Monday, June 21, 2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு பாடல் செல்போனில் ஒலிக்கும்

தமிழகம்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு பாடல் செல்போனில் ஒலிக்கும்

First Published : 22 Jun 2010 02:20:07 AM IST


சென்னை, ஜுன் 21: பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது (செல் ஒன்) சந்தாதாரர்களுக்கு, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு பாடலை இலவச, விருப்ப கீதமாக (ஃபேவரைட் ட்யூன்) வழங்கும் சேவையை திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.ஆஸ்கர் விருது பெற்ற இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானின் இசையில், தமிழக முதல்வர் கருணாநிதி இயற்றிய பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...செம்மொழியாம் தமிழ் மொழி... என்ற பாடலை டி.எம்.சௌந்தரராஜன், பி. சுசீலா உள்ளிட்ட 30 பாடகர்கள் பாடியுள்ளனர்.இதுவே கோவையில் 23-ம் தேதி தொடங்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு பாடலாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இப்போது, இந்தப் பாடலை செல் ஓன் சந்தாதாரர்கள், கட்டணமின்றி, தங்களது செல் போன்களில் இலவசமாக பதிவிறக்கம் (டவுன் லோடு) செய்து கொள்ளும் சிறப்புச் சலுகையை பி.எஸ்.என்.எல். அறிமுகம் செய்துள்ளது.இதற்கு, 53733 என்ற எண்ணுக்கு தமிழ் என்று ஆங்கிலத்தில் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) அனுப்பினால் போதும் என்று பிஎஸ்என்எஸ் தெரிவித்துள்ளது.

உலகெலாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வோம்

உலகெலாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வோம்: தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்

First Published : 22 Jun 2010 02:54:09 AM IST


கோவை, ஜூன் 21: உலகெலாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வோம் என்றார் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்.  கோவையில் திங்கள்கிழமை நடைபெற்ற "தினமணி- செம்மொழிக் கோவை' மலர் வெளியீட்டு விழாவில் அவர் ஆற்றிய ஏற்புரை:  "தமிழ் மாநாடு நடத்த வேண்டும் என்று தினமணி குரல் கொடுத்த அதே நாளில், மாவட்ட ஆட்சியர்களின் மாநாட்டில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை அறிவித்தார் முதல்வர் கருணாநிதி. தினமணியும், முதல்வரும் ஒரே நேரத்தில் கருதியது  உவகை, உவகை, உவகை.  இன்று தமிழனும், தமிழ் இனமும் பின்னடைவு அடைந்திருக்கும் நேரத்தில் இந்த மாநாடு தேவை தானா? இத்தனை பொருள் செலவு செய்து மாநாடு தேவையா? இதற்கு அரசியல் காரணம் உள்ளதா? என்றெல்லாம் கேட்கிறார்கள். ÷இப்போது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள்- தமிழ், தமிழ் என்று கடந்த இரண்டு மாத காலமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஐந்தாண்டுகளுக்குப் பேசுவார்கள். அதற்காக எத்தனை கோடி செலவானாலும் பரவாயில்லை.   நாராயணா, நமசிவாயா, யேசுநாதர், அல்லா இவர்களையெல்லாம் ஏன் மீண்டும் மீண்டும் அழைக்கிறோம். தொடர்ந்து சொல்லாவிட்டால் தெரியாதா என்ன? அதைப் போலத்தான் தமிழ், தமிழ் என்று, தமிழர்கள் தனித்தனியாகவும், ஒன்றுகூடியும் மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்வதில் தவறில்லை. ÷இந்த மாநாட்டில் தினமணிக்கு என்ன பங்கு? என்று நினைத்தபோது உருவானதுதான் "செம்மொழிக் கோவை'. ஒரு காலப் பொக்கிஷமாக, 2010-ம் ஆண்டில் வாழ்ந்த தமிழறிஞர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதைப் பதிவு செய்யும் ஆவணமாக இது உருவாகியிருக்கிறது.  ஆங்கில மோகத்தால் இன்றைய குழந்தைகள் தமிழ் தெரியாமல் வளர்கிறார்களே என்கிற தமிழ் குறித்த எனது வேதனைக்கு அடிப்படைக் காரணம், அய்யோ இப்படி ஆகிவிட்டதே என்பதல்ல; நம் குழந்தைகளின் பெற்றோர் இப்படி ஆகிவிட்டனரே? என்பதுதான். இப்போதுள்ள நிலைக்குக் காரணம் பெற்றோர்தான்.  தமிழ் படித்தால் வேலைக்குச் செல்ல முடியுமா? என்று கேட்கின்றனர். ஆங்கிலத்தைப் படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. வேலைக்குப் போக வேண்டாம் என்று சொல்லவில்லை. நமக்குள்ளே பேசுவது தமிழாக இருக்கட்டுமே என்றுதான் கேட்டுக் கொள்கிறேன்.÷தமிழ் மொழிச் சிதைவுக்கு யார் காரணம்? "டியூப் லைட்'டுக்கு தமிழில் என்ன பெயர்? என்று கேட்கின்ற பண்பலைத் தொடர்பாளர் ஒருவர், விடையை இந்த "நம்பரில்' சொல்லுங்கள் என்று கூறுகிறார். இது என்ன கொடுமை?÷எத்தனை மொழி படிக்க முடியுமோ அத்தனை மொழிகளையும் படியுங்கள். பாரதிக்குப் பல மொழிகள் தெரிந்ததால்தான், யாமறிந்த மொழிகளிலே இனிதான மொழி தமிழ் என்றான். படிக்காமலேயே இனிய மொழி என்று சொல்ல முடியுமா? ஆங்கிலத்தையும் முறையாகப் படிக்காமல், தமிழையும் முறையாகப் படிக்காமல் இருப்பதைத்தான் தவறு என்று சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.  தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்ய வேண்டும். நம் வீட்டில், நமக்குள் - நல்ல தமிழில் பேசுவோம். ஒரு மொழி வழக்கொழிந்து விட்டால், அந்த மொழி அழிந்து விடும். இதுதொடருமானால், 200 ஆண்டுகளுக்குப் பிறகு நமது வாரிசுகள், நம்மைக் கொடுங்கோலர்கள், மாபாதகர்கள் என்று சபிப்பார்கள்.  பெற்றோரை "மம்மி, டாடி' என்று  அழைப்பதைக் கேவலம் என்று உணர வேண்டும். குழந்தைகளுக்கு குறைந்தது 50 திருக்குறள்களையாவது சொல்லிக் கொடுங்கள்.   உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சிறப்பாக நடந்து வரும் இந்த வேளையில், உலகெலாம் தமிழ் முழக்கம் கேட்கட்டும். சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே என்பதை ஒவ்வொரு தமிழனும் உணர்ந்து நெஞ்சு நிமிர்த்திப் பெருமிதம் கொள்ளட்டும்' என்றார் வைத்தியநாதன்."செம்மொழிக் கோவை' மலரின் சிறப்பு அம்சமாக நான் கருதுவது இரண்டு விஷயங்களை. முதலாவது, முதல்வருக்கு நாங்கள் கடிதம் அனுப்பிய மூன்று நாள்களுக்குள் எங்களுக்கு கட்டுரையை அவர் அனுப்பித் தந்து "செம்மொழிக் கோவையை' சிறப்பித்தது.   இரண்டாவது, "தினமலர்' ஆசிரியரும், நாணயவியலில் தமிழகத்தின் தலைசிறந்த ஆய்வாளருமான இரா.கிருஷ்ணமூர்த்தியிடம், எங்களுக்கு கட்டுரை வேண்டும் என்று கேட்ட சில மணித் துளிகளில் கட்டுரையை அவர் அனுப்பித் தந்து "செம்மொழிக் கோவையை' சிறப்பித்தது. இதற்கு நன்றி கூறாமல் போனால் நாங்கள் செய்நன்றி கொன்றவர்கள் ஆகிவிடுவோம்.  என்னைப் பொருத்தவரை "செம்மொழிக் கோவை' மலரின் தனித்துவமும், சிறப்பும், முதல்வரின் கட்டுரையும், தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் (படம்) கட்டுரையும்தான்.'

தமிழ் மொழி வரலாற்றில் புதிய அத்தியாயம்- கருணாநிதி

தமிழகம்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: தமிழ் மொழி வரலாற்றில் புதிய அத்தியாயம்- கருணாநிதி

First Published : 22 Jun 2010 12:19:00 AM IST


சென்னை, ஜூன் 21: கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தமிழ் மொழி வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கிடும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். மேலும், மாநாட்டு நினைவாக சிறப்பு அஞ்சல் தலையும் வெளியிடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் புதன்கிழமை தொடங்குகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க அனைவருக்கும் அழைப்பு விடுத்து வானொலி மற்றும் தொலைக்காட்சியில் முதல்வர் கருணாநிதி திங்கள்கிழமை ஆற்றிய உரை:உலகத் தமிழ் மாநாடு இதுவரையில் எட்டு நடைபெற்றுள்ளன. அவற்றையெல்லாம் விட ஒரு சிறப்பை வலியுறுத்தி நடைபெறும் மாநாடாக செம்மொழி மாநாடு அமைந்துள்ளது. அதாவது, தமிழ்ச் செம்மொழி என மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட பிறகு, நடைபெறுகிற முதல் மாநாடு இதுவாகும்.உலகில் 6 ஆயிரத்து 800 மொழிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், இன்றுள்ள மொழிகளில் 2 ஆயிரம் மொழிகள் மட்டுமே உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இதில், கிரேக்கம், லத்தீனம், அரேபியம், பாரசீகம், சீனம், ஹீப்ரூ, சம்ஸ்கிருதம் ஆகியன மட்டுமே செம்மொழி எனும் தகுதியைப் பெற்றுள்ளன.மற்ற செம்மொழிகளை விடவும் தமிழ் மேலானதாகும். இதற்குப் பல சான்றுகள் உள்ளன. செம்மொழிகளில் லத்தீன், ஹீப்ரூ ஆகிய மொழிகள் இன்று பயன்பாட்டில் இல்லை. கிரீக் மொழி இடையில் நசிந்து இப்போது வளம்பெற்று வருகிறது.சம்ஸ்கிருதம் பேச்சு வழக்கில் இல்லை. பாரசீகம், அரேபிய வரிவடிவத்தில் எழுதப்படுகிறது. அரேபிய மொழி, காலத்தால் மிகவும் பிந்தியது. இதுபோன்று, செம்மொழிகள் அனைத்தையும் பார்க்கும் போது, தமிழ் மொழி மற்ற செம்மொழிகள் எல்லாவற்றையும் விட உயர் தனிச் சிறப்பு வாய்ந்தது என்பது தெளிவாகிறது.தமிழும், தமிழ்ச் சமுதாயமும் காலத்தால் மிகவும் பழமையானவை என்கிறார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். இலக்கிய வளத்தைப் பொறுத்தவரை 2,500 ஆண்டு காலமாக இடையறாத தொடர்ச்சியான இலக்கியங்களைக் கொண்டுள்ளது தமிழ் மொழி.எந்த மொழியையும் சாரவில்லை: தமிழ் மொழி எந்த மொழியையும் சார்ந்து இருக்காமல் தனித்தன்மை வாய்ந்ததாக விளங்குகிறது. இது, நமது தமிழ் மொழிக்கு உள்ள தனிப் பெரும் சிறப்பாகும்.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு முதலிய பல மொழிகள் திராவிட மொழிகள் எனக் கூறப்படுகின்றன. இந்தத் திராவிட மொழிகளுக்கெல்லாம் மூலமொழியாக தமிழ் விளங்குகிறது.ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செம்மொழி என்ற சிறப்பைச் சங்க இலக்கியங்கள் மூலம் தமிழ்  அடைந்திருக்கிறது. ஆனாலும், அதற்கு முறையான ஒப்புதல் இப்போதுதான் 2004-ல்தான் அதுவும் மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்த பிறகே நமக்குக் கிடைத்துள்ளது.இந்தப் பெருமையைக் கொண்டாடும் வகையில் கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது.யார் யார் பங்கேற்பு? இந்த மாநாட்டுக்கு உலகெங்கிலும் இருந்து தமிழறிஞர்கள் பலர் வரவுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக தமிழ்த் துறை தலைவர் ஜார்ஜ் ஹார்ட், பின்லாந்து நாட்டைச் சேர்ந்த அஸ்கோ பர்போலா உள்ளிட்ட பலரும் வருகின்றனர். அஸ்கோ பர்போலாவுக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது அளிக்கப்படுகிறது.உலகெங்கும் 49 அயல் நாடுகளில் இருந்து 536 தமிழறிஞர்கள் இந்த மாநாட்டில் பங்கு பெறுகிறார்கள். தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதிலும் இருந்து ஏறத்தாழ 5 ஆயிரம் அறிஞர்கள் பங்கு பெறுகிறார்கள்.குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார்.ஆளுநர் பர்னாலா உள்ளிட்ட சான்றோர்கள் கலந்து கொள்கிறார்கள். தொடக்க விழா நடைபெறும் புதன்கிழமை மாலை அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும். நிறைவு விழா மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலும், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலையிலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. மாநாட்டு நிறைவு விழா உரையை நான் ஆற்றுகிறேன்.தமிழ் மொழி வரலாற்றில் செம்மொழி மாநாடு ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கிடும். இதன் நினைவாக சிறப்பு அஞ்சல் தலையை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா வெளியிடுகிறார்.இந்த மாநாட்டுக்கு அனைவரும் வருக என்று தனது உரையின் மூலம் முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.

செம்மொழி மாநாட்டு பாடல் வரிகள்!

செம்மொழி மாநாட்டு பாடல் வரிகள்!

ஏ.ஆர்.ரகுமான் இசையில் உலக தமிழ் செம்மொழி மாநாட்டு பாடல் வரிகள்!

இசை - எ.ஆர்.ரஹ்மான்
எழுத்து - கலைஞர் மு.கருணாநதி
பாடியவர்கள் : ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்சங்கர் ராஜா, டி.எம்.சவுந்தரராஜன், பி.சுசீலா, அருணா சாய்ராம், பாம்பே ஜெய்ஸ்ரீ, கார்த்திக், ஹரிணி, சின்மயி, ஹரிகரன், சுவேதா மோகன், ஜி.வி.பிரகாஷ், பென்னி தயள், ஸ்ரீனிவாஸ், விஜய் யேசுதாஸ், டி.எல்.மகாராஜன், நித்யஸ்ரீ, சவும்யா, எம்.ஒய்.அப்துல் கனி, எம்.காஜாமொய்தீன், எஸ்.சாபுமொய்தீன், பி.எல்.கிருஷ்ணன், நரேஷ் அய்யர், குணசேகர், சுருதிஹாசன், சின்ன பொண்ணு, சுசீலா ராமன், ப்ளேஸ், காஷ், ரெஹ்னா ஆகிய 30 பேர்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்!
உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம்
உழைத்து வாழ்வோம்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்!
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழிகாட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!

செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!

செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்

செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!

செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!

செம்மொழி செம்மொழி - தமிழ் மொழியாம்!

கம்ப நாட்டாழ்வாரும் கவியரசி அவ்வை நல்லாளும்
எம்மதமும் ஏற்ற புகழ்கின்ற
எம்மதமும் ஏற்ற புகழ்கின்ற
எத்தனயோ ஆயிரம் கவதை நெய்வோர் தரும்
புத்தாடை அனைத்துக்கும் வித்தாக விளங்கும் மொழி

செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!

செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!

அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
நம் மொழி நம் மொழி - அதுவே

செம்மொழியான - தமிழ் மொழியாம்!
தமிழ் மொழி!
தமிழ் மொழி!
தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!

செம்மொழியான - தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!

தமிழ் மொழியாம்!
எங்கள் தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
எங்கள் தமிழ் மொழியாம்!

