முனைவர்.இராம.ஞானக்குமரன் MCA.,M.Tech.,Ph.D.,MISTE., https://twitter.com/rgkumaran https://www.youtube.com/@rgkumaran386
திருவண்ணாமலையில் மகா தீபம் : 20 லட்சம் பக்தர்கள் திரண்டனர்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், திருக்கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, 2, 668 அடி உயரமுள்ள மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. அதை 20 லட்சம் பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர். மகாதீபத்தை நேரில் காண முடியாத பக்தர்கள் ஏக்கத்தை போக்கும் வகையில் தினமலர் இணையதளம் நேரடி ஒளிபரப்பு ( வெப் டெலிகாஸ்ட்) செய்தது. இதன் மூலம் நமது வாசகர்கள் பலர் பார்த்து பயன் அடைந்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 12ம் தேதி துவங்கியது. மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று மாலை நடந்தது. விழாவையொட்டி இன்று அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விநாயகர், முருகன், அண்ணாமலையார், உண்ணாமலையம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது.
ஏகன் அனேகன் என்பதை விளக்கும் வகையில் கருவறையில் கற்பூர தீபமேற்றி, சிவாச்சாரியார்கள் வேதபாராயணம் ஓத, கற்பூர தீபத்திலிருந்து ஒரு மடக்கில் நெய்த்திரியிட்ட விளக்கு ஏற்றப்பட்டது. பின், பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் கருவறை எதிரில் ஐந்து மடக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. அந்த தீபத்தை மூர்த்தி குருக்கள் கையிலேந்தி முதல் பிரகாரத்தில் வலம் வந்தார். அப்போது, பக்தர்கள், "அண்ணாமலையாருக்கு அரோகரா' என கோஷம் எழுப்பி வழிப்பட்டனர். தொடர்ந்து சிவ-சக்தி மூர்த்தங்களிலிருந்து விரிவானதே எல்லா மூர்த்திகளும் என்பதை காட்டுவதற்காக, அம்மன் கருவறையில் ஐந்து அகல் விளக்குகளும், விநாயகர் சன்னதி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் தீபங்கள் ஏற்றப்பட்டது.
மாலை 6 மணிக்கு அனேகன் ஏகன் என்ற தத்துவத்தை விளக்கும் வகையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வாணை சமேதராக முருகன், அண்ணாமலையார் சமேதராக உண்ணாமலையம்மன், பராதி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் தங்கக் கொடி மரத்தின் முன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பஞ்சமூர்த்திகள் தீப தரிசன மண்டபத்தில் ஒன்றாக அமர்ந்தனர். மாலை 5.59 மணி அளவில் அர்த்தநாரீஸ்வரர் தங்கக் கொடி மரம் முன் எழுந்தருளி காட்சியளித்தார். அப்போது, காலையில் சுவாமி சன்னதியில் ஏற்றப்பட்ட ஐந்து அகல் விளக்குகளையும் கொண்டு வந்து கொடி மரத்தின் முன் உள்ள அகண்டத்தில் ஒன்று சேர்க்கப்பட்டது. பஞ்ச பூதங்களை குறிக்கும் விதத்தில் 5 தீப்பந்தகள் ஏற்றப்பட்டு, அவற்றை கொண்டு 2 ஆயிரத்து 668 அடி மலை உயரத்தில் உள்ள மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் ஏற்றும் காட்சியை 20 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். அர்த்தநாரீஸ்வரர் ஆண்டில் ஒரு முறை மஹாதீபத்தன்று மட்டுமே கோவில் கொடி மரத்தின் பலி பீடம் அருகே வந்து அருள்பாலிப்பார். மகா தீபதிருவிழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளாலும், கோவில் முதல் பிரகாரம், தங்க கொடிமரம், தீப தரிசன மண்டபம் ஆகியவை வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மகா தீபத்திருவிழாவையொட்டி பலத்த பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டிஜி.பி., லத்திகாசரண் தலைமையில் 10 ஆயிரத்திற்கும் மேலான போலீசார் மற்றும் சிறப்பு கமாண்டோ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கண்காணிப்பு காமிரா மூலம் அனைத்து நிகழ்ச்சிகளும் கண்காணிக்கப்பட்டன.

