Tuesday, November 2, 2010

தீபாவளிக்கு தஞ்சை பிரிஸ்ட் பல்கலை 1,200 குழந்தைக்கு புத்தாடை வழங்கல்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பிரிஸ்ட் பல்கலைக் கழகம் மூலம் தீபாவளியை முன்னிட்டு 13ம் ஆண்டாக ஆயிரத்து 200 ஏழை குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழ்த்துறை உதவி பேராசிரியர் மகேசன் வரவேற்றார். வேந்தர் முருகேசன் ஆயிரத்து 200 ஏழை குழந்தைகளுக்கு புத்தாடைகளை வழங்கி பேசுகையில், ""நான் சில ஆண்டுகளுக்கு முன் தீபாவளியின்போது சில கிராமப்பகுதிக்கு சென்றேன். அங்கு பல குழந்தைகள் நல்ல ஆடைகள் கூட இன்றி மிகவும் சிரமத்தில் இருப்பதை அறிந்தேன். அதுமுதல் கடந்த 13 ஆண்டுகளாக ஏழை குழந்தைகள் ஆயிரம் பேருக்கு ஆண்டு தோறும் புத்தாடைகள் வழங்கப்பட்டு வருகிறது. தஞ்சை நடராஜபுரத்தில் உள்ள இப்பல்கலைக் கழகத்தின் மத்திய அலுவலகம் வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் பொன்னையா ராமஜெயம் இலவச மருத்துவமனையாக செயல்படும். அங்கு ஏழைகளுக்கு முழுமையாக இலவசமாக சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ஒன்றரைக்கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் அங்கு நடக்கிறது,'' என்றார். இணை வேந்தர் நாகராஜன், டீன் தங்கவேலு, தஞ்சை நகராட்சிப்பள்ளி தலைமை ஆசிரியை ஈஸ்வரி, ரேவதி உட்பட பலர் பங்கேற்றனர்.உதவி பேராசிரியர் ஜான்மார்ட்டின் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment