"சிவில் சர்வீசஸ் தேர்வு' முறையில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றம், தமிழ் மீடியத்தில் படிக்கும் கிராமப்புற மாணவர்களின் தேர்ச்சியை பாதிக்கும் வாய்ப்புள்ளதாக அச்சம் நிலவுகிறது. தமிழக மாணவர்களின் தேர்ச்சியை உறுதிப்படுத்த, கல்வி நிறுவனங்கள் தயார்படுத்த வேண்டுமென ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் "சிவில் சர்வீசஸ் தேர்வு' முறையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மூன்று கட்டமாக நடக்கும் இத்தேர்வில், முதல் கட்டமான "பிரிலிமினரி' (ஆரம்ப தேர்வு) தேர்வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக இருந்து வந்த விருப்ப பாட முறை அகற்றப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக "ஆப்டிடியூட்' எனப்படும் திறன் சோதனைக்கான தாள் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி ஆரம்ப தேர்வில் பொது அறிவு (200 மதிப்பெண்), திறன் தாள்(200 மதிப்பெண்) ஆகிய இரண்டு தாள்கள் இடம்பெறும். பொது அறிவுத்தாளில் இந்திய வரலாறு, புவியியல், சர்வதேச அரசியல் உறவுகள் போன்றவை இடம் பெறும். பருவநிலை மாற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
இரண்டாம் தாள் முற்றிலும் புதிதானது. ஆங்கிலத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் மீடியத்தில் படித்த மாணவர்கள், இத்தேர்வில் வெற்றி பெற திணறும் நிலை உருவாகியுள்ளது. இரண்டாம் தாளில், மேலாண்மை படிப்பு நுழைவுத் தேர்வின் தன்மைகள் இடம் பெற்றுள்ளன. வங்கித் தேர்வு, மேலாண்மை, மத்திய கீழ்நிலை பணியாளர் தேர்வுகளின் தன்மைகளும் உள் ளன. இதைத்தவிர, சிவில் சர்வீசஸ் தேர்வின் இரண்டாம் மற்றும் இறுதி கட்டங்களில் தற்போது எந்த மாற்றமும் இல்லை.
புதிய மாற்றங்களின் சாதக, பாதகங்கள் குறித்து, கோவை உயர்கல்வி மையத்தின் தலைவரும், அரசு கலைக் கல்லூரி பேராசிரியருமான கனகராஜ் கூறியதாவது: அனைவருக்கும் பொதுவான தேர்வுத்தாள்கள் கொண்டு வந்திருப்பது வரவேற்கத்தக்கது. இதுவரை மாணவர்கள் பல்வேறு விருப்ப பாடங்களை எடுத்து எழுதியதால், பல குழப்பங்கள் இருந்தன. விருப்ப பாடமுறை நீக்கப் பட்டுள்ளதால் இனி அந்த குழப்பங்கள் வராது. ஆரம்ப கட்ட தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் இதுவரை வெளிப்படையாக தெரிவிக்க முடியவில்லை. புதிய மாற்றத்தால் இனி, மதிப்பெண்களை வெளியிட முடியும். ஒளிவு மறைவு இல்லாமல் நாடு முழுவதும் இனி ஒரே ரேங்க் பட்டியலை வெளியிட முடியும். புதிதாக ஏற்படுத்தப் பட்டுள்ள மாற்றம், கிராமப்புற மாணவர்களை பெரிதும் பாதிக்கும். பழைய முறையில், ஆங்கில புலமைக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருந்தது. தற்போதைய முறையில் இரண்டாம் தாளில் ஆங்கில புலமைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆங்கிலம் நன்கு படித்தவர்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. தமிழ் மீடியத்தில் படித்த மாணவர்களுக்கு இந்த மாற்றம் சிரமத்தை தரும். கிராமப்புற மாணவர்களுக்கும், தமிழ் மீடியத்தில் படிக்கும் மாணவர்களுக்கும் நல்ல ஆங்கில பயிற்சி அளித்தால் இந்த சிக்கலை சமாளிக்க முடியும். இவ்வாறு, பேராசிரியர் கனகராஜ் தெரிவித்தார்.
"சவாலை சமாளிக்கலாம்': பேராசிரியர் கனகராஜ் கூறுகையில், ""கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்து சிவல் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால், புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள், தமிழக மாணவர்களுக்கு புதிய சவால்களாக உருவெடுத்துள்ளன. கல்வியாளர்களும் கல்வி நிறுவனங்களும் இப்புதிய சவால்களை வெற்றி கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். மாற்றங்கள் மூலம் வரும் எந்த சவாலையும், கடின உழைப்பின் மூலம் வெற்றி கொள்ள முடியும்,'' என்றார்.
