Thursday, July 8, 2010

Help Line

Dear All,



I received a Wonderful e-mail from my friend..I would like to share this to you all....



1. If you see children Begging anywhere in TAMIL NADU please contact

"RED SOCIETY"

9940217816. They will help that children for their studies.



2. There is a Website:

www.friendstosupport.org

Where you can search for any BLOOD GROUP, you will get thousand's of

donor address.



3. Engineering Students can register in www.campuscouncil.com to

attend Off Campus for 40 Companies.



4. Free Education and Free hostel for Handicapped children..!

Contact:- 9842062501 & 9894067506



5. If anyone met with fire accident or people born with problems

in their ear, nose and mouth can get free PLASTIC SURGERY done by

Kodaikanal PASAM Hospital. >From 23rd March to 4th April by German

Doctors. Everything is free. Contact : 045420-240668,245732

"Helping Hands are Better than Praying Lips"





6. If you find any important documents like Driving license, Ration

card, Passport, Bank Pass Book, etc., Missed by someone, simply put

them into nearby any Post Boxes. They will automatically reach the

owner and Fine will be collected from them.



7. By the next 10 months, our earth will become 4 degrees hotter than what it is

now. Our Himalayan glaciers are melting at rapid rate. So all of you

lend your hands to fight GLOBAL WARMING.



-Plant more Trees.

-Don't waste Water & Electricity.

-Don't use or burn Plastics



8. It costs 38 Trillion dollars to create OXYGEN for 6 months for all

Human beings on earth.

"TREES DO IT FOR FREE"



"Respect them and Save them"



9.Special phone number for Eye bank and Eye donation 04428281919 and

04428271616 (Sankara Nethralaya Eye Bank)



For More information about how to donate eyes plz visit these sites. . .



http://www.kannoli.com/eyebank.html



http://ruraleye.org/



10. Heart Surgery free of cost for children (0-10 yr) Sri Valli Baba

Institute Banglore. Contact : 9916737471



11. Please CHECK WASTAGE OF food

If you have a function/party at your home in India and food gets

wasted, don't hesitate to call 1098 (only in India ) - Its not a Joke

- Child helpline. They will come and collect the food .

Please circulate this message which can help feed many children.

AND LETS TRY TO HELP INDIA BE A BETTER PLACE TO LIVE IN.

aangilam site

Monday, July 5, 2010

there is no interrupt for tamilnadu : bandh


G‡ŸeLypL· SP†‡V ˜µ AÛP“ ÚTÖWÖyP•
TÍ, ÙW›¥L· Kz] - LÛPL· ‡\‹‰ C£‹R]
R–ZL†‡¥ G‹R TÖ‡“• C¥ÛX
U½V¦¥ D|TyP 2,200 ÚTŸ ÛLRÖf «|RÛX


G‡ŸeLypL· A½«†‰ C£‹R ˜µ AÛPTÖ¥ R–ZL†‡¥ G‹R TÖ‡“• H¼TP«¥ÛX. TÍ, ÙW›¥L· YZeL• ÚTÖX Kz]. LÛPL· ‡\‹‰ C£‹R]. U½V¦¥ D|TyP 2,200 ÚTŸ ÛLRÖf «|RÛX ÙNšVTyP]Ÿ.

ÙNÁÛ], ^ØÛX.6-

ÙTyÚWÖ¥, {N¥ «ÛX EVŸÛY Lz†‰ TÖWˆV ^]RÖ, CP‰NÖ¡L· E·TP T¥ÚY¿ G‡ŸeLypL· ÚS¼¿ C‹‡VÖ ˜µY‰• ˜µ AÛP“ ÚTÖWÖyP†ÛR SP†‡].

R–²SÖyz¥ A.‡.˜.L. E·TP 7 LypL· ˜µ AÛP“ ÚTÖWÖyP• A½«†‰ C£‹R].

R–ZL†‡¥ TÖ‡“ C¥ÛX

AfX C‹‡V A[«¥ TÖWˆV ^]RÖ U¼¿• CP‰NÖ¡L· Byp SPeh• LŸSÖPL•, ÚU¼h YjLÖ[•, ÚLW[Ö ÚTÖÁ\ UÖŒXjL¸¥ ˜µ AÛP“ H\ehÛ\V ˜µ A[«¥ SP‹R‰. UeL¸Á AÁ\ÖP YÖ²eÛL ÍR•‘†R‰.

R–ZL†ÛR ÙTÖ¿†R YÛW ˜µAÛPTÖ¥ G‹R TÖ‡“• H¼TP«¥ÛX. ÙNÁÛ] E·TP

UÖŒX†‡Á AÛ]†‰ Th‡L¸¨• TÍ, ÙW›¥L·, ByÚPÖeL· Kz]. LÛPL· ‡\‹‰ C£‹R]. AWr A¨YXLjL·, YjfL· GÚTÖ‰• ÚTÖX ÙNV¥TyP].

SÖLŸÚLÖ«¥, ‡|eL¥, ‡£YQÖUÛX UÖYyPjL¸¥ L¥®op¥ 15 AWr TÍL· ÚNR• AÛP‹R]. U¼\Tz AN•TÖ«R N•TYjL· G‰°• SÛPÙT\«¥ÛX.

TÖWˆV ^]RÖ U¼¿• CP‰NÖ¡L· NÖŸ‘¥ R†RÂVÖL U½V¥ ÚTÖWÖyPjL· SP†RTyP]. U½V¦¥ D|TyPYŸL· ÛLRÖf ‘Á]Ÿ «|RÛX ÙNšVTyP]Ÿ.

ÙNÁÛ]

ÙNÁÛ]›¥ ˜µ AÛP“ ÚTÖWÖyP• GÁTR¼LÖ] A½h½ÚV ÙR¡VÖR A[°eh CV¥TÖ] ŒÛX LÖQTyP‰. TÍ, ÙW›¥L¸¥ iyP• ŒW•‘ Y³‹R‰. LÛPL¸¥ UeL· iyP• YZeL• ÚTÖX LÖQTyP‰.

B]Ö¥ ÙY¸UÖŒXjL¸¥ ˜µ AÛP“ ÚTÖWÖyP• LÖWQUÖL ÙNÁÛ]›¥ C£‹‰ “\T|• «UÖ]jL¸¥ iyP• A‡L• C¥ÛX.

ÙNÁÛ] —]•TÖeL• «UÖ] ŒÛXV†‡¥ C£‹‰ LÖÛX 8-30 U‚eh•, LÖÛX 10-50 U‚eh•, ÙLÖ¥L†RÖ ÙN¥X ÚYzV «UÖ]jLº•, LÖÛX 8-25 U‚eh•, LÖÛX 10-30 U‚eh• ÙTjL»Ÿ ÙN¥X ÚYzV «UÖ]jLº•, TL¥ 1 U‚eh ÙLÖopeh ÙN¥X ÚYzV «UÖ]˜• ÚTÖ‡V TV‚L· C¥XÖRRÖ¥ W†‰ ÙNšVTyP].

˜µAÛP“ ÚTÖWÖyP• ÙRÖPŸTÖL R–ZL AWr ÚS¼¿ ÙY¸›yP ÙNš‡›¥ i\Ty| C£TRÖY‰:-

YÁ˜Û\ C¥ÛX

ÙTyÚWÖ¦V ÙTÖ£yL¸Á «ÛX EVŸÛY Lz†‰•, ARÛ] ‡£•T ÙT\ÚY|• GÁ¿ Y¦¿†‡• ‡jLyfZÛU (ÚS¼¿) LÖÛX 6.00 U‚ ˜R¥ UÖÛX 6.00 U‚ YÛW ÙTÖ‰ ÚYÛX Œ¿†R†‰eh pX AWpV¥ LypL· AÛZ“ «|†‡£‹R].

C‹R ÙTÖ‰ÚYÛX Œ¿†R†‡ÁÚTÖ‰, G‹R«RUÖ] YÁ˜Û\• U¼¿• AN•TÖ«R˜• H¼TPÖU¥ NyP• U¼¿• Jµjh TWÖU¡eLTyP‰. UeLºeh ÚRÛYVÖ] A†‡VÖYpV ÙTÖ£yL[Ö] TÖ¥, hzŸ, –ÁNÖW•, U£†‰Y YN‡ BfVÛY Rjh RÛP›Á½ YZjLTyP]. ÙTyÚWÖ¥ «¼TÛ] ŒÛXVjL· YZeL•ÚTÖ¥ ÙNV¥TyP]. RÛXÛUoÙNVXL†‡¥ 99 NR®R T‚VÖ[ŸL· T‚eh Y‹‡£‹R]Ÿ. UÖŒX†‡¨·[ CRW U†‡V, UÖŒX AWr A¨YXLjL· U¼¿• YjfL· YZeL• ÚTÖ¥ CVjf].

YÖL]jLÛ[ RÛP›Á½...

–Á ŒÛXVjL·, ‰ÛQ –Á ŒÛXVjL·, AWr LyzPjL·, RLY¥ ÙRÖPŸ“ ŒÛXVjL·, TÖXjL·, GÙQš fPjhL· U¼¿• ÙW›¥ÚY ÚU•TÖXjL· BfVY¼¿eh ÚTÖ‡V TÖ‰L֐“ A¸eLTyP‰. AWr ÚT£‹‰L· ÙNÁÛ] UÖSLW†‡¨• CRW UÖYyPjL¸¨• ˜µÛUVÖL CVjf].

RÂVÖŸ ÚT£‹‰L·, q£‹‰L·, ByÚPÖeL·, C£ NeLW YÖL]jL· ÙTÖ‰YÖL Gª«R RÛP–Á½ CVjf]. BjLÖjÚL L¥®or N•TYjL[Ö¥ ÚT£‹‰L¸Á LQÖzL· ÚNRUÛP‹RÖ¨•, AWr ÚT£‹‰L· YZeL• ÚTÖ¥ CVjf].



YZeL• ÚTÖ¥ CVjf]

UÖŒX†‡¥ pX UÖYyPjL¸¥ BjLÖjÚL LÛPL·, ÙRÖ³¼iPjL· ™PTyz£‹RÖ¨•, ÙT£YÖ¡VÖ] Y‚L Œ¿Y]jL·, ÙRÖ³¼NÖÛXL· U¼¿• E¼T†‡eiPjL· YZeL• ÚTÖ¥ CVjf]. UÖŒX†‡¥ pX CPjL¸¥ ÙW›¥ U½V¥, ÚT£‹‰ U½V¥, NÖÛX U½V¥ U¼¿• BŸTÖyPjL¸¥ D|TyPYŸL· ÛL‰ ÙNšVTy| NyP• U¼¿• Jµjh ‘WopÛ] H¼TPÖU¨• UeL¸Á CV¥“ YÖ²eÛLeh TÖ‡“ C¥XÖU¨• SPYzeÛLL· E¡V ÚSW†‡¥ G|eLTyP].

ÙT£YÖ¡VÖ] UeLºeh TVÁT|• Y‚L Y[ÖLjL·, EQYLjL·, ÚRŸ LÛPL·, ÙTyzeLÛPL· RÛP›Á½ ÙNV¥TyP]. ÚS¼¿, A½«eLTyP ÚYÛX Œ¿†R†‡]Ö¥ ÙTÖ‰ UeL¸Á CV¥“ YÖ²eÛL TÖ‡eLTP«¥ÛX.

CªYÖ¿ A‡¥ ~T‡ ÙR¡«†‰·[ÖŸ.

z.È.‘. A½eÛL

˜µ AÛP“ ÙRÖPŸTÖL NyP•-Jµjh ÚTÖ§Í z.È.‘. X†‡LÖ NW ÚS¼¿ UÖÛX ÙY¸›yP A½eÛL JÁ½¥ i½›£TRÖY‰:-

UÖŒX• ˜µY‰• A†‡VÖYpV ÚNÛYL· TÖ‡eLÖRYQ˜•, ÙW›¥ U¼¿• ÚT£‹‰ E·¸yP AÛ]†‰ ÚTÖehYW†‰• CÛPï¿ C¥XÖU¥ CVjL°•, UÖŒX U¼¿• U†‡V AWr A¨YXLjL·, YjfL·, T·¸L·, Y‚L Y[ÖLjL·, AjLÖzL·, ÙRÖ³¼NÖÛXL· ˜R¦V] YZeL•ÚTÖ¥ ÙNV¥TP°•, NyP•-Jµjh TWÖU¡eLTP°• ÚRÛYVÖ] AÛ]†‰ TÖ‰L֐“ SPYzeÛLLÛ[• LÖY¥‰Û\›]Ÿ ÙNš‡£‹R]Ÿ.

CÚTÖWÖyP†‡ÁÚTÖ‰, ‡£YÖ¤Ÿ, SÖLTyz]•, RtNÖ±Ÿ, LÁÂVÖhU¡ U¼¿• pX UÖYyPjL¸¥ NÖÛX U¼¿• ÙW›¥ U½V¦¥ D|TP ˜VÁ\ 11 NyPUÁ\ E¿‘]ŸL· E·TP 2,200 ÚTŸ ÛL‰ ÙNšVTy|, ‘Á]Ÿ «|«eLTyP]Ÿ.

pX CPjL¸¥ LÛPLÛ[ AÛPeL Y¼“¿†‡ NoNW°L¸¥ D|TyPR¼LÖL°•, ÚT£‹‰L· —‰ L¼LÛ[ ®pVR¼LÖL°• 270 ÚTŸ ÛL‰ ÙNšVTy|, ‡UÁ\ LÖY¨eh EyT|†RTP E·[]Ÿ.

CV¥“ YÖ²eÛL TÖ‡‘¥ÛX

LÖY¥‰Û\›]Ÿ, UÖŒX• ˜µY‰• Rh‹R ˜ÁÙ]oN¡eÛL SPYzeÛLLÛ[ ÚU¼ÙLց|, ÚRÛYVÖ] TÖ‰L֐“ H¼TÖ|LÛ[ ÙNš‡£‹RRÖ¥, UÖŒX†‡¥ Gjh• ÙTÖ‰UeL¸Á CV¥“ YÖ²eÛL TÖ‡eLTP«¥ÛX. AÛ]†‰ A†‡VÖYpV ÙTÖ£yL¸Á ÚNÛYL· G‹R «R TÖ‡“• C¥XÖU¥ CVjf].

ÙW›¥, ÚT£‹‰ E·¸yP AÛ]†‰ YÛLVÖ] ÚTÖehYW†‰• GÚTÖ‰• ÚTÖ¥ CVjf]. AWr U¼¿• RÂVÖŸ A¨YXLjL·, AÛ]†‰ L¥« ŒÛXVjL·, ‡UÁ\jL·, YjfL·, ÙRÖ³¼NÖÛXL· U¼¿• «VÖTÖW Œ¿Y]jL· BfVÛY YZeL•ÚTÖ¥ ÙNV¥TyP]. CÚTÖWÖyP†‡ÁÚTÖ‰ Gª«R AN•TÖ«R˜• SÛPÙT\«¥ÛX.

CªYÖ¿ AYŸ A½eÛL›¥ i½·[ÖŸ.

Friday, July 2, 2010

அனைத்தும் தமிழில்; ஆண்டுக்கு ரூ.10 கோடி போதும் : அரசுக்கு, சிதம்பரம் யோசனை

அனைத்தும் தமிழில்; ஆண்டுக்கு ரூ.10 கோடி போதும் : அரசுக்கு, சிதம்பரம் யோசனை
ஜூன் 27,2010,21:02
கோவை : ""மருத்துவத்தமிழ், சட்டத்தமிழ், பொறியியல் தமிழ், புள்ளியியல் தமிழ், அறிவியல் தமிழ், பொருளாதாரத்தமிழ், கணிதத்தமிழ், கணினித்தமிழ் என, அனைத்துத் துறைகளிலும் புதிய தமிழ் நூல்கள் வெளியிடப்பட வேண்டும். ஆண்டு தோறும் 100 புதிய நூல்களை வெளியிட ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் தேவைப்படும். தமிழக அரசுக்கும், புரவலர்களும் இத்தொகை ஒன்றும் பெரிதல்ல,'' என்று, உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசினார்.

மாநாட்டின் நிறைவு விழாவுக்கு முன்னிலை வகித்து சிதம்பரம் பேசியதாவது: கடந்த 23ம் தேதி துவங்கி இன்று (நேற்று)வரை உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், தமிழ் மொழி வளர்ச்சிக்கான நூற்றுக்கான ஆய்வுகள், கருத்தரங்குகள், பட்டிமன்றங்கள், கலை இலக்கிய நாட்டிய நிகழ்வுகள் நடந்துள்ளன. தமிழ்மொழி வரலாற்றில் பல புதிய அத்தியாயங்கள் எழுதப்பட்டுள்ளன. இப்பெருமையை எண்ணிப்பார்க்கும் போது, தமிழ்மொழிக்கு அளப்பரிய தொண்டாற்றிய அறிஞர் பெருமக்களை நினைவுகூறாமல் இருக்க முடியாது. தெலுங்கு, மராட்டியம், ஆங்கிலம் என பிறமொழி ஆதிக்கத்தில் பல நூற்றாண்டுகளாக கட்டுண்டு கிடந்த தமிழை மீட்க உ.வே.சாமிநாத அய்யர், மீனாட்சிசுந்தரனார், பாவாணர், பரிதிமாற்கலைஞர், டாக்டர் வரதராசனார், சேதுப்பிள்ளை, வையாபுரி பிள்ளை, மயிலை வேங்கிடசாமி, வீரமாமுனிவர், டாக்டர் கால்டுவெல், ஜி.யூ.,போப் போன்ற அறிஞர்களுக்கு தமிழ் மொழியும், தமிழ்ச் சமுதாயமும் என்றும் கடமைப்பட்டிருக்கிறது.

"திராவிட மொழிகள் அனைத்திலும் உயர்ந்த மொழியாக நிலைபெற்று விளங்குகிறது தமிழ்' என்று 148 ஆண்டுகளுக்கு முன் தமிழறிஞர் டாக்டர் கால்வெல் எழுதிய "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற ஆராய்ச்சி நூல் குறிப்பிடுகிறது. அன்று, டாக்டர் கால்வெல் கண்ட கனவு நனவு தற்போது மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தமிழ் மொழியை செம்மொழியாக அறிவித்தது கண்டு மிகுந்த மகிழ்ச்சியில் நாம் திளைத்திருக்கிறோம். ஒரு செம்மொழியின் தகுதிகள் என்ன? 1,500 ஆண்டுகளுக்கு முந்தைய இலக்கியங்கள் அந்த மொழியில் இருக்க வேண்டும்; 1,500 ஆண்டுகளுக்கு முன்பு அந்த மொழியின் இலக்கணங்கள் தோன்றியிருக்க வேண்டும்; அந்த இலக்கியமும், இலக்கணங்களும் எந்த ஒரு பிறமொழியையும் தழுவாமல், சுயமாகவே எழுதப்பட்டிருக்க வேண்டும். மொழியியல் அறிஞர்கள் வகுத்துள்ள இந்த தகுதிகள் அனைத்தும் தமிழ் மொழிக்கு உண்டு. இந்த கூற்றை தடுப்பாரும் இல்லை; மறுப்பாரும் இல்லை.

இதனால் தான் நம்முடைய தமிழ்மொழி, செம்மொழி என்ற அங்கீகாரத்தை பெற்றது. ஒரு மொழியின் இலக்கியங்களும், இலக்கணங்களும் அந்த மொழியை பேசும் மக்களின் வாழ்க்கையையும் பிரதிபலிக்கும் தன்மைகளும் வளர்ச்சியை ஒட்டியே அமைந்திருக்கிறது. ஆதிமனிதன் எவ்வாறு தனது உணர்வுகளை வெளிப்படுத்தினான்? அவனுடைய மொழி என்ன? சைகைகள், உடல் அசைவுகள் தான் அவனுடைய மொழி. திருந்தாத பண்புகளுடன் இருந்த ஆதிமனிதனின் வாழ்க்கையில் பிற்காலத்தில் பல திருத்தங்கள் ஏற்பட்டன. மனிதன் திருந்துகிறான் என்றால், நல்ல பண்படுகிறான்; நல்ல பண்பாடுகளை பின்பற்றுகிறான், என்று பொருள். ஓர் உணர்வை ஒரே ஒலியில் வெளிப்படுத்தும் போது மொழி பிறக்கிறது. ஒரு குறிப்பைப் பதிவு செய்யும் போது மொழிக்கு வரிவடிவம் கிடைக்கிறது. வரிவடிவம் பெற்ற மொழியில் இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன. இலக்கியம் பெற்ற மொழிக்கு, இலக்கணம் வகுக்கப்படுகிறது.

ஒலி, வரிவடிவம், இலக்கியம், இலக்கணம் என்ற பண்புகளுடன் ஒரு மொழி செம்மைப்படுகிறது. ஒரு மொழி பேசும் மக்கள் செம்மை பெற்றதால், அந்த மொழியும் செம்மை பெற்றது என்றும் சொல்லலாம். ஒரு மொழி செம்மைப்படும் போது அந்த மொழியை பேசும் மக்களும் செம்மைப்படுகிறார்கள் என்றும் சொல்லலாம். திருந்திய பண்பும், சீர்த்த நாகரீகமும் அந்த மொழிக்கு மட்டுமா பொருந்தும்? அந்த மொழிக்கு சொந்தக்காரர்களுக்கும் பொருந்தும். ஆகவே தான் நான் பெருமையோடு சொல்வேன், 2,500 ஆண்டுகளுக்கு முன்னாலேயே தமிழ்ச்சமூகம் தான் பண்புகளும், நாகரீகமும் நிரம்பிய சமுதாயமாக விளங்கியிருக்க வேண்டும். அப்படி விளங்கியதால் தான், தமிழ்ச்சமூகம் 2,500 ஆண்டுகளாக செழுமை பெற்று நிலைத்திருக்கிறது. நம்முடைய காலத்தில் தமிழ் செம்மொழியாக போற்றப்படுகிறது. தமிழ் உலகமொழியாக உயர வேண்டும் என்ற ஆசை நமக்கு இருக்கிறது. நாளையும், அடுத்த நூற்றாண்டிலும் வரும் ஆயிரம் ஆண்டுகளிலும், அதற்கு பிறகும் தமிழ் செம்மொழியாக போற்றப்பட வேண்டும் என்பதே, நமது குறிக்கோள்.

ஒரு மொழிக்கு ஆதாரமே பேச்சு தான். தமிழில் பேசினால் தான், தமிழ் வாழும். வழக்கொழிந்த மொழிகள் என பல மொழிகளை அறிஞர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். லத்தீன், பாலி மொழிகள் வழக்கொழிந்தவை. கிரேக்க மொழியும் ஏறத்தாழ வழக்கொழியும் நிலைக்கு வந்தது. இப்போது, கிரேக்க நாட்டில் அம்மொழியை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால், தமிழ் வாழும் மொழி. இன்னும் தமிழ் நீடூழி வாழவேண்டும் என்றால்...தமிழரும், தமிழ்நாட்டில் வாழும் பிற மொழி பேசும் மக்களும் தமிழில் பேச வேண்டும்; அதற்காக, அவர்கள் தங்கள் தாய்மொழியில் பேசக்கூடாது என்று பொருளல்ல; ஆங்கிலம் அல்லது வேறு மொழிகளை கற்றுக்கொள்ளக்கூடாது என்று பொருளல்ல. பேசும் போது தமிழில் பேச வேண்டும். குறிப்பாக, பெற்றோர் தங்களது குழந்தைகளுடனாவது தமிழில் பேச வேண்டும்.

இந்த நேரத்தில் நான் சற்று வருத்தத்துடன் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். வட்டார வழக்கு, என்று ஒன்று இருக்கிறது. வட்டார வழக்கு மொழியிலும், நல்ல தமிழ்ச்சொற்கள் உள்ளன. அவற்றை பயன்படுத்துவதில் தவறு இல்லை. வட்டார மொழி என்பது எல்லா நாடுகளிலும் உள்ளன. ஆனால், வட்டார வழக்கு என்று வரும்போது, ஒரு மொழி சிதைக்கப்படுவதை ஏற்கமுடியாது. தமிழ்நாட்டில், குறிப்பாக நகரங்களில், இந்த போக்கை காணமுடிகிறது. தமிழ் மொழியில் கொச்சையாக பேசுவது, அருவெறுப்பாக தமிழில் இல்லாத புதிய சொற்களை உருவாக்குவது, அசிங்கமான அர்த்தங்களை சொற்களை புகுத்துவது என்பதெல்லாம் "வட்டார வழக்குமொழி' என, ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு செய்தால் வழக்கு மொழி, வழுக்குமொழியாக மாறி, பிறகு இழுக்குமொழியாக மாறிவிடுமோ என்று கவலைப்படுகிறேன்.

இலக்கியங்கள் தொடர்ந்து படைக்கப்பட்டால் தான் ஒரு மொழி, வாழும் மொழியாக இருக்கும். ஆனால், இலக்கியங்கள் மட்டுமே ஒரு மொழியின் வளர்ச்சிக்கு போதுமானது அல்ல. இலக்கியங்களோடு உறவாடும் வாய்ப்பும், வசதியும் சிலருக்கு மட்டுமே கிடைக்கின்றன; அவர்கள் அதிர்ஷ்டக்காரர்கள். அனைத்து மக்களின் வாழ்க்கைக்கும் அந்த மொழி பயன்பட்டால் தான், அம்மொழி வாழும் மொழியாக இருக்க முடியும்; லத்தீன், பாலி மொழி வரலாற்றை மீண்டும் நினைத்துப்பாருங்கள். இலக்கியத்தமிழ் ஒரு வகை. அதைப் போல் மருத்துவத்தமிழ், சட்டத்தமிழ், மேலாண்மைத் தமிழ், புள்ளியியல் தமிழ், அறிவியல் தமிழ், பொருளாதாரத் தமிழ், கணிதத்தமிழ், கணினித்தமிழ் போன்றவைகளுக்கும் ஊக்கமளித்தால் தான் பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்து ஆண்டுகளுக்கு ஓங்கி வளர்ந்த உயர் செம்மொழியாகத் தமிழ் விளங்க முடியும். அதற்கு போதிய நிதியில்லை என்பது, மிகப்பெரும் குறை. பயில்பவர்களும், பயிற்றுவிப்பர்களும் இருந்தால் தான் அத்தகைய மொழிகளை நூலாக்க முடியும். "நூல்களை எழுதி வெளியிட்டால் தானே நாங்கள் அதை படிக்க முடியும் அல்லது பாடநூலாக வைக்க முடியும்' என்று ஆசிரியர்களும், மாணவர்களும் கூறுகிறார்கள். புதிய காலத்துக்குத் தேவையான நூல்கள் தமிழில் வெளியிடப்பட வேண்டும். இந்த வரிசையில் சில பல்கலைக்கழங்கள் சில பாடநூல்களை பதிப்பித்து வெளியிடுகின்றன; இந்த முயற்சி மட்டும் போதாது. நூலாசிரியர்கள் பாடநூல்கள் மற்றும் பயிற்சி நூல்களை எழுதும் போது பாமரர்களுக்கும் பயன்தரக்கூடியதாக இருக்க வேண்டும். "நூலாசிரியர்களே, உங்கள் சன்மானத்தை நாங்கள் தருகிறோம்; பதிப்புக்கான செலவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்' என்று தமிழக முதல்வர் கொடியசைத்தால், மளமளவென புதிய நூல்கள் வெளிவரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

நூலாசிரியருக்கு ஐந்து லட்சம் ரூபாய் சன்மானம் வழங்க வேண்டும்; பதிப்பாளர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் பதிப்புச் செலவாகவும், லாபமாகவும் வழங்க வேண்டும். ஒரு நூலுக்கு 10 லட்சம் ரூபாய் தேவைப்படும். ஒவ்வொரு ஆண்டும் 100 புதிய நூல்களை வெளியிடுவதற்கு ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் தேவைப்படும். தமிழக அரசுக்கும், தமிழ் புரவலர்களுக்கும் இது பெரிய தொகை அல்ல. ஆண்டுக்கு 10 கோடி செலவழித்தால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு தமிழ் செம்மொழியாக, உலகமொழியாக ஒளிவீசும்.
இவ்வாறு, சிதம்பரம் பேசினார்.

தமிழில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை : முதல்வர் கருணாநிதி அறிவிப்பு

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வெற்றி : ஐந்து நாளில் 10 லட்சம் பேர் பங்கேற்பு
ஜூன் 27,2010,21:08
கோவை : தமிழுக்கு மத்திய அரசு செம்மொழி அங்கீகாரம் வழங்கிய பிறகு நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வெற்றி பெறுமா? உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் ஆதரவு கிடைக்குமா? என்ற கேள்விகள் மாநாடு அறிவிப்பு வெளியான நாளில் இருந்து துளைத்தெடுத்துக்கொண்டிருந்தது. ஆனால், உலகத்தமிழச் செம்மொழி மாநாட்டுக்காக கோவையில் குவிந்த தமிழர் ஆர்வலர்களின் கூட்டம் சர்ச்சைகளை தகர்த்தெரிந்து மாநாட்டை மகத்தான வெற்றி பெற வைத்துள்ளது.

கோவையில் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு அறிவிப்பு கடந்த செப்டம்பரில் வெளியானது. அக். 23ம் தேதி உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கான இலச்சினையை வெளியிட்ட முதல்வர் கருணாநிதி, ஆய்வரங்க அமைப்பு குழுக்களை அமைக்கவும் உத்தரவிட்டார். ஜனவரி- 2010ல் மாநாடு நடக்கும் என்று அறிவிப்பு வெளியானதும், மாநாடு வேலைகளை வேகப்படுத்தி நிறைவு செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்தது. உலகத் தமிழச் செம்மொழி மாநாட்டுக்கான அடிப்படை வேலைகளை செய்யக்கூட காலஅவகாசம் இல்லாததால், மாநாடு ஜூன் மாதத்திற்கு மாற்றப்பட்டது. கோவையில் பல்வேறு இடங்களை ஆய்வு செய்த பிறகு, அவிநாசி ரோட்டிலுள்ள கொடிசியா அரங்கில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டு நவ. 9ம் தேதி அறிவிக்கப்பட்டது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன், இணைய மாநாட்டையும் உலகத் தகவல் தொழில்நுட்ப மன்றத்துடன் இணைந்து நடத்த நவ. 12ம் தேதி அறிவிப்பு வெளியானது.

மாநாட்டை ஒட்டி மொத்தம் 21 குழுக்கள் அமைக்கப்பட்டது. மாநாட்டு தலைமைக்குழு, ஆலோசனைக்குழு, சிறப்பு மலர்க்குழு, ஆய்வரங்க அமைப்பு, தமிழ் இணைய மாநாடு, ஒருங்கிணைப்பு, வரவேற்பு, ஊர்வலம், பொது அரங்க நிகழ்ச்சி அமைப்பு, விருந்தோம்பல், கண்காட்சி, கலைநிகழ்ச்சி மற்றும் சுற்றுலா, தங்கும் இடவசதி, மாநாட்டு அரங்கம் அமைப்பு, மக்கள் தொடர்பு மற்றும் விளம்பரம், கோவை நகர மேம்பாடு, மருத்துவம் மற்றும் சுகாதாரம், மாநாட்டு ஏற்பாடுகள் மேற்பார்வை, போக்குவரத்து ஏற்பாடு, பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் மீட்பு பணி, ஆய்வரங்க அமைப்பு உதவி குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு குழுவுக்கும் அமைச்சர்கள் தலைமையில் அனைத்து கட்சியினர், அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். மாநாட்டுக்காக 380 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கோவை மாவட்டம் மேம்படுத்தப்பட்டது. அந்த நிதியில், கோவை நகரில் சாலை வசதிகள், தெருவிளக்கு வசதிகள் மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்படுத்தப்பட்டது. துணைமுதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் அனைவரும் கோவையில் முகாமிட்டு மாநாடு வேலைகளில் கவனம் செலுத்தினர். மாநாடு தேதி நெருக்கிக்கொண்டிருந்த நிலையில், மாநாட்டை ஒட்டி துவங்கப்பட்ட வளர்ச்சி திட்டங்களும், அடிப்படை வசதிகளும் நிறைவு செய்ய முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதிகாரிகள் இரவு பகலாக பணியாற்றி பணிகளை நிறைவு செய்தனர்.

பல தடைகளையும் தாண்டி உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு கடந்த 23ம் தேதி துவங்கியது. வாகனங்கள் நிறுத்துவதற்கு பொதுமக்கள், விஐபி, ஊடகம், விருந்தினர்களுக்கு தனித்தனியாக பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருந்தது. போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்துவதில், மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர், சுகாதார வசதிகளையும் கவனித்தனர். இதனால், மாநாட்டிற்கு ஐந்து நாட்களும் பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல வசதியாக இருந்தது. கோவையில் மாநாடு துவக்க நாளில் இரண்டு லட்சம் பேர் பங்கேற்றனர். முதல் நாளில் கட்சியினர் அழைத்து வந்த "கரைவேஷ்டி' கூட்டமாக இருக்கும்; அடுத்தடுத்த நாட்களில் தான், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக வருவோரை கணக்கிட முடியும் என்று அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் காத்திருந்தனர். எல்லோர் கருத்தையும் தகர்த்தெரியும் வகையில் கட்டுக்கடங்காத கூட்டம் மாநாட்டை ஆக்கிரமித்தது.

காலை 9.00 மணி முதல் குடும்பமாக வந்த பொதுமக்கள் பொது அரங்கத்தில் அமர்ந்து ஒவ்வொரு நிகழ்வுகளையும் ரசித்தனர். மொழி ஆய்வாளர்கள், தமிழ் அறிஞர்களுக்கு கொடிசியா உள்ளரங்கத்தில் தனியாக அரங்குகள் அமைத்து ஆய்வு கட்டுகரைகளை சமர்ப்பித்தனர். இணைய மாநாடு, தொல்பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியை பொதுமக்கள் நாள் முழுவதும் பார்த்து ரசித்தனர். தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் செவிக்கு உணவு கிடைத்ததை போன்று, மக்கள் பசியாறுவதற்கு மானிய விலையில் உணவு விற்பனை செய்யப்பட்டது. கண்காட்சியை காண பொதுமக்களிடையே ஆர்வம் அதிகமாக உள்ளதால், வரும் 4ம் தேதி வரையிலும் கண்காட்சியை நீட்டிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். செம்மொழி மாநாடு முடிந்ததும், இனியவை நாற்பது அலங்கார ஊர்வலத்தில் அணிவகுத்து ஊர்திகளை கொடிசியா வளாகத்தில் மக்களின் பார்வைக்கு நிறுத்தி வைக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதார். மாநாடு முடிந்ததும் போலீஸ் கெடுபிடிகள் இல்லாமல் பொதுமக்கள் சிற்பங்களையும், கைவினைப்பொருட்களையும், இனியவை நாற்பது அலங்கார ஊர்திகளையும் பார்த்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் பொது அரங்கத்தில் 50 ஆயிரம் பேர் அமர்வதற்கு இருக்கை வசதி செய்யப்பட்டிருந்தது. இருக்கை கிடைக்காமல் பொதுமக்கள் மாநாட்டு நிகழ்வுகளை நகர்ந்தவாறு பார்த்து ரசித்தனர். தினமும் குறைந்தபட்சம் இரண்டு லட்சம் பேர் மாநாட்டில் பங்கேற்றனர். கடந்த ஐந்து நாட்களில் 10 லட்சம் பேர் மாநாட்டில் கலந்து கொண்டு தமிழ் உணர்வுகளை பெற்றுச் சென்றுள்ளனர் என்று கூறினால் மிகையாகாது.

மாநாட்டில் நடந்தது என்ன: முதல் நாள் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் "திராவிட மொழிகளில் தொன்மையான தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் வழங்கியுள்ளது. தமிழின் பழமை, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை உலக மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ் எளிமையாக்கப்பட்டு, கணினி தமிழ் வளர வேண்டும்' என்பதை வலியுறுத்தினார். இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், "என்னால் முடிந்ததை தமிழுக்கு செய்து கொண்டுள்ளேன். தமிழுக்கு இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று தமிழ் அறிஞர்கள் உத்தரவிடுங்கள். அந்த உத்தரவை நிறைவேற்ற காத்திருக்கிறேன்' என்று அறிவித்தார். மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், "தமிழுக்கு என்னென்ன செய்ய வேண்டுமென்று அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் கருத்து கூறி வருகின்றனர். மாநாட்டு நிறைவு நாளில் அதற்கான அறிவிப்பு வெளியாகும். அது இன்னொரு "பட்ஜெட்' ஆக இருக்கும்' என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

கருத்தரங்குகளில் பேசிய தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், "தமிழ் மக்கள் உலகம் முழுவதும் வாழ்கின்றனர். வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கும், அவர்களின் வாரிசுகளுக்கும் தமிழ் சென்றடைய வேண்டும். அதற்காக தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களையும், தமிழையும் பாதுகாக்க தமிழர்கள் வாழும் நாட்டில் தமிழ்ப் பண்பாட்டு மையத்தை அமைக்க வேண்டும். இணைய தளத்தில் தமிழ் மொழிக்கான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ் அறிஞர்கள் மாநாட்டை ஆண்டுக்கு ஒருமுறை நடத்தி தமிழ் வளர்ச்சிக்கு வித்திட வேண்டும்' என்று வலியுத்தினர். ஆய்வரங்கத்தில் 198 அமர்வுகளில் 787 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியின் வரலாறு, சிறப்புகள், மொழி பெயர்ப்புகள், இணைய தளத்தில் தமிழின் வளர்ச்சிகள், தமிழ் வளர்ச்சிக்கு செய்ய வேண்டிய பணிகள் பற்றி ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தனர். செம்மொழி மாநாட்டில் தமிழனின் கலாச்சாரம், பண்பாடு, தமிழ் புராணங்களின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பு பட்டிமன்றங்கள், கலை நிகழ்ச்சிகள் தினமும் அரங்கேறின. செம்மொழி மாநாட்டிற்கு ஏராளமான தடைகள் வந்த போதும், தமிழக முதல்வர் இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்தார். ஆய்வுக்கட்டுரைகள், ஆய்வரங்கம் மூலம் தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்டு, கண்காட்சி மூலம் மக்களிடையே தமிழ் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களிடையே ஆங்கில மோகம் அதிகரித்துள்ள நிலையில் இந்த மாநாட்டால் தமிழின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதுவே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும்.

தினமலரின் பங்கு: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தினமலர் நாளிதழ் பங்கு இன்றியமையாததாக இருந்தது. மாநாட்டு நிகழ்வுகளை உடனுக்குடன் "தினமலர் இணையதளத்தில்' வெளியிட்டு உலகத்தமிழர்கள் மாநாட்டை நேரில் பார்த்த திருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் அறிஞர்கள் பேட்டி, கருத்துக்கள், கட்டுரைகள், கவியரங்கம், கருத்தரங்கம், விவாதங்களை உடனுக்குடன் தினமலர் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. மேலும், தினமலர் நாளிதழில் தினமும் சிறப்பு மலர் வெளியிட்டது. இணைய மாநாட்டில் தினமலர் இணைதள அரங்கில், மாநாட்டு நிகழ்வுகளை இலவச பிரதியாக அச்சிட்டு கண்காட்சிக்கு வந்தவர்களுக்கு வழங்கப்பட்டது. தானியங்கி இயந்திரத்தின் மூலம் தினமலர் நாளிதழ் இலவசமாக வழங்கப்பட்டது. போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. பொதுமக்களுக்காக வலைதள வசதியுடன் கணினிகள் அமைக்கப்பட்டு, இலவச பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டது.
தினமலர் இணைய தள அரங்குக்கு வந்த முதல்வர், துணை முதல்வர், மத்திய மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், வெளிநாட்டு தமிழர்கள், தமிழ் அறிஞர்களுக்கு தினமலர் நிறுவனரின் வாழ்க்கை வரலாறு அடங்கிய கடல்தாமரை புத்தகம் இலவமாக வழங்கப்பட்டது. அரங்கை பார்வையிட்ட துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் தினமலரின் தமிழ்ச் சேவையை பாராட்டினர்.

தமிழில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை : முதல்வர் கருணாநிதி அறிவிப்பு
ஜூன் 27,2010,21:17
கோவை : ""தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை வழங்கப்படும்; தமிழ் மொழி வளர்ச்சிக்காக 100 கோடி சிறப்பு நிதியம் உருவாக்கப்படும்; மத்திய ஆட்சிமொழியாக தமிழை உடனடியாக அறிவிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்,'' என செம்மொழி மாநாட்டு நிறைவு விழாவில் முதல்வர் கருணாநிதி பேசினார்.

கோவையில் கடந்த 23ம் தேதி துவங்கிய உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடுஇன்று நிறைவடைந்து. நிறைவு நாள் விழாவுக்கு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை வகித்தார்.  "நிறைவு நாள் விழாவில், தமிழுக்காக சில அறிவிப்புகள் வெளியிடப்படும்; அவை இன்னொரு பட்ஜெட் போல் இருக்கும்' என, ஏற்கனவே முதல்வர் கருணாநிதி அறிவித்து இருந்தார். அதைப்போலவே, சில அறிவிப்புகளை வெளியிட்டதுடன், தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

விழாவில், முதல்வர் கருணாநிதி பேசியதாவது: இம்மாநாட்டின் விளைவாக என்னென்ன செய்ய வேண்டும் என்பதை மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசினார். நான் பக்கத்திலே நிதி அமைச்சர் இருக்கிறார் என்ற தைரியத்தில் அவர் சொன்னதை செய்வதாக ஒப்புக் கொண்டிருக்கிறேன். முன்கூட்டிய நான் அவைகளை பேச்சோடு பேச்சாக இரண்டுநாளைக்கு முன் அறிவித்தது போன்று நிதிநிலை அறிக்கை போல் தயாரித்துள்ளேன். நிதிநிலை அறிக்கை போல என்றுதான் சொன்னேன் பயந்து விட வேண்டியது இல்லை. அதற்கான நிதி உதவியை மத்திய அரசுதான் வழங்க வேண்டும். வலதுபுறத்தில் பிரணாப்பும், இடதுபுறத்தில் சிதம்பரமும் இருக்கும் போது நிதியைப் பற்றிக் கவலைப்பட வேண்டியது இல்லை. ஐந்து நாட்களாக கோவையில் எழுச்சியுடன் நடந்த மாநாடு நிறைவு விழா காண்கிறது. ஐந்து நாட்களும் சிந்தனை, சொல், செயல் அனைத்தும் தமிழ் என்றே இருந்தது.

உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ள ஒரே இந்திய மொழி என்னும் சிறப்பு பெற்றது தமிழ் மொழி. உலகமொழியாகத் திகழும் ஆங்கில மொழியில் முதல் எழுத்து வடிவம் கி.பி.,7ம் நூற்றாண்டை சேர்ந்தது. ஜெர்மன் முதல் வடிவம் கி.பி. 8ம் நூற்றாண்டு; பிரெஞ்சு 9ம் நூற்றாண்டு; ரஷ்யாவின் பழமையான எழுத்து வடிவம் கி.பி.,10 நூற்றாண்டு; லத்தீனில் இருந்து பிறந்த இத்தாலி மொழி 10ம் நூற்றாண்டில் தான் எழுத்து வடிவம் பெற்றது. ஆனால், கி.மு. 2ம் நூற்றாண்டுக்கு முன்பே தமிழின் முதல் எழுத்து வடிவ தொல்காப்பியம் கிடைத்துள்ளது. அதுமுதல் இன்று வரை சாமானியர் முதல் ஆன்றோர் சான்றோர் வரை வாழும் மொழியாகவும்,வரலாற்று மொழியாகவும் உள்ளது. காதல், வீரம் இரண்டும் தமிழர்களின் இரு முக்கிய உணர்வுகள்.அதனை சங்கப்பாடல்கள் தெளிவாகக் காட்டுகின்றன.  "குழந்தைப் பருவத்தில் தனது தாயாருடன் மணலில் அழுத்திய விதை முளைத்து புன்னை மரமாக எனக்கு முன் தோன்றியதால்,இம்மரம் என் அக்கா ஆகும் என் அன்னை சொன்னார். அக்காள் முன் உன்னோடு காதல் மொழி பேச கூசுகிறது வேறிடம் சொல்வோம் காதலனே என்றாள், மங்கை ஒருத்தி சங்க இலக்கியத்தில். இதனை "விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி' என்ற நற்றிணைப்பாடல் கூறுகிறது. ஒரு குழந்தை இறந்தால் கூட விழுப்புண் படாமல் இறந்து விட்டதே என வருந்தி வளாõல் பிளந்து புதைத்த வீரத்தை "குழவி இறப்பினும் ஊண்தடி பிறப்பினும்' என்ற புறநானூற்று பாடல் கூறுகிறது. "பிறப்பொக்கும்' என வள்ளுவ மொழிப்படி சமதர்ம சமுதாயத்தை தமிழர்கள் பின்பற்றினர்.

கி.மு., 3ம் நூற்றாண்டிலேயே ரோமானியர்கள் தமிழர்களோடு வாணிபத்தொடர்பு கொண்டிருந்தனர். பொள்ளாச்சி, வெள்ளகோவில் உள்ளிட்ட கொங்கின் பல்வேறு பகுதிகளிலும் ரோமானிய நாணயங்கள் கிடைத்துள்ளன. கி.மு. முதல் நூற்றாண்டில் இருந்தே ரோமர்கள் கொங்குநாட்டுடன் வாணிபத்த் தொடர்புகொண்டிருந்தனர். ஜாவா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுடன் கடல்வழி வாணிபம் மேற்கொண்டுள்ளனர்.  தொன்மையால், இலக்கண இலக்கியங்கள் வாயிலாக அறநெறி, வாழ்வியல் நெறிமுறைகளைக் கொண்டுள்ளது செம்மொழியான தமிழ் மொழி. தமிழ் வளர்க்க பாடுபட்டவர்களை இந்த நேரத்தில் நினைவுர வேண்டும். ஒப்பிலக்கணம் கண்ட கால்டுவெல், போப், செம்மொழி என நிறுவிய பரிதிமாற்கலைஞர், சங்க இலக்கியங்களை ஓலைச்சுவடிகளை அச்சுவடிவம் பெறச்செய்த உ.வேச.சா., சி.வை., தாமோதரம் பிள்ளை, 20ம் நூற்றாண்டில் தனித்தமிழ் இயக்கத்தை தோற்றுவித்த மறைமலை அடிகள், திரு.வி.க., பாரதியார், பாரதிதாசன், இலங்கை தனிநாயகம் அடகள், வ.ஐ.., சுப்பிரமணியம், ஈ.வெ.ரா., அண்ணாதுரை போன்ற அனைத்து சான்றோர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். செம்மொழித் தமிழை எதிர்காலத்தில் அறிவியல் தமிழாக கட்டிக் காப்போம் என உறுதி ஏற்போம்.


செம்மொழி மாநாடு தொடர்பான கலந்தாய்வில் சிவத்தம்பி தலைமையில் நடந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையிலும், ஏற்கனவே நான் கூறியது போன்று சில அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன.

அறிவிப்புகள்:

* தமிழகத்தில் ஐந்து இடங்களில்  மரபணு பூங்கா நிறுவப்படும். அதற்கு எம்.எஸ்., சாமிநாதன் பொறுப்பாளராக இருப்பார்.
*  இலங்கை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களில் பெரும்பாலானவர்கள் மறுகுடியமர்வு செய்யப்படவில்லை. மறுகுடியமர்வு செய்யப்பட்டவர்களுக்கும் சரியான அரசியல் தீர்வு காணப்படவில்லை. சிங்கள அரசால் தரப்பட்ட உறுதிவார்த்தைகள் நிறைவேற்றப்படவில்லை என்பது வேதனை தருகிறது. தமிழர்களை மறுகுடியமர்வு செய்ய வேண்டும், அவர்களுக்கு தேவையானவற்றை செய்ய வேண்டும் என்பதற்கான முனைப்புகளை இலங்கை அரசு செய்ய வேண்டும். அதற்காக இந்திய அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இம்மாநாடு வலியுறுத்துகிறது.
* மத்தியில் தமிழ் ஆட்சிமொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து தேசிய மொழிகளையும் ஆட்சிமொழியாக அறிவிப்பதில் தாமதம் ஏற்படுமேயானால், செம்மொழியான தமிழ் மொழியை முதல்கட்டமாக உடனடியாகஅறிவிக்க வேண்டும், என மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.
* சென்னை ஐகோர்ட்டில் தமிழ் பயன்பாட்டு மொழியாக வேண்டும் என, 2006ம் ஆண்டு சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி, உயர்நீதிமன்றத்தின் பரிந்துரையும் பெற்று மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம். இதனை தாமதிக்காமல் அங்கீகரிக்க வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.
* சமஸ்கிருத ஆய்வுகளுக்கு வழங்குவது போன்று, தமிழ் ஆய்வுக்கும் தேவையான மானியத்தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும்.
* இந்தியா முழுவதும் ஒரு லட்சம் கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ்க் கல்வெட்டுகள். எனவே, இந்திய அரசு அமைக்க உள்ள இந்திய தேசிய கல்வெட்டியல் மையத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்.
* கடலால் அழிந்த பூம்புகார், குமரிக்கண்டம் பகுதியில் ஆழ்கடல் ஆராய்ச்சி செய்ய மத்திய அரசு திட்டமிட வேண்டும்.
* தமிழகத்தில் தமிழ் ஆட்சிமொழி என்பது முழுமையாக நிறைவேற்றப்பட அரசு அலுவலர்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
* தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை வழங்கப்படும்.
* தமிழில் சிறந்த மென்பொருளை உருவாக்குபவர்களுக்கு "கணியன் பூங்குன்றனார்' விருதும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசும், சான்றிதழும் வழங்கப்படும். முதல்கட்டமாக விழா மேடையில் விருது வழங்கப்படுகிறது.
* பள்ளி, கல்லூரி, பல்கலையில் தமிழ் செம்மொழி என்ற தலைப்பில் ஆய்வுகள் நடத்தப்படும்.
* பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள், சான்றோர்களால் மதுரையில் தொல்காப்பியச் செம்மொழிச் சங்கம் அமைகிறது. அதன் செயலாக்கங்கள் பின்வருமாறு அமையும்.
* குறிப்பிட்ட கால இடைவெளியில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடத்துவது.
* திராவிட மொழிகளின் கலை,பண்பாடுகளை நினைவுறுத்தும் விதமாக நிரந்தர கண்காட்சி அரங்கம் அமைப்பது.
* மொழிக்கூறுகள் தொடர்பான ஆவணக்காப்பகம் அமைப்பது.
* சிதறுண்டு கிடக்கும் தமிழ் ஆராய்ச்சிக்குழுக்களை ஒருங்கிணைப்பது.
* மொழி ஆராய்ச்சியிலும், மொழித்தொண்டிலும் ஈடுபடும் சான்றோர்களுக்கும் ஆதரவளித்து துணை புரிவது.
* உலகத்தமிழறிஞர்கள் கையேடு வெளியிடுவது
* உலகத்தமிழர்களை தொடர்பு கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்வது.
* கோவை செம்மொழி மாநாட்டின் நினைவாக காந்திபுரத்தில் ஒரு கி.மீ.,நீளத்துக்கு100 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்கப்படும்.
* தமிழின் சிறந்த படைப்புகளை இந்திய மொழிகளிலும், ஆசிய, ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்ப்பது; பிற மொழி படைப்புகளை தமிழில் மொழி பெயர்க்கப்படும்.
* அறிவியல் தமிழை மேம்படுத்த கம்ப்யூட்டர், மருத்துவம் போன்ற துறைகளில் பிறமொழி நூல்களை தமிழாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
* தமிழ் வளர்ச்சிக்கு தனியாக 100 கோடி ரூபாய் சிறப்பு நிதியம் உருவாக்கப்படும். இவற்றுக்கு மத்திய அரசும் நிதி ஒதுக்கி உதவ வேண்டும். இவ்வாறு, முதல்வர் கருணாநிதி பேசினார்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - ஒரு கண்ணோட்டம்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - ஒரு கண்ணோட்டம்
ஜூன் 22,2010,15:52
- மு.கருணாநிதி -

