முனைவர்.இராம.ஞானக்குமரன் MCA.,M.Tech.,Ph.D.,MISTE., https://twitter.com/rgkumaran https://www.youtube.com/@rgkumaran386
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் பணி வாய்ப்பு
| கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் பணி வாய்ப்பு - 17-11-2010 |
| |
| இந்தியாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. முழு நேர நிரந்தரப் பணி அடிப்படையில் இந்த இடங்கள் நிரப்பப்பட உள்ளன. என்னென்ன பிரிவுகள் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முது நிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆங்கிலம், இந்தி, இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், காமர்ஸ், கணிதம், உயிரியல், வரலாறு, புவியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோடெக்னாலஜி ஆகிய பிரிவுகளில் நிரப்பப்பட உள்ளன. என்ன தகுதி ஆங்கிலம், இந்தி, இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், காமர்ஸ், கணிதம், உயிரியல், வரலாறு, புவியியல் ஆகிய பிரிவுகளில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முது நிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது ஆர்.இ.சி.,யின் மூலமாக தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முது நிலைப் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்க இத்துறையில் எம்.எஸ்.சி., எம்.சி.ஏ., பி.இ., பி.டெக்., போன்ற ஏதாவது ஒரு படிப்பைக் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களைப் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயோடெக்னாலஜி பிரிவில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முது நிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்க பயோடெக்னாலஜியில் எம்.எஸ்.சி., அல்லது எம்.டெக்., படிப்பு அல்லது எம்.எஸ்.சி.,யில் ஜெனிடிக்ஸ், மைக்ரோபயாலஜி, உயிரியல் அல்லது பயோகெமிஸ்ட்ரி படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்தப் பதவியிலிருந்து உயர்வு பெற பி.எட்., பட்டம் பெறுவது தேவைப்படும் என்று கூறப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பது எப்படி கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முது நிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.750/ஐ எலக்ட்ரானிக் டிரான்ஸ்பர் முறையில் இந்தியன் வங்கியின் 405046333 என்ற மெஹ்ரோலி இன்ஸ்டிடியூஷனல் ஏரியா, புது டில்லி (கிளை எண் 943) அக்கவுண்ட் எண்ணில் செலுத்த வேண்டும். இதன் பின்னர் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். இதன் பின் கிடைக்கும் விண்ணப்பப்படிவத்தின் பிரிண்ட் அவுட்டுடன் இதர ஆவணங்களையும், ரூ.60/க்கு ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட சுய விலாசமிட்ட போஸ்ட் கார்டையும் இணைத்துப் பின்வரும் முகவரிக்கு 7.12.2010க்குள் கிடைக்குமாறு சாதாரணத் தபாலில் அனுப்ப வேண்டும். முக்கிய தேதிகள்: ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் : 30.11.2010 விண்ணப்பப் படிவம் சென்றடைய இறுதி நாள் : 7.12.2010 முகவரி P.O Box No.4624, Hauz Khas Post Office, New Delhi &110016. |
ஜெ.,வின் கூட்டணி அஸ்திரம் எடுபடாது: சொல்கிறார் கருணாநிதி
சென்னை : "கூட்டணிக்காக அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா எந்த அஸ்திரத்தை வீசினாலும் எடுபடாது' என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அவரது, "கேள்வி - பதில்' அறிக்கை: மத்திய அரசுக்கு ஆதரவு அளிப்போம் என, ஜெயலலிதா கூறியது மக்கள் நலனைப் பாதுகாக்க உதவாது என, மார்க்சிஸ்ட் கட்சி கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது, எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். ஆனாலும், அம்மையாரின் மனம் நோகக் கூடாது என்பதைப் போல, அந்தத் தீர்மானத்தில் மத்திய அரசையும், அதற்கு ஆதரவாக உள்ள தி.மு.க., அரசையும் பலவிதங்களிலும் தேவையில்லாமல் குறை கூறியிருக்கின்றனர். காங்கிரஸ் கட்சியோடு அணி சேர வேண்டும் என்பதற்காக அம்மையார் எப்படியெல்லாம் தானாக முன்வந்து அறிக்கை விடுகிறார் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளாமல், ஏதோ, அதைக் கண்டிக்கிறோம் என்ற அளவுக்காவது அறிக்கை விட முன்வந்த மார்க்சிஸ்ட்களின் தீர்மானம் ஓரளவு ஆறுதலாகவே உள்ளது.