சிவில் சர்வீசஸ் தேர்வுமுறையும், புதிய மாறுதலும் - 20-11-2010
| நமது அரசியலமைப்பின் நான்கு தூண்களில் ஒன்றான நிர்வாக அமைப்பில் தலையாய பங்கு வகிப்பவர்கள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள். |
| அவர்களே நாட்டின் நிர்வாகத்தை முன்னின்று நடத்துகிறார்கள் எனலாம். அவர்கள் நாட்டின் கொள்கை வகுப்பாளர்களாகவும் இருக்கிறார்கள். எனவே அத்தகைய உயர்ந்த அதிகார நிலையை அடைய பல இளைஞர்கள் இயல்பாகவே ஆர்வம்கொண்டு, அதற்கான தேர்வுகளுக்கு தம்மை தயார் செய்கிறார்கள். பலரது வாழ்க்கையின் பெரிய லட்சியமாக இருக்கும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி பதவிக்கான தேர்வில் தற்போது ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த மாற்றம் என்ன? மற்றும் அதன் விளைவுகள் எப்படி இருக்கும்? அந்த மாற்றத்தால் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் எந்த வகையில் கஷ்டத்தை எதிகொள்ள போகிறார்கள்? என்பதைப் பற்றிய விவாதங்கள், நிர்வாகப் பணிகளின் ஆர்வலர்கள் மத்தியில் சமீப நாட்களாக மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. நாட்டில் பலவகை பணிகளுக்கு நடத்தப்படும் தகுதித் தேர்வுகள் அனைத்திலும், முதன்மையான மற்றும் கடினமான தேர்வு இந்திய ஆட்சிப் பணி தேர்வேயாகும். இந்த தேர்வானது எந்த முறையில் நடத்தப்படுகிறது என்பதைப் பற்றிய விரிவான தகவல் மாணவர்கள் பலருக்கும் தெரிவதில்லை. அதை தெரிந்துகொண்டால்தான் தற்போது செய்யப்பட்டிருக்கும் மாற்றத்தையும் எளிதாக புரிந்துகொண்டு, எதிர்காலத்தில் அதற்கேற்ப தயாராக முடியும். பழைய தேர்வு முறை முதல் நிலைத்தேர்வு (பிரிலிமினரி): ஐ.ஏ.எஸ் தேர்வின் முதற்கட்டமாக நடத்தப்படும் தேர்வு முதல்நிலை தேர்வு என்று அழைக்கப்படுகிறது. மே அல்லது ஜூன் மாதங்களில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதில் இரண்டு வகையான தேர்வு முறைகள் உள்ளன. அவை, தாள் 1 - பொது அறிவு பாடங்கள் தாள் 2 - விருப்பப் பாடம் பொதுஅறிவு பாடத்தேர்வில் இடம்பெற்ற பாடப்பிரிவுகள்:இந்திய அரசியல் மற்றும் பொருளாதாரம் இந்திய தேசிய இயக்கத்தை உள்ளடக்கிய இந்திய வரலாறு இந்திய மற்றும் உலக புவியியல் தேசிய மற்றும் உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த நடப்பு நிகழ்வுகள் பொது மற்றும் அன்றாட அறிவியல் உளவியல் திறன் மற்றும் புள்ளியியல் அடிப்படைகள் முதலானவை. திட்டமிடல், வரவு-செலவு கணக்குகள், மேம்பாட்டு திட்டங்கள், அரசியல் மற்றும் அரசியலமைப்பின் சமீபத்திய சம்பவங்கள், பஞ்சாயத்து ராஜ், வாக்குப்பதிவு சீர்திருத்தங்கள், இயற்கை வளங்கள், கலாச்சாரம், தேசியத்தின் வளர்ச்சி, குழுக்கள், ஆணையகம் போன்றவை சம்பந்தமான கேள்விகளே ஒவ்வொரு வருடமும் கேட்கப்பட்டன. சமீப காலங்களில், இந்த பொது அறிவு தாளில், நடப்பு நிகழ்வுகள் பற்றிய கேள்விகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன. இதற்கான மதிப்பெண் 150 இரண்டாம் தாள் தேர்வான விருப்பப் பாட பிரிவில், விவசாயம், கால்நடை மருத்துவம், தாவரவியல், வேதியியல், கட்டிடப் பொறியியல், வணிகம், பொருளாதாரம், மின் பொறியியல், புவியியல், மண்ணியல், இந்திய வரலாறு, சட்டம், கணிதம், இயந்திரப் பொறியியல், மருத்துவ அறிவியல், தத்துவம், இயற்பியல், அரசியல் அறிவியல், உளவியல், பொது நிர்வாகம், சமூகவியல், விலங்கியல், புள்ளியியல் போன்ற பாடங்களிலிருந்து ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்வுசெய்து கொள்ளலாம். இதற்கான மதிப்பெண் 300 இந்த இரண்டு தாள்களும் ‘ஆப்ஜெக்டிவ்’ முறையிலான கேள்விகளைக் கொண்டதாக இருந்தது. ஒவ்வொரு தேர்வுக்கும் 2 மணி நேரங்கள். இந்த முதல்நிலைத் தேர்வானது, இரண்டாம் நிலைத் தேர்வான முதன்மை தேர்வுக்கு தகுதியானவர்களை தேர்வுசெய்யும் பொருட்டே நடத்தப்படுகிறது. இத்தேர்வு முடிவுகள் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் வெளியிடப்படுகின்றன. முதன்மைத் தேர்வு (மெயின்):முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு அந்த ஆண்டே அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் முதன்மைத்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் 9 தாள்கள் உள்ளன. ஒவ்வொரு தாளுக்கும் 3 மணி நேரங்கள். தாள் 1 - அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட 18 இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து எழுதலாம். அந்த மொழியில் உங்களின் புலமை சோதிக்கப்படும். இதற்கு 300 மதிப்பெண்கள். தாள் 2 - ஆங்கில மொழித்திறன் தேர்வு - 300 மதிப்பெண்கள் தாள் 3 - பொதுக் கட்டுரை பகுதி - 200 மதிப்பெண்கள் தாள் 4 - 2 பொதுஅறிவு பாடங்கள் - ஒவ்வொன்றுக்கும் 300 மதிப்பெண்கள் தாள் 5 - 2 விருப்பப் பாடங்கள் (ஒவ்வொன்றிலும் 2 தாள்கள் இருக்கும்) - ஒவ்வொன்றுக்கும் 300 மதிப்பெண்கள் - மொத்தம் 1200 மதிப்பெண்கள் விருப்பப் பாடங்களாக, விவசாயம், கால்நடை மருத்துவம், தாவரவியல், வேதியியல், கட்டிடப் பொறியியல், வணிகம் மற்றும் கணக்கியல், பொருளாதாரம், மின் பொறியியல், புவியியல், மண்ணியல், வரலாறு, சட்டம், மேலாண்மை, கணிதம், இயந்திரப் பொறியியல், மருத்துவ அறிவியல், தத்துவம், இயற்பியல், அரசியல் அறிவியல் மற்றும் சர்வதேச உறவுகள், உளவியல், பொது நிர்வாகம், சமூகவியல், விலங்கியல், புள்ளியியல் போன்ற பாடங்களிலிருந்து ஏதேனும் இரண்டை நீங்கள் தேர்வுசெய்து கொள்ளலாம். மேலும் கீழ்கண்ட மொழி இலக்கிய பாடங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வுசெய்து கொள்ளலாம். அவை, அராபிக், அசாமி, பெங்காலி, சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கனி, மராத்தி, மலையாளம், மணிப்பூரி, நேபாளம், ஒரியா, பாலி, பாரசீகம், பஞ்சாபி, ரஷ்யன், சமஸ்கிருதம், சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது. விருப்பப் பாடங்களில் கீழ்கண்ட பாடப் பொருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. அவை, அரசியல் அறிவியல் மற்றும் சர்வதேச உறவுகள் மற்றும் பொது நிர்வாகம் வணிகவியல் மற்றும் மேலாண்மை மானுடவியல் வரலாறு மற்றும் சமூகவியல் கணிதம் மற்றும் புள்ளியியல் விவசாயம் மற்றும் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை மருத்துவம் மேலாண்மை மற்றும் பொது நிர்வாகம் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை மருத்துவம் மற்றும் மருத்துவ அறிவியல் பொறியியல் படிப்பில் ஏதேனும் 2 துறைகள் பட்டியலிலுள்ள மொழி இலக்கிய பாடங்களில் 2 பொருத்தமான பாடங்கள் இந்த தேர்வை ஆங்கிலம், தமிழ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் ஏதேனும் ஒன்றில் எழுதலாம். இப்பகுதியில் மொத்தம் 2600௦௦ மதிப்பெண்கள். ஆனால் முதல் இரண்டு பகுதிகளான பிராந்திய மொழி தேர்வு மற்றும் ஆங்கில மொழித் தேர்வுகளின் மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்பட மாட்டாது. மற்ற பகுதிகளின் மதிப்பெண்கள் சேர்க்கப்பட்டு மொத்தம் 2000 மதிப்பெண்கள். முதல் இரண்டு பகுதிகளின் மதிப்பெண்கள் கணக்கில் கிடையாது என்றாலும், அந்த தேர்வுகளில் கட்டாயம் தகுதிபெற வேண்டும். முக்கிய தேர்வானது கட்டுரை வடிவில் எழுதப்பட வேண்டும். இந்த தேர்வில் உங்களின் முழு அறிவுத்திறன் மற்றும் புரிந்துணர்வு திறன் போன்றவை சோதிக்கப்படும். நேர்முகத்தேர்வு: முதன்மை தேர்வில் தேறியவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். எத்தனை இடங்கள் காலியோ, அதைவிட இருமடங்கு நபர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இத்தேர்வுக்கான அழைப்புகள் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் அனுப்பப்படும் மற்றும் ஏப்ரல்-மே மாதங்களில் தேர்வு நடைபெறும். இத்தேர்வுக்கு மொத்தம் 300 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்வாளர்கள் உங்களின் ஆளுமைத்தன்மை, சமூகப் புரிந்துணர்வு திறன், தலைமைப் பண்பு போன்றவற்றை சோதிப்பார்கள். உங்களின் செயல்பாடு தேர்வாளர்களை கவர்ந்துவிட்டால் நீங்கள் இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்வு செய்யப்படுவீர்கள். முக்கியத் தேர்வின் மதிப்பெண்கள் 2000 மற்றும் நேர்முகத்தேர்வின் 300 மதிப்பெண்கள் சேர்க்கப்பட்டு, மொத்த மதிப்பெண்களாக வைக்கப்பட்டு, அதில் நீங்கள் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் வரிசைப்படுத்தப்படுவீர்கள். சிவில் சர்வீசஸ் தேர்வில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றம் மேற்கண்ட முறையில்தான் பல வருடங்களாக தேர்வு நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது முதல்நிலைத் தேர்வின் இரண்டாம் பகுதியில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நெகடிவ் மதிப்பெண்கள் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பிறகு, இந்த மாற்றம்தான் அடுத்த பெரிய மாற்றமாக நிகழ்ந்துள்ளது. மத்திய பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் இந்த மாற்றம் பற்றிய அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இதன்மூலம் வரும் 2011 முதல் ஐ.ஏ.எஸ் -க்கான முதல்நிலை தேர்வானது புதியமுறையில் நடைபெறும். அதைப்பற்றி தற்போது விரிவாக காண்போம். முதல்நிலைத் தேர்வில், பொதுஅறிவு பாடம் மற்றும் விருப்பப்பாடம் ஆகிய இரண்டு தாள்களை எழுதினோம். ஆனால் தற்போது அந்த விருப்பப்பாட முறை நீக்கப்பட்டு திறனாய்வு (ஆப்டிடியூட்) முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இனி இரண்டு பகுதிகளுக்கும் சமமாக 2 மணிநேரங்கள் ஒதுக்கப்பட்டு, ஒவ்வொன்றுக்கும் 200 மதிப்பெண்கள் அளிக்கப்படும். திறனாய்வுப் பகுதியின் பாடத்திட்டம்:அறிந்துகொள்ளும் திறன் இணைந்து பழகும் திறன்கள், தகவல் தொடர்பு திறன்கள் காரணமறிதல் மற்றும் பகுத்தாய்வு திறன்கள் முடிவெடுக்கும் திறன் மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் திறன் புத்திக்கூர்மைத் திறன் பொது எண் கணிதம் - எண்கள் மற்றும் அதன் தொடர்புகள், தரவு கருத்துருவாக்கம் (10ம் வகுப்பு நிலை) ஆங்கில மொழியை அறிந்துகொள்ளும் திறன் (10ம் வகுப்பு நிலை) மாற்றத்திற்கான காரணங்கள்: இரண்டாம் நிர்வாக சீர்திருத்த கமிஷன் உள்ளிட்ட பல கமிட்டிகள், மாணவர்களின் பாட அறிவை சோதிப்பதை விட, அவர்களின் திறனாய்வு தன்மையை சோதிப்பதே முக்கியம் என்று கடந்த காலங்களில் தொடர்ந்து பரிந்துரைத்து வந்தன. நல்ல பாட அறிவை பெற்றிருப்பவர், நல்ல அதிகாரியாக இருப்பார் என்று உத்திரவாதம் தரமுடியாது என்பது இவைகளின் வாதம். மேலும் விருப்பப் பாடங்கள் ஒவ்வொன்றும் ஒரு தன்மையில் இருப்பதால், அவற்றை மதிப்பிட்டு அதன்மூலம் தேர்வெழுதுபவர்களின் திறன்களை சமமாக மதிப்பிடுவது இயலாத காரியம். இதன் மதிப்பெண்களும் வெளியிடப்படுவதில்லை. மேலும் பலர் தாங்கள் கல்லூரியில் படித்த பாடங்களையே விருப்பப் பாடங்களாக எடுத்து, அதன்மூலம் எளிதில் முதல்நிலையை கடந்து விடுகிறார்கள். எனவேதான் இந்த முரண்பாட்டை தடுக்க இத்தகைய மாற்றம் செய்யப்பட்டது. இதன்மூலம் சிவில் சர்விஸ் முதல்நிலைத் தேர்வு என்பது சிவில் சர்விஸ் திறனாய்வு (ஆப்டிடியுட்) தேர்வு என்று அழைக்கப்படும். மாற்றத்தின் நன்மைகள்:தேர்வுமுறை அனைவருக்கும் ஒன்றாக மாறிவிடுவதால், அனைவரும் ஒரேமுறையிலேயே தயாராக வேண்டும். மதிப்பிடும் தன்மையில் வெளிப்படைத்தன்மை இருக்கும். ஒரேமாதிரியான சவால் அனைவருக்கும் நிர்ணயிக்கப்படுகிறது. முதல்நிலைத் தேர்வின் இரண்டு பிரிவுகளுக்குமே சமமான மதிப்பெண்களும், முக்கியத்துவமும் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் எந்த ஒரு தனிப்பட்ட பாடத்தின் பாதிப்புகளோ, அதன் தன்மைகளோ இருக்காது. பாதகங்கள்:இத்தகைய மாற்றத்தால் முதல்நிலை தேர்வானது, ஒரு கடினமான பகுதியாக மாறிவிடுகிறது மற்றும் கிராமப்புற சூழலிலிருந்து ஐ.ஏ.எஸ் எழுதவரும் மாணவர்களுக்கு சிரமமாக இருக்கும் போன்ற குரல்கள் எழுகின்றன. இதில் நிறைய உண்மை இருக்கிறது. ஆனால் நாட்டின் தலைஎழுத்தை நிர்ணயிக்கப்போகும் ஒரு பணிக்கான தேர்வில் இத்தகைய மாற்றங்கள் அவசியமானவை. அதேசமயம் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. தற்போது முதல்நிலைத் தேர்வில் மட்டுமே மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் அடுத்தடுத்த நிலைகளிலும் மாற்றம் வருமா என்பது பின்னாளில் தெரியும். மத்திய அரசு பணிகளுக்கான சிவில் சர்விசஸ் தேர்வுகளில், திறனாய்வு என்ற அம்சத்திற்கு அதிக முக்கியத்துவம் இந்த தேர்வின் மூலம் இப்போதுதான் கொடுக்கப்படுகிறது. |
காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி: கருணாநிதி, பிரணாப் திட்டவட்டம்
மதுரை : ""கூட்டணி தலைவர்கள் முன், நமது ஒற்றுமையை, கூட்டணி பிணைப்பை நிலைநாட்டி உள்ளீர்கள்,'' என மதுரையில் நேற்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி - அனுஷா திருமணத்தில், முதல்வர் கருணாநிதி பேசினார். இதே கருத்தை, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் வலியுறுத்தினார். திருமணத்திற்கு தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகன் தலைமை வகித்தார். துணை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார்.
மணமக்களை வாழ்த்தி திருநாவுக் கரசர் (காங்.,) பேசும்போது, ""கருணாநிதி, கடவுளை நம்புகிறாரோ இல்லையோ, கருணாநிதியை கடவுள் நம்புகிறார்'' என்றார்.
இல.கணேசன் - பா.ஜ: இப்போதெல்லாம் திருமண வாழ்த்து என்றால் தட்டச்சு செய்து அனுப்புகின்றனர். ஆனால் நான், வாழ்த்து அனுப்பும்போது கைப்படத் தான் எழுதி அனுப்புவேன். அதே போல, பேரன் திருமணத்திற்கு, கருணாநிதி கையால் எழுதியதை அழைப் பிதழாக அனுப்பி உள்ளனர். இப்படி செய்வதில் ஒரு ஈடுபாடு கிடைக்கிறது.
மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி: பிரதமர் மன்மோகன் சிங் அனுப்பிய வாழ்த்துச் செய்தியை வாசித்த இவர், பேசும்போது, ""நாட்டின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக, கடந்த 2004ம் ஆண்டு முதல் இக்கூட்டணி செயல்படுகிறது. இது போல, மீதி இருக்கும் மூன்றரை ஆண்டுகளுக்கும் இணைந்து செயல்படும் என் பதில் சந்தேகம் இல்லை,'' என்றார்.
