Monday, June 14, 2010

AIR POLUTION

அஜித்தின் 50, 51

அஜித்தின் 50, 51

First Published : 15 Jun 2010 12:38:55 AM IST


"விண்ணைத் தாண்டி வருவாயா' படத்துக்குப் பின் அஜித்தின் 50-வது படத்தை இயக்குகிறார் கௌதம் வாசுதேவ் மேனன். திரைக்கதை உருவாக்கம் உள்ளிட்ட பணிகள் முடிவடைந்த நிலையில், அஜித்தின் வருகைக்காக காத்திருக்கிறார் கௌதம் மேனன். "காக்கி' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் கௌதம் மேனனின் 10-வது படமாக இது உருவாகிறது.  சர்வதேச அளவிலான கார் பந்தயங்களில் அஜித் பங்கேற்று வருவதால்தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அஜித், கௌதம்மேனன் இணையும் இந்தப் படத்துக்கு "விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தில் பணிபுரிந்த மனோஜ் பரமஹம்ஸô ஒளிப்பதிவு செய்கிறார். தயாநிதி அழகிரி தயாரிக்கிறார். ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கப்படலாம் எனத் தெரிகிறது. அதற்குள் ஹிந்தி "விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தை முடிக்கும் முடிவில் இருக்கிறாராம் கௌதம்மேனன். அஜித்தின் 51-வது படத்தையும் கௌதம் மேனன் இயக்க பேச்சு நடக்கிறது.

Good Pictures



























 



 A Great Week Days to enjoy our life i wish you always.
 
 
 
rgkumaran


Thursday, June 10, 2010

example


Wednesday, June 9, 2010

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு : நிகழ்ச்சி நிரல் முழு விவரம்

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் 23-ந்தேதி பிரமாண்ட பேரணி நிகழ்ச்சி நிரல் முழு விவரம்
சென்னை, ஜூன். 9-
உலகத்தமிழ் செம்மொழி மாநாடு வருகிற 23-ந்தேதி முதல் 27-ந் தேதி வரை கோவையில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
 
மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து தமிழ் அறிஞர்கள் வந்து பங்கேற்கிறார்கள். பல்வேறு கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார் கள்.
 
தொடக்க விழா கோவை மாநாட்டு அரங்கில் 23-ந்தேதி காலை 10.30 மணிக்கு நடக்கிறது. முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். துணை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்று பேசுகிறார்.
 
ஜனாதிபதி பிரதீபா பட்டீல் மாநாட்டை தொடங்கி வைத்து, “கலைஞர் மு. கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை” பின்லாந்தைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலாவுக்கு வழங்குகிறார். தமிழக கவர்னர் பர்னாலா மாநாட்டு சிறப்பு மலரை வெளியிடுகிறார். அமைச்சர் அன்பழகன் தகுதியுரை நிகழ்த்துகிறார். பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் (அமெரிக்கா), வா.செ. குழந்தைசாமி, கா. சிவத்தம்பி (இலங்கை) ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள். தலைமை செயலாளர் ஸ்ரீபதி நன்றி கூறுகிறார்.
 
23-ந்தேதி மாலை 4 மணிக்கு உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு பேரணி நடைபெறுகிறது. இது கோவை வ.உ.சி. மைதானத்தில் தொடங்கி, அவினாசி சாலை வழியாக சென்று மாநாட்டு வளாகத்தை அடைகிறது.
 
“இனியவை நாற்பது” என்ற தலைப்பில் இந்த பேரணி நடைபெறுகிறது. இதில் இலக்கியம், கலை, வரலாறு ஆகியவற்றை நினைவூட்டும் அலங்கார வண்டிகள், கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.
 
24-ந்தேதி காலை 10.30 மணிக்கு லாரன்ஸ் குழுவின் மாற்று திறனாளிகள் வழங்கும் கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகிறது. பகல் 12 மணிக்கு பொது கண்காட்சியை மத்திய மந்திரி மு.க. அழகிரி திறந்து வைக்கிறார். மலேசிய மந்திரி சுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். புத்தக கண்காட்சியை ஜி.கே. வாசன் திறந்து வைக்கிறார். மாலத்தீவு மந்திரி அகமது நசீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இணைய தள கண்காட்சியும் திறக்கப்படுகிறது.
 