- நமது நிருபர் -
முனைவர்.இராம.ஞானக்குமரன் MCA.,M.Tech.,Ph.D.,MISTE., https://twitter.com/rgkumaran https://www.youtube.com/@rgkumaran386
உலகின் தலைசிறந்த 10 பேரில் மதுரை இளைஞர் : 1.20 கோடி பேருக்கு உணவு தந்ததற்கு கவுரவம்
மதுரை : ஆதரவற்ற, மனநலம் பாதித்தவர்களுக்கு 2002 முதல் இதுவரை தினமும் மூன்று வேளை உணவு அளித்து வரும் மதுரை டோக் நகரைச் சேர்ந்த நாராயணன் கிருஷ்ணனை(29), உலகின் தலைசிறந்த 10 "ரியல் ஹீரோக்களில்' ஒருவராக சி.என்.என்., வெப்சைட் தேர்வு செய்துள்ளது.
நட்சத்திர ஓட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலைஞரான இவர், 2002ல் சுவிட்சர்லாந்து ஓட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அங்கு செல்வதற்காக மதுரை ரயில்வே ஸ்டேஷன் வந்தார். அங்கே முதியவர் ஒருவர் உணவுக்கு போராடும் அவலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி, வீட்டில் சமைத்து, இது போன்ற மனிதர்களை தேடிச் சென்று உணவு கொடுக்க ஆரம்பித்தார். இதுவரை 1.20 கோடி பேருக்கு தினமும் காலை, மதியம், இரவு என உணவு வழங்கி வருகிறார். இதற்காக "அக்ஷயா டிரஸ்ட்' என்ற அமைப்பையும் "ஸ்பான்சர்கள்' உதவியுடன் நடத்தி வருகிறார். மதுரையை சுற்றி கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிப்பிடித்து உணவு தருகிறார். இதற்காக தனது வாழ்கையை முழுமையாக அர்ப்பணித்துள்ள இவர், சி.என்.என். வெப்சைட்டால், உலகின் தலை சிறந்த 10 ரியல் ஹீரோக்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நட்சத்திர ஓட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலைஞரான இவர், 2002ல் சுவிட்சர்லாந்து ஓட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அங்கு செல்வதற்காக மதுரை ரயில்வே ஸ்டேஷன் வந்தார். அங்கே முதியவர் ஒருவர் உணவுக்கு போராடும் அவலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி, வீட்டில் சமைத்து, இது போன்ற மனிதர்களை தேடிச் சென்று உணவு கொடுக்க ஆரம்பித்தார். இதுவரை 1.20 கோடி பேருக்கு தினமும் காலை, மதியம், இரவு என உணவு வழங்கி வருகிறார். இதற்காக "அக்ஷயா டிரஸ்ட்' என்ற அமைப்பையும் "ஸ்பான்சர்கள்' உதவியுடன் நடத்தி வருகிறார். மதுரையை சுற்றி கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிப்பிடித்து உணவு தருகிறார். இதற்காக தனது வாழ்கையை முழுமையாக அர்ப்பணித்துள்ள இவர், சி.என்.என். வெப்சைட்டால், உலகின் தலை சிறந்த 10 ரியல் ஹீரோக்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சிவில் சர்வீஸ் தேர்வில் மாற்றம் - 20-10-2010
| சிவில் சர்வீஸ் தேர்வில் மாற்றம் - 20-10-2010 |
| புதுடில்லி: ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கான பாடத் திட்டத்தில், வரும் ஆண்டு முதல், புதிய முறை அமல்படுத்தப்படுகிறது. |
| முதல்நிலை தேர்வில், தற்போது பின்பற்றப்படும் விருப்பப் பாட தேர்வு முறை ரத்து செய்யப்படுகிறது. ஐ.ஏ.எஸ்., தேர்வுகளை (சிவில் சர்வீஸ் தேர்வு) மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இதற்கான முதல் நிலை தேர்வில் (பிரிலிமினரி), தற்போது விருப்பப் பாடத் தேர்வு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதன்படி, இத்தேர்வை எழுதுவோர், தாங்கள் விரும்பும் ஏதாவது ஒரு பாடத்தை, தேர்வு செய்து தேர்வு எழுதலாம். தற்போது அந்த முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல், விருப்பப் பாடத் தேர்வு முறை ரத்து செய்யப்படுகிறது. புதிய முறைப்படி, முதல் கட்ட தேர்வு, இரண்டு தாள்களை கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு தாள்களும், 200 மதிப்பெண்களை கொண்டதாக இருக்கும். தேர்வில் பங்கேற்பவர்கள், இந்த இரண்டு தேர்வுகளையும் கட்டாயம் எழுத வேண்டும். முதல் தாளில், தற்போதைய உலக மற்றும் தேசிய நிகழ்வுகள், இந்திய வரலாறு, இந்திய, சர்வதேச புவியியல் - சமூகவியல், பொருளாதார புவியியல், இந்திய அரசியல் மற்றும் நிர்வாக அமைப்பு, பஞ்சாயத்து ராஜ், பொது கொள்கை, உரிமைகள், பொருளாதாரம் மற்றும் சில பாடத் திட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும். இரண்டாவது தாளில், பொது அறிவியல், தகவல் பரிமாற்றத் திறமை, பிரச்னைகளுக்கான தீர்வு, பொது அறிவுத் திறன், அடிப்படை கணிதம், ஆங்கிலத் திறமை மற்றும் சில பாடத் திட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும். |
(BREAKING NEWS) UPSC Declares Official Syllabus for Civil Services (Prelim) Exam 2011 which includes CSAT.