நன்றி தெரிவித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது: நாம் பெற்ற பெருமையை நிலை நிறுத்த, நமது கூட்டணி எப்படி பயன்படுகிறதோ அது போல் மணமக்கள் இடையே விரிவான, வாழ்க்கை கூட்டணி நிலை பெற்று தொடரும் என நம்புகிறேன். அழகிரியை அஞ்சாநெஞ்சன் என்கின்றனர். நான் அவரை, ஒரு கரும்பாக நினைக்கிறேன். கரும்பு, அடியில் இனிக்கும்; நுனியில் துவர்க்கும். அது போல அழகிரியை ஒரு கரும்பாக கருதி, தேவையான அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதை விடுத்து, நுனிக் கரும்பு போல் கடித்தால் சுவைக்காது, நாக்கை கிழிக்கும். மூத்த மகன் மு.க.முத்துவுக்கு, என் தந்தை நினைவாக பெயர் வைத்தேன். பட்டுக்கோட்டை அழகிரி, எங்கள் இயக்க தலைவராக இருந்ததால், அவரது பெயரை அழகிரிக்கு வைத்தேன். ரஷ்யாவில் பொதுவுடைமை கொள்கையை வளர்த்த ஸ்டாலின் இறந்தபோது, பிறந்ததால், "ஸ்டாலின்' என்ற பெயரை அடுத்த மகனுக்கு சூட்டினேன். மற்றவர்களுக்கு தமிழின் மீது இருந்த பற்றால் பெயர் வைத்தேன். பேரப் பிள்ளைகள், கொள்கைக்கு விரோதமாக செயல்பட்டால், லட்சியம் பட்டுப்போனதாக ஆகிவிடும். கூட்டணி தலைவர்கள் இங்கு வந்துள்ளனர். அவர்கள் முன், நமது ஒற்றுமையை கூட்டணி பிணைப்பை நிலைநாட்டும் வகையில், இங்கு வந்துள்ளீர்கள். இவ்வாறு கருணாநிதி பேசினார்.
மத்திய அமைச்சர் சிதம்பரம், இந்திய முஸ்லிம் லீக் தமிழக தலைவர் மைதீன்கான், சபாநாயகர் ஆவுடையப்பன், பொன்னம்பல அடிகளார், காங்., மாநில தலைவர் தங்கபாலு ஆகியோர் வாழ்த்தி பேசினர். டி.ஆர்.பாலு எம்.பி., கனிமொழி எம்.பி., மாநில அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், தமிழரசி, தொழிலதிபர் விஜய் மல்லையா, கலெக்டர் காமராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அட்சதையை வாயில் போட்ட பிரணாப்: திருமணத்திற்கு முன், மணமக்கள் மீது தூவுவதற்காக அட்சதை தரப்பட்டது. அதை எடுத்த பிரணாப் முகர்ஜி, அது எதற்கு தரப்பட்டது என தெரியாமல், வாயில் போட்டுக்கொண்டார். மேடையில் பேசிய பலரும், "ஆறாவது முறையும் கருணாநிதி முதல்வர் ஆவார்' என்றனர். திருமணத்திற்கு பிறகு நிருபர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, ""இந்த திருமணத்தால் மட்டில்லா மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. காங்., - தி.மு.க., கூட்டணி உறுதிபடுத்தப்பட்டுள்ளது. திருமணத்திற்கு வந்த மத்திய, மாநில அமைச்சர்களுக்கு எனது நன்றி,'' என்றார்.

ஆண்களுக்கு என்ன பிரச்னை? இன்று சர்வதேச ஆண்கள் தினம்
ஆண்கள்...20 -30-40: இருபது வயதில் - சிலிர்ப்பிக்கொண்டு நிற்கும் தலைமுடி... அதை அடிக்கடி கையால் "ஸ்டைலாக' கோதிக்கொண்டு, ரோட்டில் போகும் பெண்களை ஒரு "லுக்'... அடிக்கடி கண்ணாடி முன் நின்று, குடம், குடமாக பவுடரை கையில் கொட்டி, முகத்தில் அப்பி, அழகு பார்க்கும் பொறுமை...
முப்பது வயதில் - பெயருக்கு தலையை சீவிக்கொண்டு, போனால் போகிறது என்று "தம்மாத்தூண்டு' பவுடரை முகத்தில் தடவிக்கொண்டு, அரைகுறையாய் கண்ணாடி பார்க்கும் அலுப்பு...
நாற்பது வயதில் - "கீழே விழுந்து விடுவேன்' என மிரட்டும் முடியை, கஷ்டப்பட்டு இழுத்துப் பிடித்து, குவித்து வைத்து சீவி... பவுடர் டப்பாவை பார்த்தாலே கடுப்புடன் தூக்கி வீசி... கண்ணாடி என ஒன்று இருப்பதையே கண்டுகொள்ளாமல், வேலைக்கு செல்லும் அவசரம்...
இவை தான் பெரும்பாலும், ஆண்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்ளும் விதம். திருமணத்தின் போதும் மட்டும் ஆண்கள், தங்களை பெண்கள் கவர வேண்டும் என்பதற்காக அழகுபடுத்திக் கொள்வதில் மெனக்கெடுகின்றனர். திருமணத்திற்கு பின், தங்களுக்குள் சுய கட்டுப்பாடு விதித்துக்கொண்டு, குடும்ப பாரத்தை சுமக்க வருவாயை பெருக்குவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். சிலர் மன உளைச்சலில் சிக்கி மது, போதை, புகைப் பழக்கங்களுக்கு அடிமையாகின்றனர். இதனால் உடல் ஆரோக்கியம் பாதித்து, விரைவில் முகப் பொலிவை இழக்கின்றனர்.
வியர்வை சிந்தி உழைத்து சம்பாதித்த பணத்தை இப்படி வீணாக்குவதை தவிர்த்து, அழகுபடுத்தி, கம்பீரத்தை பொலிவாக்கினால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். செயல், எண்ணங்களில் மாறுதல் ஏற்பட்டு, வெற்றி கிட்டும். ஆண்களில் விதிவிலக்காக சிலர் மட்டும் சிகை அலங்காரத்தை மட்டும் ஆண்கள் பியூட்டி பார்லரில் செய்து கொள்கின்றனர். பெண்களுக்கு தனியாக பியூட்டி பார்லர்கள் அதிகளவில் உள்ளதைப்போல், ஆண்களுக்கு என தனியாக விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே உள்ளன.
மதுரை கே.கே.நகர் "ராயல் டச்' ஆண்கள் பியூட்டி பார்லர் உரிமையாளர் ராஜன் கூறுகிறார்: ஆண்களின் கம்பீரத்திற்கு பொலிவு தேவை. தற்போது கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி, 60 வயதிலும் அழகுபடுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர். மாதம் ஒருமுறை பியூட்டி பார்லருக்கு சென்று அழகுபடுத்தினால் புத்துணர்ச்சி உறுதி. முடிகொட்டுவதை தடுக்க பக்கவிளைவுகள் இல்லாத சித்தா, ஆயுர்வேத டானிக், "பேசியல்' செய்ய பழம், வேர்கள் கலந்த மூலிகைகளை பயன்படுத்துவது நல்லது என்றார்.