செம்மொழியான - தமிழ் மொழியாம்!
வாழிய வாழியவே! தமிழ் வாழிய வாழியவே!
வாழிய வாழியவே! தமிழ் வாழிய வாழியவே!

செம்மொழியான - தமிழ் மொழியாம்!

கல்லூரி மாணவர்கள் பாலக்காட்டில் ஊர்வலம்

பாலக்காடு: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு பாலக்காட்டில் கல்லூரி மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.
 கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நாளை(23ம் தேதி) முதல் 27 ம்தேதி வரை நடக்கிறது. இம்மாநாட்டையொட்டி கோவை ஏ.ஜெ.கே., கல்லூரி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் பாலக்காட்டில் நேற்று நடைபெற்றது.
பாலக்காடு கோட்டை மைதானத்தில் தமிழக சுற்றுலா மற்றும் பதிவுத்துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். சிவில் ஸ்டேஷனிலிருந்து துவங்கிய ஊர்வலம் கோட்டை மைதானம், மாவட்ட மருத்துவமனை, கோர்ட் ரோடு, சுல்தான்பேட்டை சந்திப்பு, தாரைக்காடு, கல்லூரி சாலை வழியாக அரசு விக்டோரியா கல்லூரி சென்று நிறைவுபெற்றது.
கல்லூரி நிர்வாக செயலாளர் அஜித்குமார் லால்மோகன், கல்லூரி முதல்வர் பாலசுப்ரமணியம் ஆகியோர் ஊர்வலத்திற்கு தலைமை வகித்தனர். விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்.
 உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிகழ்ச்சிநிரல் விபரங்கள அடங்கிய துண்டு பிரசுரங்களை மாணவர்கள் பொதுமக்களுக்கு வினியோகித்தனர். கேரள மாநில தமிழ் வளர்ச்சிப்பணி இயக்க தலைவர் விக்டர் சார்லி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செம்மொழி மாநாட்டு பணியில் 3,500 நாட்டு நலப்பணி மாணவர்

கோவை: உலக தமிழ் செம்மொழி மாநாட்டுப் பணிகளில் பாரதியார் பல்கலை நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் 3,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
பல்கலையின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கோவிந்தராஜூலு கூறியதாவது:
செம்மொழி மாநாட்டு பணிகளில் பாரதியார் பல்கலை மற்றும் பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளை சேர்ந்த 3,500 நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அனைவருக்கும் பல்வேறு குழுக்களில் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், முதல் நாள் கூட்டத்தை ஒழுங்கும் படுத்தும் பணியில் மட்டும் அனைவரும் ஈடுபடுத்தப்படுவர்.
காவல் துறை சார்பில் இவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் 150 பேரும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தவிர, பொது அரங்கத்தில் கூட்டத்தை ஒழுங்குப்படுத்துவது, வழிகாட்டுவது உள்ளிட்ட பணிகளில் 1000 மாணவர்களும் மாணவர் ஆர்வலர்களும் பங்கேற்பர்.
உணவு வழங்கும் இடத்தில் உணவு வழங்குவது, கூட்டத்தை கட்டுப்படுத்துவது, டோக்கன் வழங்குவது உள்ளிட்ட பணிகளில் 1000 மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவர். எந்த நேரமும் எந்த பணியையும் மேற்கொள்ள மாநாட்டு கட்டுப்பாட்டு அறையில் 500 மாணவர்கள் தயார் நிலையில் இருப்பர். மாநாட்டின் நிறைவு நாளில் அதிக கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்நாளில் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தவும் வழிகாட்டவும், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் அனைவரும் வெவ்வேறு இடங்களில் பணியமர்த்தப்படுவர். வெளிநாட்டில் இருந்து மாநாட்டில் பங்கேற்க வரும் வி.ஐ.பி., விருந்தினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கல்லூரி ஆசிரியர் உதவியாளராக நியமிக்கப்படுகிறார்.
அனைத்து மாணவர்களுக்கும் செம்மொழி மாநாட்டு முத்திரை மற்றும் குழுவின் பெயர் அச்சிட்ட பனியன் வழங்கப்படும். கூட்டத்தின் நடுவே தனியாக அடையாளம் காண வசதியாக வெள்ளை, நீல நிறங்களில் பனியன் தயாரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, கோவிந்தராஜூலு தெரிவித்தார்.

நாளை துவங்குகிறது உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு

நாளை துவங்குகிறது உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு :விழாக்கோலம் பூண்டது கோவை
ஜூன் 22,2010,00:32
கோவை: உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவை, பீளமேட்டிலுள்ள, "கொடிசியா' வளாகத்தில் நாளை துவங்குகிறது. ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், முதல்வர் கருணாநிதி, துணைமுதல்வர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள சிறப்பு அழைப்பாளர்கள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், கட்டுரையாளர்கள் உள்ளிட்ட 4,600 பேரும், பல லட்சம் மக்களும் பங்கேற்கின்றனர்.
உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு, நாளை காலை 10.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்குகிறது. துணைமுதல்வர் ஸ்டாலின், வரவேற்புரை நிகழ்த்துகிறார். மாநாட்டுச் சிறப்பு மலரை, கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா வெளியிடுகிறார். அதன் பின், நிதியமைச்சர் அன்பழகன் பேசுகிறார். ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலாவுக்கு, "கருணாநிதி செம்மொழி தமிழ் விருது' வழங்குகிறார். பேராசிரியர் அஸ்கோ பார்போலா, விருது ஏற்புரை நிகழ்த்தியபின், அமெரிக்க பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், முனைவர் வ.செ.குழந்தைசாமி, இலங்கை பேராசிரியர் சிவத்தம்பி ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர். முதல்வர் கருணாநிதி, தலைமையுரையாற்றுகிறார். கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா சிறப்புரை நிகழ்த்திய பின், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பேசுகிறார். மாலை 4.00 மணிக்கு, "இனியவை நாற்பது' என்ற தலைப்பில் தமிழ் இலக்கியம், கலை, வரலாற்றை நினைவூட்டும் வகையில் 40 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு வ.உ.சி., பூங்கா மைதானத்தில் துவங்கி, மாநாடு வளாகம் வரை நடக்கிறது.
வரும் 27ம் தேதி வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் நடக்கும் இம்மாநாட்டின் நிகழ்வுகள், இரு விதமாக வகைபடுத்தப்பட்டுள்ளன. மாநாடு பொதுநிகழ்வுகளில் மக்கள் பங்கேற்க ஏதுவாக மிக பிரம்மாண்டமான மாநாடு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்குதான் மாநாடு துவக்க விழா, நாளை காலையில் நடக்கிறது. மாலை 4.00 மணிக்கு, "இனியவை நாற்பது' என்ற தலைப்பில் 40 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடக்கிறது. நாளை மறுதினம் கவியரங்கம், கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம் நடக்கின்றன. வரும் 25ம் தேதி கவியரங்கம், பட்டிமன்றம், இசை நிகழ்ச்சி, முதல்வர் கருணாநிதி தலைமையில் சிறப்பு கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
தொடர்ந்து, 26ம் தேதி கவியரங்கம், கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம் நடக்கின்றன. மாநாடு நிறைவு நாளான 27ம் தேதி நடக்கும் நிகழ்வில், முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், பிரணாப்முகர்ஜி பங்கேற்கின்றனர். மேற்கண்ட அனைத்து இந்நிகழ்வுகளிலும் பொதுமக்கள் பங்கேற்கலாம். அதே வேளையில், ஆய்வரங்கம், முகப்பரங்க பொழிவுகள், கலந்தாய்வரங்கம், கலந்துரையரங்கம், அமர்வரங்கம் மற்றும் சிறப்பு பொழிவரங்கம் நடக்கும் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்துக்குள், பங்கேற்பாளர்களை மட்டுமே அனுமதிக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாநாட்டில் பங்கேற்க, முதல்வர் கருணாநிதி நேற்று காலை விமானத்தில் கோவை வந்தார். முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்களிடம் விவாதித்த முதல்வர், போலீஸ் பாதுகாப்பு நடவடிக்கை விபரங்களையும் உயரதிகாரிகளிடம் கேட்டறிந்தார். முதல்வர், வரும் 27ம் தேதி வரை கோவையில் முகாமிட்டு மாநாடு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். ஜனாதிபதி பிரதிபா பாட்டில், இன்று இரவு 7.50 மணிக்கு டில்லியில் இருந்து விமானப்படை விமானத்தில் கோவை வருகிறார். ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி, நாளை காலையில் நடக்கவுள்ள மாநாடு துவக்க விழாவில் பங்கேற்கிறார்; மாலையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பை பார்வையிடுகிறார்.
முக்கிய தலைவர்களின் வருகை மற்றும் மாநாடு முன்னிட்டு கோவை நகரில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை டி.ஜி.பி., லத்திகாசரண், சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க நேற்று முன் தினம் இரவு முதலே முக்கிய சாலைகளில் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். "கண்காணிப்பு பணியை தீவிரமாக கையாளும் அதே நேரத்தில், மக்களை எவ்வித கெடுபிடிக்கும் உள்ளாக்க வேண்டாம்' என, போலீசாருக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது.
மாநாட்டில் பங்கேற்க வரும் மக்கள் கைப்பை, சூட்கேஸ் உள்ளிட்ட எவ்விதமான பொருட்களையும் எடுத்துவர வேண்டாம்; அவ்வாறு, பொருட்களுடன் வந்தால் போலீசாரின் சோதனை நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என, போலீசார் தெரிவித்துள்ளனர். மாநாடு வளாகத்தில் வெடிபொருள் ஊடுருவலை தடுக்க "டோர் பிரேம் மெட்டல் டிடக்டர்' சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் அனைவருக்கும் போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மாநாடு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவுக்கூடங்களை நேற்று திறந்து வைத்த துணைமுதல்வர் ஸ்டாலின், மக்களுக்கு தரமான உணவு வகைகளை வழங்குமாறு பொறுப்பாளர்களை அறிவுறுத்தினார். உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு முன்னேற்பாடுகளால் கோவை மாநகரமே களைகட்டியுள்ளது; மாநாட்டில் பங்கேற்க மக்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
கோவை - அவிநாசி சாலையில் நாளை மாலை 4.00 மணிக்கு, "இனியவை நாற்பது' அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடக்கிறது. இதையொட்டி, நேற்று முன் தினம் இரவே, அணிவகுப்பு ஒத்திகை நடந்தது. தமிழர்களின் கலை, இலக்கியம், வரலாற்றை நினைவு கூறும் காட்சிகளுடன் கூடிய இந்த அணிவகுப்பை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர். நேற்று காலை முதலே மக்கள் கூட்டம், கூட்டமாகச் சென்று, உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு கொடிசியா வளாக அலங்கார வேலைப்பாடுகளை ஆர்வமுடன் பார்வையிட்டு வியந்தனர். நகரச் சாலைகளில் வண்ண ஓவியங்கள் பளிச்சிடுவதை சிறுவர், சிறுமியர் குதூகலத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

