Wednesday, October 27, 2010

மாணவர் உயிரை காப்பாற்ற அனைத்து கல்லூரி மாணவர்களும் கைகோர்ப்பு

மதுரை : மதுரையில் சாலை விபத்தில் சிக்கி, மூளையில் அடிபட்டு, தீவிர சிகிச்சையில் உள்ள கல்லூரி மாணவரை காப்பாற்ற, அனைத்து கல்லூரி மாணவர்களும் நிதி திரட்டுகின்றனர்.

மதுரை மாவட்டம் குமாரம் அருகே வடுகபட்டி விவசாயி திருமால் மகன் கவுதம்(20). வேலம்மாள் பொறியியற் கல்லூரியில் மூன்றாமாண்டு எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படிக்கிறார். இவரது சக மாணவர் மற்றொரு கவுதம்(20). இவரும் வடுகபட்டி பகுதியைச் சேர்ந்தவர். தினமும் இருவரும் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று வந்தனர். அக்.,11ல் கல்லூரி செல்ல ரிசர்வ்லைன் பகுதியில் (ஹெல்மெட் அணியவில்லை) வந்தனர். அப்போது அரசு டவுன் பஸ் மோதியதில், மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த கவுதம் பலியானார்.

காயமடைந்த திருமால் மகன் கவுதம், மூளையில் அடிபட்டு வடமலையான் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். தொடர் சிகிச்சைக்கு 9 லட்சம் ரூபாய் செலவாகும் என்பதால், சக கல்லூரி மாணவர்கள் இருநாட்களில் 1.48 லட்சம் ரூபாய் வசூலித்து கொடுத்தனர். இதை கேள்விபட்ட மற்ற கல்லூரி மாணவர்களும் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் சிக்கியவர்களிடம் கிடைத்ததை "பறிக்கும்' இக்காலத்தில், ஒரு உயிரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட் டுள்ள மாணவர்களின் செயல் பாராட்டுக்குரியது. பொதுமக்களும் உதவ விரும்பினால், மேலும் விவரங்கள் அறிய 97860 88818, 99445 90405ல் தொடர்பு கொள்ளலாம்.see dinamalar 28.10.10

புதிய முறையால் சிவில் சர்வீசஸ் தேர்வில் கிராம மாணவர்களின் தேர்ச்சி குறையும் அபாயம்

"சிவில் சர்வீசஸ் தேர்வு' முறையில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றம், தமிழ் மீடியத்தில் படிக்கும் கிராமப்புற மாணவர்களின் தேர்ச்சியை பாதிக்கும் வாய்ப்புள்ளதாக அச்சம் நிலவுகிறது. தமிழக மாணவர்களின் தேர்ச்சியை உறுதிப்படுத்த, கல்வி நிறுவனங்கள் தயார்படுத்த வேண்டுமென ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் "சிவில் சர்வீசஸ் தேர்வு' முறையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மூன்று கட்டமாக நடக்கும் இத்தேர்வில், முதல் கட்டமான "பிரிலிமினரி' (ஆரம்ப தேர்வு) தேர்வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக இருந்து வந்த விருப்ப பாட முறை அகற்றப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக "ஆப்டிடியூட்' எனப்படும் திறன் சோதனைக்கான தாள் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி ஆரம்ப தேர்வில் பொது அறிவு (200 மதிப்பெண்), திறன் தாள்(200 மதிப்பெண்) ஆகிய இரண்டு தாள்கள் இடம்பெறும். பொது அறிவுத்தாளில் இந்திய வரலாறு, புவியியல், சர்வதேச அரசியல் உறவுகள் போன்றவை இடம் பெறும். பருவநிலை மாற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

இரண்டாம் தாள் முற்றிலும் புதிதானது. ஆங்கிலத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் மீடியத்தில் படித்த மாணவர்கள், இத்தேர்வில் வெற்றி பெற திணறும் நிலை உருவாகியுள்ளது. இரண்டாம் தாளில், மேலாண்மை படிப்பு நுழைவுத் தேர்வின் தன்மைகள் இடம் பெற்றுள்ளன. வங்கித் தேர்வு, மேலாண்மை, மத்திய கீழ்நிலை பணியாளர் தேர்வுகளின் தன்மைகளும் உள் ளன. இதைத்தவிர, சிவில் சர்வீசஸ் தேர்வின் இரண்டாம் மற்றும் இறுதி கட்டங்களில் தற்போது எந்த மாற்றமும் இல்லை.

புதிய மாற்றங்களின் சாதக, பாதகங்கள் குறித்து, கோவை உயர்கல்வி மையத்தின் தலைவரும், அரசு கலைக் கல்லூரி பேராசிரியருமான கனகராஜ் கூறியதாவது: அனைவருக்கும் பொதுவான தேர்வுத்தாள்கள் கொண்டு வந்திருப்பது வரவேற்கத்தக்கது. இதுவரை மாணவர்கள் பல்வேறு விருப்ப பாடங்களை எடுத்து எழுதியதால், பல குழப்பங்கள் இருந்தன. விருப்ப பாடமுறை நீக்கப் பட்டுள்ளதால் இனி அந்த குழப்பங்கள் வராது. ஆரம்ப கட்ட தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் இதுவரை வெளிப்படையாக தெரிவிக்க முடியவில்லை. புதிய மாற்றத்தால் இனி, மதிப்பெண்களை வெளியிட முடியும். ஒளிவு மறைவு இல்லாமல் நாடு முழுவதும் இனி ஒரே ரேங்க் பட்டியலை வெளியிட முடியும். புதிதாக ஏற்படுத்தப் பட்டுள்ள மாற்றம், கிராமப்புற மாணவர்களை பெரிதும் பாதிக்கும். பழைய முறையில், ஆங்கில புலமைக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருந்தது. தற்போதைய முறையில் இரண்டாம் தாளில் ஆங்கில புலமைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆங்கிலம் நன்கு படித்தவர்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. தமிழ் மீடியத்தில் படித்த மாணவர்களுக்கு இந்த மாற்றம் சிரமத்தை தரும். கிராமப்புற மாணவர்களுக்கும், தமிழ் மீடியத்தில் படிக்கும் மாணவர்களுக்கும் நல்ல ஆங்கில பயிற்சி அளித்தால் இந்த சிக்கலை சமாளிக்க முடியும். இவ்வாறு, பேராசிரியர் கனகராஜ் தெரிவித்தார்.

"சவாலை சமாளிக்கலாம்': பேராசிரியர் கனகராஜ் கூறுகையில், ""கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்து சிவல் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால், புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள், தமிழக மாணவர்களுக்கு புதிய சவால்களாக உருவெடுத்துள்ளன. கல்வியாளர்களும் கல்வி நிறுவனங்களும் இப்புதிய சவால்களை வெற்றி கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். மாற்றங்கள் மூலம் வரும் எந்த சவாலையும், கடின உழைப்பின் மூலம் வெற்றி கொள்ள முடியும்,'' என்றார்.

