இனி வேலைவாய்ப்பு அலுவலகம் செல்லவேண்டாம் வீட்டில் இருந்தே கம்ப்யூட்டரில் பதிவு செய்யலாம்

மதுரை : தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்கள், "கம்ப்யூட்டர் நெட் ஒர்க்' மூலம் இணைக்கப்பட்டுள்ளதால், செப்., 15ம் தேதி முதல் வீட்டில் இருந்தபடியே கல்வித் தகுதியை பதிவு செய்யும் வசதி துவங்குகிறது. துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் இதை துவக்கி வைக்கிறார். தமிழகத்தில் 32 மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும், 4 சிறப்பு வேலை வாய்ப்பு அலுவலகங்களும் உள்ளன. இவற்றில் 45 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துவிட்டு காத்திருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வு முடிந்ததும் 10, பிளஸ்2 மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை பதிவு செய்ய ஏராளமானோர் இந்த அலுவலகங்களை முற்றுகையிடுகின்றனர்.
இவர்கள் தவிர பட்டதாரிகள், பி.எட்., உட்பட தொழிற்கல்வி முடித்தோரும் பல ஆயிரம் பேர் வருகின்றனர். இதனால் எந்நேரமும் கூட்டம் அலைமோதுகிறது. பதிவு, புதுப்பித்தல் போன்றவையே பிரதான பணியாக இங்கு உள்ளது. இப்பணியை எளிமைப்படுத்த தற்போது அனைத்து மாவட்ட அலுவலகங்களும் கம்ப்யூட்டர் நெட்ஒர்க்கில் இணைக்கப்பட்டுள்ளன. இதற்காக 5 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்தது. இதையொட்டி அனைத்து அலுவலகங்களிலும் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது இப்பணிகள் முடிவடைந்து, ஆன்லைனில் பதிவு செய்யும் வகையில் தயார் நிலையில் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் உள்ளன. இப்புதிய வசதியை நாளை (செப். 15) காலை 11 மணிக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில் துணை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைக்கிறார்.
இவ்வசதி மூலம் இனி கல்வித் தகுதியை, அவரவர் வீட்டில் இருந்தபடியே "ஆன்லைனில்' பதிவு செய்யலாம். அதற்கான இணையதள முகவரி: www.tnvelaivaaippu.gov.in வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கமிஷனர் ஜீவரத்தினம் கூறியதாவது: புதிய வசதி மூலம் மாணவர்கள் சிரமமின்றி கல்வித் தகுதியை பதிவு செய்யலாம். கம்ப்யூட்டரில் அதற்காக விண்ணப்பிக்கும்போது, சான்றிதழ்களையும் "ஸ்கேன்' செய்து அனுப்ப வேண்டும். அப்போது மாணவர்களுக்கு உடனே தற்காலிக எண் தரப்படும். மாணவர்களின் தகுதி ஏற்றுக் கொள்ளப்பட்டதும், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள எண் (ஐ.டி. எண்) வழங்கப்படும். நேரடியாக அலுவலகத்திற்கு வந்தும் பதிவு செய்யலாம். இதனால் இனி பதிவுமூப்பு பிரச்னையோ, பதிவு எண்ணில் குழப்பமோ, தவறோ வரவாய்ப்பில்லை,'' என்றார்.
முனைவர்.இராம.ஞானக்குமரன் MCA.,M.Tech.,Ph.D.,MISTE., https://twitter.com/rgkumaran
Monday, September 13, 2010
Wednesday, September 8, 2010
தமிழகம்கருணை அடிப்படையில் பணி: அரசு புது உத்தரவு

கே.பாலசுப்பிரமணியன்First Published : 09 Sep 2010 03:31:16 AM IST
Last Updated :
சென்னை, செப். 8: கருணை அடிப்படையிலான பணி நியமனம் குறித்து புதிய உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
கருணை அடிப்படையிலான அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கும் போது திருமணமாகாமல் இருந்து, பணி உத்தரவு வழங்கும் நேரத்தில் திருமணம் ஆகியிருந்தாலும் சம்பந்தப்பட்ட நபருக்கு வேலை அளிக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது.
பணிக் காலத்தில் மரணமடையும் அரசு ஊழியர் குடும்பத்தில் வசித்து வரும் மகளுக்கும் மற்றும் அவ்வாறு வசித்து வரும் விதவை மகள் மற்றும் விவாகரத்துப் பெற்ற மகளுக்கும் கருணை அடிப்படையில் பணி வழங்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
திருமணத்துக்கு முன்பும், பின்பும்... இந்த நிலையில், மரணமடைந்த அரசு ஊழியர் குடும்பத்தில் உள்ள ஒரு பெண், அதாவது ஊழியரின் மகள் கருணை அடிப்படையில் அரசுப் பணி கோரலாம். அவ்வாறு கோரும் நேரத்தில் அவருக்கு திருமணம் ஆகாமல் இருந்திருக்கலாம். அரசின் பரிசீலனைகள் முடிந்து அவருக்கு பணி உத்தரவு வழங்கப்படும் நேரத்தில் திருமணம் நடக்க வாய்ப்பு இருக்கிறது.
அவ்வாறு குடும்ப பந்தத்துக்குள் நுழைந்த அந்த மரணமடைந்த அரசு ஊழியரின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்படுவது கேள்விக் குறியாக இருந்து வந்தது. இந்த நிலையில், அந்தப் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர் பிரபாகர் ராவ் வெளியிட்ட உத்தரவு:
ஒரு குடும்பத்தில் திருமணமாகாத நிலையில் உள்ள பெண்ணுக்கு கருணை அடிப்படையில் வேலைக்கு விண்ணப்பிக்கும் போது, அந்தக் குடும்பத்தில் உள்ள பிற வாரிசுதாரர்கள் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பதற்கான சான்று அளிக்கப்பட வேண்டும். வேலைக்கான பரிசீலனை நடைபெறும் நேரத்தில் அந்தப் பெண்ணுக்கு திருமணமாகி இருக்கலாம். அப்படி திருமணம் ஆன அந்தப் பெண்களுக்கு பணி அளிக்கப்படும் போது மீண்டும் மற்ற வாரிசுதாரர்களால் மறுப்பின்மைச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.
திருமணம் செய்து கொண்ட பின்பு பணி வாய்ப்பு பெற்ற வாரிசு தனது பெற்றோரின் குடும்பத்துக்கு உதவும் வகையில் உறுதி ஆவணம் அளிக்க வேண்டும். கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு கோரியுள்ள நபரை திருமணம் செய்யும் நபர், வருங்காலத்தில் அவரது மனைவி அவருடைய பெற்றோருக்குச் செய்யும் உதவிக்கு மறுப்பு ஏதும் ஏற்படுத்த மாட்டேன் என்று உறுதிமொழியையும் அளிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம்எதிர்கால வெற்றிக்கு அடையாளம்: திருச்சி கூட்டத்தில் கருணாநிதி பேச்சு

First Published : 09 Sep 2010 03:11:28 AM IST
Last Updated : 09 Sep 2010 03:52:41 AM IST
பேசுவதற்கு முன்பு, "தினமணி' தலையங்கப் பக்கத்தில் வெளியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஆர். நல்லகண்ணுவின் கட்டுரை குறித்து முதல்வர் மு. கருணாநிதியிட
திருச்சி, செப். 8: எதிர்கால வெற்றிக்கு அடையாளமாக திருச்சி திமுக பொதுக்கூட்டம் அமைந்துள்ளது என்றார் முதல்வர் மு. கருணாநிதி.
திருச்சியில் புதன்கிழமை இரவு நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
எத்தனை முறை திருச்சி வந்தாலும், ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான தமிழ்ப் பெருங்குடி மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இருந்தாலும், இந்தக் கூட்டம் திமுகவின் வளர்ச்சிக்கு, எதிர்கால வெற்றிக்கு அடையாளமாக இருக்கிறது. முதல்வர், அமைச்சர்கள் ஆனாலும் கொள்கையை சிறிதும் நழுவவிடாமல் இருக்கிறோம். தேர்தல், கூட்டணி, வெற்றி, தோல்வி எதுவும் பாதிக்காமல் நேரான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம்.