கோவை வந்தார் முதல்வர் கருணாநிதி

செம்மொழி மாநாடு : கோவை வந்தார் முதல்வர் கருணாநிதி : தாரை, தப்பட்டை முழங்க வரவேற்பு
ஜூன் 22,2010,00:19
சென்னை: நாளை கோவையில் துவங்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கற்கும் விதமாக 2 நாள் முன்னதாக நேற்று கோவை புறப்பட்டு வந்தார் முதல்வர் கருணாநிதி. இவருக்கு தாரை, தப்பட்டை முழங்கிட சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் இருந்து தங்கும் ரெசிடன்சி ஓட்டலுக்கு சென்ற போது வீதியின் இரு வழிகளிலும், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் கையசைத்து வரவேற்றனர். இவரது வருகையை முன்னிட்டு அவிநாசி சாலையில் ஆங்காங்கே தாரை, தப்பட்டை வாத்தியங்கள் முழங்கின. நேற்று மதியம் 12. 30 மணியளவில் விமானம் மூலம் கோவை வந்தார். இவருடன் அமைச்சர்கள், ஆற்காடு வீராச்சாமி, பொன்முடி, தலைமைச்செயலர் ஸ்ரீபதி ஆகியோர் உடன் வந்தனர். துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் வரவேற்றனர்.

ஒலி வடிவில் திருக்குறள்

ஒலி வடிவில் திருக்குறள்
ஜூன் 20,2010,17:42

 ஒரு புது முயற்சியாக யுனிவர்சல் இ பப்ளிசர்ஸ் திருக்குறளை ஒலி தகடு வடிவில் வெளியிடுகிறது. ஜெ. டெய்ஸன் அவர்களின் குரலில் 1330 குறட்பாக்கள் மற்றும் அதனுடைய பொருள், கேட்போரை 8 1/2 மணி நேரம் இன்புறச்செய்யும். செவி வழி கற்றலை இது வழுபடுத்தும். இந்த ஒலி தகட்டின் சிறப்பம்சம் இதில் இடம்பெற்றுள்ள பேராசிரியர் க. ப. அறவாணன் அவர்களின் திருக்குறள் உரை. இவ்வுரை தற்கால மக்களுக்கு எளிதாக புரிந்துகொள்ள ஏதுவாய் இருக்கும்.

உலக தமிழ் செம்மொழி மாநாட்டை சிறப்பிக்கும் விதமாக எல்லோரும் வாங்கும் விலையில் விற்கப்படும். தங்கள்  சி.டி. மற்றும் டி.வி.டி ப்ளேயர் (எம்.பி.3
உடன்), கணினி, கார், ஐ-போட், மொபைல் போன் ஆகியவற்றில் கேட்கலாம் .

தொடர்பிற்கு :
யுனிவர்சல் இ பப்ளிசர்ஸ்

+91 96291 88882
contactus@universalepublishers.com
www.universalepublishers.com

Sunday, June 20, 2010

புதிய எம்.பி. VS NEW MP

புதிய எம்.பி.,க்களில் குபேரர் மல்லையா : 38 பேர் சொத்து மதிப்பு ரூ.1,285 கோடி

print e-mail   Buzz  Share  
 
பதிவு செய்த நாள் : ஜூன் 20,2010,23:26 IST

புதுடில்லி : சமீபத்தில் ராஜ்ய சபா எம்.பி.,யாக தேர்வாகியுள்ளவர்களில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு 615 கோடி ரூபாய் சொத்து உள்ளது. தற்போது தேர்வாகியுள்ள ராஜ்ய சபா எம்.பி.,க்களின் மொத்த சொத்து மதிப்பு ஆயிரத்து 285 கோடி ரூபாய் என தெரிய வந்துள்ளது.

ராஜ்ய சபாவுக்கு 50க்கும் அதிகமான உறுப்பினர்கள் தற்போது தேர்வாகியுள்ளனர். இவர்களின் 38 எம்.பி.,க்களின் சொத்து மதிப்பை ஜனநாயக தேர்தல் சீர்திருத்த தேசிய கூட்டமைப்பு என்ற தொண்டு அமைப்பு சேகரித்து வெளியிட்டுள்ளது. ராஜ்யசபாவுக்கு தற்போது தேர்வாகியுள்ள எம்.பி.,க்களில் 38 பேரின் மொத்த சொத்து மதிப்பு 1,285 கோடி ரூபாய்க்கும் அதிகம் என இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.இதில், தமிழக எம்.பி.,க்கள் குறித்த தகவலை இந்த அமைப்பு இதில் சேர்க்கவில்லை.ராஜ்ய சபா எம்.பி.,க்களில் அதிக சொத்து மதிப்பு உடையவர், "கிங் பிஷர்' விமான நிறுவன அதிபரான விஜய் மல்லையா. இவருடைய சொத்து மதிப்பு 650 கோடி ரூபாய், என குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தடவை தேர்வானவர்களில் குபேரராக முதலிடத்தில் இருக்கிறார்.