                                                                                                                          - நமது நிருபர் -

உலகின் தலைசிறந்த 10 பேரில் மதுரை இளைஞர் : 1.20 கோடி பேருக்கு உணவு தந்ததற்கு கவுரவம்

மதுரை : ஆதரவற்ற, மனநலம் பாதித்தவர்களுக்கு 2002 முதல் இதுவரை தினமும் மூன்று வேளை உணவு அளித்து வரும் மதுரை டோக் நகரைச் சேர்ந்த நாராயணன் கிருஷ்ணனை(29), உலகின் தலைசிறந்த 10 "ரியல் ஹீரோக்களில்' ஒருவராக சி.என்.என்., வெப்சைட் தேர்வு செய்துள்ளது.

நட்சத்திர ஓட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலைஞரான இவர், 2002ல் சுவிட்சர்லாந்து ஓட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அங்கு செல்வதற்காக மதுரை ரயில்வே ஸ்டேஷன் வந்தார். அங்கே முதியவர் ஒருவர் உணவுக்கு போராடும் அவலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி, வீட்டில் சமைத்து, இது போன்ற மனிதர்களை தேடிச் சென்று உணவு கொடுக்க ஆரம்பித்தார். இதுவரை 1.20 கோடி பேருக்கு தினமும் காலை, மதியம், இரவு என உணவு வழங்கி வருகிறார். இதற்காக "அக்ஷயா டிரஸ்ட்' என்ற அமைப்பையும் "ஸ்பான்சர்கள்' உதவியுடன் நடத்தி வருகிறார். மதுரையை சுற்றி கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிப்பிடித்து உணவு தருகிறார். இதற்காக தனது வாழ்கையை முழுமையாக அர்ப்பணித்துள்ள இவர், சி.என்.என். வெப்சைட்டால், உலகின் தலை சிறந்த 10 ரியல் ஹீரோக்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Wednesday, October 20, 2010

சிவில் சர்வீஸ் தேர்வில் மாற்றம் - 20-10-2010

சிவில் சர்வீஸ் தேர்வில் மாற்றம் - 20-10-2010
புதுடில்லி: ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கான பாடத் திட்டத்தில், வரும் ஆண்டு முதல், புதிய முறை அமல்படுத்தப்படுகிறது.
முதல்நிலை தேர்வில், தற்போது பின்பற்றப்படும் விருப்பப் பாட தேர்வு முறை ரத்து செய்யப்படுகிறது. ஐ.ஏ.எஸ்., தேர்வுகளை (சிவில் சர்வீஸ் தேர்வு) மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இதற்கான முதல் நிலை தேர்வில் (பிரிலிமினரி), தற்போது விருப்பப் பாடத் தேர்வு முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

இதன்படி, இத்தேர்வை எழுதுவோர், தாங்கள் விரும்பும் ஏதாவது ஒரு பாடத்தை, தேர்வு செய்து தேர்வு எழுதலாம். தற்போது அந்த முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல், விருப்பப் பாடத் தேர்வு முறை ரத்து செய்யப்படுகிறது. புதிய முறைப்படி, முதல் கட்ட தேர்வு, இரண்டு தாள்களை கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு தாள்களும், 200 மதிப்பெண்களை கொண்டதாக இருக்கும். தேர்வில் பங்கேற்பவர்கள், இந்த இரண்டு தேர்வுகளையும் கட்டாயம் எழுத வேண்டும்.

முதல் தாளில், தற்போதைய உலக மற்றும் தேசிய நிகழ்வுகள், இந்திய வரலாறு, இந்திய, சர்வதேச புவியியல் - சமூகவியல், பொருளாதார புவியியல், இந்திய அரசியல் மற்றும் நிர்வாக அமைப்பு, பஞ்சாயத்து ராஜ், பொது கொள்கை, உரிமைகள், பொருளாதாரம் மற்றும் சில பாடத் திட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும். இரண்டாவது தாளில், பொது அறிவியல், தகவல் பரிமாற்றத் திறமை, பிரச்னைகளுக்கான தீர்வு, பொது அறிவுத் திறன், அடிப்படை கணிதம், ஆங்கிலத் திறமை மற்றும் சில பாடத் திட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

UPSC Declares Official Syllabus for Civil Services

UPSC Declares Official Syllabus for Civil Services

(BREAKING NEWS) UPSC Declares Official Syllabus for Civil Services (Prelim) Exam 2011 which includes CSAT.


From Civil Service Examination 2011, Preliminary Examination would consist of two papers- Paper I and Paper II. 

The syllabus and pattern of the Preliminary Examination would be as under :

(Paper 1) (200 marks) - Duration : Two hrs.

  • Current events  of national and international importance

  • History of India  and Indian national movement

  • Indian and World Geography- physical, social, economic geography of India and the world

  • Indian Polity and governance – constitution, political system, panchayati raj, public policy, Rights issues, etc.

  • Economic and social development – sustainable development, poverty, inclusion, demographics, social sector initiatives etc.

  • General issues on environmental ecology, bio-diversity and climate change-that  donot require subject specialization

  • General science.

(Paper II) (200 marks) – Duration : Two hrs

  • Comprehension

  • Interpersonal skills including communication skills

  • Logical reasoning and analytical ability

  • Decision making and problem solving

  • General mental ability

  • Basic numeracy (numbers and their relations, orders of magnitude etc. (Class X level), Data interpretation (charts, graphs, tables, data sufficiency etc. –Class X level)

  • English language comprehension skills (Class X level)


Courtesy: Union Public Service Commission - UPSC

Tuesday, October 19, 2010

ஆராய்ச்சிகள் மேம்போக்காக இருக்கக் கூடாது'

"ஆராய்ச்சிகள் மேம்போக்காக இருக்கக் கூடாது'