From Civil Service Examination 2011, Preliminary Examination would consist of two papers- Paper I and Paper II.
The syllabus and pattern of the Preliminary Examination would be as under :
(Paper 1) (200 marks) - Duration : Two hrs.
-
Current events of national and international importance
-
History of India and Indian national movement
-
Indian and World Geography- physical, social, economic geography of India and the world
-
Indian Polity and governance – constitution, political system, panchayati raj, public policy, Rights issues, etc.
-
Economic and social development – sustainable development, poverty, inclusion, demographics, social sector initiatives etc.
-
General issues on environmental ecology, bio-diversity and climate change-that donot require subject specialization
-
General science.
(Paper II) (200 marks) – Duration : Two hrs
-
Comprehension
-
Interpersonal skills including communication skills
-
Logical reasoning and analytical ability
-
Decision making and problem solving
-
General mental ability
-
Basic numeracy (numbers and their relations, orders of magnitude etc. (Class X level), Data interpretation (charts, graphs, tables, data sufficiency etc. –Class X level)
-
English language comprehension skills (Class X level)
Courtesy: Union Public Service Commission - UPSC
ஆராய்ச்சிகள் மேம்போக்காக இருக்கக் கூடாது'
"ஆராய்ச்சிகள் மேம்போக்காக இருக்கக் கூடாது'
First Published : 18 Oct 2010 11:35:39 AM IST
Last Updated : 18 Oct 2010 12:33:57 PM IST
டூவீலர் திருட்டை தடுக்க புதிய முறை : கல்லூரி மாணவர் சாதனை
தஞ்சாவூர்: டூவீலர் திருட்டை தடுக்க புதிய தொழில் நுட்ப முறையில் மீட்டர் பாக்ஸ் பொறுத்தும் முறையை கும்பகோணத்தைச் சேர்ந்த மாணவர் கண்டு பிடித்து சாதனை படைத்துள்ளார்.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் விவேக்ராஜ் (23). கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் பி.இ., மெக்கானிக் படித்துள்ளார். இவர் டூவீலரில் சாவிக்கு பதில் கைவிரல் ரேகை மற்றும் ரகசிய எண்ணை பயன்படுத்தி இயக்கக்கூடிய வகையிலும், தானாகவே டூவீலர் பூட்டிக்கொள்ளும் வகையில் ஆட்டோமேடிக் லாக்கையும் கண்டுபிடித்துள்ளார்.
