பாலக்காடு: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு பாலக்காட்டில் கல்லூரி மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.
கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நாளை(23ம் தேதி) முதல் 27 ம்தேதி வரை நடக்கிறது. இம்மாநாட்டையொட்டி கோவை ஏ.ஜெ.கே., கல்லூரி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் பாலக்காட்டில் நேற்று நடைபெற்றது.
பாலக்காடு கோட்டை மைதானத்தில் தமிழக சுற்றுலா மற்றும் பதிவுத்துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். சிவில் ஸ்டேஷனிலிருந்து துவங்கிய ஊர்வலம் கோட்டை மைதானம், மாவட்ட மருத்துவமனை, கோர்ட் ரோடு, சுல்தான்பேட்டை சந்திப்பு, தாரைக்காடு, கல்லூரி சாலை வழியாக அரசு விக்டோரியா கல்லூரி சென்று நிறைவுபெற்றது.
கல்லூரி நிர்வாக செயலாளர் அஜித்குமார் லால்மோகன், கல்லூரி முதல்வர் பாலசுப்ரமணியம் ஆகியோர் ஊர்வலத்திற்கு தலைமை வகித்தனர். விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிகழ்ச்சிநிரல் விபரங்கள அடங்கிய துண்டு பிரசுரங்களை மாணவர்கள் பொதுமக்களுக்கு வினியோகித்தனர். கேரள மாநில தமிழ் வளர்ச்சிப்பணி இயக்க தலைவர் விக்டர் சார்லி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முனைவர்.இராம.ஞானக்குமரன் MCA.,M.Tech.,Ph.D.,MISTE., https://twitter.com/rgkumaran
Monday, June 21, 2010
செம்மொழி மாநாட்டு பணியில் 3,500 நாட்டு நலப்பணி மாணவர்
கோவை: உலக தமிழ் செம்மொழி மாநாட்டுப் பணிகளில் பாரதியார் பல்கலை நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் 3,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
பல்கலையின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கோவிந்தராஜூலு கூறியதாவது:
செம்மொழி மாநாட்டு பணிகளில் பாரதியார் பல்கலை மற்றும் பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளை சேர்ந்த 3,500 நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அனைவருக்கும் பல்வேறு குழுக்களில் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், முதல் நாள் கூட்டத்தை ஒழுங்கும் படுத்தும் பணியில் மட்டும் அனைவரும் ஈடுபடுத்தப்படுவர்.
காவல் துறை சார்பில் இவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் 150 பேரும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தவிர, பொது அரங்கத்தில் கூட்டத்தை ஒழுங்குப்படுத்துவது, வழிகாட்டுவது உள்ளிட்ட பணிகளில் 1000 மாணவர்களும் மாணவர் ஆர்வலர்களும் பங்கேற்பர்.
உணவு வழங்கும் இடத்தில் உணவு வழங்குவது, கூட்டத்தை கட்டுப்படுத்துவது, டோக்கன் வழங்குவது உள்ளிட்ட பணிகளில் 1000 மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவர். எந்த நேரமும் எந்த பணியையும் மேற்கொள்ள மாநாட்டு கட்டுப்பாட்டு அறையில் 500 மாணவர்கள் தயார் நிலையில் இருப்பர். மாநாட்டின் நிறைவு நாளில் அதிக கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்நாளில் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தவும் வழிகாட்டவும், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் அனைவரும் வெவ்வேறு இடங்களில் பணியமர்த்தப்படுவர். வெளிநாட்டில் இருந்து மாநாட்டில் பங்கேற்க வரும் வி.ஐ.பி., விருந்தினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கல்லூரி ஆசிரியர் உதவியாளராக நியமிக்கப்படுகிறார்.
அனைத்து மாணவர்களுக்கும் செம்மொழி மாநாட்டு முத்திரை மற்றும் குழுவின் பெயர் அச்சிட்ட பனியன் வழங்கப்படும். கூட்டத்தின் நடுவே தனியாக அடையாளம் காண வசதியாக வெள்ளை, நீல நிறங்களில் பனியன் தயாரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, கோவிந்தராஜூலு தெரிவித்தார்.
பல்கலையின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கோவிந்தராஜூலு கூறியதாவது:
செம்மொழி மாநாட்டு பணிகளில் பாரதியார் பல்கலை மற்றும் பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளை சேர்ந்த 3,500 நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அனைவருக்கும் பல்வேறு குழுக்களில் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், முதல் நாள் கூட்டத்தை ஒழுங்கும் படுத்தும் பணியில் மட்டும் அனைவரும் ஈடுபடுத்தப்படுவர்.
காவல் துறை சார்பில் இவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் 150 பேரும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தவிர, பொது அரங்கத்தில் கூட்டத்தை ஒழுங்குப்படுத்துவது, வழிகாட்டுவது உள்ளிட்ட பணிகளில் 1000 மாணவர்களும் மாணவர் ஆர்வலர்களும் பங்கேற்பர்.
உணவு வழங்கும் இடத்தில் உணவு வழங்குவது, கூட்டத்தை கட்டுப்படுத்துவது, டோக்கன் வழங்குவது உள்ளிட்ட பணிகளில் 1000 மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவர். எந்த நேரமும் எந்த பணியையும் மேற்கொள்ள மாநாட்டு கட்டுப்பாட்டு அறையில் 500 மாணவர்கள் தயார் நிலையில் இருப்பர். மாநாட்டின் நிறைவு நாளில் அதிக கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்நாளில் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தவும் வழிகாட்டவும், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் அனைவரும் வெவ்வேறு இடங்களில் பணியமர்த்தப்படுவர். வெளிநாட்டில் இருந்து மாநாட்டில் பங்கேற்க வரும் வி.ஐ.பி., விருந்தினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கல்லூரி ஆசிரியர் உதவியாளராக நியமிக்கப்படுகிறார்.
அனைத்து மாணவர்களுக்கும் செம்மொழி மாநாட்டு முத்திரை மற்றும் குழுவின் பெயர் அச்சிட்ட பனியன் வழங்கப்படும். கூட்டத்தின் நடுவே தனியாக அடையாளம் காண வசதியாக வெள்ளை, நீல நிறங்களில் பனியன் தயாரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, கோவிந்தராஜூலு தெரிவித்தார்.
நாளை துவங்குகிறது உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு
நாளை துவங்குகிறது உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு :விழாக்கோலம் பூண்டது கோவை
ஜூன் 22,2010,00:32
உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு, நாளை காலை 10.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்குகிறது. துணைமுதல்வர் ஸ்டாலின், வரவேற்புரை நிகழ்த்துகிறார். மாநாட்டுச் சிறப்பு மலரை, கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா வெளியிடுகிறார். அதன் பின், நிதியமைச்சர் அன்பழகன் பேசுகிறார். ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலாவுக்கு, "கருணாநிதி செம்மொழி தமிழ் விருது' வழங்குகிறார். பேராசிரியர் அஸ்கோ பார்போலா, விருது ஏற்புரை நிகழ்த்தியபின், அமெரிக்க பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், முனைவர் வ.செ.குழந்தைசாமி, இலங்கை பேராசிரியர் சிவத்தம்பி ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர். முதல்வர் கருணாநிதி, தலைமையுரையாற்றுகிறார். கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா சிறப்புரை நிகழ்த்திய பின், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பேசுகிறார். மாலை 4.00 மணிக்கு, "இனியவை நாற்பது' என்ற தலைப்பில் தமிழ் இலக்கியம், கலை, வரலாற்றை நினைவூட்டும் வகையில் 40 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு வ.உ.சி., பூங்கா மைதானத்தில் துவங்கி, மாநாடு வளாகம் வரை நடக்கிறது.
வரும் 27ம் தேதி வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் நடக்கும் இம்மாநாட்டின் நிகழ்வுகள், இரு விதமாக வகைபடுத்தப்பட்டுள்ளன. மாநாடு பொதுநிகழ்வுகளில் மக்கள் பங்கேற்க ஏதுவாக மிக பிரம்மாண்டமான மாநாடு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்குதான் மாநாடு துவக்க விழா, நாளை காலையில் நடக்கிறது. மாலை 4.00 மணிக்கு, "இனியவை நாற்பது' என்ற தலைப்பில் 40 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடக்கிறது. நாளை மறுதினம் கவியரங்கம், கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம் நடக்கின்றன. வரும் 25ம் தேதி கவியரங்கம், பட்டிமன்றம், இசை நிகழ்ச்சி, முதல்வர் கருணாநிதி தலைமையில் சிறப்பு கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
தொடர்ந்து, 26ம் தேதி கவியரங்கம், கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம் நடக்கின்றன. மாநாடு நிறைவு நாளான 27ம் தேதி நடக்கும் நிகழ்வில், முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், பிரணாப்முகர்ஜி பங்கேற்கின்றனர். மேற்கண்ட அனைத்து இந்நிகழ்வுகளிலும் பொதுமக்கள் பங்கேற்கலாம். அதே வேளையில், ஆய்வரங்கம், முகப்பரங்க பொழிவுகள், கலந்தாய்வரங்கம், கலந்துரையரங்கம், அமர்வரங்கம் மற்றும் சிறப்பு பொழிவரங்கம் நடக்கும் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்துக்குள், பங்கேற்பாளர்களை மட்டுமே அனுமதிக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாநாட்டில் பங்கேற்க, முதல்வர் கருணாநிதி நேற்று காலை விமானத்தில் கோவை வந்தார். முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்களிடம் விவாதித்த முதல்வர், போலீஸ் பாதுகாப்பு நடவடிக்கை விபரங்களையும் உயரதிகாரிகளிடம் கேட்டறிந்தார். முதல்வர், வரும் 27ம் தேதி வரை கோவையில் முகாமிட்டு மாநாடு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். ஜனாதிபதி பிரதிபா பாட்டில், இன்று இரவு 7.50 மணிக்கு டில்லியில் இருந்து விமானப்படை விமானத்தில் கோவை வருகிறார். ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி, நாளை காலையில் நடக்கவுள்ள மாநாடு துவக்க விழாவில் பங்கேற்கிறார்; மாலையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பை பார்வையிடுகிறார்.
முக்கிய தலைவர்களின் வருகை மற்றும் மாநாடு முன்னிட்டு கோவை நகரில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை டி.ஜி.பி., லத்திகாசரண், சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க நேற்று முன் தினம் இரவு முதலே முக்கிய சாலைகளில் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். "கண்காணிப்பு பணியை தீவிரமாக கையாளும் அதே நேரத்தில், மக்களை எவ்வித கெடுபிடிக்கும் உள்ளாக்க வேண்டாம்' என, போலீசாருக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது.
மாநாட்டில் பங்கேற்க வரும் மக்கள் கைப்பை, சூட்கேஸ் உள்ளிட்ட எவ்விதமான பொருட்களையும் எடுத்துவர வேண்டாம்; அவ்வாறு, பொருட்களுடன் வந்தால் போலீசாரின் சோதனை நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என, போலீசார் தெரிவித்துள்ளனர். மாநாடு வளாகத்தில் வெடிபொருள் ஊடுருவலை தடுக்க "டோர் பிரேம் மெட்டல் டிடக்டர்' சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் அனைவருக்கும் போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மாநாடு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவுக்கூடங்களை நேற்று திறந்து வைத்த துணைமுதல்வர் ஸ்டாலின், மக்களுக்கு தரமான உணவு வகைகளை வழங்குமாறு பொறுப்பாளர்களை அறிவுறுத்தினார். உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு முன்னேற்பாடுகளால் கோவை மாநகரமே களைகட்டியுள்ளது; மாநாட்டில் பங்கேற்க மக்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
கோவை - அவிநாசி சாலையில் நாளை மாலை 4.00 மணிக்கு, "இனியவை நாற்பது' அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடக்கிறது. இதையொட்டி, நேற்று முன் தினம் இரவே, அணிவகுப்பு ஒத்திகை நடந்தது. தமிழர்களின் கலை, இலக்கியம், வரலாற்றை நினைவு கூறும் காட்சிகளுடன் கூடிய இந்த அணிவகுப்பை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர். நேற்று காலை முதலே மக்கள் கூட்டம், கூட்டமாகச் சென்று, உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு கொடிசியா வளாக அலங்கார வேலைப்பாடுகளை ஆர்வமுடன் பார்வையிட்டு வியந்தனர். நகரச் சாலைகளில் வண்ண ஓவியங்கள் பளிச்சிடுவதை சிறுவர், சிறுமியர் குதூகலத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
கோவை வந்தார் முதல்வர் கருணாநிதி
செம்மொழி மாநாடு : கோவை வந்தார் முதல்வர் கருணாநிதி : தாரை, தப்பட்டை முழங்க வரவேற்பு
விமான நிலையத்தில் இருந்து தங்கும் ரெசிடன்சி ஓட்டலுக்கு சென்ற போது வீதியின் இரு வழிகளிலும், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் கையசைத்து வரவேற்றனர். இவரது வருகையை முன்னிட்டு அவிநாசி சாலையில் ஆங்காங்கே தாரை, தப்பட்டை வாத்தியங்கள் முழங்கின. நேற்று மதியம் 12. 30 மணியளவில் விமானம் மூலம் கோவை வந்தார். இவருடன் அமைச்சர்கள், ஆற்காடு வீராச்சாமி, பொன்முடி, தலைமைச்செயலர் ஸ்ரீபதி ஆகியோர் உடன் வந்தனர். துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் வரவேற்றனர்.
ஒலி வடிவில் திருக்குறள்
ஒலி வடிவில் திருக்குறள்
ஜூன் 20,2010,17:42
உலக தமிழ் செம்மொழி மாநாட்டை சிறப்பிக்கும் விதமாக எல்லோரும் வாங்கும் விலையில் விற்கப்படும். தங்கள் சி.டி. மற்றும் டி.வி.டி ப்ளேயர் (எம்.பி.3
உடன்), கணினி, கார், ஐ-போட், மொபைல் போன் ஆகியவற்றில் கேட்கலாம் .
தொடர்பிற்கு :
யுனிவர்சல் இ பப்ளிசர்ஸ்
+91 96291 88882
contactus@universalepublishers.com
www.universalepublishers.com
Sunday, June 20, 2010
புதிய எம்.பி. VS NEW MP
புதிய எம்.பி.,க்களில் குபேரர் மல்லையா : 38 பேர் சொத்து மதிப்பு ரூ.1,285 கோடி
பதிவு செய்த நாள் : ஜூன் 20,2010,23:26 IST
புதுடில்லி : சமீபத்தில் ராஜ்ய சபா எம்.பி.,யாக தேர்வாகியுள்ளவர்களில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு 615 கோடி ரூபாய் சொத்து உள்ளது. தற்போது தேர்வாகியுள்ள ராஜ்ய சபா எம்.பி.,க்களின் மொத்த சொத்து மதிப்பு ஆயிரத்து 285 கோடி ரூபாய் என தெரிய வந்துள்ளது.
ராஜ்ய சபாவுக்கு 50க்கும் அதிகமான உறுப்பினர்கள் தற்போது தேர்வாகியுள்ளனர். இவர்களின் 38 எம்.பி.,க்களின் சொத்து மதிப்பை ஜனநாயக தேர்தல் சீர்திருத்த தேசிய கூட்டமைப்பு என்ற தொண்டு அமைப்பு சேகரித்து வெளியிட்டுள்ளது. ராஜ்யசபாவுக்கு தற்போது தேர்வாகியுள்ள எம்.பி.,க்களில் 38 பேரின் மொத்த சொத்து மதிப்பு 1,285 கோடி ரூபாய்க்கும் அதிகம் என இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.இதில், தமிழக எம்.பி.,க்கள் குறித்த தகவலை இந்த அமைப்பு இதில் சேர்க்கவில்லை.ராஜ்ய சபா எம்.பி.,க்களில் அதிக சொத்து மதிப்பு உடையவர், "கிங் பிஷர்' விமான நிறுவன அதிபரான விஜய் மல்லையா. இவருடைய சொத்து மதிப்பு 650 கோடி ரூபாய், என குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தடவை தேர்வானவர்களில் குபேரராக முதலிடத்தில் இருக்கிறார்.
இவருக்கு அடுத்தபடியாக தெலுங்கு தேசம் கட்சி எம்.பி., சத்திய நாராயண சவுத்ரி. இவருக்கு 190 கோடி ரூபாய்க்கு சொத்து உள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி., கன்வர் தீப்புக்கு 82 கோடி ரூபாய் சொத்து உள்ளது.மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேர்வாகியுள்ள அனில் தவே தான் மிகக்குறைந்த சொத்துள்ள எம்.பி.,யாக கருதப்படுகிறார்.இவர், தனக்கு இரண்டு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அளவுக்கு தான் சொத்து உள்ளதாக கணக்கு காட்டியுள்ளார். ராஷ்டிரிய ஜனதா தள எம்.பி., ராம் க்ருபால் யாதவ் 27 லட்சத்துக்கு சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பிரபல வக்கீலான ராம் ஜெத்மலானி, ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேர்வாகியுள்ளார். இவரது சொத்து மதிப்பு 29.60 கோடி ரூபாய். மத்திய அமைச்சர் அம்பிகா சோனி, பஞ்சாப் மாநிலத்திலிருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இவரது சொத்து மதிப்பு 17 கோடி ரூபாய். மூத்த காங்கிரஸ் தலைவர் ஆஸ்கார் பெர்னாண்டசுக்கு 15 கோடி ரூபாய்க்கு சொத்து உள்ளது.பாரதிய ஜனதா தலைவர் வெங்கையா நாயுடு, கர்நாடகாவிலிருந்து தேர்வாகியுள்ளார். இவருக்கு ஏழு கோடியே 72 லட்ச ரூபாய் அளவுக்கு சொத்து உள்ளது.
பீகாரிலிருந்து தேர்வாகியுள்ள பா.ஜ.,வின் ராஜிவ் பிரதாப் ரூடிக்கு 4.40 கோடி ரூபாய்க்கு சொத்து உள்ளது. உத்தர பிரதேசத்திலிருந்து தேர்வாகியுள்ள பா.ஜ., செயலர் முக்தார் அப்பாஸ் நக்விக்கு இரண்டு கோடியே 61 லட்ச ரூபாய்க்கு சொத்து உள்ளது.சத்திஸ்கர் மாநிலத்திலிருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள மோஷினா கித்வாய்க்கு இரண்டு கோடியே 20 லட்ச ரூபாய் சொத்து உள்ளது. லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம்விலாஸ் பஸ்வானுக்கு ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய்க்கு சொத்து உள்ளதாம்.ஆந்திராவிலிருந்து தேர்வாகியுள்ள மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் 61 லட்ச ரூபாய் சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Tuesday, June 15, 2010
கலைஞர் பிறந்த கதை...
கலைஞர் பிறந்த கதை...
திருவாரூரிலிருந்து பத்து கி. மீ. தூரத்திலிருக்கிறது அந்த ஊர்.திருக்குவளை. திருவாரூரில் இருந்து கச்சனம் என்கிற ஊர் வரைக்கும் தான் பஸ் வசதி. இப்போதிருப்பது போல் அப்போ தெல்லாம் மினி பஸ் என்ன, மாட்டு வண்டி கூட கிடையாது. நடராஜா சர்வீஸ் தான்.கச்சனத்தில் இறங்கி காலரா நடக்க ஆரம்பித்தால் அரை மணி நேரத்துக்குள் திருகுவளைக்கு வந்துவிடலாம்.
முனீஸ்வரன் கோயில் போகும் வழியில் அங்காளம்மன் தெருவில் நெருக்கி அடித்தாற்போல் இருக்கும் நாலைந்து வீடுகள்.அதில் ஒரு விடுதான் கருணாநிதியின் வீடு. இப்போது அந்த வீடு திருக்குவளை பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியாக இருக்கிறது இந்தப்பள்ளிக் கூடம் தான் கருணாநிதியின் வீடு. சுமாரான குடுபம்தான். முத்துவேலருக்கு மூன்றாவதாகப் பிறந்தவர் கருணாநிதி.
திருக்குவளையில் முத்து வேலரைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இசை வேளாளர் குடுபத்தைச் சேர்ந்த இவர், திருக்குவளையின் அதிகாரபூர்வமற்ற டாக்டர்.லேசான தலைவலியாக இருந்தாலும் சரி, பாம்புக்கடியாக இருந்தாலும் சரி. இவரிடம்தான் வைத்தியம் பார்க்க வேண்டும். எந்த வியாதியாக இருந்தாலும் மருந்து என்ற பெயரில் இவர் தரும் வஸ்து, விபூதி மட்டுமே. அதையும் பய பக்க்தியோடு வரிசையில் நின்று வாங்கிக்கொண்டு போவர்கள். இங்கே பீஸ் கொடுக்காவிட்டாலும் ட்ரீட்மெண்ட் உண்டு. சிக்கலான வியாதியாக இருந்தால் இடும்பன் சாமிக்குப் பூஜை போடச் சொல்வார்.கொஞ்சம் காஸ்ட்லிதான்.ஒரு கள்ளுப் புட்டி, நாலு பீடி தவிர,கோழியைப் பலி கொடுக்க வேண்டியிருக்கும்.
சின்ன வயதிலேயே முத்து வேலருக்குக் கல்யாணமாகி விட்டது. காதல் கல்யாணம்தான். குஞ்சம்மாள் என்ற குத்துவிளக்கு கொஞ்ச நாளைக்கு மட்டுமே எரிந்தது. கல்யாணம் முடிந்து சில வருஷ்ங்களிலேயே குஞ்சம்மாள் உயிரிழந்தார். அடுத்ததாக முத்துவேலர் வேதம்மாளை கல்யாணம் செய்து கொண்டார். அந்த வாழ்க்கையும் ரொம்ப நாள் நீடிக்கவில்லை மூன்றாவதாக
அவர் திருமணம் செய்து கொண்டார் அவர் தான் அஞ்சுகம் அம்மாள்.
குடும்ப வாழ்கை என்னவோ சந்தோஷமாகவே போய்க் கொண்டு ருந்தது. முத்து வேலருக்குத்தான் குழந்தையில்லாத குறை நெருடலாக இருந்தது ஏற்கனவே இரண்டு முறை மனைவியை இழந்த சோகம் வேறு அவரிடம் மிச்சமிருந்து, குழந்தை வேண்டி ஏறி இறங்காத கோவில் இல்லை. அதற்குப் பரிசாகக் கிடைத்தவை, இரண்டு பெண் குழந்தைகள் வாரிசு இல்லையே என்று வருத்தத்தில் இருந்த முத்துவேலருக்கு ஆறுதலாக இருந்தாலும் இதில் மனநிறைவு இல்லை, இரண்டு பெண் குழந்தைகளுக்கும் பெரிய நாயகத்தம்மாள், சண்முகம் சுந்தரம்மாள் என்று பெயர் வைத்தார்கள்.
முத்துவேலரின் கவலை தீரும் நாள் வந்தது 1924-ம் வருஷம் ஜூன் மாதம் முன்றாம் நாள் கருணாநிதி பிறந்தார். முத்துவேலர் வைத்த பெயர் தட்சிணா மூர்த்தி.
இன்று 87 வது பிறந்தநாள் காணும் அய்யா கலைஞர் திரு. மு. கருணாநிதி அவர்களை வாழ்த்த எனக்கு வயது இல்லை வணங்குகிறேன்.
Subscribe to:
Posts (Atom)