First Published : 18 Oct 2010 11:35:39 AM IST

Last Updated : 18 Oct 2010 12:33:57 PM IST

தஞ்சாவூர், அக். 17: ஆராய்ச்சிகள் எப்போதும் மேம்போக்கான நிலையில் இருக்கக் கூடாது என்றார் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணைவேந்தர் நல். ராமச்சந்திரன்.  பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய ஆராய்ச்சியாளர்கள் மேம்பாடு குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கைத் தொடங்கி வைத்து மேலும் அவர் பேசியது:  ஆராய்ச்சியாளர்கள் தங்களது பட்டறிவை மேம்படுத்துவது மட்டுமன்றி, ஆராய்ச்சி மனப்பாங்கிலும் வேரூன்றி இருக்க வேண்டும்.  இளைஞர்கள் ஆராய்ச்சி மனப்பான்மையை சிறுவயதில் இருந்தே வளர்க்க வேண்டும். இந்த நிலை தற்போது பள்ளிகளில் தொடங்கி பல்கலைக் கழகம் வரை செயல்படுத்தப்படுகிறது. ஆராய்ச்சி என்பது மேம்போக்காகச் செய்வது அல்ல.   சிந்திக்கும் ஆற்றலை வெளிப்படுத்தி, புதிய கண்டுபிடிப்புகள் உருவாக்கப்பட்டால் தான் முன்னேற்றத்தைக் காண முடியும் என்றார் நல். ராமச்சந்திரன்.  திருச்சி ஜெ.ஜெ. பொறியியல் கல்லூரி முதல்வர் ராமேஸ்வரன் பேசியது:  பல்துறை சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்கள் முன்னோர் பின்பற்றிய அதே முறைகளைக் கையாளாமல் இன்றையச் சூழலுக்கேற்ப ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.  தவிர, ஆய்வுகள் சமுதாய நோக்கில் அமைய வேண்டும். அப்போதுதான் ஆய்வு என்பது தன்னிறைவு பெற்றதாக இருக்க முடியும் என்றார் ராமேஸ்வரன்.  பல்கலைக்கழக ஆங்கிலத் துறைத் தலைவர் பழனி அரங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Monday, October 18, 2010

டூவீலர் திருட்டை தடுக்க புதிய முறை : கல்லூரி மாணவர் சாதனை

 தஞ்சாவூர்: டூவீலர் திருட்டை தடுக்க புதிய தொழில் நுட்ப முறையில் மீட்டர் பாக்ஸ் பொறுத்தும் முறையை கும்பகோணத்தைச் சேர்ந்த மாணவர் கண்டு பிடித்து சாதனை படைத்துள்ளார்.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் விவேக்ராஜ் (23). கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் பி.இ., மெக்கானிக் படித்துள்ளார். இவர் டூவீலரில் சாவிக்கு பதில் கைவிரல் ரேகை மற்றும் ரகசிய எண்ணை பயன்படுத்தி இயக்கக்கூடிய வகையிலும், தானாகவே டூவீலர் பூட்டிக்கொள்ளும் வகையில் ஆட்டோமேடிக் லாக்கையும் கண்டுபிடித்துள்ளார்.
சாதனை கண்டுபிடிப்பு குறித்து விவேக்ராஜ் கூறியதாவது:டூவீலரில் உள்ள மீட்டர் பாக்ஸ் பகுதியில் சாவிக்கு பதில் கைரேகையை பதிவு செய்யும் கருவியை இணைத்து, குடும்பத்தில் உள்ளவர்கள் கைரேகையை அதில் பதிவு செய்ய வேண்டும். டூவீலரில் உரிமையாளர் அனுமதியுடன் ரகசிய எண்ணை பயன்படுத்தி அவரது நண்பர்களுக்கு மட்டும் அது தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.அந்த எண்ணையும், கைவிரல் ரேகையையும் அவ்வப்போது மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள டூவீலரில் கைவிரல் ரேகை, ரகசிய எண் அறிந்தவர் தவிர மற்ற எவரும் டூவீலரை நகர்த்தக்கூட முடியாது.

மேலும், போர்க் லாக், பேக்வீல் லாக், பெட்ரோல் லாக் என மூன்று லாக்கரை அமைத்து, அவற்றையும் இதனுடன் இணைத்தால் அம்மூன்றும் டூவீலரை நிறுத்தியதும் லாக் ஆகிவிடும். இதனால், இந்த டூவீலரை உருட்டிச் செல்ல முடியாது. திருப்ப முடியாது. ஓட்டிச் சென்றால் சிறிது தூரத்தில் பெட்ரோல் தீர்ந்து டூவீலர் தானாக நிற்கும். டூவீலரை கைரேகை வைத்து, ரகசிய எண் கொடுத்து ஸ்டார்ட் செய்தால் மட்டுமே பிற லாக்கர் திறந்து டூவீலரை இயக்க முடியும்.இந்த முயற்சிக்கு காப்புரிமை பெற முயன்றுள்ளேன். இதை கண்டறிய எனக்கு 8,500 ரூபாய் செலவானது. வியாபார ரீதியில், அதிக எண்ணிக்கையில் இதை செயல்படுத்தினால் மிகக்குறைந்த விலையில் பயன்படுத்தலாம். டூவீலர் திருட்டையும் தடுக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கண்டுபிடிப்புக்கு அவரது கல்லூரியில் முதல் பரிசும், சென்னை ஐ.ஐ.டி.,யில் 76 கல்லூரிகள் பங்கேற்ற போட்டியில் மூன்றாம் பரிசும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Sunday, October 17, 2010

100 வயதில் பல்கலை.யில் பி.எச்.டி. படிக்கும் சுதந்திர போராட்ட தியாகி

கவுஹாத்தி: தனது பிறந்த நாளை கொண்டாடிய கையோடு பல்‌கலை.யில் பி.எச்.டி மாணவராக பதிவு செய்துள்ளார் அசாமைச் சேர்ந்த 100- வயது சுதந்திர போராட்ட வீரர். கல்வி கற்க வயது ஒரு தடையல்ல என்பார்கள். அசாம் மாநிலம் கவுஹாத்தியில் புஹோரி கிராமத்தைச் சேர்ந்தவர் பகூலராம் தாஸ் (100). இவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர். கடந்த 1930-ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்கெதிராக போராடி தனது 19-வது வயதில் சிறை சென்றார். இரணடு மாத சிறைவாசத்திற்கு பின் 1945-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அடிப்படையில் இவர் வர்த்தகம், சட்டப்படிப்பில் பட்டம் ‌பெற்றவர். ஆசிரியராக, வழக்கறிஞராக, மாஜிஸ்திரேட் என முக்கிய பதவிகளை வகித்து கடந்த 1971-ம் ஆண்டு ஒய்வுபெற்றார். தற்போது கவஹாத்தி பல்‌கலைக்கழகத்தில் இந்து மதத்தி்ல் வைணவ ஆதிக்கம் குறித்த ஆராய்ச்சி படிப்பில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், எனது 100 வயதில் அரசியல், மதம், அரசாங்கம் என எத்தனையோ விஷயங்களை தெரிந்து கொண்டேன். எனக்கு எனது சமூகம் சார்ந்த சமுதாயத்திற்கு எதாவது செய்ய வேண்டும் என்பதற்காக எனது கல்வி கற்கும் ஆர்வத்தினை விடவில்லை. அதனால் இந்து மதத்தில் உள்ள கடவுளுக்கும், மனித்தன்மைக்கும் உள்ள தத்துவத்தினை அறிந்து கொள்ள ஆராய்‌ச்சி படிப்பில் மூலம் அதனை நிறைவேற்றி கொள்ள விரும்புகிறேன் என்றார். பகூலராம் தாஸிற்கு மந்தாஹினி என்ற மனைவியும், 5 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். 10-க்கும் மேற்‌பட்ட பேரக்குழந்தைகள் உள்ளனர். மனைவி 1988-ம் ஆண்டு இறந்தார்.. இந்நிலையில், கவுஹாத்தி பல்‌கலை.யில் துணைவேந்தர் ஒ.கே. ‌மேதி கூறுகையில், இந்த பல்கலை.யில் 100 -வயதில் இதுவரை யாரும் பி.எச்.டி. படிப்பில் சேரவில்‌லை. இவர்தான் முதல் மாணவர். இதை நினைத்தால் எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இவரது பேரனான கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறுகையில், ‌எனது தாத்தா பகூலராம் தாஸ் ஓய்வு பெற்ற 40 ஆண்டுகள் ஆனாலும் படிப்பில் இன்னமும் ஆர்வம் காட்டிவருவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், முன்மாதிரியாக உள்ளது என்றார்.

தன்னலம் கருதாத ஆசிரியர்கள், ஆர்வம் மிகுந்த மாணவர்கள்

தன்னலம் கருதாத ஆசிரியர்கள், ஆர்வம் மிகுந்த மாணவர்கள்

tirumala photos 2010











மொழிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது நடனக்கலை: முதல்வர் கருணாநிதி

தமிழகம்
மொழிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது நடனக்கலை: முதல்வர் கருணாநிதி

First Published : 18 Oct 2010 12:00:00 AM IST

Last Updated : 18 Oct 2010 01:43:49 AM IST

மாமல்லபுரம் அருகே பட்டிபுலத்தில் பரதர்-இளங்கோ ஆசிய கலாசார மையத்தின் சிற்பங்கள் செதுக்கும் பணிகளுக்கான உளியை வழங்குகிறார் தமிழக முதல்வர் மு.கருணாநிதி.
காஞ்சிபுரம், அக். 17: மொழிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது நடனக்கலை. நம் கலாசாரத்துடன் அக் கலையை வளர்க்க எடுக்கும் முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை என தமிழக முதல்வர் மு.கருணாநிதி பேசினார்.  ÷மாமல்லபுரம் அருகே பட்டிபுலம் கிராமத்தில் பரதர்-இளங்கோ ஆசிய கலாசார மையத்தின் கட்டுமானப் பணிகள் மற்றும் சிற்பங்கள் செதுக்கும் பணிகள் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  ÷பணிகளை தொடங்கி வைத்து முதல்வர் கருணாநிதி பேசியது:  ÷எனது நண்பரும், விடுதலைப் போராட்ட வீரருமான சுப்பிரமணியத்தின் மகன் பத்மா சுப்பிரமணியன், இந்த அறக்கட்டளையை நிறுவி உள்ளார். இந்த இடத்தில் "பரதமுனி நாட்டியாலயம்' என்பதை உருவாக்க ஜெயலலிதா ஆட்சியில் ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.  ÷தமிழ் கலாசாரப் பெருமையை நாங்கள் என்றைக்கும் விட்டுக் கொடுத்தது கிடையாது. இச் சூழ்நிலையில் எங்கள் ஆட்சி வந்தவுடன் அந்த பணி நிறுத்தி வைக்கப்பட்டதால் நீதிமன்றம் சென்றார் பத்மா சுப்பிரமணியன்.  ÷நான் அவரிடம், "நீதிமன்ற வழக்கு தேவையில்லை. நாம் சமாதானமாக சென்று விடுவோம். நீங்கள் பரதமுனி பெயருடன் இளங்கோவடிகள் பெயரை சேர்த்துக் கொள்ளுங்கள்' என்றேன்.  ÷அவரும் "பரதர்-இளங்கோ ஆசிய கலாசார மையம்' என்ற பெயரில் அறக்கட்டளையை பதிவு செய்துள்ளார்.  ÷நாட்டியம் என்பது மொழிகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு கலை. அக் கலையை வளர்க்கும் முயற்சிக்கு நானும் ஒரு கலைஞன் என்ற முறையில் ஒத்துழைப்பு கொடுத்துள்ளேன். எங்கள் அரசு தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுக்கும்.  ÷நானும், பத்மா சுப்பிரமணியமும் கலைக் குடும்பம் என்ற வகையில் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள். அவர் வெளிநாடுகளில் நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். ÷அவர் தொடங்கியுள்ள இந்த ஆராய்ச்சி மையம் உலக அளவில் சிறந்து விளங்கி நாட்டியக் கலையை வளர்க்கும் என்று நம்புகிறேன் என்றார் முதல்வர் கருணாநிதி.  ÷மாநிலங்களவை உறுப்பினர் க.கனிமொழி: இந்த ஆராய்ச்சி மையத்தில் பரத நாட்டியம் மட்டும் இல்லாமல் கிராமப்புறக் கலைகளையும் வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.  ÷மேலும் இம் மையம் பல்வேறு நாடுகளின் கலாசார வடிவிலான கட்டடங்களுடன் பல கோடி செலவில் அமைக்கப்படுகிறது. நடனமாடும் சிவன் போன்ற சிலைகள் 108 நிறுவப்பட உள்ளன.  ÷இளங்கோவடிகள் பெயரில் அரங்கம் அமைக்கப்பட உள்ளது என்றார் கனிமொழி.  ÷இந் நிகழ்ச்சியில் நிர்வாக அறங்காவலரும் நாட்டிய கலைஞருமான பத்மா சுப்பிரமணியம் வரவேற்றார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலை வகித்தார்.  ÷முதல்வரின் மனைவி ராஜாத்தி அம்மாள், மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ராஜா, மாநில அமைச்சர்கள் துரைமுருகன், ஆற்காடு வீராசாமி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் பெ.விஸ்வநாதன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் சாட்டர்ஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

Friday, October 15, 2010

Saraswathi Function 2010





 
Goddess Saraswathi is the goddess of wisdom and knowledge and the consort of Lord Brahma. Sarawathi Pooja is done by devotees every year to seek the blessings of Goddess Saraswathi and make the upcoming year successful and prosperous.

Sri Vidhya Roopini Saraswathy Sagalaka Valli
Saarabimbathari Saradha Devi Shasthra Valli
Veena Pushtaka Dharini Vani Kamala Paani
Vaak Devi Varathaayagi Pusthaka Hasthey Namasthuthey


Saraswathi Ashtothra Naamavali ( 108 names of Goddess Saraswathi)
OM Sarasvatyai Namaha
OM Mahaabhadraayai Namaha
OM Mahaamaayaayai Namaha
OM Varapradaayai Namaha
OM Shriipradaayai Namaha
OM Padmanilayaayai Namaha
OM Padmaaxyai Namaha
OM Padmavaktrakaayai Namaha
OM Shivaanujaayai Namaha
OM PustakabhRite Namaha
OM GYaanamudraayai Namaha
OM Ramaayai Namaha
OM Paraayai Namaha
OM Kaamaruupaayai Namaha
OM Mahaavidyaayai Namaha
OM Mahaapaataka naashinyai Namaha
OM Mahaashrayaayai Namaha
OM Maalinyai Namaha
OM Mahaabhogaayai Namaha
OM Mahaabhujaayai Namaha
OM Mahaabhaagaayai Namaha
OM Mahotsaahaayai Namaha
OM DivyaaNgaayai Namaha
OM Suravanditaayai Namaha
OM Mahaakaalyai Namaha
OM Mahaapaashaayai Namaha
OM Mahaakaaraayai Namaha
OM Mahaa.nkushaayai Namaha
OM Piitaayai Namaha
OM Vimalaayai Namaha
OM Vishvaayai Namaha
OM Vidyunmaalaayai Namaha
OM VaishhNavyai Namaha
OM Chandrikaayai Namaha
OM Chandravadanaayai Namaha
OM Chandralekhaavibhuushhitaayai Namaha
OM Saavityai Namaha
OM Surasaayai Namaha
OM Devyai Namaha
OM Divyaala.nkaarabhuushhitaayai Namaha
OM Vaagdevyai Namaha
OM Vasudaayai Namaha
OM Tiivraayai Namaha
OM Mahaabhadraayai Namaha
OM Mahaabalaayai Namaha
OM Bhogadaayai Namaha
OM Bhaaratyai Namaha
OM Bhaamaayai Namaha
OM Govindaayai Namaha
OM Gomatyai Namaha
OM Shivaayai Namaha
OM JaTilaayai Namaha
OM Vindhyaavaasaayai Namaha
OM Vindhyaachalaviraajitaayai Namaha
OM ChaNDikaayai Namaha
OM VaishhNavyai Namaha
OM Braahmayai Namaha
OM BrahmaGYaanaikasaadhanaayai Namaha
OM Saudaamanyai Namaha
OM Sudhaamuurtyai Namaha
OM Subhadraayai Namaha
OM Surapuujitaayai Namaha
OM Suvaasinyai Namaha
OM Sunaasaayai Namaha
OM Vinidraayai Namaha
OM Padmalochanaayai Namaha
OM Vidyaaruupaayai Namaha
OM Vishaalaaxyai Namaha
OM Brahmajaayaayai Namaha
OM Mahaaphalaayai Namaha
OM Trayiimuurtaye Namaha
OM TrikaalaGYaayai Namaha
OM TriguNaayai Namaha
OM ShaastraruupiNyai Namaha
OM ShaMbhaasurapramathinyai Namaha
OM Shubhadaayai Namaha
OM Svaraatmikaayai Namaha
OM Raktabiijanihantryai Namaha
OM ChaamuNDaayai Namaha
OM Ambikaayai Namaha
OM MuNDakaayapraharaNaayai Namaha
OM Dhuumralochanamadanaayai Namaha
OM Sarvadevastutaayai Namaha
OM Saumyaayai Namaha
OM Suraasura namaskRitaayai Namaha
OM Kaalaraatryai Namaha
OM Kalaadharaayai Namaha
OM Ruupasaubhaagyadaayinyai Namaha
OM Vaagdevyai Namaha
OM Varaarohaayai Namaha
OM Vaaraahyai Namaha
OM Vaarijaasanaayai Namaha
OM ChitraaMbaraayai Namaha
OM Chitragandhaayai Namaha
OM Chitramaalyavibhuushhitaayai Namaha
OM Kaantaayai Namaha
OM Kaamapradaayai Namaha
OM Vandyaayai Namaha
OM Vidyaadharasupuujitaayai Namaha
OM Shvetaananaayai Namaha
OM Niilabhujaayai Namaha
OM Chaturvargaphalapradaayai Namaha
OM Chaturaanana saamraajyaayai Namaha
OM Raktamadhyaayai Namaha
OM Nira.njanaayai Namaha
OM Ha.nsaasanaayai Namaha
OM NiilajaNghaayai Namaha
OM BrahmavishhNushivaatmikaayai Namaha

Lord Ganapathi
Thathpurushyaaya Vidhmahe
Vakarathundaaya Dheemahi
Thanno Dhandhi Prachodayaaath
Lord Shiva
Thathpurushyaaya Vidhmahe
Mahadevaaya Dheemahi
Thanno Rudra(h) Prachodayaath

Parvathi Devi
Maha Dhevyai cha Vidhmahe
Rudra Pathnai cha Dheemahi
Thanno Gowri Prachodayaath

Durga Devi
Kaathyaayanaaya Vidhmahe
Kanyakumaari Dheemahi
Thanno Durgi(h) Prachodayaath

Lord Muruga
Thathpurushyaaya Vidhmahe
Maha Senaaya Dheemahi
Thanno Shanmugha Prachodayaath

Lord Ayyappan
Bhoodha Naathaya Vidhmahe
Bavaputhraaya Dheemahi
Thanno Shaastha Prachodayaath
 
Lord Vishnu
Om Namo Naarayanaaye Vidhmahe
Vaasudevaya  Dheemahii
Thanno Vishnu Prachodayaath

Goddess Lakshmi
Maha Dhevyai cha Vidhmahe
Vishnu Pathnai cha Dheemahi
Thanno Lakshmi Prachodayaath

Lord Srinivasa
Niranjanaaya Vidhmahe
Niraadharaaya Dheemahi
Thanno Srinivasa Prachodayaath

Lord Krishna
Govindaaya Vidhmahe
Gopijana Vallbaaya Dheemahi
Thanno Krishna Prachodayaath

Lord Rama
Dhasaradhaaya Vidhmahe
Seetha Vallabhaaya Dheemahi
Thanno Rama Prachodayaath

Lord Hanuman
Aanjinaeyaya Vidhmahe
Vaayu puthraaya Dheemahi
Thanno Hanumath Prachodayaath 
 
Shirdi Sai Baba
Om Shirdi Vasaaya Vidhmahe Sachidaanandaaya Dheemahi Thanno Sai Prachodayaath

Thursday, October 14, 2010

இந்தியாவுக்கு 37-வது தங்கம்

பேட்மின்டன் இரட்டையர் ஜோடி: இந்தியாவுக்கு 37-வது தங்கம்- ஜுவாலா- அஸ்வினி ஜோடிக்கு கிடைத்தது
புதுடெல்லி, அக். 14-
 
19-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. கடந்த 3-ந்தேதி கோலாகலமாக தொடங்கிய இந்தப்போட்டி இன்றுடன் நிறைவு பெறுகிறது. நேற்றைய போட்டி முடிவில் இந்தியா 36 தங்கம் வென்று இருந்தது.
 
இன்று இந்தியாவுக்கு 37-வது தங்கப்பதக்கம் கிடைத்தது. பேட்மின்டன் போட்டியில் இந்த தங்கம் கிடைத்தது. பேட்மின்டன் பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டம் இன்று காலை நடந்தது.