சாதனை கண்டுபிடிப்பு குறித்து விவேக்ராஜ் கூறியதாவது:டூவீலரில் உள்ள மீட்டர் பாக்ஸ் பகுதியில் சாவிக்கு பதில் கைரேகையை பதிவு செய்யும் கருவியை இணைத்து, குடும்பத்தில் உள்ளவர்கள் கைரேகையை அதில் பதிவு செய்ய வேண்டும். டூவீலரில் உரிமையாளர் அனுமதியுடன் ரகசிய எண்ணை பயன்படுத்தி அவரது நண்பர்களுக்கு மட்டும் அது தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.அந்த எண்ணையும், கைவிரல் ரேகையையும் அவ்வப்போது மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள டூவீலரில் கைவிரல் ரேகை, ரகசிய எண் அறிந்தவர் தவிர மற்ற எவரும் டூவீலரை நகர்த்தக்கூட முடியாது.மேலும், போர்க் லாக், பேக்வீல் லாக், பெட்ரோல் லாக் என மூன்று லாக்கரை அமைத்து, அவற்றையும் இதனுடன் இணைத்தால் அம்மூன்றும் டூவீலரை நிறுத்தியதும் லாக் ஆகிவிடும். இதனால், இந்த டூவீலரை உருட்டிச் செல்ல முடியாது. திருப்ப முடியாது. ஓட்டிச் சென்றால் சிறிது தூரத்தில் பெட்ரோல் தீர்ந்து டூவீலர் தானாக நிற்கும். டூவீலரை கைரேகை வைத்து, ரகசிய எண் கொடுத்து ஸ்டார்ட் செய்தால் மட்டுமே பிற லாக்கர் திறந்து டூவீலரை இயக்க முடியும்.இந்த முயற்சிக்கு காப்புரிமை பெற முயன்றுள்ளேன். இதை கண்டறிய எனக்கு 8,500 ரூபாய் செலவானது. வியாபார ரீதியில், அதிக எண்ணிக்கையில் இதை செயல்படுத்தினால் மிகக்குறைந்த விலையில் பயன்படுத்தலாம். டூவீலர் திருட்டையும் தடுக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கண்டுபிடிப்புக்கு அவரது கல்லூரியில் முதல் பரிசும், சென்னை ஐ.ஐ.டி.,யில் 76 கல்லூரிகள் பங்கேற்ற போட்டியில் மூன்றாம் பரிசும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
100 வயதில் பல்கலை.யில் பி.எச்.டி. படிக்கும் சுதந்திர போராட்ட தியாகி
கவுஹாத்தி: தனது பிறந்த நாளை கொண்டாடிய கையோடு பல்கலை.யில் பி.எச்.டி மாணவராக பதிவு செய்துள்ளார் அசாமைச் சேர்ந்த 100- வயது சுதந்திர போராட்ட வீரர். கல்வி கற்க வயது ஒரு தடையல்ல என்பார்கள். அசாம் மாநிலம் கவுஹாத்தியில் புஹோரி கிராமத்தைச் சேர்ந்தவர் பகூலராம் தாஸ் (100). இவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர். கடந்த 1930-ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்கெதிராக போராடி தனது 19-வது வயதில் சிறை சென்றார். இரணடு மாத சிறைவாசத்திற்கு பின் 1945-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அடிப்படையில் இவர் வர்த்தகம், சட்டப்படிப்பில் பட்டம் பெற்றவர். ஆசிரியராக, வழக்கறிஞராக, மாஜிஸ்திரேட் என முக்கிய பதவிகளை வகித்து கடந்த 1971-ம் ஆண்டு ஒய்வுபெற்றார். தற்போது கவஹாத்தி பல்கலைக்கழகத்தில் இந்து மதத்தி்ல் வைணவ ஆதிக்கம் குறித்த ஆராய்ச்சி படிப்பில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், எனது 100 வயதில் அரசியல், மதம், அரசாங்கம் என எத்தனையோ விஷயங்களை தெரிந்து கொண்டேன். எனக்கு எனது சமூகம் சார்ந்த சமுதாயத்திற்கு எதாவது செய்ய வேண்டும் என்பதற்காக எனது கல்வி கற்கும் ஆர்வத்தினை விடவில்லை. அதனால் இந்து மதத்தில் உள்ள கடவுளுக்கும், மனித்தன்மைக்கும் உள்ள தத்துவத்தினை அறிந்து கொள்ள ஆராய்ச்சி படிப்பில் மூலம் அதனை நிறைவேற்றி கொள்ள விரும்புகிறேன் என்றார். பகூலராம் தாஸிற்கு மந்தாஹினி என்ற மனைவியும், 5 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். 10-க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகள் உள்ளனர். மனைவி 1988-ம் ஆண்டு இறந்தார்.. இந்நிலையில், கவுஹாத்தி பல்கலை.யில் துணைவேந்தர் ஒ.கே. மேதி கூறுகையில், இந்த பல்கலை.யில் 100 -வயதில் இதுவரை யாரும் பி.எச்.டி. படிப்பில் சேரவில்லை. இவர்தான் முதல் மாணவர். இதை நினைத்தால் எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இவரது பேரனான கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறுகையில், எனது தாத்தா பகூலராம் தாஸ் ஓய்வு பெற்ற 40 ஆண்டுகள் ஆனாலும் படிப்பில் இன்னமும் ஆர்வம் காட்டிவருவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், முன்மாதிரியாக உள்ளது என்றார்.
Subscribe to:
Posts (Atom)