நம்மைத் தூற்றுகிறார்கள், பழிக்கிறார்கள். இப்தார் நோன்பு நடைபெறும் காலம் இது. நாமும் எதிர்வாதம் செய்துகொண்டிருக்காமல், நபிகள் நாயகத்தின் வழியைப் பின்பற்றி செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
அதற்காக மறுப்புக்கு மறுப்பு, பதிலுக்கு பதில் என்றில்லாமல், மறுப்புக்கு விளக்கம், பகுத்தறிவு வியாக்யானமாக அளிக்க வேண்டும். அதுதான் நமக்குத் தேவை.
நபிகள் நாயகம் செல்லும் வழியில் பெண் ஒருத்தி மாடி வீட்டிலிருந்து குப்பைகளை வீசி வந்திருக்கிறார். அப்போதெல்லாம் அவற்றை தட்டிவிட்டு எதுவும் நடக்காததுபோல் நபிகள் சென்றுகொண்டிருந்தார். ஒரு நாள் நபிகள் மீது குப்பைகள் விழவில்லை. அந்தப் பெண்ணுக்கு உடல் நலக் குறைவு எனத் தெரிந்து நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார். இது எடுத்துக்காட்டு.
நம் மீது எந்த "அம்மா' குப்பையைக் கொட்டினாலும், அதைத் தட்டிவிட்டு, உதறிவிட்டு நம் வழியில் செல்ல வேண்டும். மீண்டும் அவர்கள் மீது சாக்கடைத் தண்ணீரை அள்ளி வீசக் கூடாது. வேண்டுமானால், ஏன் குப்பையைக் கொட்டவில்லை என்று கேட்கும் மனப்பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆயுள் நீளும்: எதிர்காலத்தில் எல்லோரும் பாராட்டும் திட்டமாக உருவாகப் போகிற கலைஞர் வீடு வழங்கும் திட்டம் நடைபெற்று வருகிறது. கோபாலபுரம் வீட்டை இப்போது நான் அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி வழங்கியிருக்கிறேன். திருச்சியில்தான் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தை அறிவித்தோம்.
அறிவித்துவிட்டு சும்மா இருந்துவிடாமல், ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகள், ஆட்சியர்களுடன் கலந்து பேசி இத்திட்டத்தில் ஒரு தவறும் வந்துவிடக் கூடாது, யாரும் விடுபட்டு விடக் கூடாது என்று அறிவுறுத்தியிருக்கிறேன்.
21 லட்சம் வீடுகளை 6 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்க வேண்டுமானால், முதல் கட்டமாக 3 லட்சம் வீடுகள் கட்டும் பணி தொடங்கிவிட்டது. மிக விரைவில் எத்தனை வீடுகள் எங்கெங்கே கட்டப்பட்டு வருகின்றன என்ற புள்ளிவிவரத்தை தருகிறேன் என்று உறுதி கூறுகிறேன்.
சாலை மேம்பாட்டுத் திட்டம்: திருச்சி வரும்போது செப். 7-ம் தேதி, நகர்ப்புற உள்ளாட்சிகளின் சாலைகளை மேம்படுத்த, சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்த 1,000 கோடி ஒதுக்கீடு செய்து, அதற்கான ஆணையில் கையெழுத்திட்ட பின்னரே ரயிலில் ஏறினேன்.
இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் அகங்காரமாகப் பேசுகின்றனர். ஜெயலலிதா இழிவாகப் பேசியதை மீண்டும் மீண்டும் என் காதில் போட வேண்டுமா? அதற்கு அவசியம் இல்லை.
என்னை ஏன் துரத்துகிறீர்கள்? ஒரு காலத்தில் புரட்சிகர இயக்கமாக இருந்தவர்கள் கம்யூனிஸ்டுகள். சிறுதாவூர் நில பிரச்னையை என்னிடம் கொண்டு வந்தார்கள். அதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டேன். ஆனால், அதற்குள் அவர்களே சிறுதாவூருக்குச் சென்றுவிட்டார்கள். அதற்காக என் மீது கோபித்துக் கொண்டு என்ன ஆகப் போகிறது?
நல்ல காலம் பெரியாரையும், அண்ணாவையும் நான் சந்தித்திருக்காவிட்டால் நானும் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்திருப்பேன். என்றாலும், அந்தக் கொள்கையில் மிகுந்த பற்று கொண்டவன் நான். ஜீவாவுக்கு சட்டப்பேரவையில் படம் திறக்கப்படும் என்று அறிவித்த என்னை ஏன் துரத்துகிறீர்கள்? நான் என்ன கோவிந்தசாமியா? அவர் அப்படி என்ன தவறு செய்துவிட்டார்? திமுக ஆட்சியின் சாதனையைப் பாராட்டுவது அவ்வளவு பெரிய தவறா?
மணலி கந்தசாமி ஒரு முறை க. சுப்புவுடன் என்னிடத்தில் வந்து திமுகவில் சேர விரும்புவதாகக் கூறினார். முடியாது, உங்களது தியாகம் உழைப்பு, பெருமையை நாடே அறியும். இப்போது கட்சி மாறுவது உங்களுக்குப் பெருமை சேர்க்காது என்று கூறித் தடுத்து கம்யூனிஸ்ட் அலுவலகத்துக்கு திரும்ப அனுப்பிவைத்தவன் நான். இது நல்லகண்ணுவுக்கும் தெரியும் என்றார் கருணாநிதி.

telling time
Here are some questions and statements you might use involving time.
1. What time is it?
3. When do you have to be at school?
5. Do I have enough time to finish eating?
7. What does your watch say?
9. When will you pick me up?
11. Will the movie start on time?
13. How long will the movie last?
15. When will the test begin?
17. How much time do we have before dinner?
19. Do you get time for lunch?
21. How many minutes until bed time?
23. When will we get to the park?
25. Can you kids keep quiet for a whole five minutes?
27. No, you can't.
29. See, I told you so.
2. Tell me what time it is.
4. You have to set your alarm for six o'clock.
6. Lunch will be ready at twelve-thirty.
8. The kitchen clock says it's five minutes 'til eight.
10. Pick me up right after work.
12. The movie will start at ten minutes after three.
14. The movie will last two hours and twenty-five minutes.
16. The test will begin in twelve minutes exactly!
18. I work from seven in the morning until three-thirty in the afternoon.
20. We get half an hour for lunch, from eleven-thirty 'til noon.
22. You have to go to bed in fifteen minutes.
24. We won't get to the park for another hour.
26. I'll bet I can go without talking for six minutes.
28. Yes, I can.
30. That's no fair! You cheated.

ராஜ ராஜ சோழன் வெண்கல சிலையை மீட்டுத் தர வேண்டும்
ராஜ ராஜ சோழன் வெண்கல சிலையை மீட்டுத் தர வேண்டும்: குஜராத் முதல்-மந்திரி மோடியிடம் தங்கம் தென்னரசு நேரில் வற்புறுத்தல் Chennai புதன்கிழமை, செப்டம்பர் 08, 11:45 AM IST மதிப்பீடு இல்லை இமெயில் பிரதி வலைப்பூக்கள் digg del.icio.us newsVine திரைப்படம் சென்னை, செப். 8-
தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலை முதலாம் ராஜ ராஜ சோழன் கட்டினான். பெரிய கோவில் கட்டி 1000 ஆண்டுகள் ஆவதையொட்டி தமிழக அரசு சார்பில் வருகிற 25-ந்தேதி விழா எடுக்கப்படு கிறது. மிக விமரிசையாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. விழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு சிறப்பிக்கிறார். 1000-வது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகை யில் கோவில் முழுவதும் புதுப்பிக் கப்பட்டு வருகிறது. ராஜ ராஜ சோழன் காலத்து 7 சிலைகளில் 5 சிலைகள் தஞ்சாவூர் பெரிய கோவிலில் உள்ளது. 2 வெண்கல சிலைகள் எங்கு இருக்கிறது என்று தெரியாமல் இருந்தது.
இந்த நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் முதலாம் ராஜ ராஜ சோழன் வெண்கல சிலையும் ராணி சிலையும் இருப்பதாக தகவல் வெளியானது. தனியாருக்கு சொந்தமான “காளிகோ” அருங்காட்சியத்தில் சிலை இருப்பதாக “சராபி” பவுண் டேஷன் தனது இணைய தளத்தில் தகவலை வெளியிட்டது.
இதையடுத்து சிலையை மீட்க தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல்-அமைச்சர் கருணாநிதி, குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதினார். நல்லிணக்க அடிப்படையில் அந்த சிலையை குஜராத் அரசு அன்பளிப்பாக தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இது தொடர்பாக குஜராத் முதல்-மந்திரியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து பேசினார்.
தஞ்சை பெரிய கோவில் 1,000-ம் ஆண்டு விழா கொண்டாடப்படும் இந்த வேளையில் முதலாம் ராஜராஜ சோழன் மற்றும் அவரது மனைவி ராணி சிலையை அங்கு இருந்தால் சிறப்பாக இருக்கும். அதனால் சிலையை வழங்கி உதவிடுமாறு கேட்டுக் கொண்டார். அமைச்சருடன் சுற்றுலாத்துறை செயலாளர் இறையன்பு மற்றும் தொல் பொருள் ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகளும் சென்றிருந்தனர்

Saturday, September 4, 2010
முள் மரத்தை பூண்டோடு வெட்டுங்கள்...அவசியம் படிக்க வேண்டிய செய்தி

அவசியம் படிக்க வேண்டிய செய்தி ..... படிக்கவும்
மரங்களை வெட்டுங்கள் (???!!!)
மரங்களை வெட்டுங்கள்
உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று
சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.
மண்ணின் வில்லன்
அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன்
சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )
நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும் , கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ' யாம் அறியேன்
பராபரமே'
ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.
இதன் கொடூரமான குணங்கள்
இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு
விடுகிறது...!
இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!! இப்படி காற்றின் ஈரபதத்தையும் , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.
தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.
உடம்பு முழுதும் விஷம்
இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!
ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.
காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது.
அறியாமை
நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.
கேரளாவின் விழிப்புணர்வு
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??
ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.
நல்ல மரம் ஆரோக்கியம்
வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம் .
சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?
இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....
இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!

Friday, September 3, 2010
குஜராத் அருங்காட்சியகத்தில் உள்ள ராஜராஜசோழன் சிலையை மீட்க தமிழக அரசு தீவிரம்
குஜராத் அருங்காட்சியகத்தில் உள்ள ராஜராஜசோழன் சிலையை மீட்க தமிழக அரசு தீவிரம்; அமைச்சர் தங்கம்தென்னரசு தலைமையில் உயர் அதிகாரி குழு செல்கிறது
Chennai வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 03, 3:01 PM IST
சென்னை, செப். 3-
சோழ மன்னர்களில் ஆட்சி நிர்வாகத்தை மிகச் சிறப்பாக செய்தவர் என்ற பெருமைக்குரியவர் முதலாம் ராஜராஜ சோழன். சுந்தரசோழனுக்கும் வானவன் மாதேவிக்கும் 2-வது மகனாக பிறந்த இவரது இயற்பெயர் அருண் மொழி கி.பி. 985-ம் ஆண்டு இவர் சோழப் பேரரசனாக முடி சூட்டிக் கொண்டபோது ராஜராஜன் என்ற பெயரை பெற்றார்.