பார்லிமென்ட் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டுமென்ற பொறுப்புணர்வோடு மத்திய அமைச்சர் ராஜாவை பதவி விலகுமாறு செய்த பிறகும், அவரை கைது செய்ய வேண்டும்; வழக்கு தொடர வேண்டும் என்றெல்லாம் ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். ஒரு விரலை எதிரி முன்னால் காட்டும்போது, மற்ற விரல்கள் அவர்களை நோக்கித்தான் இருக்கின்றன என்பதை மறந்துவிடக் கூடாது.அ.தி.மு.க., தலைவி மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் கோர்ட்டால் நிரூபிக்கப்பட்டு தீர்ப்பு கூறப்பட்ட பின்னரும், நான்கு இடங்களில் தேர்தலில் போட்டியிட்டு, அவை செல்லாது என கூறப்பட்ட பின்னரும், கவர்னரை வலியுறுத்தி பதவிப் பிரமாணம் செய்து, அதுவும் கோர்ட்டால் ரத்து செய்யப்பட்ட வரலாற்றை எல்லாம் மக்கள் மறந்திருப்பர் என எண்ணுகிறார் போலும்.
கட்சிக் கட்டுப்பாட்டை ஏற்று பதவி விலகிய ராஜா, தன் மீது எந்தத் தவறும் இல்லை என்றும், எல்லாமே சட்டப்படி தான் நடந்துள்ளது என்பதை உரிய முறையில் நிரூபிப்பேன் என்றும் கூறியிருப்பதையும் மறந்துவிடக் கூடாது.ஸ்பெக்ட்ரம் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் இருப்பதால், வேறு யாரும் இறுதி முடிவெடுத்துவிட முடியாது. மத்திய கணக்குத் தணிக்கைத் தலைமை அதிகாரியின் அறிக்கையை பொது கணக்குக் குழு பரிசீலனை செய்ய உள்ளது. அதன் பிறகு அந்தக் குழு தனது அறிக்கையை பார்லிமென்ட்டில் தாக்கல் செய்து, அதன் மீது விரிவான விவாதம் நடைபெறலாம்.
பொது கணக்குக் குழுவின் தலைவராக, தற்போது பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.,வைச் சேர்ந்த முரளி மனோகர் ஜோஷி தான் இருக்கிறார். பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை வேண்டுமென கோருவதன் மூலம், எதிர்க்கட்சியினருக்கு முரளி மனோகர் ஜோஷி மீது நம்பிக்கை இல்லையா? அல்லது பார்லிமென்ட்டை நடத்தவிடக் கூடாது என்பதற்காகவே கையாள்கிற யுக்தியா? வரும் 2011 தேர்தலில் எந்தத் தொகுதியில் போட்டியிடப் போகிறேன் என, பல்வேறு வகையான யூகங்களை பத்திரிகைகள் வெளியிடுகின்றன. அந்த யூகங்கள் அனைத்தும் உள்நோக்கம் கொண்டவை; கற்பனையானவை; எவ்வித அடிப்படையும் இல்லாதவை.
காங்கிரசுக்கு ஆதரவு தருவதாக ஜெயலலிதா வலிய வந்து அறிவித்ததை ஏற்க முடியாதென்றும், கூட்டணியில் இடமில்லை என்றும், அம்மையார் அறிவித்த 24 மணி நேரத்துக்குள் காங்கிரஸ் கட்சி பதிலளித்து, கதவை மூடிவிட்டது. ஜெயலலிதாவின் தற்போதைய அறிவிப்புக்கு பொருளுமில்லை; பொருத்தமுமில்லை. எனினும், அந்த அம்மையாரை தலையில் வைத்து ஆடிக்கொண்டிருப்போர், அது ராஜதந்திர அறிவிப்பென்றும், பிரம்மாஸ்திரம் என்றும் மோகனாஸ்திரத்தால் மயங்கி, ஏமாற்றப் பார்க்கின்றனர்.
கடந்த 1999ம் ஆண்டு லோக்சபா தேர்தல், 2006 சட்டசபை தேர்தல், 2007ம் ஆண்டு தேசிய அளவில் மூன்றாவது அணி முயற்சி என பல்வேறு சாகசங்களை செய்து பார்த்தார். அப்போதெல்லாம் வெற்றி பெறாத அவரது ராஜதந்திரமும், பிரம்மாஸ்திரமும், வலிய வந்து இப்போது அவர் செய்திருக்கும் அறிவிப்பாலா வெற்றி பெறப்போகின்றன?கடல் கொண்ட பூம்புகார் நகரின் எழில் மிகு தோற்றத்தை, புதுவை பாரதியார் பல்கலைக் கூட ஓவிய விரிவுரையாளர் ராஜராஜன் ஓவியமாகத் தீட்டியுள்ளார். நாளேட்டில் வந்த ஓவியத்தை நானும் கண்டேன். மகிழ்ச்சி மிகக் கொண்டேன். ஓவியர் ராஜராஜன் அழகாகத் தீட்டியுள்ளார்.இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தமிழ்மொழியுடன் ஆங்கிலமும், இந்தியும் கற்றுக்கொள்ளுங்கள்
| தமிழ்மொழியுடன் ஆங்கிலமும், இந்தியும் கற்றுக்கொள்ளுங்கள்’ - 15-11-2010 |
| செங்கல்பட்டு: தமிழ் மொழியுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என மாணவ மாணவியருக்கு, தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி அறிவுரை வழங்கினார். |
| ‘தினமலர்’ சார்பில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ மாணவியருக்கான ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி, நேற்று செங்கல்பட்டில் நடந்தது. நிகழ்ச்சியில் தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது: ‘தினமலர்’ சார்பில் கடந்த 15 ஆண்டுகளாக மாணவ மாணவியருக்காக ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். ஆண்டுதோறும் மாணவ, மாணவியர் அலை அலையாக நிகழ்ச்சிக்கு வருகின்றனர். இதை பார்க்கும்போது ஒருவித அச்சமும் ஏற்படுகிறது. நிகழ்ச்சிக்கு வரும் மாணவ, மாணவியர் ஒழுங்காக வீடு போய் சேர வேண்டும் என்ற அச்சம்தான். மாணவ, மாணவியர் இந்நிகழ்ச்சியை சரியாக பயன்படுத்திக் கொண்டால், வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படும். பிளஸ் 2 கல்விதான், வாழ்க்கையின் திருப்புமுனை. ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் கூறும் குறிப்புகளை கவனமாக குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டிற்கு சென்றதும் ஆசிரியர்கள் கூறிய குறிப்புகளை பாடங்களுடன் ஒப்பிட்டு திரும்ப திரும்ப படிக்க வேண்டும். இவ்வாறு படித்தால் 100க்கு 90 மதிப்பெண்கள் எடுக்கலாம். கடந்தாண்டுகளில் தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவியரில், ஆயிரக்கணக்கானோர் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பில் சேர்ந்த செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிராமப்புற மாணவர்கள் கல்வி கற்ற பின் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் பணி செய்ய வாய்ப்பு வரும். அப்போது ஆங்கில அறிவு அவசியம். எனவே ஆங்கிலப் பாடங்களை நன்கு படியுங்கள். தெரியாத வார்த்தைகளை எழுதி வைத்து அகராதியில் பொருள் கண்டுபிடித்து படியுங்கள். அப்போது ஆங்கிலம் சுலபமாக வரும். ஆங்கிலம் ஒன்றும் கடினமான பாடம் அல்ல. அதேபோல் தமிழகம் தவிர பிற மாநிலங்களுக்கு செல்லும்போது இந்தி மொழி அவசியம். பள்ளி விடுமுறை நாட்களில் இந்தி கற்றுக் கொள்ளுங்கள். எனது அனுபவத்தில் இதை கூறுகிறேன். நான் சிறு வயதில் இந்தி கற்காததை, தற்போதும் குறைவாகக் கருதுகிறேன். கடினமாக உழைத்தால் வாழ்க்கையில் முன்னேறலாம். பள்ளி நேரம் தவிர வீட்டில் தினமும் குறைந்தது 6 மணி நேரம் படித்தால் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற முடியும். நீங்கள் அனைவரும் அதிக மதிப்பெண்கள் பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசினார். |