இந்தியாவின் ஜுவாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா ஜோடி சிங்கப்பூரைச் சேர்ந்த முலியாசரி-யாலி ஜோடியை எதிர்கொண்டது. இதில் ஜுவாலா-அஸ்வினி ஜோடி 21-16, 21-19 என்ற நேர்செட் கணக்கில் வென்று தங்கப்பதக்கம் பெற்றது.
 
பேட்மின்டன் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். இந்தியாவும், இங்கிலாந்தும் தலா 37 தங்கப்பதக்கம் பெற்றுள்ளன. இங்கிலாந்து அதிகமான வெள்ளிப்பதக்கம் பெற்றதால் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.
 
இதேபோல் ஆக்கிப்போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கமே கிடைத்தது. இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.
 
மேலும் இன்று டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு ஒரு வெண்கலப்பதக்கம் கிடைத்தது. பெண்கள் இரட்டையர் பிரிவில் பவுலோமி-மவுமா தாஸ் வெண்கலப்பதக்கம் பெற்றனர்.
 
இன்று பிற்பகல் நடைபெறும் பேட்மின்டன் பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், மலேசியாவைச் சேர்ந்த வாங் மியூவை எதிர்கொள்கிறார்.
 
இதில் சாய்னா வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வெற்றி பெற்றால் இந்தியாவின் தங்கப்பதக்க எண்ணிக்கை 38 ஆக அதிகரிக்கும்.
 
பேட்மின்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் மலேசியா 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி தங்கப்பதக்கம் பெற்றது.

Wednesday, October 13, 2010

tirumala photos





படிப்பு மட்டும் முக்கியமல்ல; பண்பும் தேவை



கோவை : ""படிப்பு மட்டுமே முக்கியமல்ல; நல்ல பண்புகளை கற்றுக் கொள்வதும் முக்கியம். வகுப்பில் கற்கும் நல்ல விஷயங்கள் குறித்து மாணவர்கள் வசிக்கும் பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என, சென்னை ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் இளங்கோ பேசினார்.
மக்கள் கல்வி குறித்த "பங்கேற்று நடித்தல்' போட்டி, கோவை ராஜவீதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. டில்லி தேசிய கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும்(என்.சி. இ.ஆர்.டி) சென்னை ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து போட் டியை நடத்துகின்றன. பள்ளி அளவில், வட்டார அளவில், மாவட்ட அளவில், மாநில அளவில் போட்டிகள் நடக்கின்றன. நேற்று நடந்த மாவட்ட அளவிலான போட்டியில் கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 18 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பங்கேற்று போதை பழக்கம், எய்ட்ஸ் நோய், பெண் அடிமை, சுகாதாரம், இனக்கவர்ச்சி உள்ளிட்ட விஷயங்கள் குறித்து நாடகமாக நடித்துக் காட்டினர். போட்டியை அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் கலைவாணி துவக்கி வைத்தார். சென்னை ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் இளங்கோ போட்டிகளை ஆய்வு செய்தார்.

விழாவில் அவர் பேசியதாவது:வகுப்பில் கற்கும் நல்ல விஷயங்கள் குறித்து மாணவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண் டும். பள்ளி வயதில் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் மாணவர்களின் வாழ்க்கை வீணாகிறது. சக பள்ளி மாணவ மாணவியரை கேலி செய்யும் செயல்களில் ஈடுபடக் கூடாது. பள்ளி வயதில் பாலின ஈர்ப்பால் பாதிக்கப்படாமல் இருப்பது முக்கியம். சுகாதாரம் உட்பட ஒவ்வொரு நல்ல பழக்கமும் வீட்டில் இருந்து துவங்க வேண்டும். பஸ்சில் தொங்கியபடி செல்லக்கூடாது. படித்தவர்கள் மட்டுமே படிக்கட்டில் தொங்கி பயணம் செய்கின்றனர். படிக்காதவர்கள் இருக்கையில் அமர்ந்து பாதுகாப்பாக பயணம் செய்கின்றனர். நல்ல பண்புகளை பள்ளிக் கல்வி கற்றுத் தருகிறது. இது போல் விதிமுறைகளை மீறுவதால் நல்ல பண்புகளை பள்ளியில் கற்கும் நோக்கம் வீணாகிறது. இவ்வாறு, இளங்கோ பேசினார்.

போட்டியில் சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடத்தையும், அன்னூர் ஒன்றியம் காட்டம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடத்தையும், மடத்துக்குளம் ஒன்றியம் குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். இவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது.தேர்வான மாணவ மாணவியர் அடுத்தபடியாக, மதுரை கல்லுப்பட்டியில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.

மாநில அளவில் முதலிடம் பெறும் பள்ளி மண்டல அளவிலும் அதன் பின் டில்லியில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியிலும் பங்கேற்பர். ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இணை இயக்குனர் ஆரோக்கியசாமி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் பிரேம் அதிபன், துணை முதல்வர் ரீட்டா, பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகரன், சபர்பன் பள்ளி முதல்வர் சுப்ரமணியன், இமயம் அமைப்பின் ஒருங் கிணைப்பாளர் பரமேஸ்வரி உட்பட மாணவ மாணவியர், ஆசிரியர்கள் பலர் பங் கேற்றனர்.

தங்கம் வென்றார் தமிழக வீரர் சரத் கமல் : டேபிள் டென்னிசில் அசத்தல்

புதுடில்லி: காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் தமிழக வீரர் சரத் கமல் மற்றும் சுபாஜித் சகா ஜோடி இணைந்து இந்தியாவுக்கு தங்கம் பெற்று தந்தது. குத்துச்சண்டையில் மனோஜ் குமார், சுரன்ஜாய் சிங், பரம்ஜித் சமோதா ஆகிய 3 இந்திய வீரர்கள் தங்கம் வென்று, சாதித்தனர்.

டில்லியில், 19வது காமன்வெல்த் போட்டி நடக்கிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு டேபிள் டென்னிஸ் பைனலில் இந்தியாவின் அஜந்தா சரத் கமல், சுபாஜித் சகா ஜோடி, சிங்கப்பூரின் நிங் கயோ, ஜி யங் ஜோடியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான போட்டியின் முதல் செட்டை சிங்கப்பூர் ஜோடி 11-9 என கைப்பற்றியது. பின்னர் எழுச்சி கண்ட இந்திய ஜோடி அடுத்த இரண்டு செட்டை 12-10, 11-4 என தன்வசப்படுத்தியது. இதற்கு சிங்கப்பூர் ஜோடி 11-5 என 4வது செட்டில் பதிலடி கொடுத்தது. இதனால் போட்டி 2-2 என சமநிலை அடைந்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஜோடி 11-8 என கைப்பற்றியது. இறுதியில் சரத்-சகா ஜோடி 9-11, 12-10, 11-4, 5-11, 11-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, தங்கப் பதக்கம் வென்றது.

