"ஆராய்ச்சிகள் மேம்போக்காக இருக்கக் கூடாது'
First Published : 18 Oct 2010 11:35:39 AM IST
Last Updated : 18 Oct 2010 12:33:57 PM IST
தஞ்சாவூர், அக். 17: ஆராய்ச்சிகள் எப்போதும் மேம்போக்கான நிலையில் இருக்கக் கூடாது என்றார் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணைவேந்தர் நல். ராமச்சந்திரன். பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய ஆராய்ச்சியாளர்கள் மேம்பாடு குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கைத் தொடங்கி வைத்து மேலும் அவர் பேசியது: ஆராய்ச்சியாளர்கள் தங்களது பட்டறிவை மேம்படுத்துவது மட்டுமன்றி, ஆராய்ச்சி மனப்பாங்கிலும் வேரூன்றி இருக்க வேண்டும். இளைஞர்கள் ஆராய்ச்சி மனப்பான்மையை சிறுவயதில் இருந்தே வளர்க்க வேண்டும். இந்த நிலை தற்போது பள்ளிகளில் தொடங்கி பல்கலைக் கழகம் வரை செயல்படுத்தப்படுகிறது. ஆராய்ச்சி என்பது மேம்போக்காகச் செய்வது அல்ல. சிந்திக்கும் ஆற்றலை வெளிப்படுத்தி, புதிய கண்டுபிடிப்புகள் உருவாக்கப்பட்டால் தான் முன்னேற்றத்தைக் காண முடியும் என்றார் நல். ராமச்சந்திரன். திருச்சி ஜெ.ஜெ. பொறியியல் கல்லூரி முதல்வர் ராமேஸ்வரன் பேசியது: பல்துறை சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்கள் முன்னோர் பின்பற்றிய அதே முறைகளைக் கையாளாமல் இன்றையச் சூழலுக்கேற்ப ஆய்வை மேற்கொள்ள வேண்டும். தவிர, ஆய்வுகள் சமுதாய நோக்கில் அமைய வேண்டும். அப்போதுதான் ஆய்வு என்பது தன்னிறைவு பெற்றதாக இருக்க முடியும் என்றார் ராமேஸ்வரன். பல்கலைக்கழக ஆங்கிலத் துறைத் தலைவர் பழனி அரங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment