முனைவர்.இராம.ஞானக்குமரன் MCA.,M.Tech.,Ph.D.,MISTE., https://twitter.com/rgkumaran
Wednesday, October 13, 2010
படிப்பு மட்டும் முக்கியமல்ல; பண்பும் தேவை
கோவை : ""படிப்பு மட்டுமே முக்கியமல்ல; நல்ல பண்புகளை கற்றுக் கொள்வதும் முக்கியம். வகுப்பில் கற்கும் நல்ல விஷயங்கள் குறித்து மாணவர்கள் வசிக்கும் பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என, சென்னை ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் இளங்கோ பேசினார்.
மக்கள் கல்வி குறித்த "பங்கேற்று நடித்தல்' போட்டி, கோவை ராஜவீதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. டில்லி தேசிய கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும்(என்.சி. இ.ஆர்.டி) சென்னை ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து போட் டியை நடத்துகின்றன. பள்ளி அளவில், வட்டார அளவில், மாவட்ட அளவில், மாநில அளவில் போட்டிகள் நடக்கின்றன. நேற்று நடந்த மாவட்ட அளவிலான போட்டியில் கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 18 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பங்கேற்று போதை பழக்கம், எய்ட்ஸ் நோய், பெண் அடிமை, சுகாதாரம், இனக்கவர்ச்சி உள்ளிட்ட விஷயங்கள் குறித்து நாடகமாக நடித்துக் காட்டினர். போட்டியை அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் கலைவாணி துவக்கி வைத்தார். சென்னை ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் இளங்கோ போட்டிகளை ஆய்வு செய்தார். விழாவில் அவர் பேசியதாவது:வகுப்பில் கற்கும் நல்ல விஷயங்கள் குறித்து மாணவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண் டும். பள்ளி வயதில் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் மாணவர்களின் வாழ்க்கை வீணாகிறது. சக பள்ளி மாணவ மாணவியரை கேலி செய்யும் செயல்களில் ஈடுபடக் கூடாது. பள்ளி வயதில் பாலின ஈர்ப்பால் பாதிக்கப்படாமல் இருப்பது முக்கியம். சுகாதாரம் உட்பட ஒவ்வொரு நல்ல பழக்கமும் வீட்டில் இருந்து துவங்க வேண்டும். பஸ்சில் தொங்கியபடி செல்லக்கூடாது. படித்தவர்கள் மட்டுமே படிக்கட்டில் தொங்கி பயணம் செய்கின்றனர். படிக்காதவர்கள் இருக்கையில் அமர்ந்து பாதுகாப்பாக பயணம் செய்கின்றனர். நல்ல பண்புகளை பள்ளிக் கல்வி கற்றுத் தருகிறது. இது போல் விதிமுறைகளை மீறுவதால் நல்ல பண்புகளை பள்ளியில் கற்கும் நோக்கம் வீணாகிறது. இவ்வாறு, இளங்கோ பேசினார்.
போட்டியில் சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடத்தையும், அன்னூர் ஒன்றியம் காட்டம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடத்தையும், மடத்துக்குளம் ஒன்றியம் குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். இவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது.தேர்வான மாணவ மாணவியர் அடுத்தபடியாக, மதுரை கல்லுப்பட்டியில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.
மாநில அளவில் முதலிடம் பெறும் பள்ளி மண்டல அளவிலும் அதன் பின் டில்லியில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியிலும் பங்கேற்பர். ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இணை இயக்குனர் ஆரோக்கியசாமி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் பிரேம் அதிபன், துணை முதல்வர் ரீட்டா, பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகரன், சபர்பன் பள்ளி முதல்வர் சுப்ரமணியன், இமயம் அமைப்பின் ஒருங் கிணைப்பாளர் பரமேஸ்வரி உட்பட மாணவ மாணவியர், ஆசிரியர்கள் பலர் பங் கேற்றனர்.
தங்கம் வென்றார் தமிழக வீரர் சரத் கமல் : டேபிள் டென்னிசில் அசத்தல்
புதுடில்லி: காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் தமிழக வீரர் சரத் கமல் மற்றும் சுபாஜித் சகா ஜோடி இணைந்து இந்தியாவுக்கு தங்கம் பெற்று தந்தது. குத்துச்சண்டையில் மனோஜ் குமார், சுரன்ஜாய் சிங், பரம்ஜித் சமோதா ஆகிய 3 இந்திய வீரர்கள் தங்கம் வென்று, சாதித்தனர்.
டில்லியில், 19வது காமன்வெல்த் போட்டி நடக்கிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு டேபிள் டென்னிஸ் பைனலில் இந்தியாவின் அஜந்தா சரத் கமல், சுபாஜித் சகா ஜோடி, சிங்கப்பூரின் நிங் கயோ, ஜி யங் ஜோடியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான போட்டியின் முதல் செட்டை சிங்கப்பூர் ஜோடி 11-9 என கைப்பற்றியது. பின்னர் எழுச்சி கண்ட இந்திய ஜோடி அடுத்த இரண்டு செட்டை 12-10, 11-4 என தன்வசப்படுத்தியது. இதற்கு சிங்கப்பூர் ஜோடி 11-5 என 4வது செட்டில் பதிலடி கொடுத்தது. இதனால் போட்டி 2-2 என சமநிலை அடைந்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஜோடி 11-8 என கைப்பற்றியது. இறுதியில் சரத்-சகா ஜோடி 9-11, 12-10, 11-4, 5-11, 11-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, தங்கப் பதக்கம் வென்றது.
மனோஜ் தங்கம்:ஆண்களுக்கான "லைட் வெல்டர் வெயிட்' 64 கி.கி., எடைப்பிரிவு குத்துச்சண்டை பைனலில் இந்தியாவின் மனோஜ் குமார், இங்கிலாந்தின் பிராட்லி சவுண்டர்சை எதிர்கொண்டார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மனோஜ் குமார் 11-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப் பதக்கம் வென்றார்.
சுரன்ஜாய் அதிர்ஷ்டம்:ஆண்களுக்கான "பிளை வெயிட்' 52 கி.கி., எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் சுரன்ஜாய் சிங், கென்யாவின் பென்சன் ஜங்கிரு மோதுவதாக இருந்தது. ஆனால் கென்ய வீரர் காயம் காரணமாக போட்டியில் பங்கேற்காததால், சுரன்ஜாய் சிங் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
சமோதா அபாரம்:ஆண்களுக்கான "சூப்பர் ஹெவி வெயிட்' +91 கி.கி., எடைப்பிரிவு குத்துச்சண்டை பைனலில் இந்தியாவின் பரம்ஜித் சமோதா, டிரினிடாட் டுபாகோவின் அப்துலை சந்தித்தார். இதில் சமோதா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கம் வென்றார். இதன்மூலம் குத்துச்சண்டை போட்டியில் 3 தங்கப் பதக்கம் கிடைத்தது.
ஹீனா வெள்ளி:பெண்களுக்கான தனிநபர் 10 மீ., "ஏர் பிஸ்டல்' பிரிவில் இந்தியாவின் ஹீனா சித்து பங்கேற்றார். இதில் 481.6 புள்ளிகள் பெற்ற ஹீனா, 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இவரை விட 0.3 புள்ளிகள் கூடுதலாக பெற்ற மலேசியாவின் சின் பிபியனா தங்கம் வென்றார். ஆஸ்திரேலியாவின் டினா அஸ்பான்டியரோவா (478.8 புள்ளி) வெண்கலப் பதக்கம் வென்றார்.
சமரேஷ் வெண்கலம்:ஆண்களுக்கான தனிநபர் 25 மீ., "ஸ்டேன்டர்டு பிஸ்டல்' பிரிவில் இந்தியாவின் சமரேஷ் ஜங் பங்கேற்றார். இதில் 559 புள்ளிகள் பெற்ற சமரேஷ் 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். இதில் சிங்கப்பூரின் பின் கெய் (570 புள்ளி), டிரினிடாட் டுபாகோவின் ரோஜர் பீட்டர் டேனியல் (563 புள்ளி) முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
நரங் ஏமாற்றம்:ஆண்களுக்கான தனிநபர் 50 மீ., "ரைபிள் புரோன்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ககன் நரங் பங்கேற்றார். இதில் நரங் மற்றும் இலங்கையின் மங்கலா சமரகூன் தலா 590 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தனர். பின்னர் நடந்த "டை பிரேக்கர்' சுற்றில் ககன் நரங் 51.6 புள்ளிகள் பெற்றார். இலங்கை வீரர் 53.2 புள்ளிகள் பெற்று, இறுதி சுற்றுக்கு முன்னேறினார். நேற்று முன்தினம் நடந்த 50 மீ., "ரைபிள் புரோன்' இரட்டையர் பிரிவிலும் ககன் நரங், இறுதி சுற்றுக்கு முன்னேறாமல் ஏமாற்றினார்.
இதுகுறித்து ககன் நரங் கூறுகையில், ""காமன்வெல்த் போட்டியில் எனது செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது. முன்னதாக நான்கு பதக்கம் வென்ற போதிலும், "புரோன்' பிரிவு போட்டிகளில் தடுமாற்றம் கண்டது ஏமாற்றம் அளிக்கிறது. இம்முறை இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இது அடுத்து வரும் ஆசிய விளையாட்டு போட்டியிலும் தொடரும் என நினைக்கிறேன்,'' என்றார்.
இந்தியாவுக்கு நன்றி : ஆண்களுக்கான "பான்டம் வெயிட்' 56 கி.கி., எடைப்பிரிவு குத்துச்சண்டை பைனலில் இலங்கையின் மஞ்சு வானியாராச்சி, வேல்ஸ் வீரர் மெக்கோல்டுரிக்கை வீழ்த்தி, தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம் 72 ஆண்டுகளுக்கு பின் காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் இலங்கைக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. முன்னதாக கடந்த 1938ல் நடந்த சிட்னியில் நடந்த போட்டியில் இலங்கையின் பார்னி ஹென்ரிகஸ் தங்கம் வென்றிருந்தார். தவிர, 60 ஆண்டுக்கு பின் காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் இலங்கைக்கு பதக்கம் கிடைத்துள்ளது. முன்னதாக கடந்த 1950ல் ஆக்லாந்தில் நடந்த போட்டியில் 2 வெள்ளி, ஒரு வெண்கலம் உட்பட 3 பதக்கம் குத்துச்சண்டையில் கிடைத்துள்ளது.
இதுகுறித்து இவரது பயிற்சியாளர் டியன் கோம்ஸ் கூறுகையில், ""பாட்டியாலாவில், இந்திய பயிற்சியாளர் குர்பாக்ஸ் சிங் சாந்துவிடம் மஞ்சு வானியாராச்சி பயிற்சி மேற்கொண்டார். இப்பயிற்சியின் மூலம் இலங்கைக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. இதேபோல கடந்த 2008ல் நடந்த பீஜிங் ஒலிம்பிக் போட்டிக்கு முன் வானியாராச்சி, சாந்துவிடம் பயிற்சி மேற்கொண்டார். ஒலிம்பிக், காமன்வெல்த் உள்ளிட்ட மிகப் பெரும் தொடருக்கு முன், இந்தியாவில் பயிற்சி மேற்கொள்ள இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு இந்தியாவுக்கும், குத்துச்சண்டை கூட்டமைப்புக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.