மனோஜ் தங்கம்:ஆண்களுக்கான "லைட் வெல்டர் வெயிட்' 64 கி.கி., எடைப்பிரிவு குத்துச்சண்டை பைனலில் இந்தியாவின் மனோஜ் குமார், இங்கிலாந்தின் பிராட்லி சவுண்டர்சை எதிர்கொண்டார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மனோஜ் குமார் 11-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப் பதக்கம் வென்றார்.

சுரன்ஜாய் அதிர்ஷ்டம்:ஆண்களுக்கான "பிளை வெயிட்' 52 கி.கி., எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் சுரன்ஜாய் சிங், கென்யாவின் பென்சன் ஜங்கிரு மோதுவதாக இருந்தது. ஆனால் கென்ய வீரர் காயம் காரணமாக போட்டியில் பங்கேற்காததால், சுரன்ஜாய் சிங் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

சமோதா அபாரம்:ஆண்களுக்கான "சூப்பர் ஹெவி வெயிட்' +91 கி.கி., எடைப்பிரிவு குத்துச்சண்டை பைனலில் இந்தியாவின் பரம்ஜித் சமோதா, டிரினிடாட் டுபாகோவின் அப்துலை சந்தித்தார். இதில் சமோதா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கம் வென்றார். இதன்மூலம் குத்துச்சண்டை போட்டியில் 3 தங்கப் பதக்கம் கிடைத்தது.

ஹீனா வெள்ளி:பெண்களுக்கான தனிநபர் 10 மீ., "ஏர் பிஸ்டல்' பிரிவில் இந்தியாவின் ஹீனா சித்து பங்கேற்றார். இதில் 481.6 புள்ளிகள் பெற்ற ஹீனா, 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இவரை விட 0.3 புள்ளிகள் கூடுதலாக பெற்ற மலேசியாவின் சின் பிபியனா தங்கம் வென்றார். ஆஸ்திரேலியாவின் டினா அஸ்பான்டியரோவா (478.8 புள்ளி) வெண்கலப் பதக்கம் வென்றார்.

சமரேஷ் வெண்கலம்:ஆண்களுக்கான தனிநபர் 25 மீ., "ஸ்டேன்டர்டு பிஸ்டல்' பிரிவில் இந்தியாவின் சமரேஷ் ஜங் பங்கேற்றார். இதில் 559 புள்ளிகள் பெற்ற சமரேஷ் 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். இதில் சிங்கப்பூரின் பின் கெய் (570 புள்ளி), டிரினிடாட் டுபாகோவின் ரோஜர் பீட்டர் டேனியல் (563 புள்ளி) முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

நரங் ஏமாற்றம்:ஆண்களுக்கான தனிநபர் 50 மீ., "ரைபிள் புரோன்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ககன் நரங் பங்கேற்றார். இதில் நரங் மற்றும் இலங்கையின் மங்கலா சமரகூன் தலா 590 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தனர். பின்னர் நடந்த "டை பிரேக்கர்' சுற்றில் ககன் நரங் 51.6 புள்ளிகள் பெற்றார். இலங்கை வீரர் 53.2 புள்ளிகள் பெற்று, இறுதி சுற்றுக்கு முன்னேறினார். நேற்று முன்தினம் நடந்த 50 மீ., "ரைபிள் புரோன்' இரட்டையர் பிரிவிலும் ககன் நரங், இறுதி சுற்றுக்கு முன்னேறாமல் ஏமாற்றினார்.

இதுகுறித்து ககன் நரங் கூறுகையில், ""காமன்வெல்த் போட்டியில் எனது செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது. முன்னதாக நான்கு பதக்கம் வென்ற போதிலும், "புரோன்' பிரிவு போட்டிகளில் தடுமாற்றம் கண்டது ஏமாற்றம் அளிக்கிறது. இம்முறை இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இது அடுத்து வரும் ஆசிய விளையாட்டு போட்டியிலும் தொடரும் என நினைக்கிறேன்,'' என்றார்.

இந்தியாவுக்கு நன்றி : ஆண்களுக்கான "பான்டம் வெயிட்' 56 கி.கி., எடைப்பிரிவு குத்துச்சண்டை பைனலில் இலங்கையின் மஞ்சு வானியாராச்சி, வேல்ஸ் வீரர் மெக்கோல்டுரிக்கை வீழ்த்தி, தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம் 72 ஆண்டுகளுக்கு பின் காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் இலங்கைக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. முன்னதாக கடந்த 1938ல் நடந்த சிட்னியில் நடந்த போட்டியில் இலங்கையின் பார்னி ஹென்ரிகஸ் தங்கம் வென்றிருந்தார். தவிர, 60 ஆண்டுக்கு பின் காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் இலங்கைக்கு பதக்கம் கிடைத்துள்ளது. முன்னதாக கடந்த 1950ல் ஆக்லாந்தில் நடந்த போட்டியில் 2 வெள்ளி, ஒரு வெண்கலம் உட்பட 3 பதக்கம் குத்துச்சண்டையில் கிடைத்துள்ளது.

இதுகுறித்து இவரது பயிற்சியாளர் டியன் கோம்ஸ் கூறுகையில், ""பாட்டியாலாவில், இந்திய பயிற்சியாளர் குர்பாக்ஸ் சிங் சாந்துவிடம் மஞ்சு வானியாராச்சி பயிற்சி மேற்கொண்டார். இப்பயிற்சியின் மூலம் இலங்கைக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. இதேபோல கடந்த 2008ல் நடந்த பீஜிங் ஒலிம்பிக் போட்டிக்கு முன் வானியாராச்சி, சாந்துவிடம் பயிற்சி மேற்கொண்டார். ஒலிம்பிக், காமன்வெல்த் உள்ளிட்ட மிகப் பெரும் தொடருக்கு முன், இந்தியாவில் பயிற்சி மேற்கொள்ள இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு இந்தியாவுக்கும், குத்துச்சண்டை கூட்டமைப்புக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.

காஸ்யப் வெண்கலம் : பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் நடந்த 3வது இடத்துக்கான போட்டியில், இந்தியாவின் சேட்டன் ஆனந்த், காஸ்யப் மோதினர். இதில் காஸ்யப் வெற்றி பெற்று, வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

வானளாவிய மாளிகைக்கு குடிபெயரும் முகேஷ் அம்பானி

மும்பை : இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, "ஆண்டிலியா' என்ற 27 அடுக்கு மாளிகையில் விரைவில் குடியேற இருக்கிறார்.