என் சோகக் கதையை கேளு தாய்குலமே! பறப்பன, ஊர்வன, நடப்பன என எல்லா உயிர்களுக்கும்(?) ஒவ்வொரு தினம் கொண்டாடப்படும் காலம் இது. அந்த வரிசையில் இன்று ஆண்கள் தினம். எல்லா விஷயத்திலும் ஆண்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்று கருத்து நிலவும் இக்காலக்கட்டத்தில், போலீசில் அதிகம் சிக்குபவர்களும் "பாவப்பட்ட' ஆண்கள்தான். மதுரை நகரின் மூன்று மகளிர் ஸ்டேஷன்களில் மாதம் 150 புகார்கள் ஆண்கள் மீது கொடுக்கப்படுகின்றன. விசாரணைக்குபின் 15 புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. பொதுவாக, பெண்கள் சிந்தும் கண்ணீரை நம்பி, சரியாக விசாரிக்காமல் ஆண்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்கிறது.
"இது உண்மைதானா' என மதுரை வரதட்சணை ஒழிப்பு பிரிவு பெண் உதவி கமிஷனர் ராஜாமணி கூறியதாவது : இருதரப்பையும் அழைத்து, எங்கள் முன் பேச செய்வோம். அப்போது ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் சொல்லும்போது, யார் மீது தவறு என்பது தெளிவாகிவிடும். குடும்ப பிரச்னையை தீர்க்கவே எங்களை தேடி வருவதால், முடிந்தளவிற்கு "கவுன்சிலிங்' செய்து சமரசம் செய்து அனுப்பி வைக்கிறோம். ஆண்மை குறைவு, கள்ளத்தொடர்பு, வரதட்சணை போன்ற பிரச்னைகளில் சமரசம் ஆகமாட்டார்கள். இதை தொடர்ந்தே ஆண்கள் மீது வழக்குப்பதிவு செய்கிறோம். பெரும்பாலும் ஆண்கள் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக தான் புகார்கள் வருகின்றன. வரதட்சணை கேட்டு மிரட்டும் புகார்கள் குறைவு என்றார்.
ஆண்களுக்கு சிறை: பெண்களின் தந்திரம்: ஆண்களுக்கு எதிராக வரதட்சணை தடுப்புச் சட்டத்தின்கீழ்தான் அதிகளவில் பொய்யாக வழக்குகள் புனையப்படுகின்றன. உண்மையில் பாதிக்கப்படுவோர் ஒருபுறமிருக்க, கணவன், மனைவிக்கிடையே உள்ள சிறிய பிரச்னைக்கும் இச்சட்டத்தை சில பெண்கள் பயன்படுத்துகின்றனர். இது குறித்து மதுரை ஐகோர்ட் கிளை வக்கீல் பி.தனசேகரன் கூறியது: சில வீடுகளில் மாமியார், மருமகள் பிரச்னையில் கணவன் மீதும், உறவினர் மீதும் வரதட்சணை வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இது விவாகரத்து வரை சென்றுவிடுகிறது. இதனால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இது ஒரு சமுதாயப் பிரச்னைக்கு வழிஏற்படுத்துகிறது. தாங்கள் நினைத்தால் கணவரை சிறைவைக்க முடியும் என கருதும் வலிமையான பின்னணியுள்ள பெண்கள் இதுபோன்று செயல்படுவதால், ஆண்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் வரதட்சணை வழக்குகளில் உறவினர்களை தேவையின்றி சேர்க்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விபரம் தற்போது அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.
அக்கறை இல்லையா ஆண்களுக்கு? பல்வேறு அம்சங்களுக்காக தேசிய, சர்வதேச தினங்கள் கடைபிடிக்கும் நிலையில் ஆண்களுக்காக தினம் கொண்டாட அவசியம் ஏன்? ஆண்களுக்கு என்ன பிரச்னை? தற்போது ஆண்கள் தங்களது உரிமை பற்றி பேசுவதற்கு தயக்கம் உள்ளது. ஆண்கள் உரிமைக்காக அகில இந்திய ஆண்கள் நல சங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 10 ஆயிரம் பேர் உறுப்பினரில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆயிரத்து 200 பேர்.
இந்த அமைப்பை சேர்ந்த சுரேஷ்ராம் கூறியதாவது: ஆண்டுக்கு 80 லட்சம் ஆண்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக கைதாகின்றனர். இதில் 85 சதவீத கைதுகள் தேவையில்லாதவை என தேசிய போலீஸ் கமிஷன் கருத்து தெரிவிக்கிறது. கைதாகும் நபர்களில் 20 சதவீதம் பேர் மட்டும் தண்டனைக்குள்ளாகின்றனர். பெண்களுக்காக பல்வேறு மருத்துவ திட்டங்களை அறிவிக்கும் அரசுகள், ஆண்கள் விஷயத்தில் அக்கறை செலுத்துவது இல்லை. வரிசெலுத்துவோரில் 82 சதவீதம் பேர் ஆண்கள். அரசு வருமானத்தில் பெரும்பகுதி மதுவிற்பனையால் கிடைக்கிறது. குடிபழக்கத்தால் ஆண்கள் இறப்பு அதிகம். ஆண்கள் குடிப்பழக்கத்தை நிறுத்தினால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். மது விற்பதை அரசு நிறுத்துமா? விலங்குகளுக்கு கூட தனி வாரியம் அமைக்கும் அரசு, ஆண்களுக்கு நல வாரியம் அமைத்து, அவர்களது பிரச்னைகள் குறித்து ஆராய வேண்டும், என்றார்.