எப்படி இருக்க வேண்டும் ‘ரெஸ்யூம்’? -
| எப்படி இருக்க வேண்டும் ‘ரெஸ்யூம்’? - 15-11-2010 |
| தனியார் நிறுவனங்கள் அதிகளவில் பெருகியுள்ள இன்றைய சூழலில், வேலை வாய்ப்பை பெற, பட்டதாரிகள் தங்களின் கல்வித் தகுதி மற்றும் திறன்களை நம்பியே களமிறங்குகின்றனர். |
| விரும்பிய பணியை நல்ல ஊதியத்தில் பெற நடக்கும் போராட்டத்தில், ஒருவரின் சுயவிவர விண்ணப்பம் (Resume) முக்கிய இடம் வகிக்கிறது. ஒருவர் தனது தகுதி, திறமை, அனுபவம், சாதனை போன்றவற்றை அந்த சுயவிவர விண்ணப்பத்தின் மூலமாகவே வெளிப்படுத்த வேண்டியுள்ளது. ஒருவரின் சுயவிவர விண்ணப்பம் எந்தளவு ஒரு நிறுவன அதிகாரியை கவர்கிறதோ, அதைவைத்தே அவரின் வேலைவாய்ப்பு நிர்ணயிக்கப்படுகிறது எனலாம். சிறப்பான வகையில் சுயவிவர விண்ணப்பம் தயாரிப்பது எப்படி என்பதைப் பற்றி இங்கே காண்போம். எளிமை:சுயவிவர விண்ணப்ப வடிவமைப்பில் கடினமான மற்றும் சிக்கலான வழிமுறைகளை பயன்படுத்த வேண்டாம். படிப்பவரை குழப்பும் வகையில் அதிக தகவல்களை சேர்க்க வேண்டாம். உங்களின் சுயவிவர விண்ணப்பம் குறைந்த நேரத்திலேயே படிக்கப்படும் அளவிற்கு விஷயங்கள் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். முக்கிய தகுதிகள் மேல்பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். நேர்த்தி:உங்கள் சுயவிவர விண்ணப்பம் ஆர்வமூட்டுவதாகவும், உங்கள் பணி சாதனைகளை சுருக்கமாக மற்றும் அழகாக சொல்வதாகவும் இருக்க வேண்டும். இதன்மூலம் நிறுவன அதிகாரிகள் உங்கள் திறனை எளிதாக தெரிந்துகொண்டு, உங்கள் சுயவிவர விண்ணப்பத்தை அங்கீகரிப்பார்கள். மேலும் நீங்கள் சாதித்த சில அரிதான மற்றும் வித்தியாசமான விஷயங்களை சுருக்கமாக குறிப்பிட்டால் உங்கள் பணி வாய்ப்பை அது மிகவும் அதிகரிக்கும். பணி இடைவெளி:நீங்கள் ஏதேனும் ஒரு காலகட்டத்தில் பணியில் இல்லாமல் இருந்திருந்தால், அதை குறிப்பிட தயங்க வேண்டாம். ஏனெனில் இன்றைய பொருளாதார சூழலில் அந்த விஷயத்தை ஒரு நிறுவனம் பெரிதாக எடுத்துக்கொள்ளாது. ஆனால் அந்த காலகட்டத்தில் நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் மற்றும் வேறு ஏதாவது பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு, உங்கள் சுய திறன்களை வளர்ப்பதற்கு மேற்கொண்ட பயிற்சிகள் ஆகியவற்றை குறிப்பிடவும். வகைப்படுத்தல்:இன்றைய இன்டர்நெட் யுகத்தில் உங்கள் சுயவிவர விண்ணப்பத்தை இணையத்தில் செலுத்தி, அதன்மூலம் ஏராளமான நிறுவனங்களை எளிதில் அணுகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேசமயம் இந்தமுறையில் சுயவிவர விண்ணப்பம் ஒரே வடிவமைப்பில் இருப்பதை தவிர்க்க வேண்டும். நாம் எந்த மாதிரியான பணிக்காக விண்ணப்பிக்கிறோமோ, அதற்கேற்ற விதத்தில் சுயவிவர விண்ணப்பம் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். விதியை தெரிந்திருத்தல்:நீங்கள் சர்வதேச அளவிலான நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், ஒவ்வொரு நாட்டிலும் சுயவிவர விண்ணப்ப சமர்ப்பிப்பில் எந்தமாதிரியான நடைமுறை பின்பற்றப்படுகிறது என்பதை முன்பே தெரிந்துகொள்வது நல்லது. ஏனெனில் சில நாடுகளில் சுயவிவர விண்ணப்பத்துடன் புகைப்படம் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்படும். ஆனால் சில நாடுகளில் அந்த நடைமுறை ஏற்றுக்கொள்ளப்படாது. எனவே போட்டி நிறைந்த இன்றைய வர்த்தக உலகில் உங்கள் சுயவிவர விண்ணப்பம், தேவையான இடத்தில், தேவைப்படும் விதத்தில் இருப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். மேற்கூறிய விதிமுறைகளை பின்பற்றினால் வேலைக்கான போட்டியில் நீங்கள் முந்தி செல்வதை உறுதி செய்யலாம். |