காஸ்யப் வெண்கலம் : பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் நடந்த 3வது இடத்துக்கான போட்டியில், இந்தியாவின் சேட்டன் ஆனந்த், காஸ்யப் மோதினர். இதில் காஸ்யப் வெற்றி பெற்று, வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

வானளாவிய மாளிகைக்கு குடிபெயரும் முகேஷ் அம்பானி
மும்பை : இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, "ஆண்டிலியா' என்ற 27 அடுக்கு மாளிகையில் விரைவில் குடியேற இருக்கிறார்.
இந்தியாவின் மிகப்பெரிய வணிக சாம்ராஜ்யமான, "ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' தலைவர் முகேஷ் அம்பானி (54)யின் சொத்து மதிப்பு 27 பில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அவரது மனைவி நிடா, திருபாய் அம்பானி சர்வதேச பள்ளி மற்றும் மும்பை இந்தியன் ஐ.பி.எல்., கிரிக்கெட் அணியையும் நிர்வகித்து வருகிறார். முகேஷ், நிடா மற்றும் அவர்களது குழந்தைகள் ஆகாஷ் , அனந்த் மற்றும் இஷா ஆகிய ஐந்து பேர் வசிப்பதற்காக, தெற்கு மும்பையில் "ஆண்டிலியா' என்ற மிகப் பெரிய ஆடம்பர மாளிகை கட்டப்பட்டுள்ளது. அந்த பகுதியில், எந்த பக்கமிருந்து பார்த்தாலும், இந்த மாளிகை தெரியும் வகையிலும், உலகில் வேறு எங்கும் இல்லாத அளவிலும், மிகுந்த பொருட்செலவிலும் இந்த பிரமாண்ட மாளிகை எழுந்துள்ளது.
வரும் 28ம் தேதி மிகப் பெரிய அளவில் கிரக பிரவேசம் நடத்தி, அந்த வீட்டில் குடியேற இருக்கிறார் முகேஷ். 27 தளங்களைக் கொண்ட இந்த பிரமாண்ட மாளிகையின் உச்சியில், மூன்று ஹெலிகாப்டர்கள் இறங்குவதற்கான தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒன்பது லிப்ட்டுகள் உள்ளன. முதல் ஆறு தளங்களில் 160 கார்கள் நிறுத்துவதற்காக கார் ஷெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர ஆடம்பர நீச்சல் குளம், சினிமா தியேட்டர், ஹெல்த் கிளப், சலூன் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தனிநபர் வசிப்பதற்கென்று இந்த அளவுக்கு ஆடம்பரமாக, உலகின் வேறு எந்த பகுதியிலும் இத்தகைய வீடு கட்டப்படவில்லை. வீடு இப்படி பிரமாண்டம் என்றால், அந்த வீட்டிற்குப் பக்கத்தில் பிர்லா குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
உலகின் மிகச் சிறந்த கட்டடக்கலை நிபுணர்களைக் கொண்டு, ஏழு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது இந்த மாளிகை. இதை சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தவர்களும், இந்த வீட்டின் பிரமாண்டத்தையும், ஆடம்பரத்தையும் பார்த்து மிரண்டு போயுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "லட்சுமி மிட்டல் உட்பட, உலக பணக்காரர்களின் வீடுகளைப் பார்த்துள்ளோம். அனைத்திலும் இது தலை சிறந்ததாக உள்ளது' என, ஆச்சரியம் தெரிவிக்கின்றனர்.