தமிழக முதலமைச்சராக எங்களது அறிவார்ந்த தலைவர் அண்ணா பதவி வகித்தபோது சென்னையில் இரண்டாவது உலக தமிழ் மாநாட்டினை 1968 ம் ஆண்டு நடத்தினார். மிக பிரமாண்டமாக நடத்தப்பட்ட அந்த மாநாட்டில் உலகம் மற்றும் நாடு முழுவதிலிருந்து லட்சக்கணக்கான தமிழர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
கோலாலம்பூரில் 1966ல் நடந்த முதல் உலக தமிழ் மாநாடு, பாரிஸ் நகரில் 1970ல் நடந்த மூன்றாவது மாநாடு, யாழ்ப்பாணத்தில் 1974ல் நடந்த நான்காவது மாநாடு, மதுரையில் 1981ல் நடந்த ஐந்தாவது மாநாடு, மொரிசியஸில் 1989ல் நடந்த ஏழாவது மாநாடு, தஞ்சையில் 1995 ல் நடந்த எட்டாவது மாநாட்டுடன் அண்ணா நடத்திய இரண்டாவது மாநாட்டினை ஒப்பிடும்போது மற்றவை அனைத்தும் சாதாரண அளவிலேயே அமைந்திருந்தன.
தமிழ் மொழியை செம்மொழி என்று மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அறிவிக்க வேண்டும் என்பதற்காக நாம் எடுத்துக் கொண்ட முயற்சியினால் அந்த அறிவிப்பினை பெற்றிருப்பதோடு, சென்னையில் செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனம் அமைக்கப்பட்டிருப்பதோடு நாடு முழுவதும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற தமிழ் அறிஞர்களுக்கு ஜனாதிபதியின் "குறள்பீட விருது',"தொல்காப்பியர் விருது' வழங்க வழிவகுத்துள்ளது. இந்த வெற்றியின் காரணமாக முதல் உலக தமிழ் செம்மொழி மாநாட்டினை தற்போது நடத்துவது பொருத்தமாக இருக்கும் என்று நாம் கருதியதால் கோவை மாநகரில் ஜூன் 23 முதல் 27 வரை ஐந்து நாட்கள் மாநாட்டினை சிறப்பாக நடத்த முடிவு செய்தோம்.
தமிழ்மொழிக்கு வளமான,தொன்மையான இலக்கிய, இலக்கணப் பாரம்பரியங்கள்,சொந்தமான எழுத்து வடிவம், இடைவிடாத நீண்டகால வரலாறு உள்ளன என்று தமிழ் அறிஞர்கள் 150 ஆண்டுகளுக்கும் மேலாக நிரூபித்து வந்தனர். தமிழகத்தில் குறைந்தபட்சம் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், பேசும் மொழியாக தொடர்ந்து இருந்து வந்துள்ளது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர். பிரிட்டிஷ் இந்திய நிர்வாகம் சமஸ்கிருதம், பாரசீகம், அரேபிய மொழிகளை செம்மொழிகளாக பாவித்து அம்மொழிகளை கற்கவும், மேம்படுத்தவும் சிறப்பு சலுகைகளையும், ஆதரவு அமைப்புகளையும் உருவாக்கியபோது தமிழுக்கும் செம்மொழி தகுதி அளிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை எழுப்பப்பட்டது.
அமெரிக்காவின் பெரிக்கெலியிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தமிழ்துறை பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், தமிழ் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டு அறிவிக்கப்படவேண்டுமென 2000 ஆண்டில் வாதாடினார். இது தொடர்பாக அவர் எழுதிய கட்டுரையில், ""முதலில் தமிழ்மொழிக்கு கணிசமான பழமை உண்டு. இரண்டாவதாக தோன்றி விரிந்த தமிழ் மொழிக்கு மட்டுமே சமஸ்கிருதத்திலிருந்து பெறப்படாத இந்தியாவில் தோன்றி வளர்ந்த இலக்கிய பாரம்பரியம் உண்டு. மூன்றாவதாக செம்மொழித் தமிழ் இலக்கியங்களின் தரம் சமஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன், சீனம், பாரசீகம், அரேபிய மொழிகளிலுள்ள மாபெரும் இலக்கியங்களுக்கு ஒப்ப நிற்க முடியும்'' என்று குறிப்பிட்டிருந்தார்.
திராவிட மொழிக்குடும்பத்தின் உண்மை நிலை, தமிழ்மொழியின் மிகப்பழமை ஆகியவற்றிற்கு எதிராக எழுப்பப்பட்ட சர்ச்சைகளை முறியடித்து, அனைத்து திராவிட மரபு வழக்கத்தொடர்களிலும் தமிழுக்கு மிகவும் உயர்ந்த செழுமை உண்டு என்பதை டாக்டர் ராபர்ட் கால்டுவெல் நிலைநாட்டினார். சென்னை கிறித்துவக் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றிய பரிதிமாற் கலைஞர், தமிழை செம்மொழியாக அங்கீகரிக்கவேண்டும் என்ற அறைகூவலை முதல்முதலாக எழுப்பினார். இவரது கருத்துக்கு பிரபலஅறிஞர்களான மறைமலை அடிகள், தேவநேய பாவாணர் ஆகியோர் மேலும் செழிப்பூட்டினர். சென்னை பல்கலைக்கழகம் தமிழுக்கு செம்மொழித் தகுதி அளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை 1918 ம் ஆண்டு நிறைவேற்றியது. "யுனெஸ்கோ கூரியர்'(தமிழ்) இதழின் ஆசிரியராக பணியாற்றிய மணவை முஸ்தபா 1970ம் ஆண்டுகளில் தமிழ் செம்மொழியாக வேண்டுமென்ற லட்சியத்துக்காக பாடுபட்டார்.
1996ம் ஆண்டு பொதுதேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர் தி.மு.க., அதன் திருச்சி மாநாட்டில் தமிழ் மொழியை மத்திய அரசின் அதிகாரபூர்வமான மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. சட்டசபை தேர்தலுக்கான தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையிலும் இக்கோரிக்கை சேர்க்கப்பட்டது. 1998 ம் ஆண்டு மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை கைப்பற்றியபோது அந்த அரசில் அங்கம் வகித்த தி.மு.க., தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கானோர் கைதாகினர்.
தி.மு.க.,தலைமையிலான கூட்டணி தேர்தலில் பெருவெற்றிபெற்று மத்தியில் அமைந்த ஐக்கிய முன்னணி அரசில் தி.மு.க., முக்கியமானதொரு அங்கம் வகித்ததால் தேசிய குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இக்கோரிக்கையை சேர்க்க நம்மால் முடிந்தது. 2004 ஜூன் மாதம் நடைபெற்ற முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அன்றைய ஜனாதிபதியும், தமிழ் அறிஞருமான அப்துல் கலாம், தமிழ்மொழியை செம்மொழியாக அறிவித்தது வெறும் அடையாள பூர்வமானது மட்டுமல்ல. அது இந்திய ஜனநாயகத்துக்கும், கூட்டாட்சி அரசியலுக்கும் கிடைத்த வெற்றியும் ஆகும். 2004 அக்டோபர் 24 அன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தமிழ்மொழியை செம்மொழி என்று அறிவிக்கும் அறிவிக்கையை வெளியிட்டது.இதனால் சுதந்திர இந்திய அரசினால் அறிவிக்கப்பட்ட முதல் செம்மொழி என்ற தனிச்சிறப்பை தமிழ்மொழி பெற்றது.
திருச்சியில் 2006 மார்ச் 5 ல் நடந்த தி.மு.க.,மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா முன்னிலையில் நான், எனது மட்டற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தினேன். இந்த முடிவு குறித்து 2005 நவம்பர் 8ல் அவர் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.""அன்பான திரு.கருணாநிதிஜி அவர்களே, உங்களது அக்டோபர் 28 ந் தேதியிட்ட கடிதம் கிடைக்கப்பெற்றேன். தமிழ்மொழியை செம்மொழியாக அறிவிக்க பூர்வாங்க நடவடிக்கைகள் தற்போது நிறைவுற்றுள்ளன என்பதில், நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுக்கும் சாதனை என்றாலும் கூட, உங்களுக்கும் உங்களது கட்சிக்கும் குறிப்பாக பெருமையாகும். உண்மையுள்ள, சோனியா காந்தி. இவ்வாறு கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. இது கடிதமல்ல. காலத்தால் அழிக்க முடியாத செப்பேடு என்று சோனியாவிடம் நான் தெரிவித்தேன்.
தமிழ்மொழி, செம்மொழியாக அறிவிக்கப்பட்டபின் நடத்தப்பெறும் உலகத் தமிழ்செம்மொழி மாநாட்டிற்காக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கும் இலச்சினை பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. இலச்சினையில் ஏழு குறியீடுகள், சின்னங்கள் இடம்பெறுகின்றன. ஏழு என்பது தமிழர்களுக்குரிய கணக்கீட்டு முறையில் சிறப்பான எண்ணாகும். நாட்கள் ஏழு, அகப்பொருள் திணைகள் ஏழு, புறப்பொருள் திணைகள் ஏழு, திருக்குறள் 133 அதிகாரங்கள், அறத்துப்பாலில் பாயிரவியல் தவிர 34 அதிகாரங்கள், பொருட்பாலில் 70 அதிகாரங்கள், காமத்துப்பாலில் 25 அதிகாரங்கள், இவற்றின் கூட்டுத்தொகை ஏழு எனும் எடுத்துக்காட்டுகள் ஏழின் சிறப்பை விளக்கிச் சொல்லும்.
இந்த மாநாட்டின் எடுத்துரைக் குறிப்பாக ""பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்பது அமைந்துள்ளது. ஓலைச்சுவடியில் இடம்பெற்றுள்ள எடுத்துரைக் குறிப்பு, இன்றைய உலகிற்குத் தமிழ்ச் செம்மொழி வழங்கும் கொடையாக கருதத்தக்கது. செம்மொழி மாநாட்டிற்கான மையப்பாடலை நான்(கருணாநிதி) எழுதி, ஆஸ்கார் மற்றும் கிராமி விருதுகளை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். அதன் ஒளிக்குறுந்தகடை திரைப்பட இயக்குனர் கவுதம் மேனன் உருவாக்கினார். 2010 ஜூன் 23 அன்று காலை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை தொடங்கி வைப்பார். எனது தலைமையில் நடைபெறும் தொடக்க விழாவில் தமிழக கவர்னர் சுர்ஜித் பர்னாலா மற்றும் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், டாக்டர் வா.செ.குழந்தை சாமி, டாக்டர் க.சிவத்தம்பி போன்ற அறிஞர்கள் பங்கேற்பர்.
"கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது' உலகப்புகழ் பெற்ற இந்தியவியல் அறிஞர் பின்லாந்து நாட்டைச் சார்ந்த டாக்டர் அஸ்கோ பர்போலாவிற்கு வழங்கப்படும். மாநாட்டில் பங்கேற்க 49 நாடுகளிலிருந்து 1020 பிரதிநிதிகள் பதிவு செய்துள்ளனர். அவர்கள் 55 தலைப்புகளில் பல்வேறு பொருள் குறித்து ஆய்வுகட்டுரைகள் சமர்ப்பிப்பர். பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு பொது அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு இசை, நாட்டியம் மாலை வேளைகளில் நடைபெறும். சிந்துசமவெளியில் தோண்டி எடுக்கப்பட்ட தொன்மையான பொருட்கள், சோழர்கள் மற்றும் பல்வேறு காலங்களை சார்ந்த செப்பு, கல்வெட்டுகள், சிலைகள் போன்றவை கண்காட்சியில் இடம்பெறும்.
மாநாட்டு துவக்க நாளான ஜூன் 23 அன்று அலங்கார ஊர்திகள் இடம்பெறும் பிரம்மாண்ட ஊர்வலம் நடைபெறும். தமிழ் இணைய மாநாட்டில் 15 நாடுகளிலிருந்து சுமார் 350 சிறப்பு அழைப்பாளர்கள், பேச்சாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் நிபுணர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். தமிழ் மொழியை அதன் தேவைக்கு ஏற்பவும், இதர அறிவுசார் துறைகளில் துரித வளர்ச்சியை கருத்தில் கொண்டும் இந்த மாநாடு 21 ம் நூற்றாண்டுக்கு எடுத்துச் செல்லும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
- முதல்வர் கருணாநிதி ஆங்கிலப் பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையின் சுருக்கம்.