‘பி.எட்., பட்டதாரிகளுக்கு சிறந்த எதிர்காலம்’ - 15-11-2010
| ‘பி.எட்., பட்டதாரிகளுக்கு சிறந்த எதிர்காலம்’ - 15-11-2010 |
| |
| கோவை: “ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது,” என்று தமிழ்நாடு கல்வியியல் பல்கலை துணைவேந்தர் பத்மநாபன் கூறினார். கோவை பி.பி.ஜி. கல்வியியல் கல்லூரியின் நான்காவது பட்டமளிப்பு விழாவில், துணைவேந்தர் பத்மநாபன் பேசியதாவது: கல்வி என்பது எதிர்காலத்துக்கான முதலீடு. நாம் பெறும் உயர்கல்வி, வறுமையையும், வேலை வாய்ப்பின்மையையும் அகற்ற உதவ வேண்டும். ஆசிரியரை மையமாகக் கொண்ட கல்வி முறையில் இருந்து, மாணவர்களை மையமாகக் கொண்ட கல்வி முறைக்கு மாற வேண்டும். நடைபெறும் நிகழ்வுகள் குறித்து ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருந்தால், நம்பிக்கையுடன் வகுப்பறையை சந்திக்கலாம். வகுப்பறையில் சுதந்திர காற்று வீச வேண்டும். நல்ல நடத்தையுடன் சிறந்த ஆசிரியர் என்ற பெயர் பெற வேண்டும். நீங்கள் அளிக்கும் பயிற்சி, மாணவர்களிடம் ஏற்கனவே புதைந்துள்ள தெய்வீக சக்தியை வெளியே கொண்டு வர உதவ வேண்டும். முன்னர் மாணவர்களின் கண்ணை மட்டும் விட்டு வைத்து, அடிக்குமாறு பெற்றோர் கூறினர். இன்று பெற்றோரின் நிலை வேறு. ஆகவே கால மாற்றத்துக்கேற்ப ஆசிரியர்களும் தங்களை மாற்றிக் கொள்வதே புத்திசாலித்தனமானது. ஆசிரியர் பயிற்சி பெற்ற அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் உள்ளது. உங்களிடம் கற்கும் மாணவர் மனதில் நேர்மறையான எண்ணங்களை உருவாக்கி அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் அமைய உதவுங்கள். மத்திய ஆசிரியர் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கை மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின்படி, இந்தியாவுக்கு பி.எட்., பயிற்சி பெற்ற ஒரு கோடி ஆசிரியர்கள் உடனடியாக தேவைப்படுகின்றனர். இன்று, பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் 50 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். பல மாநிலங்களில் பயிற்சி பெறாத ஆசிரியர்கள்தான் பணியில் உள்ளனர். தமிழகத்தில் வாய்ப்புகள் கதவை தட்டும் அளவுக்கு உயர்கல்வித் துறை வளர்ச்சி அடைந்துள்ளது. ஆசியாவில் முதல் முறையாக தமிழகத்தில்தான் ஆசிரியர் பயிற்சி மையங்களுக்கென தனி பல்கலை உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பத்மநாபன் பேசினார். |
நேர்முகத் தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி
நேர்முகத் தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி? - 13-11-2010 |
சிறப்பாக பணிபுரிவதற்கான திறன் இருந்தும், நேர்முகத்தேர்வு (இண்டர்வியூ) என்றாலே பல இளைஞர்களுக்கு உதறல் எடுக்க ஆரம்பித்துவிடுகிறது. |
| என்னதான் தகுதி, திறமை மற்றும் அனுபவம் போன்றவை இருந்தாலும், நேர்காணல்களில் பங்கு கொள்ளும்போது தேவையற்ற பயம், பதற்றம், முன்கூட்டியே திட்டமிடாமை போன்ற சிக்கல்களில் சிக்கி பல இளைஞர்கள் தவிக்கிறார்கள். இதனால் நேர்முகத் தேர்வாளரின் மனதில், நம்மை பற்றிய ஒரு எதிர்மறை எண்ணம் ஏற்பட்டு, நாம் நமது வாய்ப்பை இழந்து விடுகிறோம். நம்முடைய பெரிய எதிர்பார்ப்பானது, 10-20 நிமிடங்கள் வரை மட்டுமே நீடிக்கும் ஒரு சிறிய நிகழ்வில் நொறுங்கிப்போவது நம்மை நம்பிக்கை இழக்க செய்கிறது. ஒரு நேர்முகத் தேர்வில் எவ்வாறு பங்குபெற்று அதை வெற்றிகரமானதாக ஆக்கி, நமக்கான பணியை பெறுவது என்பதைப் பற்றிய சில ஆலோசனைகள் இங்கே... அடிப்படையானவை: நேர்முகத் தேர்வுக்கு செல்லும்போது அலுவல் ரீதியான உடை அணியவும். குறித்த நேரத்தில் சென்று விடவும். நேர்முகத்தேர்வு அதிகாரி உங்களிடம் நல்ல நட்பு முறையில் பேசினாலும்கூட, அதனால் நீங்கள் அதிக உரிமை எடுத்துக்கொள்ள கூடாது. அவர்களிடம் தனிப்பட்ட கேள்வியோ அல்லது அவர்களை வாழ்த்தியோ எதுவும் பேச வேண்டாம். உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களையும் கவனத்துடன் அதேசமயம் அளவுடன் கூறவும். உங்கள் மொபைல் போனை சுவிட்ச் - ஆப் செய்து வைத்து விடவும். உங்கள் முழு கவனத்தையும் நேர்முகத்தேர்வில் செலுத்துவதோடு, அச்சமயத்தில் இங்கும் - அங்கும் பார்ப்பதை தவிர்க்கவும். மேலும் உங்கள் நேர்முகத்தேர்வு அதிகாரி, உங்களிடம் ஏதேனும் பேசிக்கொண்டிருக்கும்போதே நீங்கள் குறுக்கே பேசுவதை தவிர்க்கவும். நேர்முகத்தேர்வுக்கு செல்லும்போது உங்களின் சுயவிவர விண்ணப்பத்துடன், உங்களின் சான்றிதழ்கள், நோட்பேட் மற்றும் பேனா போன்றவைகளையும் எடுத்து செல்லவும். உங்கள் சுயவிவர விண்ணப்பத்தில் ஏதேனும் எழுத்துப் பிழை அல்லது இலக்கண பிழை உள்ளதா என்பதை சரிபார்ப்பதோடு, உங்களின் சுயவிவர விண்ணப்பத்தில் என்னென்ன விவரங்கள் உள்ளன என்பது முதலில் உங்களுக்கு தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். தயாராக இருத்தல்: நீங்கள் விண்ணப்பிக்கும் வேலை, நிறுவனம் போன்றவை பற்றி அதிக விவரங்களை தெரிந்து வைத்திருக்கவும். மேலும், நீங்கள் ஏன் உங்களின் முந்தைய பணியிலிருந்து விலகினீர்கள்? ஏன் இந்த பணிக்கு விண்ணப்பித்தீர்கள்? இந்த வேலையில் உங்களின் எதிர்பார்ப்பு என்ன? போன்ற கேள்விகளுக்கு எவ்வாறு பதில் சொல்வது என்று முன்பே தயாராகி கொள்ளவும். ஏனெனில் இத்தகைய கேள்விகளுக்கு நீங்கள் அளிக்கும் பதில்களின் மூலமாகத்தான் உங்களின் ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வை நேர்முகத் தேர்வாளர்கள் மதிப்பிடுவார்கள். நேர்முகத் தேர்வுக்கு முன்பாக உங்களின் சுயவிவர விண்ணப்பத்தை மீண்டும் ஒருமுறை நன்கு படிக்கவும். இதன்மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கு, உங்களின் சுயவிவர விண்ணப்பத்தை ஒட்டிய பொருத்தமான பதில்கள் அளிப்பதை உறுதிசெய்ய முடிவதுடன், நேர்முகத்தேர்வு குழுவையும் திருப்தி செய்ய முடியும். விழிப்புணர்வு: உங்களின் நேர்முகத்தேர்வு செயல்பாட்டில் விழிப்புடன் இருக்கவும். ஏனெனில் உங்களின் முந்தைய பணி மற்றும் அந்த நிறுவனத்துடனான உங்களின் உறவு போன்றவை பற்றி கேள்விகள் கேட்கப்படுகையில், எச்சரிக்கையுடனும், தந்திரமாகவும் பதிலளிக்க வேண்டும். ஒருவேளை உங்களின் பழைய அனுபவம் கசப்பானதாக இருந்தாலும், அவற்றைப் பற்றி சாதகமான பதிலையே கூறவும். பேசும்போது நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதத்தில் பேசவும். பேசியவற்றையே திரும்ப திரும்ப பேசினால் நீங்கள் பதட்டத்தில் இருக்கிறீர்கள் என்று காட்டிக் கொடுத்துவிடும். மேலும் கால்களை ஆட்டிக்கொண்டே இருத்தல் மற்றும் கைகளை இறுக்கமாக பற்றியிருத்தல் போன்ற உங்களின் செயல்கள் நீங்கள் பயத்தில் இருக்கிறீர்கள் என்பதை காட்டிக்கொடுத்து விடும். கேள்விகள்: நேர்முகத்தேர்வாளரிடம், ஆரம்பத்திலேயே விடுமுறை, பிற வசதிகள் போன்றவற்றை பற்றி கேட்ககூடாது. முதலில் நேர்முகத்தேர்வு முழுவதும் முடிய வேண்டும். நீங்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டீர்கள் என்று தெரிந்த பின்னர், நிறுவனத்தின் சலுகைகள் மற்றும் வசதிகளைப் பற்றி கேட்கவும். மேலும் இவற்றைவிட, நேர்முகத்தேர்வாளர் சம்பள விவரத்தை