இவருக்கு அடுத்தபடியாக தெலுங்கு தேசம் கட்சி எம்.பி., சத்திய நாராயண சவுத்ரி. இவருக்கு 190 கோடி ரூபாய்க்கு சொத்து உள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி., கன்வர் தீப்புக்கு 82 கோடி ரூபாய் சொத்து உள்ளது.மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேர்வாகியுள்ள அனில் தவே தான் மிகக்குறைந்த சொத்துள்ள எம்.பி.,யாக கருதப்படுகிறார்.இவர், தனக்கு இரண்டு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அளவுக்கு தான் சொத்து உள்ளதாக கணக்கு காட்டியுள்ளார். ராஷ்டிரிய ஜனதா தள எம்.பி., ராம் க்ருபால் யாதவ் 27 லட்சத்துக்கு சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிரபல வக்கீலான ராம் ஜெத்மலானி, ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேர்வாகியுள்ளார். இவரது சொத்து மதிப்பு 29.60 கோடி ரூபாய். மத்திய அமைச்சர் அம்பிகா சோனி, பஞ்சாப் மாநிலத்திலிருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இவரது சொத்து மதிப்பு 17 கோடி ரூபாய். மூத்த காங்கிரஸ் தலைவர் ஆஸ்கார் பெர்னாண்டசுக்கு 15 கோடி ரூபாய்க்கு சொத்து உள்ளது.பாரதிய ஜனதா தலைவர் வெங்கையா நாயுடு, கர்நாடகாவிலிருந்து தேர்வாகியுள்ளார். இவருக்கு ஏழு கோடியே 72 லட்ச ரூபாய் அளவுக்கு சொத்து உள்ளது.

பீகாரிலிருந்து தேர்வாகியுள்ள பா.ஜ.,வின் ராஜிவ் பிரதாப் ரூடிக்கு 4.40 கோடி ரூபாய்க்கு சொத்து உள்ளது. உத்தர பிரதேசத்திலிருந்து தேர்வாகியுள்ள பா.ஜ., செயலர் முக்தார் அப்பாஸ் நக்விக்கு இரண்டு கோடியே 61 லட்ச ரூபாய்க்கு சொத்து உள்ளது.சத்திஸ்கர் மாநிலத்திலிருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள மோஷினா கித்வாய்க்கு இரண்டு கோடியே 20 லட்ச ரூபாய் சொத்து உள்ளது. லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம்விலாஸ் பஸ்வானுக்கு ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய்க்கு சொத்து உள்ளதாம்.ஆந்திராவிலிருந்து தேர்வாகியுள்ள மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் 61 லட்ச ரூபாய் சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tuesday, June 15, 2010

கலைஞர் பிறந்த கதை...

கலைஞர் பிறந்த கதை...

                                                                       
திருவாரூரிலிருந்து பத்து கி. மீ. தூரத்திலிருக்கிறது அந்த ஊர்.திருக்குவளை. திருவாரூரில் இருந்து கச்சனம் என்கிற ஊர் வரைக்கும் தான் பஸ் வசதி. இப்போதிருப்பது போல் அப்போ தெல்லாம் மினி பஸ் என்ன, மாட்டு வண்டி கூட கிடையாது. நடராஜா சர்வீஸ் தான்.கச்சனத்தில் இறங்கி காலரா நடக்க ஆரம்பித்தால் அரை மணி நேரத்துக்குள் திருகுவளைக்கு வந்துவிடலாம். 


முனீஸ்வரன் கோயில் போகும் வழியில் அங்காளம்மன் தெருவில் நெருக்கி அடித்தாற்போல் இருக்கும் நாலைந்து வீடுகள்.அதில் ஒரு விடுதான் கருணாநிதியின் வீடு. இப்போது அந்த வீடு திருக்குவளை பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியாக இருக்கிறது இந்தப்பள்ளிக் கூடம் தான் கருணாநிதியின் வீடு. சுமாரான குடுபம்தான். முத்துவேலருக்கு மூன்றாவதாகப் பிறந்தவர் கருணாநிதி.


திருக்குவளையில் முத்து வேலரைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இசை வேளாளர்  குடுபத்தைச் சேர்ந்த இவர், திருக்குவளையின் அதிகாரபூர்வமற்ற டாக்டர்.லேசான தலைவலியாக இருந்தாலும் சரி, பாம்புக்கடியாக இருந்தாலும் சரி. இவரிடம்தான் வைத்தியம் பார்க்க வேண்டும். எந்த வியாதியாக இருந்தாலும் மருந்து என்ற பெயரில் இவர் தரும் வஸ்து, விபூதி மட்டுமே. அதையும் பய பக்க்தியோடு வரிசையில் நின்று வாங்கிக்கொண்டு போவர்கள். இங்கே பீஸ் கொடுக்காவிட்டாலும் ட்ரீட்மெண்ட் உண்டு. சிக்கலான வியாதியாக இருந்தால் இடும்பன் சாமிக்குப் பூஜை போடச் சொல்வார்.கொஞ்சம் காஸ்ட்லிதான்.ஒரு கள்ளுப் புட்டி, நாலு பீடி தவிர,கோழியைப் பலி கொடுக்க வேண்டியிருக்கும்.


சின்ன வயதிலேயே முத்து வேலருக்குக் கல்யாணமாகி விட்டது. காதல் கல்யாணம்தான். குஞ்சம்மாள் என்ற குத்துவிளக்கு கொஞ்ச நாளைக்கு மட்டுமே எரிந்தது. கல்யாணம் முடிந்து சில வருஷ்ங்களிலேயே குஞ்சம்மாள் உயிரிழந்தார். அடுத்ததாக முத்துவேலர் வேதம்மாளை கல்யாணம் செய்து கொண்டார். அந்த வாழ்க்கையும் ரொம்ப நாள் நீடிக்கவில்லை மூன்றாவதாக
அவர் திருமணம் செய்து கொண்டார் அவர் தான் அஞ்சுகம் அம்மாள்.

குடும்ப வாழ்கை என்னவோ சந்தோஷமாகவே போய்க் கொண்டு ருந்தது. முத்து வேலருக்குத்தான் குழந்தையில்லாத குறை நெருடலாக இருந்தது ஏற்கனவே இரண்டு முறை மனைவியை இழந்த சோகம் வேறு அவரிடம் மிச்சமிருந்து, குழந்தை வேண்டி ஏறி இறங்காத கோவில் இல்லை. அதற்குப் பரிசாகக் கிடைத்தவை, இரண்டு பெண் குழந்தைகள் வாரிசு இல்லையே என்று வருத்தத்தில் இருந்த முத்துவேலருக்கு ஆறுதலாக இருந்தாலும் இதில் மனநிறைவு இல்லை, இரண்டு பெண் குழந்தைகளுக்கும் பெரிய நாயகத்தம்மாள், சண்முகம் சுந்தரம்மாள் என்று பெயர் வைத்தார்கள்.

முத்துவேலரின் கவலை தீரும் நாள் வந்தது 1924-ம் வருஷம் ஜூன் மாதம் முன்றாம் நாள் கருணாநிதி பிறந்தார். முத்துவேலர் வைத்த பெயர் தட்சிணா மூர்த்தி. 


இன்று 87 வது பிறந்தநாள் காணும் அய்யா கலைஞர் திரு. மு. கருணாநிதி அவர்களை வாழ்த்த எனக்கு வயது இல்லை வணங்குகிறேன்.     