பிற்பகல் 2.30 மணிக்கு “புதியதோர் உலகம் செய்வோம்” என்ற தலைப்பில் கவியரங்கம் நடக்கிறது. கவிஞர் அப்துல் ரகுமான் தலைமை தாங்குகிறார். வ.மு. சேதுராமன், பொன்னடியான், ஆண்டாள் பிரியதர்சினி, வின்சென்ட் சின்னத்துரை, கவிதை பித்தன் உள்பட பலர் பங்கேற்கிறார்கள். மாலை 4 மணிக்கு “சமயம் வளர்த்த தமிழ்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது. இதற்கு சுந்தரலிங்க சாமியடிகளார் தலைமை தாங்குகிறார். பேராயர் சின்னப்பா, ஸ்ரீபால், சாரதாநம்பி ஆரூரான், காதர் மொய்தீன் உள்பட பலர் பேசுகிறார்கள். இரவு முதல்-அமைச்சர் கருணாநிதி எழுதிய “போர் வாளும் பூவிதழும் நாட்டிய நிகழ்ச்சியை பத்மா சுப்பிரமணியம் குழுவினர் வழங்குகிறார்கள். நடனம், நாடகம், இசை நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன.
 
25-ந்தேதி காலை 10 மணிக்கு “கிளம்பிற்று காண் தமிழ்ச்சிங்க கூட்டம்” என்ற தலைப்பில் கவியரங்கம் நடக்கிறது. கவிஞர் வைரமுத்து தலைமை தாங்குகிறார். ஈரோடு தமிழன்பன், தமிழச்சி தங்கபாண்டியன் உள்பட பலர் கவிதை படைக்கிறார்கள். 11.30 மணிக்கு “தமிழர் வாழ்வோடு பெரிதும் சார்ந்திருப்பது சங்க இலக்கியமே, இடைக்கால இலக்கியமே, இன்றைய இலக்கியமே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது. சோ. சத்தியசீலன் நடுவராக பங்கேற்கிறார். குமரி அனந்தன் உள்பட பலர் பேசுகிறார்கள்.
 
மாலை 4 மணிக்கு “எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடக்கிறது. இதற்கு முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். இதில் தங்கபாலு, சீத்தாராம் யெச்சூரி எம்.பி., கி. வீரமணி, டாக்டர் ராமதாஸ், இல. கணேசன், டி. ராஜா எம்.பி., ஆர்.எம். வீரப்பன், திருமாவளவன், ஸ்ரீதர் வாண்டையார், காதர் மொய்தீன், ஜெகன்மூர்த்தி, செல்லமுத்து, தாவூத் மியாகான், திருப்பூர் அல்தாப், சந்தானம் பஷீர் அகமது ஆகியோர் கலந்து கொள்கிறார் கள். இதையடுத்து கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.
 
26-ந்தேதி “தமிழுக்கும் ஆமுதென்று பேர்” என்ற தலைப்பில் கவியரங்கம் நடக்கிறது. இதற்கு கவிஞர் வாலி தலைமை தாங்குகிறார். கவிஞர்கள் மு. மேத்தா, பா. விஜய் உள்பட பலர் பங்கேற்கிறார்கள். அடுத்து வா.செ. குழந்தைசாமி தலைமையில் “செம்மொழி தகுதி” என்ற தலைமையில் கருத்தரங்கம் நடக்கிறது. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உள்பட பலர் பேசுகிறார்கள். இதையடுத்து க.ப. அறவாணன் தலைமையில் “கடல் கடந்த தமிழும் தமிழரும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது.
 
மாலை 4.30 மணிக்கு சாலமன் பாப்பையா நடுவராக பங்கேற்கும் பட்டிமன்றம் “தமிழ் வளர்க்கும் பெரும் பொறுப்பு வெள்ளித் திரைக்கே, சின்னத்திரைக்கே, அச்சுத்துறைக்கே” என்ற தலைப்பில் நடக்கிறது. இதில் பாரதிராஜா, நடிகர் சந்திரசேகர், லியோனி, எஸ்.வி. சேகர், நக்கீரன்கோபால் உள்பட பலர் பங்கேற்கிறார்கள். இரவு கொடிசியா வளாகத்தில் நடிகை ரோகிணி நடிக்கும் “பாஞ்சாலி சபதம்” நாடகம் நடக்கிறது.
 
27-ந்தேதி காலை 10 மணிக்கு “வித்தாக விளங்கும் மொழி” என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கத்துக்கு நடிகர் சிவக்குமார் தலைமை தாங்கு கிறார். சுப. வீரபாண்டியன், திருச்சி செல்வேந்திரன், ஜெகத்கஸ்பார் உள்பட பலர் பங்கேற்கிறார்கள். இதையடுத்து கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.
 
மாலை 4 மணிக்கு மாநாட்டு நிறைவு விழா நடக்கிறது. மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி தலைமை தாங்குகிறார். ப. சிதம்பரம் முன்னிலை வகிக்கிறார். சிறப்பு தபால் தலையை மத்திய மந்திரி ராசா வெளியிடுகிறார்.
முதல்-அமைச்சர் கருணாநிதி, “சிறந்த தமிழ் மென் பொருளை உருவாக் கியதற்கான “கணியன் பூங்குன்றனார்” விருது வழங்கி மாநாட்டு நிறைவுரை ஆற்றுகிறார். முன்னதாக தலைமை செயலாளர் ஸ்ரீபதி வரவேற்கிறார். முடிவில் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு தனி அதிகாரி அலாவுதீன் நன்றி கூறுகிறார்.

"தமிழ் தந்த பெருமை! தமிழில் ஐ.ஏ.எஸ்

தினமலர் முதல் பக்கம் » சிறப்பு பகுதிகள் செய்தி »சொல்கிறார்கள்
சொல்கிறார்கள்
 

 
எழுத்தின் அளவு:   A+  A-
print e-mail   Buzz  
பதிவு செய்த நாள் : ஜூன் 09,2010,00:00 IST

"தமிழ் தந்த பெருமை!' : தமிழில் ஐ.ஏ.எஸ்., எழுதி வெற்றி பெற்ற மணிகண்ட சாமி: திருப்பூர் மாவட்டம் கொழுமங்கலி கிராமம் தான் என் சொந்த ஊர். பிளஸ் 2வில் நான் எடுத்த மார்க்கிற்கு, இன்ஜினியரிங் சீட் கிடைத்தது. ஆனால், அப்போது என் தந்தை புற்றுநோய் தாக்கி இறந்ததால், குறுகிய கால படிப்பான டிப்ளமோவைத் தேர்ந்தெடுத்து படித்தேன். அதைப் படிக்க, என் தந்தையின் இன்சூரன்ஸ் பணம் தான் உதவியது. மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ படித்தேன். அதில் மாநிலத்திலேயே முதல் இடம். பின் பகுதி நேர பி.இ., மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் தங்கப் பதக்கம். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். பின் அங்கிருந்தபடியே, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வில், முதல் முயற்சியிலேயே டி.எஸ்.பி.,யாக தேர்வானேன். இப்போது ஐ.ஏ.எஸ்.,சில் இரண்டாவது முயற்சியிலேயே தேர்வாகி உள்ளேன்.நான் தமிழில் தேர்வு எழுதியதற்கு முக்கிய காரணம், நினைப்பதை தெளிவாகவும், அதே சமயம், ரொம்ப விரிவாகவும் சொல்ல முடியும்னு நம்பினேன். தாய்மொழியில் சொல்லக் கூடிய விஷயங்கள், எல்லாருக்கும் சிறப்பான முறையில் போய்ச் சேரும்ங்கறது தான் உண்மை. இந்த முறை தமிழில் எழுதி நான் மட்டும் தான் தேர்வாகியிருக்கேன்னு தெரிஞ்சப்ப ஆச்சர்யமா தான் இருந்தது.பலரும் தமிழில் தேர்வு எழுதுவதை தவிர்க்கிறாங்க. தமிழில் விடைகளை சுருக்கமா எழுத முடியாது. தேர்வுக்கான புத்தகங்கள், தமிழில் சுலபமாகக் கிடைப்பதில்லை.  தமிழ், வட்டெழுத்துங்கிறதால, வெகு நேரம் எழுதும் போது, கை வலிக்கும் என்ற காரணங்களால் தான், பலரும் தமிழில் தேர்வெழுத பயப்படுறாங்க. ஆனா, மற்ற மொழிகளைக் காட்டிலும், தமிழ் எந்த விதத்திலும் நம் தேர்ச்சியைப் பாதிப்பதாக எனக்குத் தோன்றவில்லை.நேர்முகத் தேர்வு, பிராந்திய மொழிகள் அனைத்திலும் நடக்கும். எல்லா மொழிகளுக்கும், கூடவே ஒரு மொழிபெயர்ப்பாளர் இருப்பாங்க. எதைக் கேட்டாலும் பதில் சொல்லும் எண்ணத்துடன் போனால், வெற்றி நிச்சயம்.