thanks for dinamalr for everyone 14.10.10

Monday, October 11, 2010
இந்தியாவுக்கு 30-வது தங்கம்
இந்தியாவுக்கு 30-வது தங்கம்
First Published : 12 Oct 2010 01:46:46 AM IST
Last Updated :
தில்லி காமன்வெல்த்தில் மகளிர் வட்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்ற பின்னர் தேசியக் கொடியுடன் மைதானத்தை மகிழ்ச்சியுடன் வலம் வருகிறார் இந்திய வீராங்கனை
புது தில்லி, அக்.11: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா 30-வது தங்கத்தை வென்றது. தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்தியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 6 வெண்கலங்களை கைப்பற்றியது. வட்டு எறிதல் போட்டியின் மகளிர் பிரிவில் 3 பதக்கங்களை இந்திய வீராங்கனைகள் வென்று புதிய வரலாறு படைத்தனர். வட்டு எறிதலில் இந்திய வீராங்கனைகள் கிருஷ்ண பூனியா, ஹர்வந்த் கெüர், சீமா அந்தில் ஆகியோர் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலத்தைக் கைப்பற்றினர். துப்பாக்கி சுடுதல்: மகளிர் துப்பாக்கி சுடுதல் 50 மீட்டர் ரைபிள் புரோன் போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வினி சாவந்த்-மீனா குமாரி ஜோடி வெண்கலம் வென்றது. குத்துச்சண்டை: குத்துச்சண்டையில் இந்திய வீரர்கள் அமன்தீப் சிங், ஜெய் பகவான், தில்பாக் சிங், விஜேந்தர் சிங் ஆகியோர் அரை இறுதியில் தோல்வியுற்று ஏமாற்றினர். அரை இறுதி தோல்வி மூலம் அவர்களுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. சாதனை சமன்: இதையடுத்து பதக்கப்பட்டியலில் இந்தியா 30 தங்கம், 23 வெள்ளி, 28 வெண்கலங்களுடன் 2-ம் இடத்தில் உள்ளது. இதன்மூலம் மான்செஸ்டர் காமன்வெல்த்தில் இந்தியா வென்ற தங்கப் பதக்கங்களை, தில்லி காமன்வெல்த்தில் சமன் செய்துள்ளது. மான்செஸ்டர் போட்டியின் போது இந்தியா 30 தங்கம், 22 வெள்ளி, 17 வெண்கலங்களை வென்றது. தற்போது தில்லி போட்டியில் 30 பதக்கங்களை வென்றதன்மூலம் மான்செஸ்டர் பதக்கப் பட்டியல் பெற்ற தங்க பதக்க எண்ணிக்கையை இந்தியா சமன் செய்துள்ளது.
இலவச ஆன்டி வைரஸ் சேவையை விரிவுபடுத்தும் மைக்ரோசாப்ட்
புதுடில்லி : இந்தியாவின் முன்னணி நிறுவனமான மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனம், சிறு மற்றும் நடுத்தர வர்த்தக மக்களுக்கும் , ஆன்டி வைரஸ் புரோகிராம்களை இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவன விண்டோஸ் கிளையண்ட் பிஜி உயர் அதிகாரி பங்கஜ் உகே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : மைக்ரோசாப்ட் நிறுவனம், வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களுக்கு, மைக்ரோசாப்ட எசன்சியல்ஸ் என்ற பெயரில் ஆன்டி வைரஸ் புரோகிறாம்களை இலவசமாக வழங்கி வருகிறது. இந்நிலையில் சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை மக்களும் பயன்பெறும் வகையில், 10 கம்ப்யூட்டர்கள் வரை பயன்படுத்துவதற்கான ஆன்டி வைரஸ் புரோகிராம்களை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது. இதற்காக, ஹெச்பி நிறுவனத்துடன் மைக்ரோசாப்ட் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாகவும், இதன்மூலம் ஹெச்பி நிறுவனத்தின் நோட்புக்குகளை வாங்கும் போது அதனுள்ளே மைக்ரோசாப் எசன்சியல்ஸ் விண்டோசுடன் இணைக்கப்பட்டிருக்கும் என்றும், இதற்காக, தனியாக எந்தவொரு கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என்றும், இதனைக் கொண்டு 10 கம்ப்யூட்டர் அல்லது நோட்புக்குகளுக்கு ஆன்டி வைரஸ் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்ய முடியும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thursday, October 7, 2010
Subscribe to:
Posts (Atom)