பற்றிபேச அவருக்கு முதலில் வாய்ப்பு தர வேண்டும். நேர்முகத்தேர்வின்போது முதல் சில நிமிடங்களில் நீங்கள் வெளிப்படுத்தும் உங்களின் செயல்பாடுதான், உங்களுக்கான வாய்ப்பை தீர்மானிக்கிறது. எனவே பதற்றப்படாமல் நன்கு யோசித்து செயல்படவும். நேர்முகத்தேர்வு என்பது ஒரு போர்க்களம் போன்றது அல்ல. எனவே அதை நினைத்து பெரிதாக பயப்பட தேவையில்லை. அதேசமயம் வாழ்க்கை போராட்டத்தில் அது முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே அசட்டையாக இல்லாமல், சற்று விழிப்புடணும் எச்சரிக்கையுடணும் இருந்தாலே வெற்றியை நிச்சயமாக்கி கொள்ளலாம். |
முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகம் - 08-11-2010
| முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகம் - 08-11-2010 |
| |
| இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் தங்களது கிளைகளை துவங்கி கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, ஏற்கனவே வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சில இந்தியாவில் கிளைகளை துவங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வரிசையில் தற்போது ஸ்காட்லாந்து நாட்டின் "ஸ்டார்த்சிலைடு பல்கலைக்கழகம்&' டில்லியில் "ஸ்டார்த் சிலைடு பிசினஸ் ஸ்கூல்&' ஒன்றை விரைவில் துவங்க உள்ளது. இது குறித்து இதன் தலைவர் சுசன் ஹார்ட் கூறியதாவது: "இங்கு இளநிலை, முதுகலை, எம்.பி.ஏ., உள்ளிட்ட படிப்புகள் தொடங்கப்படுகின்றன. வரும் 2011ம் ஆண்டு செப்., மாதத்திலிருந்து இப்பல்கலை கிளை செயல்பட ஆரம்பிக்கும். துவக்கத்தில் 1200 மாணவர்கள் சேர்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான தேர்வு அடுத்த மாதம் துவங்க உள்ளது. இதே மாதிரியான "பிசினஸ் ஸ்கூல்&' விரைவில் மும்பை மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் தொடங்கவும் இப்பல்கலை திட்டமிட்டு வருகிறது&' என்றார். இப்பல்கலைக்கழகம் செயல்படத் துவங்கும்போது வெளிநாட்டு பல்கலைக்கழக கிளை ஒன்று இந்தியாவில் செயல்பட துவங்கிய முதல் பல்கலைக்கழகம் என்ற பெருமையை பெற உள்ளது. |
ADVANCED HAPPY DIWALI
HAPPY DIWALI I WISH YOU EVERY SUCCESS MY FRIEND ALWAYS
HERE AND THERE MUST ENJOY YOUR SELF
THANKS BY R.GNANAKUMARAN A GREAT LECTURER TEAM AND TECHNICAL TEAM
http://techrgk.hpage.com http://gkmtech.hpage.com http://rgkumaran.livejournal.com
Quantitative Aptitude Q & A
State Bank of IndiaClerical Cadre (Clerk) Recruitment Exam., 2009
General Awareness :: General English :: Reasoning
:: Marketing Aptitude/Computer Knowledge
General Awareness :: General English :: Reasoning
:: Marketing Aptitude/Computer Knowledge
Quantitative Aptitude : Solved Paper
Directions—(Q. 1–6) What should come in place of the question mark (?) in the following questions ?
1. 196 × 948 ÷ 158 = ?
(A) 1156
(B) 1200
(C) 1188
(D) 1176
(E) None of these
Ans : (D)
2. (786 × 64) ÷ 48 = ?
(A) 1050
(B) 1024
(C) 1048
(D) 1036
(E) None of these
Ans : (C)
3. 3·5 + 11·25 × 4·5 – 32·5 = ?
(A) 18·275
(B) 21·625
(C) 32·375
(D) 25·45
(E) None of these
Ans : (B)
4. (2640 ÷ 48) × (2240 ÷ 35) = ?
(A) 3520
(B) 3515
(C) 3495
(D) 3490
(E) None of these
Ans : (A)
5. 7414 + 3698 + 1257 + 1869 = ?
(A) 14328
(B) 14438
(C) 13428
(D) 13248
(E) None of these
Ans : (E)
6. (98360 + 25845 – 36540) ÷ 2500 = ?