இந்தியாவின் மிகப்பெரிய வணிக சாம்ராஜ்யமான, "ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' தலைவர் முகேஷ் அம்பானி (54)யின்  சொத்து மதிப்பு 27 பில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அவரது மனைவி நிடா, திருபாய் அம்பானி சர்வதேச பள்ளி மற்றும் மும்பை இந்தியன் ஐ.பி.எல்., கிரிக்கெட் அணியையும் நிர்வகித்து வருகிறார்.  முகேஷ், நிடா மற்றும் அவர்களது குழந்தைகள் ஆகாஷ் , அனந்த் மற்றும் இஷா ஆகிய ஐந்து பேர் வசிப்பதற்காக, தெற்கு மும்பையில்  "ஆண்டிலியா' என்ற மிகப் பெரிய ஆடம்பர மாளிகை கட்டப்பட்டுள்ளது. அந்த பகுதியில், எந்த பக்கமிருந்து பார்த்தாலும், இந்த மாளிகை தெரியும் வகையிலும், உலகில் வேறு எங்கும் இல்லாத அளவிலும், மிகுந்த பொருட்செலவிலும் இந்த பிரமாண்ட மாளிகை எழுந்துள்ளது.

வரும் 28ம் தேதி மிகப் பெரிய அளவில் கிரக பிரவேசம் நடத்தி, அந்த வீட்டில் குடியேற இருக்கிறார் முகேஷ். 27 தளங்களைக் கொண்ட இந்த பிரமாண்ட மாளிகையின் உச்சியில், மூன்று ஹெலிகாப்டர்கள் இறங்குவதற்கான தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒன்பது லிப்ட்டுகள் உள்ளன. முதல் ஆறு தளங்களில் 160 கார்கள் நிறுத்துவதற்காக கார் ஷெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர ஆடம்பர நீச்சல் குளம், சினிமா தியேட்டர், ஹெல்த் கிளப், சலூன் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தனிநபர் வசிப்பதற்கென்று இந்த அளவுக்கு ஆடம்பரமாக, உலகின் வேறு எந்த பகுதியிலும் இத்தகைய வீடு கட்டப்படவில்லை. வீடு இப்படி பிரமாண்டம் என்றால், அந்த வீட்டிற்குப் பக்கத்தில் பிர்லா குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

உலகின் மிகச் சிறந்த கட்டடக்கலை நிபுணர்களைக் கொண்டு, ஏழு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது இந்த மாளிகை. இதை சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தவர்களும், இந்த வீட்டின் பிரமாண்டத்தையும், ஆடம்பரத்தையும் பார்த்து மிரண்டு போயுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "லட்சுமி மிட்டல் உட்பட, உலக பணக்காரர்களின் வீடுகளைப் பார்த்துள்ளோம். அனைத்திலும் இது தலை சிறந்ததாக உள்ளது' என,  ஆச்சரியம் தெரிவிக்கின்றனர்.

 thanks for dinamalr for everyone 14.10.10

Monday, October 11, 2010

இந்தியாவுக்கு 30-வது தங்கம்

இந்தியாவுக்கு 30-வது தங்கம்

First Published : 12 Oct 2010 01:46:46 AM IST


தில்லி காமன்வெல்த்தில் மகளிர் வட்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்ற பின்னர் தேசியக் கொடியுடன் மைதானத்தை மகிழ்ச்சியுடன் வலம் வருகிறார் இந்திய வீராங்கனை
புது தில்லி, அக்.11: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா 30-வது தங்கத்தை வென்றது.  தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்தியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 6 வெண்கலங்களை கைப்பற்றியது. வட்டு எறிதல் போட்டியின் மகளிர் பிரிவில் 3 பதக்கங்களை இந்திய வீராங்கனைகள் வென்று புதிய வரலாறு படைத்தனர். வட்டு எறிதலில் இந்திய வீராங்கனைகள் கிருஷ்ண பூனியா, ஹர்வந்த் கெüர், சீமா அந்தில் ஆகியோர் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலத்தைக் கைப்பற்றினர்.  துப்பாக்கி சுடுதல்: மகளிர் துப்பாக்கி சுடுதல் 50 மீட்டர் ரைபிள் புரோன் போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வினி சாவந்த்-மீனா குமாரி ஜோடி வெண்கலம் வென்றது.  குத்துச்சண்டை: குத்துச்சண்டையில் இந்திய வீரர்கள் அமன்தீப் சிங், ஜெய் பகவான், தில்பாக் சிங், விஜேந்தர் சிங் ஆகியோர் அரை இறுதியில் தோல்வியுற்று ஏமாற்றினர். அரை இறுதி தோல்வி மூலம் அவர்களுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.  சாதனை சமன்: இதையடுத்து பதக்கப்பட்டியலில் இந்தியா 30 தங்கம், 23 வெள்ளி, 28 வெண்கலங்களுடன் 2-ம் இடத்தில் உள்ளது.  இதன்மூலம் மான்செஸ்டர் காமன்வெல்த்தில் இந்தியா வென்ற தங்கப் பதக்கங்களை, தில்லி காமன்வெல்த்தில் சமன் செய்துள்ளது. மான்செஸ்டர் போட்டியின் போது இந்தியா 30 தங்கம், 22 வெள்ளி, 17 வெண்கலங்களை வென்றது. தற்போது தில்லி போட்டியில் 30 பதக்கங்களை வென்றதன்மூலம் மான்செஸ்டர் பதக்கப் பட்டியல் பெற்ற தங்க பதக்க எண்ணிக்கையை இந்தியா சமன் செய்துள்ளது. 

இலவச ஆன்டி வைரஸ் சேவையை விரிவுபடுத்தும் மைக்ரோசாப்ட்

புதுடில்லி : இந்தியாவின் முன்னணி நிறுவனமான மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனம், சிறு மற்றும் நடுத்தர வர்த்தக மக்களுக்கும் , ஆன்டி வைரஸ் புரோகிராம்களை இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவன விண்டோஸ் கிளையண்ட் பிஜி உயர் அதிகாரி பங்கஜ் உகே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : மைக்ரோசாப்ட் நிறுவனம், வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களுக்கு, மைக்ரோசாப்ட எசன்சியல்ஸ் என்ற பெயரில் ஆன்டி வைரஸ் புரோகிறாம்களை இலவசமாக வழங்கி வருகிறது. இந்நிலையில் சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை மக்களும் பயன்பெறும் வகையில், 10 கம்ப்யூட்டர்கள் வரை பயன்படுத்துவதற்கான ஆன்டி வைரஸ் புரோகிராம்களை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது. இதற்காக, ஹெச்பி நிறுவனத்துடன் மைக்ரோசாப்ட் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாகவும், இதன்மூலம் ஹெச்பி நிறுவனத்தின் நோட்புக்குகளை வாங்கும் போது அதனுள்ளே மைக்ரோசாப் எசன்சியல்ஸ் விண்டோசுடன் இணைக்கப்பட்டிருக்கும் என்றும், இதற்காக, தனியாக எந்தவொரு கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என்றும், இதனைக் கொண்டு 10 கம்ப்யூட்டர் அல்லது நோட்புக்குகளுக்கு ஆன்டி வைரஸ் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்ய முடியும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.