Tuesday, June 8, 2010

பதினோரு கல்லூரிகளுக்கு ஒரே விரிவுரையாளர்

பதினோரு கல்லூரிகளுக்கு ஒரே விரிவுரையாளர்? - 08-06-2010

புதுடில்லி: மகாராஷ்டிராவில், 50 சதவீத கல்லூரிகளை, அரசியல்வாதிகள் நடத்துகின்றனர். புனேயில் மட்டும் 16 கல்லூரிகளை ஒரே நபர் நடத்துகிறார். அரியானாவில், ஒரே ஆசிரியர், 11 கல்லூரிகளில் பணிபுரிகிறார்.  உண்மையை சொல்லுங்கள். அடிப்படை வசதியே இல்லாத கல்லூரிக்கு பரிந்துரைக்கும், உங்கள் மாநில அரசியல்வாதி யார்? என, சத்திஸ்கர் அரசு வக்கீலை, சுப்ரீம் கோர்ட் நீதிபதி எழுப்பிய கேள்வியால், அனைத்து மாநில அரசுகளும் ஆடிப்போயுள்ளன.

சத்திஸ்கரை சேர்ந்த பல் மருத்துவக் கல்லூரி ஒன்று, சுப்ரீம் கோர்ட்டில் சமீபத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், புதிதாக இரண்டு சிறப்பு பாடப் பிரிவுகளை துவக்கவுள்ளதாகவும், அதற்கு மாநில அரசு அனுமதி வழங்க மறுப்பதாக தெரிவித்து, புதிய பாடப்பிரிவுகளை துவங்க, மாநில அரசு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டுமென கூறியிருந்தது.

இந்த மனுவிற்கு, சத்திஸ்கர் அரசு சார்பில் அளித்த விளக்கத்தில், ‘புதிய பாடப்பிரிவுகளை துவங்குவதற்கு, அந்த கல்லூரியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் எதுவும் இல்லை. மேலும் தகுதியான ஆசிரியர்கள் இல்லாததால், அனுமதி வழங்கவில்லை’ என, தெரிவித்தது. அரசின் விளக்கத்தை ஏற்ற சுப்ரீம் கோர்ட் பெஞ்ச்,  பல் மருத்துவக் கல்லூரிக்கு கண்டனம் தெரிவித்தது. மேலும் பல கூர்மையான கேள்விகளையும், சுப்ரீம் கோர்ட் எழுப்பியுள்ளது.

இந்த விசேஷ படிப்புகளை, சாதாரண ஆசிரியர்களை வைத்து நடத்தி விட முடியாது. அடிப்படை வசதிகள், ஆசிரியர்கள், கருவிகளே இல்லாத இந்த கல்லூரி குறித்து நன்கு தெரிந்தும், துவக்க நிலையிலேயே இதற்கு மாநில அரசு அங்கீகாரம் கொடுத்தது ஏன்? உண்மையை கூறுங்கள். இந்த கல்லூரியில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதி யார்? கல்லூரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பது இப்போது உண்மையாகி விட்டது. மகாராஷ்டிராவில், 50 சதவீத கல்லூரிகளை அரசியல்வாதிகள் தான் நடத்துகின்றனர். புனேயில் மட்டும் 16 கல்லூரிகளை, ஒருவரே நடத்துகிறார்.

அரியானாவில், ஒரே கல்லூரி ஆசிரியர்கள், மேலும் 11 கல்லூரிகளில் பணிபுரிகிறார். ராஜஸ்தானில், ஒன்பது ஆசிரியர்கள், பல கல்லூரிகளில் பணிபுரிகின்றனர். ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் தோன்றுவதற்கு, இவர்கள் என்ன, கிருஷ்ணர் கடவுளா? இப்படி சரமாரியாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த தீர்ப்பு குறித்து கேள்விப்பட்ட, இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் மாநிலங்கள் அனைத்தும், தற்போது செய்வதறியாமல் திகைக்கின்றன.