கி.பி.1014ம் ஆண்டு வரை ராஜராஜசோழன் ஆட்சி செய்தார். தஞ்சையில் இவர் கட்டிய பெரிய கோவில், உலக கட்டிடக் கலை நிபுணர்களால் இன்றும் போற்றி புகழப்படுகிறது. தஞ்சை பெரிய கோவிலை இவர் கி.பி. 1004ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம் ஆண்டு, அதாவது ஆறே ஆண்டுகளில் கட்டி முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாத இறுதியில் தஞ்சை கோவிலின் ஆயிரம் ஆண்டு விழாவை தமிழக அரசு மிகச் சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்து வருகிறது. இந்த நிலையில் ராஜராஜ சோழனின் அரிய செப்பு சிலை ஒன்று குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் காலிகோ மியூசியம்Ó என்ற தனியார் அருங்காட்சியகத்தில் இருப் பது தெரிய வந்தது.
தஞ்சை பெரிய கோவிலை கட்ட ராஜராஜசோழன் முடிவு செய்ததும், அந்த பணியை அவர் வீரசோழன் குஞ்சரமல்லனான ராஜராஜப் பெருந்தச்சன் என்பவரிடம் ஒப்படைத்தார். அதற்கு நன்றி செலுத்தும் வகையில் ராஜராஜ சோழன், அவரது மனைவி லோகமாதேவி ஆகியோரது சிலைகளை பெருந்தச்சன் உருவாக்கினார். அவர் ராஜராஜசோழனின் 3 செப்பு சிலைகளை செய்து தஞ்சை பெரிய கோவிலில் நிறுவினார்.
தஞ்சை பெருவுடையாரை வணங்க வந்த பக்தர்கள் ராஜராஜசோழனையும் வணங்கிச் சென்றனர். ஆனால் அன்னியர் படையெடுப்பின்போது ராஜராஜனின் சிலை சூறையாடி அபகரித்து செல்லப்பட்டு விட்டது.
இறுதியில் எப்படியோ அந்த சிலை ஆமதாபாத்தில் அருங்காட்சியகம் நடத்தி வரும் சாராபாய் பவுண்டேசன் வசம் சென்று விட்டது.
ஆமதாபாத் மியூசியத்தில் உள்ள ராஜராஜன் சிலையானது கல்வெட்டுக்களிலும், ஓலைச் சுவடிகளிலும் குறிப்பிடப்பட்டுள்ள உருவ அளவுகளை 100 சதவீதம் ஒத்துள்ளது. அதன் நேர்த்தி மூலம் ராஜராஜனின் உண்மையான உருவ அமைப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவிலின் 1000ம் ஆண்டு விழா கொண்டாடப்படும் இந்த நேரத்தில் ராஜராஜனின் சிலையை மீட்டு அதை தஞ்சை கோவிலுக்குள் நிறுவன வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து ராஜராஜனின் சிலையை மீட்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக முதல்-அமைச்சர் கருணாநிதி, குஜராத் முதல்- மந்திரி நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.
தற்போது அருங்காட்சியகம் நடத்தி வரும் சாராபாய் பவுண்டேசன் நிர்வாகிகளுடன் நேரடியாக பேச்சு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் சுற்றுலாத்துறை செயலாளர் வி.இறையன்பு, தொல்பொருள் ஆய்வாளர் ஆர்.நாகசாமி வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பால சுப்பிரமணியன் ஆகியோர் விரைவில் குஜராத் செல்ல உள்ளனர். ஆமதாபாத்தில் உள்ள அருங்காட்சியக நிர்வாகிகளுடன் பேச்சு நடத்துவார்கள்.
ராஜராஜனின் சிலையை தமிழ்நாட்டு மக்களுக்கு அன்புப் பரிசாக தரும்படி கேட்டுக் கொள்வார்கள். ராஜராஜன் சிலை மீண்டு வரும்பட்சத்தில் தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரம் ஆண்டு விழா சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முழுமையான விழாவாக இருக்கும். தஞ்சை பெரிய கோவிலை தந்த ராஜ ராஜனுக்கு தமிழக மக்கள் செய்த பெரும் நன்றியாகவும் இது இருக்கும்.
1 1
Subscribe to:
Posts (Atom)