அய்யோ...ஆண்கள்! தேசிய ஆண்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பின் கணக்கெடுப்பின் படி,
* கடந்த 12 ஆண்டுகளில் வீட்டில் நடந்த கொடுமைகளால் 1.7 லட்சம் மணமான ஆண்கள் தற்கொலை செய்துள்ளனர்.
* 2001 - 2005க்கு இடையே 13 லட்சம் ஆண்கள், வேலையை இழந்து உள்ளனர்.
* மணமான மூன்று ஆண்டுகளுக்குள் 98 சதவீத ஆண்கள், சித்திரவதைக்கு ஆளாகின்றனர்.
ஆண்கள் தற்கொலை அதிகம் ஏன்? இந்தியாவில் பெண்களைவிட ஆண்களே அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆண்கள் 57 ஆயிரம் பேரும், பெண்கள் 30 ஆயிரம் பேரும் தங்கள் முடிவை தேடிக் கொள்கின்றனர்.
மதுரை மனநல நிபுணர் டாக்டர் சி.ராமசுப்ரமணியம் இதுப்பற்றி கூறியதாவது: ஆண்களே வெளியில் அதிகம் பிரச்னைகளை சந்திக்கின்றனர்.இதனால் மனச்சோர்வுக்கு ஆளாகி, தற்கொலை செய்கின்றனர். சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளும் ஆண்களிடமே அதிகம். எதிர்பார்ப்புகள் நிறைவேறாத, நிறைவேற்ற இயலாதபோது தற்கொலை நிகழும் வாய்ப்பு அதிகம். எத்தனை தான் ஆண், பெண் சமம் என்று கூறி வந்தாலும், அது இன்னமும் வரவில்லை. அது வரும்வரை இந்நிலை இருக்கவே செய்யும். பெண்களைப் போல ஆண்கள் தங்கள் உடல் நலம், ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. மது, போதை பழக்கங்களுக்கு ஆட்படுவதால், அதுவே பிரச்னைகளையும் ஏற்படுத்தி விடுகிறது. தவறான பழக்கங்களுக்கு அடிமையாகிவிடுவதும் தற்கொலைக்கு முக்கிய காரணம். இவ்வாறு கூறினார்.
முப்பது வயதில் - பெயருக்கு தலையை சீவிக்கொண்டு, போனால் போகிறது என்று "தம்மாத்தூண்டு' பவுடரை முகத்தில் தடவிக்கொண்டு, அரைகுறையாய் கண்ணாடி பார்க்கும் அலுப்பு...
நாற்பது வயதில் - "கீழே விழுந்து விடுவேன்' என மிரட்டும் முடியை, கஷ்டப்பட்டு இழுத்துப் பிடித்து, குவித்து வைத்து சீவி... பவுடர் டப்பாவை பார்த்தாலே கடுப்புடன் தூக்கி வீசி... கண்ணாடி என ஒன்று இருப்பதையே கண்டுகொள்ளாமல், வேலைக்கு செல்லும் அவசரம்...
இவை தான் பெரும்பாலும், ஆண்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்ளும் விதம். திருமணத்தின் போதும் மட்டும் ஆண்கள், தங்களை பெண்கள் கவர வேண்டும் என்பதற்காக அழகுபடுத்திக் கொள்வதில் மெனக்கெடுகின்றனர். திருமணத்திற்கு பின், தங்களுக்குள் சுய கட்டுப்பாடு விதித்துக்கொண்டு, குடும்ப பாரத்தை சுமக்க வருவாயை பெருக்குவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். சிலர் மன உளைச்சலில் சிக்கி மது, போதை, புகைப் பழக்கங்களுக்கு அடிமையாகின்றனர். இதனால் உடல் ஆரோக்கியம் பாதித்து, விரைவில் முகப் பொலிவை இழக்கின்றனர்.
வியர்வை சிந்தி உழைத்து சம்பாதித்த பணத்தை இப்படி வீணாக்குவதை தவிர்த்து, அழகுபடுத்தி, கம்பீரத்தை பொலிவாக்கினால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். செயல், எண்ணங்களில் மாறுதல் ஏற்பட்டு, வெற்றி கிட்டும். ஆண்களில் விதிவிலக்காக சிலர் மட்டும் சிகை அலங்காரத்தை மட்டும் ஆண்கள் பியூட்டி பார்லரில் செய்து கொள்கின்றனர். பெண்களுக்கு தனியாக பியூட்டி பார்லர்கள் அதிகளவில் உள்ளதைப்போல், ஆண்களுக்கு என தனியாக விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே உள்ளன.
மதுரை கே.கே.நகர் "ராயல் டச்' ஆண்கள் பியூட்டி பார்லர் உரிமையாளர் ராஜன் கூறுகிறார்: ஆண்களின் கம்பீரத்திற்கு பொலிவு தேவை. தற்போது கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி, 60 வயதிலும் அழகுபடுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர். மாதம் ஒருமுறை பியூட்டி பார்லருக்கு சென்று அழகுபடுத்தினால் புத்துணர்ச்சி உறுதி. முடிகொட்டுவதை தடுக்க பக்கவிளைவுகள் இல்லாத சித்தா, ஆயுர்வேத டானிக், "பேசியல்' செய்ய பழம், வேர்கள் கலந்த மூலிகைகளை பயன்படுத்துவது நல்லது என்றார்.
என் சோகக் கதையை கேளு தாய்குலமே! பறப்பன, ஊர்வன, நடப்பன என எல்லா உயிர்களுக்கும்(?) ஒவ்வொரு தினம் கொண்டாடப்படும் காலம் இது. அந்த வரிசையில் இன்று ஆண்கள் தினம். எல்லா விஷயத்திலும் ஆண்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்று கருத்து நிலவும் இக்காலக்கட்டத்தில், போலீசில் அதிகம் சிக்குபவர்களும் "பாவப்பட்ட' ஆண்கள்தான். மதுரை நகரின் மூன்று மகளிர் ஸ்டேஷன்களில் மாதம் 150 புகார்கள் ஆண்கள் மீது கொடுக்கப்படுகின்றன. விசாரணைக்குபின் 15 புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. பொதுவாக, பெண்கள் சிந்தும் கண்ணீரை நம்பி, சரியாக விசாரிக்காமல் ஆண்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்கிறது.