தமிழகத்துக்கு என் இதயத்தில் தனியிடம்: பிரதிபா பாட்டீல்

முதல் பக்கம்»செய்திஎழுத்தின் அளவு:

தமிழகத்துக்கு என் இதயத்தில் தனியிடம்: பிரதிபா பாட்டீல்

ஜூன் 23,2010,14:43கருத்துகள் (140)

Share 1diggdigg



கோவை : ""தமிழ்நாட்டிற்கென்று எனது இதயத்தில் தனி இடம் உள்ளது; செம்மொழி மாநாடு மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும்,'' என்று ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நம்பிக்கை தெரிவித்தார்.







கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் லச்சினையை திறந்து, மாநாட்டை துவக்கி வைத்து அவர், பேசியதாவது: உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், தேசத்தின் பல பகுதிகளிலிருந்தும் வந்து குவிந்துள்ள தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், கவிஞர்கள் பங்கேற்றுள்ள முதலாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைத் துவக்கி வைப்பதில் பெருமை அடைகிறேன். எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழுக்கு 2004ம் ஆண்டில் செம்மொழித் தகுதி கிடைத்தது. தமிழின் தொன்மை நிலை மற்றும் செறிவால் மட்டும் இந்தத் தகுதி கிடைக்கவில்லை. மாபெரும் கலாச்சாரத்துக்கும் அடித்தளமாக இந்த மொழி இருப்பதனால்தான், செம்மொழித் தகுதி கிடைத்திருக்கிறது. செம்மொழித் தகுதி பெற்றதற்காக இத்தகைய மகத்தான மாநாட்டை நடத்தியதற்கு முதல்வர் கருணாநிதியைப் பாராட்டுகிறேன். கவிஞர், எழுத்தாளர், முதிர்ந்த அரசியல் தலைவர், முதல்வர் என பல தளங்களில் பணியாற்றும் அவர், இந்த மாநாட்டின் மையநோக்குப் பாடலையும் எழுதியுள்ளார். 19 ஆண்டுகள் முதல்வராகவும், 50 ஆண்டுகளாக சட்டமன்றத்திலும் பணியாற்றும் அவர், தன்னுடைய வேலைப்பளுவுக்கு இடையிலும் இலக்கியப் பணியை மேற்கொள்ளும் அவரது திறனைப் பாராட்டுகிறேன்.







தமிழ்நாட்டிற்கென்று எனது இதயத்தில் சிறப்பான இடம் உண்டு. ஜனாதிபதி தேர்தலுக்கான எனது பிரசாரத்தை நான் சென்னையில்தான் துவக்கினேன். தேர்தல் முடிந்தபின், புதுடில்லியிலிருந்து எனது முதல் வெளியூர் பயணம், தமிழகத்தில் நடந்த ராஜிவ் தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் உரையாற்றுவதாக இருந்தது. இந்த மாநாட்டில் பங்கேற்பது, தமிழகத்துடனான எனது உறவை மேலும் தொடர்வதற்கான வாய்ப்பாக அமையும் என்று நம்புகிறேன். உலகின் பழமையான பண்பாட்டையும், செறிவான கலாச்சாரத்தையும் கொண்டவர்கள் தமிழர்கள். தமிழ் இலக்கியங்கள், இந்தியாவின் கலை, இலக்கியம், இசை, கட்டுமான பெருமைகளை உலகிற்கு அடையாளம் காட்டுவதாக அமைந்துள்ளன. பட்டு வணிக வழி ஆரம்பிப்பதற்கு முன்பே, தமிழர்கள் முதலாம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் கடல் கடந்து சென்று, வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்தியதற்கு ஆதாரமாக, "திரை கடலோடியும் திரவியம் தேடு' என்ற முதுமொழி தமிழில் கூறப்பட்டுள்ளது.







தமிழர்களின் படைப்புத் திறனால், அவர்கள் எத் துறையில் ஈடுபட்டாலும் சாதனை படைப்பர் என்பது என் நம்பிக்கை. தமிழின் வரலாறு, நமது தேசத்தின் பெருமை. பிற மதங்களை மதிக்கும் தன்மை, தமிழ்ச் சமுதாயத்தின் ஒரு பங்காகவுள்ளது. சைவ, வைணவ தத்துவங்களின் உறைவிடமாக தமிழகம் உள்ளது. அதில் உருவான கருத்துக்களே, ஜைனம், புத்தம், இஸ்லாமியம் மற்றும் கிறித்துவ மதக்கருத்துக்களிலும் பிரதிபலிக்கின்றன. அரசியல், சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் இல்லாத மதச்சார்பற்ற சமூகத்தை உருவாக்குவதில் தமிழகம் முன்னோடியாகவுள்ளது.







சுயசார்புள்ள பொருளாதார, நிர்வாகங்களையுடைய கிராமங்களுடன் தமிழகம் இயங்கி வருகிறது. இந்த கிராமங்கள் அனைத்தும், சுய தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அளவில் அதிகாரம் பெற்று விளங்குகின்றன. சமூக வாழ்வு மற்றும் கலாச்சாரத்திலும் அவை தங்களது பங்களிப்பைச் செலுத்தி வருகின்றன. தமிழகத்தை ஆண்ட சேர, சோழ பாண்டியர்கள், மக்களின் நலனுக்காக பணியாற்றியதோடு, கலை மற்றும் கலாசாரங்களை வளர்ப்பதிலும் சிறந்து விளங்கியுள்ளனர். அவர்களால் தமிழ்க் கலாசாரம், கிழக்கிலும், மேற்கிலும் பரவி வளர்ந்துள்ளது. பல்லவர்களின் கோவில் கட்டுமானக்கலையும், சோழர்களின் வெண்கலச் சிற்பங்களும் பிரசித்தி பெற்றவை. பரத நாட்டியக் கலையும், கர்நாடக சங்கீதமும் இந்த மண்ணில்தான் பிறந்துள்ளன. இவையனைத்திலும் தமிழ் மொழிக்கு பிரதான பங்களிப்பு உள்ளது.







உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் மிகவும் பழமையானதும், ஏராளமான இலக்கிய மற்றும் இலக்கண வளத்தையும் உடைய மொழியாக தமிழ் மொழி விளங்குகிறது. தொல்காப்பியம், கி.மு.200 ஆண்டுகளில் எழுதப்பட்டுள்ளது. சங்க காலத்தில் தமிழ் மொழியில் நிறைய நூல்கள் எழுதப்பட்டுள்ளன. மனிதர்களுக்குள் சமத்துவ சமுதாயத்தை வலியுறுத்தும் வகையில், 2000 ஆண்டுகளுக்கு முன்பே சங்கத் தமிழ்ப் பாடல்களில் "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று எழுதப்பட்டுள்ளது. வாழ்வின் நன்னெறிகளை திருக்குறளில் திருவள்ளுவர் தெளிவாக விளக்கியுள்ளார். தமிழ் தெரியாததால், திருக்குறளை அது எழுதப்பட்ட மொழியிலேயே படிக்க முடியாதது குறித்து, மகாத்மா காந்தியே வருந்தியுள்ளார். அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்த காலத்திலும், சுதந்திரப்போராட்டத்துக்கு அஹிம்சை வழியில் போராடியதிலும், தமிழ்ச் சமுதாயம் சிறந்த பங்களிப்பை ஆற்றியுள்ளது.







சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் ஆகியவை, மிக அற்புதமான இலக்கியங்கள். சுப்ரமணிய பாரதி போன்ற தமிழ்க் கவிஞர்களின் பாடல்கள், மக்களிடம் தேசப்பற்றையும் சுதந்திர தாகத்தையும் ஏற்படுத்தின. தமிழின் அடுத்த தலைமுறை, தமிழ்க் கலாச்சாரத்தையும், அதன் இலக்கிய நெறிøயும், கொள்கைகளையும் பின் பற்றி நடக்க வேண்டும். ஒரு மொழி என்பது இரு செயல்பாடுகளைக் கொண்டிருக்க வேண்டுமென்று நேரு வலியுறுத்துவார். தொன்று தொட்டு வரும் பாரம்பரிய வேர்களை அடிப்படையாகக்கொண்டும், காலத்துக்கேற்ப வளர்ந்து பரவும் மொழியாகவும், மக்கள் பின்பற்றுவதாகவும் இருக்க வேண்டுமென்று கூறுவார். தமிழ் மொழி, பழமையுடையதாகவும், மாறி வரும் சூழலுக்கேற்ப அதன் தேவைகளை நிறைவேற்றுகிற மொழியாகவும் உள்ளது என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மத்திய செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனத்துக்கு இதில் முக்கியப் பங்கு உள்ளது. கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுக்கு தேர்வு பெற்றுள்ள அஸ்கோ பர்போலாவைப் பாராட்டுகிறேன். முதலாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, பெரும் எதிர்பார்ப்புகளையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. அதை நிறைவேற்றும் அளவுக்கு இந்த மாநாடு வெற்றி பெறுமென நம்புகிறேன். இவ்வாறு, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பேசினார்.