சிறந்த 10 ஐ.டி., பதவிகள்

சிறந்த 10 ஐ.டி., பதவிகள் என்னென்ன


print e-mail   Buzz  
பதிவு செய்த நாள் : ஜூன் 14,2010,00:00 IST

சர்வதேசப் பொருளாதார நெருக்கடியிலிருந்து வேலை வாய்ப்பு சந்தை வெகு வேகமாக மீண்டு வருகிறது. நாள் தோறும் ஆயிரக்கணக்கான பணி வாய்ப்புகள் குறித்த தகவல்களையும் நாம் கேட்டு வருகிறோம். குறிப்பாக இந்தப் பிரச்னையால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஐ.டி., துறையிலும் நம்பிக்கைக் கீற்று தென்பட ஆரம்பித்துவிட்டது. ஆனால் ஐ.டி., யில் பொறியியல் படித்துவிட்டு வெளியேறும் பல மாணவர்களுக்கு ஐ.டி., துறையில் எந்தப் பதவியில் இணைவதன் மூலம் வளமான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்பதில் குழப்பம் நிலவுகிறது. ஐ.டி., துறையில் உள்ள நிபுணர்களின் கருத்துக்களின் அடிப்படையிலும், ஐ.டி., துறை சார்ந்த கன்சல்டன்சி நிறுவன நிபுணர்களின் கருத்துக்களின் அடிப்படையிலும் இத்துறை சார்ந்த முதல் 10 பதவிகள் பற்றிய தகவல்கள் இங்கே தரப்படுகின்றன.
எத்திக்கல் ஹேக்கர்கம்ப்யூட்டர் தொடர்புடைய ஒருவரின் ரகசியங்களைத் திருடி, தவறுகளுக்குப் பயன்படுத்துவர்களை 'ஹேக்கர்ஸ்' என்று கூறுகிறார்கள். இப்படி கம்ப்யூட்டர் ரகசியங்களைத் திருடி குற்றம் புரிபவர்களைக் கண்டுபிடிப்பதற்கென்று 'சைபர் கிரைம்' துறையும் தற்போது செயல்பட்டு வருகிறது. ஹேக்கர்களைக் கண்டுபிடிக்கும் துறையை எத்திக்கல் ஹேக்கர் துறை என்று கூறுகிறார்கள். இந்தத் துறையில் சிறப்பு பெற விரும்புபவர்கள் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேஷன், புரொகிராமிங், டிசைன் ஆகிய பிரிவுகளில் திறன் பெற்றவர்களாக இருத்தல் அவசியம்.
சிஸ்டம்ஸ் மேனேஜர்ஒரு நிறுவனத்தின் நடைமுறையில் தொழில் நுட்பத்தை திறமையாக செயல்படுத்துவதில் இவர்கள் முக்கியப் பங்காற்றுகிறார்கள். இதனாலேயே இவர்களை நிறுவனத்தின் தூண் என்று கூறுகிறார்கள். ஒரு நிறுவனத்தில் தொழில் நுட்ப அம்சங்களைப் பற்றி திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல், செயல்படுத்துதல் என்ற பணிகளை இவர்கள் செய்கிறார்கள். பல்வேறு துறை வாரியாக கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில் நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரிக்கும் செயல்களில் ஈடுபடுவதால் இந்தப் பதவிக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளது.
நெட்வொர்க் இன்ஜினியர்ஒரு நிறுவனத்திலுள்ள கம்ப்யூட்டர் களை இன்டர்நெட்டுடன் இணைத்தல், இதற்குத் தேவைப்படும் ரவுட்டர், மோடம், பயர் வால் ஆகியவற்றை கான்பிகர் செய்தல் போன்ற பணிகளை இவர்களே மேற்பார்வையிடுகிறார்கள். இன்றைய நிறுவனங்களின் சூழலில் அங்கு நடைபெறும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை தொடர்ந்து
அதிகரித்து வருவதால் நெட் வொர்க்கிங்கின் தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே எதிர்காலத்தில் நெட்வொர்க்கிங்கின் தேவையும், நெட்வொர்க் மேனேஜர்களின் தேவையும் அதிகரிக்கும்.
பேர்ம்வேர் இன்ஜினியர்
இன்று நாம் உபயோகிக்கும் ஒவ்வொரு எலக்ட்ரானிக் உபகரணத்திலும் 'சிப்'பின் பயன் கட்டாயத் தேவையாகியுள்ளது. கம்ப்யூட்டரிலுள்ள ஹார்டுவேர் கருவிகளில் பொருத்தமான சாப்ட்வேர்களை நிறுவுவதன் மூலம் மட்டுமே ஒவ்வொரு கருவியும் இதர கருவிகளுடன் தகவல் பரிமாறிக் கொள்வது உறுதிப் படுத்தப்படுகிறது. இதற்கான ஆணி வேராக இருப்பவர்கள் இவர்களே. அல்கோரிதம்களை ஆராய்தல், ஒட்டுமொத்த பேர்ம்வேரின் செயல்பாட்டை அதிகப்படுத்துதல் போன்ற தலையாய பணிகளை இவர்களே செய்கிறார்கள்.
வெப் அனலிஸ்ட்டிஜிட்டல் மீடியா மற்றும் இன்டர் நெட்டின் உபயோகம் அதிகரித்து வரும் இன்றைய நவீன யுகத்தில் வெப் அனலிஸ்ட்டுகளின் பணியும் தலையாய பங்கு வகிக்கிறது. பல்வேறு தொழில் சார்ந்த இணைய தளங்களை ஆராய்ந்து நிறுவனத்தின் முடிவெடுக்கும் தளத்தைக் கட்ட இவர்கள் முக்கியப் பங்காற்றுகிறார்கள். நிறுவனத்தின் நிர்வாகத்திற்கு அவ்வப்போது தேவைப்படும் முக்கிய முடிவுகளை எடுக்க இவர்களே உதவுகிறார்கள்.
டிசைன் இன்ஜினியர்ஒரு வடிவத்தின் உள்ளார்ந்த அம்சங்களை வடிவமைத்து உபகரணங்களுக்கு வடிவம் கொடுப்பவர்களையே டிசைன் இன்ஜினியர் என்று கூறுகிறார்கள். இதற்கு இவர்கள் இஅஈ, Nஙீ, இஅகூஐஅ போன்ற சாப்ட்வேர்களைப் பயன்படுத்தி மாதிரிகளை இவர்களே வரைகிறார்கள். சிப்களை வடிவமைப்பதற்கு தற்போது டி.சி.எஸ்., விப்ரோ போன்ற பெரிய நிறுவனங்களும் இந்தியாவில் ஆர்வம் செலுத்தத் துவங்கிவிட்டன. இந்தியாவில் டிசைன் இன்ஜினியரிங் துறை அபரிமிதமாக வளரும் என்று கார்ட்னர் நிறுவனம் கணிக்கிறது. இவ்வளவு பிரகாசமான சூழ்நிலை இருந்த போதும் இந்தியாவிலுள்ள பொறியியற் கல்லூரிகள் ஆண்டுக்கு 250 முதல் 300 பேரை மட்டுமே வி.எல்.எஸ்.ஐ., என்ற வெரி லார்ஜ் சிஸ்டம் இன்டக்ரேஷன் பிரிவில் பயிற்றுவிக்கின்றன. இந்தத் துறையில் இணைய அடிப்படையில் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷனில் பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். இத்துடன் கணிதம், இயற்பியல், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய துறைகளில் நல்ல திறனும், கம்ப்யூட்டர் தொடர்புடைய பல்வேறு லாங்வேஜ்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
ஓபன் சோர்ஸ் ஸ்பெஷலிஸ்ட்ஓபன் சோர்ஸ் ஸ்பெஷலிஸ்டுகள் சோர்ஸ் கோடுகளை அனைவரும் சோதிக்கத் தக்க ஓபன் சோர்ஸ் தொழில் நுட்பத்தில் பணிபுரிகிறார்கள். இதன் மூலமாக அதிகபட்ச நம்பிக்கைக்குரிய, பாதுகாப்பான மற்றும் அதிகத் திறன் வாய்ந்த அப்ளிகேஷன்களைப் பெற முடிந்துள்ளது.
ஹெல்த் ரெகார்ட்ஸ் சிஸ்டம்ஸ் மேனேஜர்பல்வேறு பொதுமக்கள் சார்ந்த திட்டங்களிலும், சேவைகளிலும் மருத்துவ ஆவணங்களை முறைப்படி சேமிப்பது சவாலான வேலையாக உள்ளது. இதனை முறைப்படி சேமிக்காத நிலையில் எதிர்பாராத மற்றும் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுவது கண்கூடான ஒன்றாகும். இதனாலேயே ஹெல்த் ரெகார்ட்ஸ் சிஸ்டம்ஸ் மேனேஜர்களுக்குத் தற்போது கடும் கிராக்கி ஏற்பட்டு வருகிறது. அடுத்த 12 மாதங்களில் 70 ஆயிரத்துக்கும் அதிகமான ஹெல்த் ரெகார்ட்ஸ் சிஸ்டம்ஸ் மேனேஜர்களுக்கான தேவை ஏற்படும் என்று ஒரு கணிப்பு கூறுகிறது.
பிஸினஸ் பிராசஸ் இன்ஜினியர்
ஒரு நிறுவனத்தின் தொழில்ரீதியான செயல்களை நிறுவனத்திற்குள்ளும் தொழிலரங்க அளவிலும் ஆராய்ந்து வடிவமைத்தல் மற்றும் மறுவடிவமைக்கும் பணியைச் செய்பவர்கள் இவர்களே. இந்த ஆண்டு இவர்களுக்கு மிகவும் நிறைவளிக்கும் ஆண்டாக இருக்கும் என்ற கணிப்பு நிலவுகிறது. தொழில் ரீதியான முக்கிய அம்சங்களையும், ஐ.டி., துறை சார்ந்த தொழில் நுட்ப அம்சங்களையும் சரியான விகிதத்தில் பிணைப்பதன் மூலம் வெற்றிக்கான அடிகோலிடுபவர்களும் இவர்களே. இதன் காரணமாக நிறுவனங்களில் இந்தப் பிரிவினர் மிக முக்கியப் பதவிகளைப் பெற முடியும் என்று துறைசார்ந்த நிபுணர்கள் கூறுகிறார்கள்.
கெபாசிட்டி மேனேஜர்ஒரு நிறுவனத்தின் கம்ப்யூட்டர் சர்வரின் செயல்திறன், கொள்ளளவு ஆகியவற்றுடன் இருக்கும் மொத்த ஆதாரங்களின் பயன்பாடு ஆகியவற்றை கண்டறிபவர்கள் கெபாசிட்டி மேனேஜர்கள்தான். இவற்றுடன் கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் குறித்த எதிர்காலத் தேவை, சாதக பாதகங்களைப்பற்றிய திட்டமிடலையும் இவர்களே செய்கிறார்கள். நிறுவனத்தின் செலவீனங்களைக் கட்டுப்படுத்தும் முக்கியமான பணி என்பதால் இந்தப் பிரிவினருக்கு நல்ல கிராக்கி நிலவுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