(A) 36·585
(B) 30·082
(C) 32·085
(D) 35·066
(E) None of these
Ans : (D)
Directions—(Q. 7–11) What should come in place of the question mark (?) in the following number series ?
7. 1, 9, 25, 49, ?, 169
(A) 100
(B) 64
(C) 81
(D) 121
(E) None of these
Ans : (D)
8. 3, 23, 43, ?, 83, 103
(A) 33
(B) 53
(C) 63
(D) 73
(E) None of these
Ans : (C)
9. 748, 737, 715, 682, 638, ?
(A) 594
(B) 572
(C) 581
(D) 563

10. 121, 117, 108, 92, 67, ?
(A) 31
(B) 29
(C) 41
(D) 37
(E) None of these
Ans : (A)
11. 50, 26, 14, ?, 5, 3·5
(A) 6
(B) 8
(C) 10
(D) 12
(E) None of these
Ans : (B)
12. The ratio of ducks and frogs in a pond is 37 : 39 respectively. The average number of ducks and frogs in the pond is 152. What is the number of frogs in the pond ?
(A) 148
(B) 152
(C) 156
(D) 144
(E) None of these
Ans : (C)
13. The number of employees in Companies A, B and C are in a rtio of 4 : 5 : 6 respectively. If the number of employees in the three Companies is increased by 25%, 30% and 50% respectively, what will be the new ratio of employees working in Companies A, B and C respectively ?
(A) 13 : 10 : 18
(B) 10 : 13 : 17
(C) 13 : 15 : 18
(D) Cannot be determined
(E) None of these
Ans : (E)
14. The average of five positive numbers is 213. The average of the first two numbers is 233·5 and the average of last two numbers is 271. What is the third number ?
(A) 64
(B) 56
(C) 106
(D) Cannot be determined
(E) None of these
Ans : (B)
15. Sonali invests 15% of her monthly salary in insurance policies. She spends 55% of her monthly salary in shopping and on household expenses. She saves the remaining amount of Rs. 12,750. What is Sonali’s monthly income ?
(A) Rs. 42,500
(B) Rs. 38,800
(C) Rs. 40,000
(D) Rs. 35,500
(E) None of these
Ans : (A)
16. In how many different ways can the letters of the word ‘ARISE’ be arranged ?
(A) 90
(B) 60
(C) 180
(D) 120
(E) None of these
Ans : (D)
17. What approximate amount of compound interest can be obtaied on an amount of Rs. 9650 at the rate of 6 p.c.p.a. at the end of 3 years ?
(A) Rs. 1737
(B) Rs. 1920
(C) Rs. 1720
(D) Rs. 1860
(E) Rs. 1843
Ans : (E)
18. A milkman sells 120 litres of milk for Rs. 3360 and he sells 240 litres of milk for Rs. 6120. How much concession does the trader give per litre of milk, when he sells 240 litres of milk ?
(A) Rs. 2
(B) Rs. 3·5
(C) Rs. 2·5
(D) Rs. 1·5
(E) None of these
Ans : (C)
19. When 3626 is divided by the square of a number and the answer so obtained is multiplied by 32, the final answer obtained is 2368. What is the number ?
(A) 7
(B) 36
(C) 49
(D) 6
(E) None of these
Ans : (A)
20. The sum of the two digits of a two digit number is 14. The difference between the first digit and the second digit of the two digit number is 2. What is the product of the two digits of the two digit number ?
(A) 56
(B) 48
(C) 45
(D) Cannot be determined
(E) None of these
Ans : (B)
21. A car runs at the speed of 50 kms per hour when not serviced and runs at 60 kms/hr. when serviced. After servicing the car covers a certain distance in 6 hours. How much time will the car take to cover the same distance when not serviced ?
(A) 8·2 hours
(B) 6·5 hours
(C) 8 hours
(D) 7·2 hours
(E) None of these
Ans : (D)
Directions—(Q. 22–24) What approximate value should come in place of the question mark (?) in the following questions ?
(You are not expected to calculate the exact value.)
22. (4863 + 1174 + 2829) ÷ 756 = ?
(A) 18
(B) 16
(C) 12
(D) 9
(E) 22
Ans : (C)
23. 37·35 + 13·064 × 3·46 = ?
(A) 89
(B) 83
(C) 76
(D) 79
(E) 85
Ans : (B)
24. 54 × 746 ÷ 32 = ?
(A) 1259
(B) 1268
(C) 1196
(D) 1248
(E) 1236Ans : (A)

Subscribe to:
Posts (Atom)