளவில் கிரக பிரவேசம் நடத்தி, அந்த வீட்டில் குடியேற இருக்கிறார் முகேஷ். 27 தளங்களைக் கொண்ட இந்த பிரமாண்ட மாளிகையின் உச்சியில், மூன்று ஹெலிகாப்டர்கள் இறங்குவதற்கான தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒன்பது லிப்ட்டுகள் உள்ளன. முதல் ஆறு தளங்களில் 160 கார்கள் நிறுத்துவதற்காக கார் ஷெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர ஆடம்பர நீச்சல் குளம், சினிமா தியேட்டர், ஹெல்த் கிளப், சலூன் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தனிநபர் வசிப்பதற்கென்று இந்த அளவுக்கு ஆடம்பரமாக, உலகின் வேறு எந்த பகுதியிலும் இத்தகைய வீடு கட்டப்படவில்லை. வீடு இப்படி பிரமாண்டம் என்றால், அந்த வீட்டிற்குப் பக்கத்தில் பிர்லா குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
உலகின் மிகச் சிறந்த கட்டடக்கலை நிபுணர்களைக் கொண்டு, ஏழு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது இந்த மாளிகை. இதை சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தவர்களும், இந்த வீட்டின் பிரமாண்டத்தையும், ஆடம்பரத்தையும் பார்த்து மிரண்டு போயுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "லட்சுமி மிட்டல் உட்பட, உலக பணக்காரர்களின் வீடுகளைப் பார்த்துள்ளோம். அனைத்திலும் இது தலை சிறந்ததாக உள்ளது' என, ஆச்சரியம் தெரிவிக்கின்றனர்.
thanks for dinamalr for everyone 14.10.10
No comments:
Post a Comment