அந்தமான் நிலத்தட்டில் விலகல்:

அந்தமான் நிலத்தட்டில் விலகல்: “சுனாமி” பேரழிவு ஆபத்து ஏற்படலாம்; நிபுணர் எச்சரிக்கை
சென்னை, ஜூன். 14-
 
இந்தோனேசியா, கடல் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது. பல தடவை சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு வாபஸ் பெறப்பட்டது.
 
பூமிக்கு அடியில் நிலத்தட்டுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக நில நடுக்கத்தின் விளைவுகள் மிகக் கடுமையாக உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே பேராசிரியர் வில்பட் கெஹல் பண்ணல என்ற நிபுணர் நில நடுக்கம் தொடர்பாக சில புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
 
நிகோபார் தீவுக்கும் அந்தமான் தீவுகளுக்கு இடையே இந்து மகா கடல் பகுதியில் நிலத்தட்டில் விலகல் ஏற்பட்டுள்ளதாக இவர் கூறுகிறார். இந்த விலகல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இதன் காரணமாக இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பூகம்பம் ஏற்படும் என்றும் அவர் கூறுகிறார்.
 
எதிர்வரும் நாட்களில் வர இருக்கும் நில நடுக்கம் 8 முதல் 8.5 ரிக்டர் அளவு கோல் அளவுக்கு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த நில நடுக்கத்தால் நிச்சயம் சுனாமி உருவாக வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.
 
கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்படும் என்பதால் இந்தியா மற்றும் இலங்கையின் கிழக்கு கடற்கரைகளுக்கு சேதம் ஏற்படலாம் என்றும் நிபுணர் வில்பட் கெஹல் பண்ணல கூறியுள்ளார்.

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு ஆய்வரங்கம் கருணாநிதி, 24-ந்தேதி தொடங்கி வைக்கிறார் நிகழ்ச்சிகள் விவரம்
சென்னை, ஜூன். 15-
 
கோவையில் வருகிற 23 முதல் 27 வரை உலகத் தமிழ்ச்செம் மொழி மாநாடு நடக்கிறது. இதன் ஆய்வரங்கத்தினை முதல்- அமைச்சர் கருணாநிதி 24-ந்தேதி காலை 9.30 மணிக்குத் தொடங்கி வைக்கிறார்.
 
இந்தியா உள்பட 50 நாடுகளிலிருந்து சிறப்பு அழைப்பாளர்களாகவும், கட்டுரையாளர்களாகவும், நோக்கர்களாகவும், பொழிவாளர்களாகவும், 3000 பேருக்கு மேல் கலந்து கொள்கிறார்கள்.
 
முகப்பரங்கம், கலந்தாய்வரங்கம், கலந்துரையரங்கம், பொழிவரங்கம், அமர்வரங்கம் என நான்கு நிலைகளில் ஆய்வரங்கம் ஜூன் 24 முதல் 27 வரை கொடீசியா வளாகத்தில் நடைபெறவுள்ளது. அமர்வரங்கம் 234 அமர்வுகளில் நடை பெறவுள்ளது. கொடீசியா வளாகத்தில் ஆய்வரங்க நிகழ்வுகளுக்காக 23 அரங்கக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 
தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோ, நக்கீரர், கபிலர், பரணர், ஒளவை, பூங்குன்றனார், வெள்ளி வீதியார், பெருஞ்சித்திரனார், கோவூர்கிழார், சாத்தனார், காக்கைபாடினியார், அம்மூவனார், மாசாத்தியார், நக்கண்ணையார், மாமூலனார், மாங்குடி மருதனார், உருத்திரங்கண்ணனார், நப்பூதனார், பிசிராந்தையார், கல்லாடனார், கம்பர் என்று அரங்கக் கூடங்களுக்கு முதல்- அமைச்சர் பண்டைத் தமிழ் புலவர்களின் பெயர்களைச் சூட்டியுள்ளார்.
 
தொடக்க விழா நடைபெறும் அரங்கம் 5000 பேர் அமரக்கூடிய தொல்காப்பியர் அரங்கமாகும். இந்த அரங்கத்தில் நாள்தோறும் முகப்பரங்கப் பொழிவுகள் காலையில் நடைபெறுகிறது. மேலும் 26.6.10 அன்று பிற்பகல் “சங்க காலம்-அண்மைக்கால ஆய்வுநிலைகள்” எனும் தலைபபில் கலந்தாய்வரங்கம் நடைபெறுகிறது.
 
பொழிவரங்கம், கலந்துரையரங்கம் திருவள்ளூர் அரங்கத்திலும், இளங்கோ அரங்கத்திலும் நடைபெறவுள்ளன. முன்னரே பதிவு செய்து கொண்டுள்ள பேராளர்கள், நோக்காளர்கள் மற்றும் சிறப்பழைப்பாளர்கள் மட்டுமே ஆய்வரங்கத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
 
உலகத்தமிழ் செம்மொழி மாநாடு ஆய்வரங்க நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:-
 
ஆய்வரங்க தொடக்க விழா தொல்காப்பியர் அரங்கத்தில் வருகிற 24-ந் தேதி காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை நடக்கிறது. முதல்-அமைச்சர் கருணாநிதி உலகத்தமிழ் செம்மொழி மாநாடு ஆய்வரங்கத்தை தொடங்கி வைக்கிறார். அமைச்சர் அன்பழகன் வெளியிடும் சிறப்பு மலரையும் பெற்றுக் கொள்கிறார்.