"இது உண்மைதானா' என மதுரை வரதட்சணை ஒழிப்பு பிரிவு பெண் உதவி கமிஷனர் ராஜாமணி கூறியதாவது : இருதரப்பையும் அழைத்து, எங்கள் முன் பேச செய்வோம். அப்போது ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் சொல்லும்போது, யார் மீது தவறு என்பது தெளிவாகிவிடும். குடும்ப பிரச்னையை தீர்க்கவே எங்களை தேடி வருவதால், முடிந்தளவிற்கு "கவுன்சிலிங்' செய்து சமரசம் செய்து அனுப்பி வைக்கிறோம். ஆண்மை குறைவு, கள்ளத்தொடர்பு, வரதட்சணை போன்ற பிரச்னைகளில் சமரசம் ஆகமாட்டார்கள். இதை தொடர்ந்தே ஆண்கள் மீது வழக்குப்பதிவு செய்கிறோம். பெரும்பாலும் ஆண்கள் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக தான் புகார்கள் வருகின்றன. வரதட்சணை கேட்டு மிரட்டும் புகார்கள் குறைவு என்றார்.
ஆண்களுக்கு சிறை: பெண்களின் தந்திரம்: ஆண்களுக்கு எதிராக வரதட்சணை தடுப்புச் சட்டத்தின்கீழ்தான் அதிகளவில் பொய்யாக வழக்குகள் புனையப்படுகின்றன. உண்மையில் பாதிக்கப்படுவோர் ஒருபுறமிருக்க, கணவன், மனைவிக்கிடையே உள்ள சிறிய பிரச்னைக்கும் இச்சட்டத்தை சில பெண்கள் பயன்படுத்துகின்றனர். இது குறித்து மதுரை ஐகோர்ட் கிளை வக்கீல் பி.தனசேகரன் கூறியது: சில வீடுகளில் மாமியார், மருமகள் பிரச்னையில் கணவன் மீதும், உறவினர் மீதும் வரதட்சணை வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இது விவாகரத்து வரை சென்றுவிடுகிறது. இதனால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இது ஒரு சமுதாயப் பிரச்னைக்கு வழிஏற்படுத்துகிறது. தாங்கள் நினைத்தால் கணவரை சிறைவைக்க முடியும் என கருதும் வலிமையான பின்னணியுள்ள பெண்கள் இதுபோன்று செயல்படுவதால், ஆண்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் வரதட்சணை வழக்குகளில் உறவினர்களை தேவையின்றி சேர்க்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விபரம் தற்போது அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.
அக்கறை இல்லையா ஆண்களுக்கு? பல்வேறு அம்சங்களுக்காக தேசிய, சர்வதேச தினங்கள் கடைபிடிக்கும் நிலையில் ஆண்களுக்காக தினம் கொண்டாட அவசியம் ஏன்? ஆண்களுக்கு என்ன பிரச்னை? தற்போது ஆண்கள் தங்களது உரிமை பற்றி பேசுவதற்கு தயக்கம் உள்ளது. ஆண்கள் உரிமைக்காக அகில இந்திய ஆண்கள் நல சங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 10 ஆயிரம் பேர் உறுப்பினரில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆயிரத்து 200 பேர்.
இந்த அமைப்பை சேர்ந்த சுரேஷ்ராம் கூறியதாவது: ஆண்டுக்கு 80 லட்சம் ஆண்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக கைதாகின்றனர். இதில் 85 சதவீத கைதுகள் தேவையில்லாதவை என தேசிய போலீஸ் கமிஷன் கருத்து தெரிவிக்கிறது. கைதாகும் நபர்களில் 20 சதவீதம் பேர் மட்டும் தண்டனைக்குள்ளாகின்றனர். பெண்களுக்காக பல்வேறு மருத்துவ திட்டங்களை அறிவிக்கும் அரசுகள், ஆண்கள் விஷயத்தில் அக்கறை செலுத்துவது இல்லை. வரிசெலுத்துவோரில் 82 சதவீதம் பேர் ஆண்கள். அரசு வருமானத்தில் பெரும்பகுதி மதுவிற்பனையால் கிடைக்கிறது. குடிபழக்கத்தால் ஆண்கள் இறப்பு அதிகம். ஆண்கள் குடிப்பழக்கத்தை நிறுத்தினால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். மது விற்பதை அரசு நிறுத்துமா? விலங்குகளுக்கு கூட தனி வாரியம் அமைக்கும் அரசு, ஆண்களுக்கு நல வாரியம் அமைத்து, அவர்களது பிரச்னைகள் குறித்து ஆராய வேண்டும், என்றார்.
அய்யோ...ஆண்கள்! தேசிய ஆண்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பின் கணக்கெடுப்பின் படி,
* கடந்த 12 ஆண்டுகளில் வீட்டில் நடந்த கொடுமைகளால் 1.7 லட்சம் மணமான ஆண்கள் தற்கொலை செய்துள்ளனர்.
* 2001 - 2005க்கு இடையே 13 லட்சம் ஆண்கள், வேலையை இழந்து உள்ளனர்.
* மணமான மூன்று ஆண்டுகளுக்குள் 98 சதவீத ஆண்கள், சித்திரவதைக்கு ஆளாகின்றனர்.
ஆண்கள் தற்கொலை அதிகம் ஏன்? இந்தியாவில் பெண்களைவிட ஆண்களே அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆண்கள் 57 ஆயிரம் பேரும், பெண்கள் 30 ஆயிரம் பேரும் தங்கள் முடிவை தேடிக் கொள்கின்றனர்.
![]() |
Subscribe to:
Posts (Atom)