இதற்கு சிவதம்பி தலைமை தாங்குகிறார். தமிழ் அறிஞர்கள் ஜார்ஜ்ஹார்ட், கிறிஸ்டினாமுரு, கந்தையா, திருமலைச்செட்டி உள்பட 9 பேர் பங்கேற்கிறார்கள். பொற்கோ வரவேற்கிறார். வ.செ.குழந்தைசாமி உள்பட 4 பேர் வாழ்த்தி பேசுகிறார்கள். அவ்வை நடராஜன் நன்றி கூறுகிறார்.
 
பிற்பகல் 3.30 மணி முதல் 5 மணி வரை திருவள்ளூர் அரங்கில், உலக நாடுகளில் தமிழும் தமிழரும்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடக்கிறது. க.ப.அறவாணன் தலைமை தாங்குகிறார். இதே நேரத்தில் இளங்கோ அரங்கில் “உலகமயமாதல் சூழ்நிலையில் தமிழ்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடக்கிறது. இதற்கு நாகநாதன் தலைமை தாங்குகிறார். இவற்றில் பல்வேறு அறிஞர்கள் பங்கேற்கிறார்கள். மாலை 5.30 முதல் 6 மணி வரை கொடிசிவளாகத்தில் தமிழ் பல்கலைக்கழகம் வழங்கும் “வலி அறுப்பு” என்ற திருநங்கையர் நாடகம் நடக்கிறது.
 
25-ந்தேதி காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை தொல்காப்பியர் அரங்கில் “சிந்துவெளி எழுத்துச்சிக்கல்: திராவிடத் தீர்வு” என்ற தலைப்பில் முகப்பரங்கம் நடக்கிறது. இதற்கு ஐராவதம் மகா தேவன் தலைமை தாங்குகிறார். பிற்பகல் 3.30 மணி முதல் 5.30 மணி வரை திருவள்ளூர் அரங்கில் தமிழண்ணல் தலைமையில் “தமிழாய்வுச் செல் நெறிமுறைகள்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடக்கிறது. இளங்கோ அரங்கில் “தத்துவ உலகில் தமிழ்” என்ற தலைப்பில் பொழிவரங்கம் நடக்கிறது. இதற்கு தோத்தாத்திரி தலைமை தாங்குகிறார். இதையடுத்து கூத்துப்பட்டரை வழங்கும் “ஆற்றாமை” நாடகம், பூலவாடி முத்து மீனாட்சி குழுவினர் வழங்கும் “அண்ணன் மார்கூத்து” ஆகியவை இடம் பெறுகிறது.
 
26-ந்தேதி காலை 9.15 முதல் 10.15 மணி வரை தொல்காப்பியர் அரங்கில் அமைச்சர் அன்பழகன் தலைமையில் முகப்பரங்கம் நடக்கிறது. பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை ஜார்ஜ் ஹார்ட் தலைமையில், “சங்க காலம்-அண்மைக்கால ஆய்வு நிலைகள்” குறித்து கலந்தாய்வு நடக்கிறது. இதில் பல்வேறு தலைப்புகளில் அறிஞர்கள் கருத்துரை வழங்குகிறார்கள். மாலை 5.30 மணி முதல் 6.15 மணி வரை நடிகை ரோகிணி பங்கேற்கும் “பாஞ்சாலி சபதம்” 6.30 மணி முதல் 7.30 மணி வரை மவுனக்குரல் வழங்கும் “பனித்தீ” ஆகியவை நடக்கிறது.
 
25-ந்தேதி காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை தொல்காப்பியர் அரங்கத்தில் பொன்.கோதண்டராமன் தலைமையில் “இன்றைய நோக்கில் தொல்காப்பியம்” என்ற தலைப்பில் முகப்பரங்கம் நடக்கிறது. 10.30 மணி முதல் 12 மணி வரை திருவள்ளுவர் அரங்கில் “தமிழ் வளர்ச்சி” என்ற தலைப்பில் பொழி வரங்கம் நடக்கிறது. அவ்வை நடராஜன் தலைமை தாங்குகிறார்.
 
இளங்கோ அரங்கில் 12 மணி முதல் 1.30 மணி வரை “படைப்பிலக்கிய நோக்கும் போக்கும்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடக்கிறது. இதற்கு சிவத்தம்பி தலைமை தாங்குகிறார். இதில் கவிஞர் கனிமொழி உள்பட பலர் பங்கேற்கிறார்கள். பிற்பகல் 2.30 மணி முதல் 3.30 மணி வரை “எதிர்கால தமிழ் கவிதை” என்ற தலைப்பில் பொழிவரங்கம் நடக்கிறது. இதற்கு கவிஞர் வைரமுத்து தலைமை தாங்குகிறார்.

Monday, June 14, 2010

Vishnu Image

In the basic Hindu Trinity of Brahma, Vishnu and Shiva, the Hindu god Vishnu is the preserver and protector of creation. Vishnu is the embodiment of mercy and goodness, the self-existent, all-pervading power that preserves the universe and maintains the cosmic order Dharma.
Vishnu is often represented resting on the coiled serpent Shesha, with Vishnu's consort Lakshmi massaging his feet. Vishnu never sleeps and is the deity of Shanti, the peaceful mood. Vishnu does not however tolerate Ego.
Click for a larger image of this Vishnu paintingMost often, the Hindu god Vishnu is shown with four attributes or weapons. In one hand Vishnu holds the conch or Sankha. The second hand of Vishnu holds the disc or Vaijra. The third hand of Vishnu holds the club and in the fourth hand Vishnu holds the lotus or Padma. Vishnu also has a bow called Sarnga and a sword called Nandaka.
Most of the time, good and evil forces are evenly matched in the world. But at times, the balance is destroyed and evil demons get the upper hand. Often in response to a request by the other gods, Vishnu then incarnates in a human form to set the balance right again. 9 Vishnu incarnations are generally recognized as Vishnu avatars, even though some sources also see other important figures of the indian epics as incarnations of Vishnu.


Click for a larger image of this Vishnu incarnation
First incarnation of Vishnu : Matsya or the Fish incarnation : in this form Vishnu saved the Saint Vaivaswata, the hindu variety of the biblical Noah (or vice versa).
Click for a larger image of this Vishnu incarnation
Second incarnation of Vishnu : Kurma or the Turtle incarnation : at the Churning of the Ocean, Vishnu as Koorma (or Kurma) offered his back as a pivot on which to rest the Mount Mandara, used as a churning stick by gods and demons. More information also on the Kurma page.
Varaha Boar Incarnation of Vishnu
Third incarnation of Vishnu : Varaha or the Boar incarnation of Vishnu : he killed the demon Hiranyaksha, recovered the stolen Veda's and released the Earth from the bottom of the ocean.
Click for a larger image of this Vishnu incarnation
Fourth incarnation of Vishnu : Narasingha or the Lion incarnation : as a creature who was half-lion and half-man, Vishnu killed the demon Hiranyashasipu, brother of Niranyaksha, who had gained the boon of immunity from attacks by man, beast or god.
Click for a larger image of this Vishnu incarnation
Fifth incarnation of Vishnu : Vamana or the Dwarf incarnation : he killed the demon Bali, who had gained dominion over the Earth and had chased the gods from the heavens. More can be read on the Vamana page.

Sixth incarnation of Vishnu : Parasurama : he killed the King Kartavirya, who had stolen the holy cow Kamadhenu, which could grant all desires.
Click for a larger image of this Vishnu incarnation
Seventh incarnation of Vishnu : Ram : he killed the demon King Ravana, who had abducted Sita. More on Ram can be read on the Ramayana page.
Click for a larger image of this Vishnu incarnation
Eigth incarnation of Vishnu : Krishna : he killed Kansa, son of a demon and the tyrannical King of Mathura. More on Krishna can be read in the Life of Krishna.
Click for a larger image of this Vishnu incarnation
Ninth incarnation of Vishnu : Buddha : Vishnu incarnated to remove suffering from the world. More on Buddha can be read on the Buddha page.
  Tenth Incarnation of Vishnu : Kalki : still to come at the end of the Kaliyuga or the present age of decline, when Vishnu will appear in person on Earth, seated on a white horse, Kalki, which is his tenth incarnation.